காஷ்மீரில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது போலிஸ் துப்பாக்கி சூடு
![]() |
![]() |
இந்திய ஆளுகைக்குட்பட்ட காஷ்மீரில் இந்திய ஆட்சியை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்று கோரி கல்லெறிந்து போராட்டம் நடத்தியவர்கள் மீது காவல் துறையினர் துப்பாக்கி சூடு நடத்தியதில், குறைந்தது இரண்டுபேர் கொல்லப்பட்டதாகவும், மேலும் பலர் காயமடைந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஒருவர் இறந்த பகுதியான ஷோபியான் நகரில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இன்றைய வெள்ளிக்கிழமை தொழுகைக்குப் பிறகு, ஸ்ரீநகர் உள்ளிட்ட, முஸ்லிம்கள் பெரும்பான்மையாக இருக்கும் பகுதிகளில் இந்தியாவுக்கு எதிராக புதிய போராட்டங்களில் பலர் ஈடுபட்டனர்.
லத்திகளாலும், கண்ணீர் புகையை பயன்படுத்தியும் பாதுகாப்பு படையினர் கூட்டத்தை கலைத்தனர்.