உலககோப்பை கிரிக்கெட்: இந்திய அணிக்கு 15 பேர் தேர்வு
மும்பை, பிப். 12-
4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் உலககோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் 13-ந்தேதி வெஸ்ட் இண்டீசில் தொடங்குகிறது.
இதற்கான 15 வீரர்கள் கொண்ட அணியை 13-ந் தேதிக்குள் (நாளை) அறிவிக்க வேண்டும் என்று சர்வதேச கிரிக்கெட் சங்கம் கூறி உள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியை தேர்வு செய்வதற்காக தேர்வு குழு கூட்டம் மும்பையில் இன்று நடந்தது. அதன் தலைவர் வெங்சர்க்கார் தலைமை தாங்கினார். 4 தேர்வு குழு உறுப்பினர்கள் மற்றும் கேப்டன் டிராவிட், பயிற்சியாளர் கிரேக் சேப்பல் ஆகியோரும் இதில் கலந்து கொண்டனர். பகல் 11.15 மணிக்கு கூட்டம் தொடங்கியது.
கூட்டத்தின் முடிவில் 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டது. அதன் விவரம் வருமாறு:-
- டிராவிட் (கேப்டன்),
- தெண்டுல்கர்,
- ஷேவாக்,
- கங்குலி,
- உத்தப்பா,
- யுவராஜ்சிங்,
- டோனி,
- தினேஷ்கார்த்திக்,
- ஹர்பஜன்சிங்,
- ஜாகீர்கான்,
- முனாப்பட்டேல்,
- கும்ப்ளே,
- அகர்கர்,
- பதான்,
- ஸ்ரீசந்த்.