07.01.09 தொடர்கள் | |||
எந்தச் சமுதாய மக்களாக இருந்தாலும் உறவின்முறையோடு `அண்ணாச்சி’ என்று அன்போடு அழைக்கும் நாடார் சமூகத்தார், தாங்கள் இடுப்புக்குமேல் ஆடை உடுத்தக் கூடாது என்று பிரகடனப் படுத்தியதை அவர்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. தாங்கள் சத்திரிய குலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதை நிரூபிக்கப் புறப்பட்டுவிட்டார்கள்.இதனால் பல்வேறு இடங்களில் புதிதாக கலகம் மூண்டது. நாடார்கள் ஒன்று சேர்ந்து கலகத்தில் ஈடுபட்டனர். சுமார் 50 ஆண்டுகளாகத் தொடர்ந்து இந்தப் போராட்டம் நடந்தது. ஆட்சியாளர்களின் அடக்குமுறையை எதிர்த்து ஆண்களும், பெண்களும் இடுப்புக்கு மேலே ஆடை உடுத்திக்கொண்டனர். பொது இடங்களில் தங்களது மேல் ஆடையைப் பறிக்க முயன்றவர்களை எதிர்த்துத் தாக்கினர். இதில் பலர் கொல்லப்பட்டனர். ஆதிக்க சாதிகள் நாடார் இனமக்களின் வீரத்தைக் கண்டு அஞ்சி நடுங்கத் தொடங்கினர்.![]() கலவரம் மேலும் மேலும் பரவி பலர் கொல்லப்படுவதைக்கண்டு சென்னை அரசே அஞ்சியது. அதனால் உடனே தலையிட்டு, 1859_ல் `நாடார் பெண்கள் மேலாடை அணியக்கூடாது’ என்ற பிரகடனத்தை அரசு ரத்து செய்தது. இதன் அடிப்படையில் பெண் கல்விக்கென நாகர்கோவிலில் ஆங்கிலேயரால் ஒரு பள்ளிக்கூடம் ஆரம்பிக்கப்பட்டது. தமிழகத்தில் பெண் கல்விக்காக மேற்கொள்ளப்பட்ட முதல் முயற்சி இது. தங்கள் இனம் இப்படி பல இன்னல்களுக்கு ஆட்படுவதற்குக் காரணமே, தங்களுக்குள் ஒற்றுமை இல்லை என்பதை நாடார் மக்கள் உணர்ந்தனர். அதன் பொருட்டு உருவாக்கப்பட்டதுதான் `நாடார் உறவின் முறை’ என்ற அமைப்பு.அனைத்து வழக்குகளிலும் போலீசைத் தலையிடவிடாமல் உறவின் முறையே விசாரித்து தீர்ப்பு கூறியது. நாடார் மக்களின் பொருளாதார வளர்ச்சி அதிகரிக்க அதிகரிக்க, தங்களது பரம்பரை பழக்கவழக்கங்களையும் சடங்கு சம்பிரதாயங்களையும் மாற்றியமைக்க முற்பட்டனர். ஆண்கள் பார்ப்பனர் போன்று வேட்டி கட்டவும், பூணூல் போடவும் தொடங்கினர். பெண்கள் பாரம்பரியமான கனத்த ஆபரணங்களையும், காது வளையங்களையும் தவிர்த்தனர். விதவைகள் வெள்ளைச் சீலை கட்டுவதற்கு அனுமதிக்கப்பட்டனர். விதவைகள் மறுமணம் தடை செய்யப்பட்டது. (இப்போது மறுமணத்தை ஆதரிக்கிறார்கள்.) பெண்கள் தண்ணீரை தலையில் எடுத்துச் செல்வதைத் தடுத்து, இடுப்பில் எடுத்துவரப் பணிக்கப்பட்டனர். திருமண ஊர்வலங்களின்போது செல்வ செழிப்பினைக் காட்ட பல்லக்குகளைப் பயன்படுத்தினர். பெரும்பாலான நாடார்கள் சைவ மதத்தைச் சார்ந்தவர்கள். சிலர் வைணவர்களாகவும் இருந்தனர். முருகக் கடவுள் நாடார் சமூகத்தின் சிறப்பு தெய்வம். பத்ரகாளி, மாரியம்மன், அய்யனார் என்று சிறுதெய்வ வழிபாடும் இவர்களிடம் உண்டு. கோயில் திருவிழாவின்போது முளைப்பாரி எடுப்பது பிரசித்தம். நாடார் திருமணத்தின்போது தாய்மாமனுக்கு முக்கியத்துவம் உண்டு. கன்னியாகுமரி, சிவகாசி, விருதுநகர் பகுதிகளில் பெண் வீட்டார் கிலோ கணக்கில் நகை போடும் வழக்கத்தைக் கொண்டுள்ளனர். தங்களுக்கு எவ்வளவு பெரிய சொந்தம் இருக்கிறது என்பதைக் காட்ட திருமணத்தின்போது நடத்தப்படும் `அலந்தரம் செய்வது’ என்ற சடங்கு மிக முக்கியமானது. கோயில்களுக்கு நன்கொடைகளை வாரி வழங்கினர். சிவன் கோயில்கள் கட்டினர். தங்களை சத்திரியர்கள் என்று அடையாளம் காணும்படி நடந்துகொண்டனர்.நாடார்குலத்தின் பொருளாதார உயர்வும், பொதுமதிப்புக்காக அவர்கள் செய்த முயற்சியும் உயர்சாதிக்காரர்களுக்கு எரிச்சலைத் தந்தது. அதனால் பிரச்னை உருவானது. அதன் விளைவாக, 1890ஆம் ஆண்டு ஆதிக்க சாதியினருக்கும் நாடார்களுக்கும் இடையே சிவகாசியில் மிகப் பெரிய கலவரம் மூண்டது. இக்கலவரத்தை நாடார் இனமக்கள் `சிவகாசிப் போர்’ என்றே அழைக்கிறார்கள். ஆலயத்திற்குள் நுழைந்து சுவாமி தரிசனம் செய்ய தங்களுக்கும் உரிமை வேண்டும் என்று நாடார்கள் கேட்டதுதான் கலவரத்திற்குக் காரணம். மற்ற ஆதிக்க சாதியினர், `நாடார்கள் கோயில்களுக்கு நுழையவே கூடாது’ என்று எதிர்த்ததோடு கோயிலையும் மூடிவிட்டார்கள். அன்று இரவே கோயில் கதவை உடைத்து நாடார்கள் கோயிலுக்குள் புகுந்துவிட்டதாக வதந்தி பரவியது. இதனால் கொதித்தெழுந்த ஆதிக்க சாதியினர் நாடார் வீடுகளுக்குத் தீ வைத்தனர். சிவகாசி நகரில் இருக்கும் நாடார்களை வேரோடு கருவருக்கவேண்டும் என்ற மூர்க்கத்தனத்தோடு சிவகாசி மீது தாக்குதல் நடத்தினர். சுற்று கிராமங்களைக் கொள்ளை அடித்தனர். ஆனால் இதில் நாடார் இனமக்கள் ஆண் பெண் குழந்தைகள் என்ற பாகுபாடு இன்றி எதிர்த்துப் போராடினார்கள். கலவரக்காரர்களை ஓட ஓட விரட்டியடித்தார்கள். பலர் மடிந்தார்கள். இறுதியில் நாடார்களே இந்தப் போரில் வெற்றி பெற்றார்கள். 1899ஆம் ஆண்டு ஜூலை மாதம் ராணுவம் கலவரத்தைக் கட்டுப்படுத்தியபோது, 150 கிராமங்கள் தாக்குதலுக்கு உள்ளாயிருந்தன. சுமார் 4000 வீடுகள் அழிக்கப்பட்டன. இரு தரப்பிலும் பலர் இறந்து போனார்கள். சிவகாசியில் நடந்த சோக சம்பவத்தை இந்தியா முழுவதிலுமுள்ள பத்திரிகைகள் முதற்பக்கத்தில் வெளியிட்டு நாடார்களின் நியாயத்தை உலகுக்கு எடுத்துச் சொல்லின. நிலைமைகளை நன்கு உணர்ந்த நாடார்கள் தங்களுக்குப் பாதுகாப்பு பெற அரசியல் அதிகாரத்தில் நேரடி அங்கம் பெற முயன்றனர். நாடார் சமூகம் கல்வி முன்னேற்றத்திற்காக அரசாங்கத்தையே முழுவதுமாக நம்பியிருக்கவில்லை. நெல்லை மாவட்டத்தில் கிருஸ்தவ மதத்திற்கு மாறிய நாடார்களின் முன்னேற்றத்திற்காக மதகுருமார்கள் கல்வியின் சிறப்பினை அவர்களுக்குக் கற்பித்தனர். 19ஆம் நூற்றாண்டுகளில் `மகமை நிதி’ உதவியால் ஆரம்ப உயர்நிலைப் பள்ளிகளைத் தென்மாவட்டங்களில் தொடங்கினர். 20ஆம் நூற்றாண்டில் பாளையங்கோட்டை புனித யோவான் கல்லூரி உள்ளிட்ட பல முக்கிய கல்லூரிகளையும் தொடங்கினர். நாடார்கள் சமூகத்தினரோடு மற்ற சமூகத்தினரும் அதனால் பலன் அடைந்தனர். “நாடார்கள் நாடாண்டவர்கள் என்பதை இன்று நிரூபித்துக்கொண்டு வருகிறார்கள். இடைவிடா உழைப்பினாலும் சிக்கனத்தாலும் நாடார்கள் சாதாரண மளிகைக்கடை முதல் கம்ப்யூட்டர் துறை வரை உலகளவில் முன்னேறிக்கொண்டு இருக்கிறார்கள். மற்ற சமூகத்தவரும் பயன்பெறும் வகையில் நாடார் சமூகம் உழைத்துக்கொண்டிருக்கிறது என்பதே உண்மை. நாடார்களின் வெற்றி ரகசியமும் அதுவே” என்கிறார் சென்னை, நெல்லை_தூத்துக்குடி நாடார் மகமை பரிபாலன சங்கத் தலைவர் க்ஷி.ஜி.பத்மநாபன் நாடார். உண்மைதான். இன்று நாடார்கள் சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் மூலை முடுக்குகளில் எல்லாம் தங்கள் செல்வாக்கினை நிலைநாட்ட ஆரம்பித்துவிட்டனர்.. படங்கள் : சித்ரம் மத்தியாஸ் `தினத்தந்தி’யைத் தந்து தமிழகத்தின் பட்டிதொட்டிகளில் எல்லாம் பாமரர்கள் எழுத்துக்கூட்டி தமிழைப் படிக்க வைத்தவர் ஆதித்தனார். நாடார் மகாஜன சங்கம் உருவாகக் காரணமாய் இருந்தவர் பொறையார் ரத்னசாமி நாடார். நம் நாட்டிற்கு `தமிழ்நாடு’ என்று பெயர் வைக்கச் சொல்லி உண்ணாவிரதமிருந்து உயிர் நீத்த சங்கரலிங்க நாடாரின் தியாகத்தை மறக்கமுடியாது. இந்திய சுதந்திரப் போராட்டத்தின்போது குலசேகரபட்டினத்தில் லோன் துரை என்ற வெள்ளைக்காரனைக் கொன்ற குற்றத்திற்காக தூக்குத் தண்டனை பெற்ற காசிராஜன், தூக்குமேடை ராஜகோபால் ஆகியோரின் வீரம் பலருக்கு எடுத்துக்காட்டு. வானம் பார்த்த சிவகாசி பூமியில் தீப்பெட்டித் தொழிற்சாலைகளையும் பட்டாசு தொழிற்சாலைகளையும் உருவாக்கி `குட்டி ஜப்பான்’ என்று சொல்ல வைத்து அனைத்து இனமக்களுக்கும் வேலைவாய்ப்பை உருவாக்கித் தந்தவர்கள் சிவகாசி பி.அய்யநாடாரும் ஏ.சண்முகநாடாரும் ஆவர். நீதிக்கட்சி வி.வி.ராமசாமி, விருதுநகர் சீமான் எம்.எஸ்.பி.ராஜா. வெள்ளைச்சாமி நாடார், ஏ.வி.தாமஸ், ஜெயராஜ் நாடார், டாக்டர் சந்தோஷம் என்று உழைப்பில் உயர்ந்த நாடார்களில் எண்ணற்றவர்களைக் காட்டலாம்.காவல் துறைக்கு பெருமை சேர்த்த அருள் ஐ.ஜி.யை எந்த சமூகத்தவரும் மறக்கமாட்டார்கள். இன்று கணினி உலகில் நுழைந்து உலகப் பணக்காரர்களுள் ஒருவராகத் திகழும் சிவ்நாடார், பழுத்த அரசியல் தலைவர் குமரிஅனந்தன், அரசியல் தலைவரும் நடிகருமான சரத்குமார் என்று பலரை இந்த சமூகத்தின் நட்சத்திரங்களாகக் காட்டலாம்.
|
Posts Tagged ‘Community’
Nadars: Era Manigandan
Posted by Snapjudge மேல் ஜனவரி 19, 2009
Posted in Tamil, Tamil Nadu | குறிச்சொல்லிடப்பட்டது: இனம், சாதி, ஜாதி, நாடார், மதம், Caste, Community, Kumudam, Kumudham, Kumutham, Manigandan, Manikandan, Naadaar, Naadar, Nadar, TamilNadu, TN | 4 Comments »
Pillaimaar: Ira Manikandan
Posted by Snapjudge மேல் ஜனவரி 19, 2009
21-01-09 தொடர்கள் | |||
கோட்டைப் பிள்ளை மார் வைதீகப்பற்று மிக்கவர்களாக இருந்தனர். பாண்டிய மன்னர்கள் பட்டமேற்கும் விழாக்களில் முடிசூடுவதற்கு முடியை எடுத்துக் கொடுக்கும் உரிமை தங்களுக்கு இருந்ததாகக் கூறுகிறார்கள். இவ்வளவு சிறப்பு வாய்ந்தவர்கள் தங்கள் குலப்பெண்களை கோட்டையை விட்டு வெளியில் அனுப்பாததை ஒரு வழக்கமாகக் கொண்டிருந்தனர். ஆனால் சமீப காலத்தில் அந்த முறையில் சிற்சில மாற்றங்கள் கொண்டு வரப்பட்டு, கோட்டைப் பிள்ளைமார் இனப் பெண்கள் வெளியில் வரத் தொடங்கினர். கல்வி கற்கத் தொடங்கினர். இந்த சமுதாயத்தில் பெண்ணிற்குப் பிறக்கும் குழந்தைகள் அந்தப் பெண்ணின் வழித் தோன்றலாகவே கருதப்படுகிறது. பொதுவாக பிள்ளைமார் சமூகத்தில் வரதட்சணை கேட்பதும் இல்லை. கொடுப்பதும் இல்லை. தொடக்கத்தில் பிள்ளைமார் சமூகத்தார் தங்கள் சொந்தத்திலேயே திருமண உறவு கொண்டிருந்தனர். உறவு விட்டுப் போய் விடக் கூடாது என்பதால் இப்படி இருந்தனர். ஆனால் இப்போது தங்கள் சொந்தங்களில் நல்ல வரன் கிட்டாதபோது மற்ற பிள்ளைமார்களுடனும் திருமண உறவு கொள்ளும் வழக்கம் வந்து விட்டது. திருமணங்களை இரண்டு வீட்டாரும் பேசி முடிக்கிறார்கள். இரு வீட்டாருக்கும் சம்மதம் என்றவுடன் வெற்றிலை மாற்றிக் கொள்கிறார்கள். பந்தக்கால் நடுவது, மாப்பிள்ளை அழைப்பு உட்பட அனைத்திற்கும் அன்றே நாள் குறிக்கிறார்கள். திருமணத்தை நடத்துவது பெண் வீட்டாரின் பொறுப்பாகவே இன்றும் உள்ளது. முதல் நாள் மாப்பிள்ளை அழைப்பு நடக்கும். திருமணத்திற்கு அரைமணி நேரத்திற்கு முன்புதான் நிச்சயதார்த்தம் நடக்கிறது. தேசிகர் ஒருவர் சைவமுறைப்படி மந்திரங்கள் ஓதி திருமணத்தை நடத்தித் தருகிறார். மாப்பிள்ளை, சகலை, மைத்துனர் என்று மூன்று பேர் அமர்ந்திருக்க, மணமான புதுப் பெண் வாழை இலை போட்டு அவர்களுக்குப் பரிமாற வேண்டும். இதனை `சட்டரசம் பரிமாறுதல்’ என்கின்றனர். திருமணம் முடிந்ததும் மாப்பிள்ளை பெண்ணை தேங்காய் உருட்டச் சொல்லுதல், தலையில் வைத்து அப்பளம் உடைத்தல் போன்ற விளையாட்டுக்களை ஆடச் செய்வது, பல பிள்ளைமார் சமூகத்தாரிடம் இன்றும் காணப்படும் வழக்கம். மணப்பெண் வீட்டிலும் மாப்பிள்ளையின் மறுவீட்டு அழைப்பிலும் விருந்து உபசாரம் தடபுடலாக இருக்கும். இவர்களின் திருமண விருந்தில் சொதி சாப்பாடும் அவியலும் மிகப் பிரசித்தம். பிள்ளைமார் சமூகத்தைச் சேர்ந்த பெண் பூப்படைந்த முப்பதாம் நாளில் சடங்கு நடக்கும். தாய்மாமன் சீலை எடுத்துக் கொடுத்து இந்தச் சடங்கை நடத்த வேண்டும். இந்தச் சடங்கிற்குப் பின், அந்தப் பெண் வீட்டை விட்டு வெளியில் வரக் கூடாது. ஆனால் இப்போது இந்த முறை மாறி, காலத்திற்குத் தக்கபடி நடக்கத் தொடங்கிவிட்டனர். பெரும்பாலான பெண்கள் முன் கொசுவம் வைத்து சேலை கட்டுவது வழக்கம். காதில் `பாம்படம்’ அணிய காதுகளை நீண்ட அளவிற்கு வளர்ப்பது இவர்களது வழக்கம்.இன்று நாகரிகம் கருதி இந்த வழக்கம் குறையத் தொடங்கி விட்டது. விதவைகள் திருமணத்திற்கு அனுமதி மறுத்து வந்த இவர்கள், இப்போது அதற்கு அனுமதி வழங்க ஆரம்பித்து விட்டனர். விதவைகள் வெள்ளைச் சேலை அணியும் வழக்கமும் அருகி வரத் தொடங்கி விட்டது. கணேசருக்கு செவ்வாய் பூஜை செய்வது வழக்கம். பெண்கள் மட்டுமே இந்த பூஜை செய்வதாக சொல்லப்பட்டது. இதில் ஆண்கள், சிறுவர்கள் அனுமதி கிடையாது. அய்யனார், காளி முதலிய கிராம தெய்வ வழிபாடும் இவர்களிடம் உண்டு. சுதந்திரப் போராட்டக் காலத்தில் இச்சமூகத்தினர் ஆற்றிய பங்கு மிகப் பெரியது. இந்திய சுதந்திரப் போராட்டம் என்பது ஒரு வீர வரலாறு. இந்தப் போரில் எண்ணற்றவர்கள் சிறை சென்றார்கள். இலட்சக்கணக்கானோர் தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்தனர். இதில் ஈடுபட்டோரில் பிள்ளை மார்களின் பங்கு மகத்தானது. உறங்கிக்கிடந்த தமிழ் மக்களைத் தட்டி எழுப்பி, நாமிருக்கும் நாடு நமக்குச் சொந்தமானது என்று மக்களை எழுச்சிபெறச் செய்தவர் வ.உ.சி. நாமே கப்பல் ஓட்டி கடல் ஆதிக்கத்தைக் கைப்பற்ற முடியும் என்று முனைந்து வெள்ளையனுக்கு எதிராக சுதேசிக் கப்பல் நிறுவனத்தை நிறுவி இரண்டு கப்பல்களை விட்டார். சுதந்திரப்போரில் தென்னகத்தின் தளபதியாக இருந்து ஆங்கிலேயரை ஆட்டம் காண வைத்தார். அதனாலேயே வெள்ளையரின் அடக்குமுறைக்கு ஆளாகி, சொத்து சுகங்களை இழந்து செக்கிழுத்து கல் உடைத்து சொல்லொணாத் துன்பங்களைச் சுமந்தார். நமது பாரதநாட்டின் விடுதலை வரலாற்றில் மாவீரர் சர்தார் வேதரத்தினம் பிள்ளையின் பெயர் அழுத்தமாகப் பதிந்துள்ளது. தமிழ்நாட்டில் நிகழ்ந்த உப்பு சத்தியாகிரகப் போராட்டத்தின் தளபதியாக இருந்து வெள்ளையர்களை அச்சுறுத்தியதால் பலமுறை சிறை சென்றார். காந்தியடிகளின் தலைமையின்கீழ் போராடிய அகிம்சா வீரர். பிரிட்டிஷ் ஆதிக்கத்திற்கு எதிராகப் போராடிய பிள்ளைமார் சமூகத்தவர்களின் பட்டியல் மிகப் பெரியது. அதேபோல், இச் சமூகத்தினர் சைவத்திற்கும் தமிழுக்கும் ஆற்றிய தொண்டு அளப்பரியது.
|
Posted in India, Tamil, Tamil Nadu | குறிச்சொல்லிடப்பட்டது: கலாசாரம், கலாச்சாரம், சமூகம், சாதி, ஜாதி, தமிழ்நாடு, பிள்ளை, பிள்ளைமார், Caste, Community, Custom, Kumudam, Kumudham, Marriages, Pillai, Pillaimaar, Rituals, Weddings | 15 Comments »
Reservations: Supreme Court upholds 27 per cent quota for OBCs – In pursuit of inclusive education
Posted by Snapjudge மேல் ஏப்ரல் 14, 2008
நீதி மன்றம் கொடுத்த தீர்ப்பின்படி 64 மத்திய அரசின் உயர்கல்வி நிலையங் களில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 விழுக்காடு இட ஒதுக்கீடு அளிக்கப்படவிருக்கிறது.
- இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி
- இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மென்ட்
- தேசிய தொழில்நுட்பக் கல்லூரிகள் (20)
- இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸ், பெங்களூரு,
- இந்தியன் ஸ்கூல் ஆஃப் மைன்ஸ் (சுரங்கங்கள்)
- இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸ் கல்வி மற்றும் ஆராய்ச்சி
- ஸ்கூல் ஆஃப் பிளானிங் மற்றும் ஆர்கிடெக்சர்
- அய்.அய்.அய்.டி.,கள்
முதலிய பல்வேறு நிலையங்கள் இந்தப் பட்டியலில் இடம்பெறுகின்றன.
சென்ற ஆண்டு இந்த நிலையங்களில் 1,24,377 மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இடைக்காலத் தடை இல்லாமல் இருந்திருந்தால், பிற்படுத்தப்பட்டவர்கள் 33,581 பேர்கள் சேர்ந்து படித்துக் கொண்டிருக்க முடியும். இதே எண்ணிக்கை மாணவர்கள் இந்த ஆண்டு படிக்கக் கூடிய வாய்ப்பு இந்தத் தீர்ப்பினால் கிடைத்துள்ளது.
இடஒதுக்கீடு தொடர்பான உச்சநீதிமன்றம் தீர்ப்பு எதிரொலி
அய்.அய்.டி., அய்.அய்.எம்.களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 1,500 இடங்கள் கிடைக்கும்
27 சதவீத இடஒதுக்கீடு தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்பை அடுத்து அய்.அய்..டி., அய்.அய்.எம். உயர் கல்வி நிறுவனங்களில் பிற்படுத் தப்பட்ட வகுப்பினருக்கு 1,500 இடங்கள் கிடைக்கும் என்பது தெரிய வந்துள்ளது. சென்னை அய்அய்..டி.யில் மட்டும் 150 பேர் சேரலாம். மண்டல் கமிஷன் பரிந் துரைப்படி மத்திய அரசு பணியிலும் மத்திய அரசின் கல்வி நிறுவனங்களிலும் பிற் படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். மத்திய அரசு பணியில் இந்த 27 சதவீத இடஒதுக்கீடு பின்பற்றப்பட்டு வருகிறது. ஆனால், மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் நடைமுறைப்படுத்தப்படாமல் இருந்து வந்தது.
இந்த நிலையில், அய்.அய்.டி., அய்.அய்..எம். உள் ளிட்ட உயர்கல்வி நிறுவனங் களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (ஓ.பி.சி.) 27 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் வகையில் மத்திய அரசு கடந்த ஆண்டு சட்டம் கொண்டு வந்தது. இதை அமல்படுத்து வதற்கான நடவடிக்கையும் எடுக்கப்பட்டது. ஆனால், மத்திய அரசு கொண்டுவந்த சட்டத்தை எதிர்த்து உச்சநீதி மன்றம் ஏராளமான வழக் குகள் தாக்கல் செய்யப்பட்டன.
இதைத்தொடர்ந்து, கடந்த ஆண்டு 27 சதவீத இடஒதுக் கீட்டை அமல்படுத்த உச்சநீதி மன்றம் இடைக்கால தடை விதித்தது. இந்த நிலையில், பிற்படுத்தப்பட்ட வகுப்பின ருக்கு மத்திய அரசு உயர்கல்வி நிறுவனங்களில் 27 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் வகை யில் மத்திய அரசு கொண்டு வந்த சட்டம் செல்லும் என்று உச்சநீதிமன்றம் நேற்று அளித்த தீர்ப்பில் இந்த கல்வி ஆண்டில் 27 சதவீத ஒதுக் கீட்டை நடைமுறைப்படுத்தும் சூழநிலை உருவாகி இருக் கிறது.
இந்தியாவில் சென்னை, மும்பை, டில்லி, கான்பூர், கரக்பூர், ரூர்க்கி, கவுஹாத்தி ஆகிய 7 இடங்களில் அய்அய்.டி கல்வி நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இந்த கல்லூரிகளில் பி.டெக். படிப் பில் சுமார் 4,000 இடங்கள் உள்ளன. ஜெ.இ.இ. என்று அழைக்கப்படும் சிறப்பு நுழை வுத்தேர்வு மூலம் ஐ.ஐ.டி.க்கு மாணவர்கள் சேர்க்கப்படு கிறார்கள்.
அய்.அய்..யைப் போல இந்தியாவில் அகமதாபாத், பெங்களூர், கொல்கத்தா, கோழிக்கோடு, இந்தூர், லக்னோ ஆகிய 6 இடங்களில் ஐ.ஐ.எம். மேலாண்மை கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த கல்லூரி களில் 1,500 எம்.பி.ஏ. இடங்கள் இருக்கின்றன. இதற்கான மாணவர் சேர்க்கை கேட் என்ற பொது நுழைவுத்தேர்வு அடிப் படையில் நடைபெறுகிறது.
27 சதவீத இடஒதுக்கீடு தொடர்பான உச்சநீதிமன் றத்தை அடுத்து அய்அய்.டி., அய்.அய்..களில் பிற்படுத்தப் பட வகுப்பினருக்கு சுமார் 1500 சீட்டுகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
அய்.அய்..டி கல்வி நிறுவனங்களில் 1080 இடங் களும், அய்.அய்.எம்.களில் 405 இடங்களும் ஓ.பி.சி. வகுப் பினருக்கு கிடைக்கும். சென்னை அய்.அய்.டி.யில் மொத்தம் 550 சீட்டுகள் உள் ளன. எனவே, இங்கு மட்டும் 150 ஓ.பி.சி. மாணவர்கள் சேர முடியும்.
அய்.அய்.டி. கல்வி நிறுவனங்களிலும், பெங்க ளூரில் உள்ள அய்.அய்.எஸ்சி. (இந்திய அறிவியல் கல்வி நிறுவனம்) எம்.எஸ்சி., எம்.டெக். உள்ளிட்ட முதுநிலை படிப்பு களும் வழங்கப்படுகின்றன. இவற்றிலும் ஓ.பி.சி. வகுப் பினருக்கு இடஒதுக்கீடு கிடைக்கும்.
அய்.அய்.டி.,யில் ஆதி திராவிடர்களுக்கு 15 சதவீத மும், பழங்குடியினருக்கு 7 சதவீதமும், உடல் ஊனமுற் றோருக்கு 3 சதவீத இடஒதுக் கீடும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டிலிருந்து பிற் படுத்தப்பட்ட வகுப்பினருக் கும் இடஒதுக்கீடு வழங்குவ தால் இந்த வகுப்பைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவ-மாணவிகள் அய்.அய்.டி. கல்வி நிறுவனங்களில் சேருவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Posted in Tamil | குறிச்சொல்லிடப்பட்டது: BC, Caste, Colleges, Community, Education, Engg, Engineering, IIM, IIT, OBC, Quota, Reservations, SC, Schools, ST, Students, Technology, University | Leave a Comment »