இந்தியாவில் மாவோயியவாதிகள் தாக்குதலில் பொலிஸார் பலி
![]() |
![]() |
சத்தீஸ்கர் வனப் பகுதியில் தங்கி மாவோயிய கிளர்ச்சிக்காரர்கள் தாக்குதல்களை நடத்திவருகின்றனர். |
இந்தியாவின் மத்தியப் பகுதியிலுள்ள சத்தீஸ்கர் மாநிலத்தில் 12 காவல்துறையினர் கொல்லப்பட்டுள்ளதாக அம்மாநில அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த மத்திய அரசின் காவல் படையினர் மீது மாவோயிய கிளர்ச்சியாளர்கள் மறைந்திருந்து தாக்குதலை நடத்தியதாக அந்த அதிகாரிகள் கூறுகிறார்கள்.
ஏழை விவசாயிகள் மற்றும் நிலமற்ற தொழிலாளர்களின் உரிமைகளுக்காக தாங்கள் போராடி வருவதாகக் கூறும் அந்த கிளர்ச்சியாளர்கள் இந்தியாவின் பல மாநிலங்களில் செயற்பட்டு வருகிறார்கள்.
ஆனால் இதுவரை இந்தத் தாக்குதலுக்கு யாரும் உரிமை கோரவில்லை.