இங்கிலாந்து, நியூஸிலாந்து அணிகளும் தேர்வு : பாக். அணியில் அக்தர், ஆசிப், உமர்
கராச்சி, பிப். 15: உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் கலந்து கொள்ளும் பாகிஸ்தான் அணியில் வேகப்பந்து வீச்சாளர்கள் சோயிப் அக்தர், முகமது ஆஷிப், உமர் குல் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
மேலும், டெஸ்ட் போட்டியில் மட்டுமே விளையாடிவந்த டேனிஷ் கனேரியாவும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பாக பந்து வீசியதால் வாய்ப்பை பெற்றார்.
வேகப்பந்து வீச்சாளர் முகமது சமி, சபீர் அகமது, ஆகியோருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.
முழங்கால் வலி, தோள்பட்டை வலியால் அவதிப்பட்டு வந்த சோயிப் அக்தர், முகமது ஆஷிப் ஆகியோர் முழுமையாக குணமாகாத நிலையிலும் 15 பேர் அணியில் இடம்பெற்றுள்ளனர்.
இவர்கள் இருவருக்கும் இம்மாத இறுதியில் உடற்தகுதிச் சோதனை நடைபெற உள்ளது. அதில் தேறாவிட்டால் அவர்களுக்குப் பதிலாக மாற்று வீரர்கள் தேர்வு செய்யப்படும் என்று பாகிஸ்தான் வாரியத்தின் தேர்வுக்குழு தலைவர் முகமது அல்தார் தெரிவித்தார்.
தனது, முதல் ஆட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகளை சந்திக்கிறது பாகிஸ்தான்.
வீரர்கள் விவரம்:
- இன்சமாம் உல் ஹக் (கேப்டன்),
- யூனிஸ் கான் (துணைக் கேப்டன்),
- முகமது ஹபீஸ்,
- இம்ரான் நசீர்,
- முகமது யூசுப்,
- சோயிப் மாலிக்,
- அப்துல் ரசாக்,
- ஷாஹித் அஃப்ரிதி,
- கம்ரான் அக்மல்,
- சோயிப் அக்தர்,
- முகமது ஆஷிப்,
- உமர் குல்,
- டேனிஷ் கனேரியா,
- ரானா நவேத் உல் ஹசன்,
- ராவ் இஃப்திகார் அஞ்சும்.
நியூஸிலாந்து அணி: நியூஸிலாந்து அணியில் வேகப்பந்து வீச்சாளர் டேரல் டஃபி மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளார்.
அதே சமயம் ஆல்ரவுண்டர் கிறிஸ் மார்ட்டின், ஆண்ட்ரூ ஆடம்ஸ் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.
உலகக் கோப்பை போட்டியில் “சி’ பிரிவில் இடம் பெற்றுள்ளது நியூஸிலாந்து. இங்கிலாந்து, கனடா, கென்யா ஆகிய அணிகள் இப் பிரிவில் உள்ளன.
வீரர்கள் விவரம்:
- ஸ்டீபன் பிளெம்மிங் (கேப்டன்),
- வின்சென்ட்,
- பீட்டர் புளுட்டன்,
- ரோஸ் டெய்லர்,
- ஸ்காட் ஸ்டைரிஸ்,
- ஜேக்கப் ஓரம்,
- மெக்மிலன்,
- பிரண்டன் மெக்மிலன்,
- டேனியல் வெட்டோரி,
- ஜேம்ஸ் பிராங்க்ளின்,
- ஜித்தன் படேல்,
- ஷேன் பாண்ட்,
- மார்க் கில்லெஸ்பி,
- மைக்கேல் மாஷன்,
- டேரல் டஃபி.
இங்கிலாந்து அணி: உலகக் கோப்பைக்கான இங்கிலாந்து அணியில் ரவி போப்ரா சேர்க்கப்பட்டுள்ளார். அதேசமயம் மால் லோய்க்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.
முதல் சுற்றில் இங்கிலாந்து அணி நியூஸிலாந்து, கனடா, கென்யா ஆகிய அணிகளுடன் விளையாட உள்ளது.
வீரர்கள் விவரம்:
- மைக்கேல் வாகன் (கேப்டன்),
- ஜேம்ஸ் ஆன்டர்சன்,
- இயான் பெல்,
- ரவி போப்ரா,
- பால் காலிங்வுட்,
- ஜேமி டேரம்பில்,
- ஆண்ட்ரூ பிளிண்டாஃப்,
- எட் ஜோய்ஸ்,
- ஜான் லீவிஸ்,
- சஜீத் முகமது,
- பால் நிக்சன்,
- மான்டி பனேசர்,
- கெவின் பீட்டர்சன்,
- லியாம் பிளங்கெட்,
- ஆன்ட்ரூ ஸ்டிராஸ்.