இந்தியாவில் வெள்ளத்தால் 200 பேர் பலி
![]() |
![]() |
வட இந்தியாவில் பல லட்சம் பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர் |
இந்தியாவில் கடந்த சில நாட்களில் பெய்த கடுமையான பருவ மழை காரணமாக கிட்டத்தட்ட 200 பேர் பலியானதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட உத்தரப்பிரதேசம் மற்றும் ஒரிசா ஆகிய மாநிலங்களில் 20 லட்சம் மக்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வெள்ளத்தில் சிக்கியுள்ள ஆயிரக்கணக்கான மக்களை மீட்பதற்கான பணியில் இராணுவம் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.