சீனாவில் மரண தண்டனை சீர்திருத்தம்
![]() |
![]() |
சீனாவில் தான் உலக அளவில் அதிக மரண தண்டனைகள் |
சீனாவில் மரண தண்டனையை நிறைவேற்றுவது குறித்து புதிய நடைமுறைகள் கொண்டுவரப்பட்டுள்ளன. இதன்படி மரண தண்டனைகளை விதிக்க, இனி நாட்டின் உச்ச நீதிமன்றத்தின் அனுமதியைப் பெற்றாக வேண்டும்.
அடுத்த ஆண்டு முதல் நடைமுறைக்கு வரவுள்ள இந்தப் புதிய விதிகள், சீனா மரண தண்டனை தொடர்பாக கடந்த இருபது ஆண்டுகளில் செய்த மிகப் பெரிய சீர்திருத்தம் என்று அந் நாட்டின் அரச ஊடகம் தெரிவிக்கிறது.
இதனால் மரண தண்டனை வழங்கும் அதிகாரம் இனி மாகாண நீதிமன்றங்களுககு இருக்காது.
உலகிலேயே அதிக அளவு மரண தண்டனைகள் சீனாவில்தான் விதிக்கப்படுகின்றன. பல சமயங்களில் அநீதி இழைக்கப்படுகிறது என்ற குரல்கள் எழுவதால், அதைச் சமாளிக்க இது போன்ற சீர்திருத்தம் மேற்கொள்ளப்படுவதாக பீஜீங்கில் இருக்கும் பி பி சி நிருபர் தெரிவிக்கிறார். ஆனால் அதே சமயம் மரண தண்டனையை சீனா ஒழிக்கும் என்பதற்கான தடையங்கள் ஏதும் தென்படவில்லை என்றும் அவர் கூறுகிறார்.