தாய்லாந்துப் பிரதமர் பதவி விலக நீதிமன்றம் கெடு
![]() |
![]() |
பிரதமர் சமக் சுந்தரவெஜ்ஜும் |
தாய்லாந்துப் பிரதமர் சமக் சுந்தரவெஜ்ஜும் அவரது அமைச்சரவையும் அடுத்த முப்பது நாட்களுக்குள் பதவி விலக வேண்டும், ஏனெனில் நாட்டின் அரசியல் சாசன விதிமுறையை பிரதமர் மீறியுள்ளார் என்று அந்நாட்டின் அரசியல் சாசன நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பிரதமரான பின்னரும் ஒரு தொலைக்காட்சி சமையல்கலை நிகழ்ச்சியில் அவர் தொடர்ந்து தோன்றிவந்ததன் காரணமாக, வெளி வியாபார நலன்களைத் தொடரக்கூடாது என்ற பிரதமருக்கான அரசியல் சாசன விதிமுறையை அவர் மீறிவிட்டார் என ஒன்பது நீதிபதிகளைக் கொண்ட பென்ச் தீர்மானித்துள்ளது.
இத்தீர்ப்பு குறித்து கருத்து வெளியிட்ட ஆளும் கூட்டணிக்குத் தலைமை ஏற்றுள்ள மக்கள் அதிகாரக் கட்சியின் அதிகாரிகள், தாங்கள் சமக் அவர்களையே மீண்டும் அதிபராக மீண்டும் தெரிவுசெய்யப்போவதாகக் கூறியுள்ளனர்.