சிக்கலில் இந்தியாவின் மருத்து தயாரிப்பு நிறுவனம்
![]() |
![]() |
சிக்கலில் ரான்பேக்ஸி நிறுவனம் |
இந்திய மருந்து தயாரிப்பு பெருநிறுவனமான, ரான்பாக்ஸி, அது தயாரிக்கும் 30க்கும் மேற்பட்ட வணிகப்பெயர்கள் அல்லாமல், ரசாயனப் பெயர்களை வைத்து மட்டுமே அறியப்படும் மருந்துகள் அமெரிக்காவுக்குள் இறக்குமதி செய்யப்பட, அமெரிக்க அரசு விதித்திருக்கும் தடை குறித்து தான் ஏமாற்றமடைந்திருப்பதாக கூறியுள்ளது.
அமெரிக்க உணவு மற்றும் மருந்துத் துறை, எப்.டி.ஏ, இந்த நிறுவனத்தின் இரண்டு தொழிற்கூடங்களில் தயாரிப்பு தரம் குறித்த பிரச்சினைகளை தான் கண்டுபிடித்திருப்பதாகக் கூறியது.
ரான்பேக்ஸியோ, எப்.டி.ஏ கடந்து இரண்டு ஆண்டுகளாக எழுப்பிய கவலைகள் ஒவ்வொன்றைக்குறித்தும், தான் நடவடிக்கை எடுத்திருப்பதாகவும், இந்த விஷயத்தில் முன்னேற்றம் ஏற்பட்டுவந்ததாகவே தான் கருதியதாகவும் கூறியுள்ளது.
ஆயினும், தனது மருந்துகளின் பாதுகாப்பு மற்றும் குணப்படுத்தும் திறன் குறித்து எந்த வித கேள்விகளும் இல்லை என்று எப்.டி.ஏ முடிவிற்கு வந்திருப்பது பற்றி தான் திருப்தியடைந்திருப்பதாகவும் ரான்பேக்ஸி கூறியது.