அற்ப விஷயம் செல்வம்: போப்பாண்டவர்
![]() |
![]() |
பாப்பரசர் பெனடிக்ட் |
பணமும், பேரவாவும் எவ்வளவு அற்பமானவை என்பதை தற்போதைய உலக நிதி நெருக்கடி காட்டுகின்றது என்று புனித பாப்பரசர் பெனடிக்ட் அவர்கள் கூறியுள்ளார்.
வத்திக்கானில், ஆயர்கள் மாநாடு ஒன்றை முன்னிட்டு உரையாற்றிய பாப்பரசர், பெரும் பெரும் வங்கிகளின் வீழ்ச்சியானது, பணம் எப்போது வேண்டுமானாலும் மறைந்துபோகும் என்பதையும், அதன் முக்கியத்துவம் இரண்டாம் பட்சமானதே என்பதையும் காண்பிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மக்கள் தமது வாழ்க்கையை வெற்றிகளின் மீதும், தொழில் முன்னனேற்றங்களின் மீதும், பணத்தின் மீ்தும் நிர்மாணிக்கக் கூடாது என்றும், ஆண்டவனின் உலகமே வலுவான யதார்த்தமாகும் என்றும் கூட அவர் குறிப்பிட்டுள்ளார்.