Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘yasodhara raje scindia’ Category

‘Her highness’ creates India row – “Shrimant” Yashodhara Raje Scindia

Posted by Snapjudge மேல் நவம்பர் 13, 2006

“ஸ்ரீமந்த்’ பட்டம் கிளப்பியுள்ள புதிய சர்ச்சை!

நீரஜா சௌத்ரி
தமிழில்: சாரி.

மத்தியப் பிரதேச மாநில அமைச்சர் யசோதரா ராஜே சிந்தியாவுக்கு, “”ஸ்ரீமந்த்” என்ற பட்டத்தை வழங்குவது என்று மத்தியப் பிரதேச மாநில அரசு முடிவு செய்துள்ளது.

ஸ்ரீமந்த் என்றால் செல்வப் பெருந்தகை என்று பொருள். அக்காலத்தில் ராஜ குடும்பத்தைச் சேர்ந்தவர்களை விளிக்கும் மரியாதைச் சொல்லாகவே இது இருந்தது. யசோதரா ராஜே சிந்தியா, மத்தியப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ராஜமாதா விஜயராஜே சிந்தியாவின் மகள். ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே சிந்தியாவின் சகோதரி. அதைவிட முக்கியம், மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் மாதவராவ் சிந்தியாவின் சகோதரி.

35 ஆண்டுகளுக்கு முன்னால் ராஜ வம்சத்தவர்களுடைய பெயர்களுடன் இணைத்து ஒலித்த இந்த பட்டங்களையும் பதவிகளையும் இந்திரா காந்தி தனது ஆட்சிக் காலத்தில் ஒழித்தார். மன்னர் மானியங்களையெல்லாம் ஒழிக்க மசோதா கொண்டு வந்தார். மாநிலங்களவையில் ஒரு வாக்கு வித்தியாசத்தில் அது தோற்றது. பிறகு அவசரச் சட்டமாக அதைக் கொண்டு வந்தார். உச்ச நீதிமன்றம் அது செல்லாது என்று அறிவித்தது. பிறகு மக்களவையைக் கலைத்து நாடாளுமன்றத்துக்குப் பொதுத் தேர்தலை நடத்தி பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவுடன் புதிய ஆட்சியை அமைத்தார். அப்போது மன்னர் மானியம் ஒழிப்பு, சிறப்பு பட்டங்கள் ஒழிப்பு போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

இப்போதோ மத்தியப் பிரதேச ஆளும் பாரதீய ஜனதா கட்சியின் முதல்வர் சிவராஜ் செüஹான், தனது அரசில் பணிபுரியும் இளைய அமைச்சரான யசோதரா ராஜே சிந்தியாவுக்கு ஸ்ரீமந்த் என்ற பட்டத்தை வழங்கத் தீர்மானித்திருக்கிறார்.

3 காரணங்கள்: இதற்கு 3 காரணங்கள் உள்ளன என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

குவாலியர் பிரதேசத்தில் ராஜ குடும்பத்தினரும் அவர்களுடைய விசுவாசிகளும் அதிகம். அவர்களுடைய ஆதரவைப் பெறுவதற்காக செüஹான் இப்படி விருது வழங்கியதாக ஒரு வட்டாரம் தெரிவிக்கிறது. காங்கிரஸ் பறித்த பட்டங்களை வழங்கி ராஜ வம்சத்தை கெüரவிக்க பாரதீய ஜனதா தயாராக இருக்கிறது என்பதை மறைமுகமாக உணர்த்தவே இந்த அதிகாரபூர்வ அறிவிப்பு என்று அவ் வட்டாரம் சுட்டிக்காட்டுகிறது.

சிந்தியா குடும்பத்துக்குள்ளேயே சொத்துச் சண்டை தீராமல் இருக்கிறது. இந் நிலையில் யசோதராவுக்கு அளிக்கப்பட்டுள்ள இந்தப் பட்டம், மாநில அரசு அவருக்கு ஆதரவாக இருப்பதை உணர்த்துவதாக மற்றொரு வட்டாரம் சுட்டிக்காட்டுகிறது.

விதிஷா, படே மலேரா தொகுதிகளில் நடந்த இடைத் தேர்தலில் பாரதீய ஜனதா வெற்றி பெற்றிருந்தாலும், காங்கிரஸýக்கு அடுத்த இடத்தை உமா பாரதியின் கட்சி பெற்றிருக்கிறது. அவர் ராஜமாதா விஜய ராஜே சிந்தியாவால் அரசியலுக்குக் கொண்டு வரப்பட்டவர். எனவே ராஜ வம்சத்தவரும் அவருடைய ஆதரவாளர்களும் உமா பாரதி பக்கம் சாய்ந்து விடக்கூடாது என்பதற்காக இப் பட்டம் தரப்பட்டதாக மற்றொரு வட்டாரம் தெரிவிக்கிறது.

எது எப்படியோ, மத்தியப் பிரதேச அரசின் இந்த நடவடிக்கைக்கு ஆர்எஸ்எஸ்ஸின் ஆசி நிச்சயம் உண்டு. ராஜ குடும்பத்தவர்களை மீண்டும் தன் பக்கம் ஈர்க்க ஆர்எஸ்எஸ் முயற்சிகளைச் செய்து வருகிறது.

காங்கிரஸ் கட்சியின் மெüனம்தான் இப்போது நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. ஏனெனில் மன்னர் மானிய ஒழிப்பையும், பட்டங்கள் ஒழிப்பையும் தனது முக்கிய கொள்கையாக இந்திரா காந்தி கொண்டிருந்தார்.

சுதந்திரமான குடியரசு நாட்டில் மக்கள் அனைவரும் சமம். அதில் யாருக்கும் சிறப்பு பட்டங்களோ, பெயர்களோ கூடாது என்று அறிவித்தவர் இந்திரா காந்தி. ஆனால் இப்போது சிறப்பு பட்டங்களையும் பெயர்களையும் கூறி அழைப்பது வழக்கமாகி வருகிறது. ராஜ வம்சத்தைச் சேர்ந்தவர்களும் பெரும் தொழிலதிபர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களாகி ஆட்சி அதிகாரத்தில் ஓர் அங்கமாகிவரும் பருவம் இது. மக்களிடையேயும் இது பெரிய சலசலப்பை ஏற்படுத்திவிடவில்லை. ராஜ குடும்பத்து பாரம்பரியங்களை ஏற்கும் மன நிலையில் மக்கள் இருப்பதையே இப்போதைய நிகழ்வுகள் பறைசாற்றுகின்றன.

  • வி.பி. சிங்கை “”ராஜா சாஹேப்” என்று அழைப்பது,
  • மாதவராவ் சிந்தியாவை “”மகாராஜா” என்று அழைத்தது,
  • திக்விஜய் சிங்கை “”ராஜா” என்று அழைப்பது அனைத்துமே மக்களின் இம் மனோபாவத்தையே உணர்த்துகின்றன.

சிறப்புப் பொருளாதார மண்டலங்களை ஏற்படுத்துவது என்பதே “”நவீன ஜமீன்தார்களை” உருவாக்கும் நடவடிக்கையே அல்லவா! சமத்துவம் என்ற கொள்கை இப்போது கேலிக்குரியதாகிவிட்டது. சில குடும்பங்களும் வம்சங்களும் மற்றவர்களைவிட உயர்ந்தவர்கள், சலுகைகளைப் பெறத் தகுதி உள்ளவர்கள் என்ற கருத்து அரசியலில் வேர்விட ஆரம்பித்துவிட்டது. சமதர்மக் கொள்கைக்கு இது வேட்டுவைக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.

தமிழில்: சாரி.

Posted in Feudal, Honor, Madhya Pradesh, Neeraja Chowdhry, Op-Ed, Rajasthan, Shrimant, Srimanth, Title, yashodhara raje scindia, yasodhara raje scindia | Leave a Comment »