Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Vikadan’ Category

Kalki Rajendran on Kalki’s Ponniyin Selvan

Posted by Snapjudge மேல் நவம்பர் 29, 2007

கல்கியின் சிரசாசனம்
சேந்தன் அமுதனுக்கு சிம்மாசனம்
– கல்கி இராஜேந்திரன்

கல்கி குடும்பத்தின் நலனில் அக்கறை உடைய நெருங்கிய நண்பர் ஒருவர், சென்ற இதழில் வெளியான கட்டுரையைப் படித்து விட்டு (நாவல் பிறந்த கதை) போன் செய்தார்.

“கல்கி சக எழுத்தாளர் ஒருவரின் நாவலைக் குறை வாக மதிப்பிட்டு அலட்சிய மாகப் பேசியதாக எழுதி யிருக்கிறாய். உன் சகோதரி ஆனந்தி, பதிலுக்கு, கல்கி அவர்களின் சிவகாமியின் சபதத்தையே குறைத்து மதிப்பிட்டது போலவும் எழுதியிருக்கிறாய். இதெல் லாம் எனக்கு ஒப்புதலாய் இல்லை’ என்று கருத்து தெரிவித்தார்.

சொன்னவர், கல்கி அவர்களை நன்கு அறிந்தவர். எனவே என் எழுத்தில்தான் ஏதோ குறை இருக்க வேண்டும் என்று எனக்குத் தோன்றுகிறது. அவரைப் போலவே வேறு பலரும் நினைக்கக்கூடும். ‘இதனால் அறியப்படுவது யாதெனில்’ என்று உணர்த்துவதுபோல எழுதுவதில் எனக்கு ஆர்வம் இல்லை. இருந்தாலும் சில சமயம் அது அவசியமாகிறது என்று உணர்கிறேன்.

கல்கி அவர்கள் சக எழுத்தாளரை மதிக்காமலில்லை. அப்படி இருந்தால் அவருடைய நாவலைப் படித்தே இருக்க மாட்டார். சிலரது எழுத்தை மதிக்கா விட்டாலும் எழுதியவரை மதிப்பவர் கல்கி. ஆனந்தியிடம் அவர் பேசியது ஒரு வாதத்தைக் கிளறுவதற்காகத்தானே தவிர, சக எழுத்தாளரைக் குறைத்து மதிப்பிடு வதற்காக அல்ல. அதேபோல சகோதாரி அவருக்குப் பதிலளித்தது, எங்களுக்கு அப்பா அளித்திருந்த சுதந்திரத்தின் வெளிப் பாடுதானே தவிர, அவளுடைய அதிகப் பிரசங்கித்தனம் அல்ல. சிவகாமியின் சபதத் துக்கு சிறப்பாயிரம் எழுதக் கூடியவள் ஆனந்தி. விஷயம் என்னவென்றால், கல்கி அவர்களுக்கு விவாதங்களில் நம்பிக்கைஉண்டு. கலந்துரையாடலும் அதில் இடம் பெறக்கூடிய வாதப் பிரதிவாதங்களும், தயிரைக் கடைந்தால் வெண்ணெய் திரள் வதுபோலத் தெளிவை உண்டாக்கும் என்பதை உணர்ந்தவர். ராஜாஜியுடன் அரசியலை விவாதிப்பார்; டி.கே.சி.யுடன் இலக்கியக் கருத்துப் பரிமாற்றங்கள் நடக் கும். ஒரு பொருளாதார விஷயம் பற்றி எழுத வேண்டுமென்றால் அது குறித்த விஷயஞானமுள்ளவரிடம் பேசுவார்; விவாதிப்பார். தொடர்கதை எழுதுமுன்னர் என்னிடமும் சகோதரியிடமும் கதை சொல்லுவார். எங்கள் முக பாவங்களை உற்று நோக்குவார். அதன் மூலமே கதை யின் சுவாரஸ்யத்தை எடை போடுவார்.

சிறு வயதிலேயே கதாகாலட்சேபங் கள் பலவற்றைக் கேட்டுக் கேட்டு, கிராமத்தில், வீட்டுத் திண்ணையில் நின்று, ஊர் மக்களுக்குக் கதை சொல்லி மகிழ் வித்தவர் கல்கி. ஆனந்தியும் நானும் குழந்தைகளாக இருந்தபோது, ஊஞ்சலில் அவருக்கு இருபுறமும் அமர்ந்து ராமா யணம், மகாபாரதம் உள்பட பல கதைகள் கேட்போம். கொஞ்சம் எங்களுக்கு வயதான பிறகு, அவர் எழுதப்போகும் தொடர்கதைகளையே பல்வேறு உணர்ச்சி கள் தொனிக்கச் சொல்வார். கேள்விகளை வரவேற்பார். கதை மேலே தொடரும். சில சமயம் ஒரு கேள்வியின் விளைவாக கதையில் ஒரு புதிய சிந்தனை தோன்றும்; திருப்பம் ஏற்படும்.

பொன்னியின் செல்வன் ஐந்தாம் பாகம் எழுதி வருகையில், ஒரு நாள் கல்கி சிரசாசன நிலையில் இருந்தார். நேரம் பார்ப்பது என் வேலை. பாடப் புத்தகமும் கடிகாரமுமாக நான் பக்கத்தில் அமர்ந்திருந் தேன். ஐந்து நிமிஷங்களுக்குப் பதில் மூன்றாவது நிமிஷம் இறங்கிவிட்டார். நான் கவலை அடைந்து, ‘என்ன? என்ன?’ என்று சற்று பதற்றத்துடன் அவரை நெருங்கினேன்.

“ஏண்டா! சேந்தன் அமுதனை சோழ சக்கரவர்த்தியாக்கிவிட்டால் என்ன?’ என்று என்னைக் கேட்டார். சிரசாசன நிலையிலும் அவர் மனம் பொன்னியின் செல்வனில்தான் இருந்திருக்கிறது என்பதைப் புரிந்துகொண்ட நான், “லாஜிக் சரியாக அமையுமானால் செய்ய லாம்’ என்று சொன்னேன். “ஒரு ண்தணூணீணூடிண்š ணாதீடிண்ணா இருக்கும்.’

அடுத்து, சவாசன நிலையிலும் அவர் உள்ளம் சேந்தன் அமுதனிடம்தான் இருந்தது. பின்னால் அந்தப் புதிய திருப்பத்தை அவர் விவரித்தபோது கவனமாகக் கேட்டு, கேள்விகளையும் எழுப்பினேன். பதில் கூறும்போதே பிசிறுகளை நீக்கி கதை யோட்டத்தைக் கச்சிதப்படுத்தினார்.

என்னைவிடவும் என் சகோதரிக்கு கொஞ்சம் சலுகையும் அதிகம்; துணிவும் மிகுதி. சிவகாமியின் சப தத்தை உள்ளடக்கிய அவளுடைய ஓர் எதிர் வாதத்துக்காக கல்கி கோபமடையவில்லை என்பதுதான் முக்கியம். மாறாக, ஒரு சவாலாக ஏற்றுக் கொண்டார். சாதாரணமாக எல்லா நாவல்களிலுமே கதாநாயகன், கதாநாயகி, வில்லன் அல்லது வில்லி என்று கதாபாத்திரங்கள் அமையும். கல்கி இந்த முக்கோணத்தை உடைத் தெறிந்தார் தமது அலை ஓசை நாவலில் (எப்படி என்பதை சென்ற வாரமே விளக்கி யிருக்கிறேன்). இதை அவர் சாதிப்பதற்கு, ‘ராமாயணத்தின் சாயல் சிவகாமியின் சபதத்தில் படிந்திருக்கிறது’ என்று ஆனந்தி கூறியது ஒரு தூண்டுகோலாக அமைந்தது.

ஆனந்தி அவர் எழுத்தில் குறை கண்டு விமர்சித்த வேறு தருணங்களும் உண்டு. வந்தியத்தேவன், பல்லக்கில் செல்லும் நந்தினியை முதன் முதலாகச் சந்திக்கும் சாட்சி, அலெக்ஸாண்டர் டூமா எழுதிய த்ரீ மஸ்கிடீர்ஸ் நாவலில் வரும் ஒரு காட்சி போலவே அமைந்திருப்ப தாக அவள் சொன்னதை கல்கி ஒரு தார்மிகத்
துணிவுடன் ஏற்றுக்கொண்டார். “சில சமயம் இப்படித்தான் தவிர்க்க முடியாதபடி பாதிப்பு ஏற்படும்; தொடர்ந்து படித்து வா, அப்புறம் சொல்லு’ என்றார். ஆயிரம் டூமாக்கள் வந்தாலும் நெருங்க முடியாத அளவுக்கு பொன்னியின் செல்வன் தன்னிகரற்ற ஓர் இலக்கியச் செல்வமாகத் தமிழனுக்குக் கிடைத்தது.

1954 தீபாவளி சமயம், உடல் பரிசோதனைகளுக்காக கல்கி, ஜி.ஹெச்.சில் சேர்க்கப்பட்டார். மருத் துவமனையில் இருந்தபடியே தீபாவளி மலருக்காக ‘மயில் விழி மான்’ என்ற கதையை எழுதினார். அதைப் படித்த ஆனந்தி, “கதையெல்லாம் பிரமாதம்தான்; ஆனால், இது என்ன மயில் விழி மான் என்று ஒரு தலைப்பு? நீங்கள் தரக்கூடிய தலைப்பாகவே இல்லை. பகீரதன்தான், ‘தேன்மொழியாள்’, ‘குயில் குரலாள்’ என்றெல்லாம் தலைப்பு தருவார்’ என்றாள்.

கல்கி ‘இடிஇடி’ என்று சிரித்துவிட்டு “அப்படியா! பகீரதன் என்னிடமிருந்து கற்றுக்கொள்வதற்குப் பதில் அவனிட மிருந்து நான் கற்றுக்கொள்ள ஆரம் பித்துவிட்டேன் போலிருக்கு!’ என்று கூறி, உடல் உபாதைகளையும் மறந்து மேலும் சிரித்தார்!

Posted in Anandhi, Anandi, Authors, Bageeradhan, Bageerathan, Bagiradhan, Bagirathan, discussion, Faces, Fiction, Kalki, Krishnamoorthy, Krishnamurthy, Literature, Memoirs, Narration, Novels, people, Ponniyin Selvan, Rajendhiran, Rajendiran, Rajendran, Rajenthiran, Story, Vikadan, Vikatan, Writers | Leave a Comment »

Aval Vikadan profiles on prominent Female bloggers in Tamil

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 21, 2007

இணையத்து இளவரசிகள் – அவள் விகடன் 

– பாரதி தம்பி
படங்கள்: ‘ப்ரீத்தி’ கார்த்திக், இரா.ரவிவர்மன், சௌந்தரவிஜயன்
Gayathri Aval Vikatan Female Blogger Profiles  Thamizhnathy Selvanayaki Lakshmi Aval Vikadan

இது பெண்களின் காலம். பாதையெங்கும் விரவிக் கிடக்கும் முட்களை ஒவ்வொன்றாகத் தூக்கி தூர வீசிவிட்டு தனக்கான வெற்றிப் பாதையை தானே அமைத்துக் கொள்ளும் நேரம். அந்த முன்னேற்றத்தின் டிஜிட்டல் அடையாளம்-தான் ‘பெண் வலைப்பதிவு (ப்ளாக் – blog) எழுத்தாளர்கள்’!

அதென்ன வலைப்பதிவு என்கிறீர்களா? நம் ஒவ்வொருவருக்குள்ளும் எத்தனையோ சிந்தனைகள் பொதிந்திருக்கும். இந்த சமூகத்தின் மீதான கோபம், ஆதங்கம், சந்தோஷம், நேசம்.. இப்படி ஏதாவது ஒரு உணர்வு மனசின் ஒரு ஓரத்தில் நிச்சயம் கிடக்கும். அதையெல்லாம் சுதந்திரமாக எழுதுவதற்கு நமக்கே நமக்கென்று தனியாக ஒரு மேடை கிடைத்தால்.. அப்படியரு மேடைதான் வலைப்பதிவு!

அப்படியெனில், ஏதோ மிகப் பெரிய விஷய-மாக்கும் என்று பயந்து விட வேண்டாம். சாதாரண இ&மெயில் முகவரியைப் போலவே நமக்கென்று ஒரு வலைப் பதிவையும் மிக எளிதாக.. இலவசமாக.. உருவாக்கிக் கொள்ள முடியும்.

அதனால்தான், இன்றைக்கு அமெரிக்கா போன்ற நாடுகளில் உயர் பதவி வகிக்கும் பெண்களில் இருந்து மானாமதுரையில் இருக்கும் இல்லத்-தரசி வரை ஒரு கலக்கு கலக்குகிறார்கள் வலைப்பதிவு என்ற மேடையில்! அவர்களில் சிலரைப் பார்க்கலாமா?

ஒரு காலத்தில் தமிழகத்தில் பேச்சாளராகவும் வழக்கறிஞராக-வும் வலம் வந்து, இப்போது அமெரிக்காவில் வசிக்கும் செல்வநாயகி ‘நிறங்கள்’ என்ற பெயரில் எழுதும் வலைப்பதிவு, மொழி நடையால் வசீகரிக்கிறது நம்மை. ‘‘எப்படி எழுத வந்தீர்கள் இங்கு..?’’ என்று கேட்டால், தனது பிரத்யேக வார்த்தைகளிலேயே படபடக்கிறார்..

‘‘உண்மையிலேயே தமிழகத்தை விட்டு இப்படி அயல் நாடுகளுக்கு வரும்போது நம் மண்ணின் மீதும் மொழியின் மீதும் ஆர்வம் அதிகரிக்கத்தான் செய்கிறது. மனதில் இருந்த ஏக்கம், வீட்டில் இருந்த கணினி.. இரண்டுமே என் தேடலுக்குத் தீனியானது. அப்போது கிடைத்த வரம்தான் இந்த வலைப்பதிவு.

நான் வாசிக்கும் எழுத்துக்கள் எனக்குள் ஏற்படுத்-தும் பாதிப்புகளை, கேள்விகளை சுதந்திரமாக வெளியிடுவதற்கு மட்டுமல்ல.. என் பால்ய பருவத்-துச் சுவடுகளை, இந்திய மண்ணின் ஞாபகங்களை நாலு பேருக்குச் சொல்லி மகிழவும் இந்த வலைப்பதிவு உதவுகிறது.

சிறு ஓடை, கொஞ்சம் கருவேல மரங்கள், சில ஓட்டு வீடுகள், நாட்டுப்புற மனிதர்கள்.. என்ற அடையாளங்களோடு என்னை ஆளாக்கிய பிரதேசங்-களை பல சமயங்களிலும் நான் கவிதைகளாகப் பதிவு செய்திருக்கிறேன்..’’ என்று சொல்லும் செல்வநாயகி ஏற்கெனவே, ‘பனிப்பொம்மைகள்’ என்ற பெயரில் கவிதைத் தொகுப்பு ஒன்றையும் வெளியிட்டிருக்கிறார்.

‘‘எழுத்துக்கள் நோய்களைக் குணப்படுத்துவதற்குப் பதிலாகக் கிளறிவிடும்படியாக மாறிவிடக் கூடாது’’ என்று அழுத்தமாகப் பேசும் செல்வநாயகியின் வலைப்பதிவு முழுக்க அந்த அக்கறையைப் பார்க்க முடிகிறது.

மொழியார்வம் மிக்க ஈழத்தமிழர்களின் பங்களிப்பு வலைப்பதிவுகளிலும் பளிச்சிடவே செய்கிறது. துயரம் கசியும் தன் எழுத்தால், ஈழத்தின் சோகங்களை அப்படியே கண்முன் நிறுத்துகிற தமிழ்நதி, ‘இளவேனில்’ என்ற தலைப்-பில் தன் வலைப்பதிவை அமைத்திருக்கிறார். புலம் பெயர்ந்த ஈழத் தமிழரான இவர், தற்போது சென்னையில் வசிக்கிறார்.

‘‘கண்ணீர்த் துளி வடிவில் இருக்கும் எங்கள் தேசத்திலிருந்து தெறித்துச் சிதறிய லட்சக்கணக்கான கண்ணீர்த் துளிகள்தான் நாங்கள். இன்று இணையமும் வலைப்பதிவும் எங்களை ஒன்றிணைத்திருக்கிறது என்றால், அதற்கு நாங்கள் நன்றி சொல்லியே தீர வேண்டும்’’ என்று உணர்ச்சிகரமாகத் தொடங்கியவர், தன்னைப் பற்றி விளக்கினார்.

‘‘புலம்பெயர்ந்து கனடாவில் வாழ்ந்தபோது அங்குள்ள தமிழ்ப் பத்திரிகைகளில் கதை, கவிதை என்று நானும் ஏதோ எழுதிக் கொண்டிருந்தேன். மீண்டும் தாய்மண்ணுக்கே திரும்பிப் போக வேண்டும் என்ற என் முயற்சி முடியாமல் போகவே, தற்செயலாக சென்னையில் இருக்க வேண்டி வந்தது.

எங்கிருந்தாலும் எழுதிக் கொண்டிருக்க வேண்டும் என்று மனது சொன்னாலும் இங்குள்ள பத்திரிகைகளில் என் எழுத்துக்கள் ஏற்றுக் கொள்ளப்படுமா என்ற தயக்கம் இருந்தது. தகுதியில்லாதவை என்று அவை திருப்பி அனுப்பப்பட்டால், அந்த நிராகரிப்பின் வலியைத் தாங்க முடியாத மனம் எனக்கு. அந்த நேரத்தில்தான் தோழி ஒருத்தி வலைப்பதிவைப் பற்றிச் சொல்லி, எனக்கான வலைப்பதிவை உருவாக்கியும் தந்தார்.

‘நீங்கள் ஏன் துயரத்தையே எழுதுகிறீர்கள்..?’ என்று பலரும் என்னிடம் கேட்பதுண்டு. ‘உதடுகள் கண்ணீரின் கரிப்புக்கும் நாசிகள் குருதியின் வாடைக்குமே பழக்கமாக்கப்பட்டிருக்கும் என் மக்களைப் பற்றிப் பேசும்போது சந்தோஷம் எப்படி இருக்கும்..?’ என்பதுதான் என்னுடைய பதில்’’ என்று தன்னை நியாயப்படுத்தும் தமிழ்நதி, அண்மையில் ‘சூரியன் தனித்தலையும் பகல்’ என்ற கவிதைத் தொகுப்பை வெளியிட்டு உற்சாகமாக இலக்கிய நடை போடுகிறார்.

வலைப்பதிவைப் பொறுத்தவரை அதைப் படிக்கும் வாசகர்-கள் கூட அது பற்றிய தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்ய முடியும். இப்படிப்பட்ட கருத்துக்களாலேயே காரசாரமான விவாதங்கள் எழுந்து விடுவதும் உண்டு. அப்படி எந்த வலைப்பதிவில் பெண்களுக்கெதிரான கருத்துகள் பேசப்பட்டாலும் முதல் ஆளாக ஓடிச் சென்று தன் எதிர்ப்பை-பதிவு செய்பவர் ‘மலர்வனம்’ என்ற வலைப்பதிவை எழுதி வரும் லஷ்மி. இவரும் சென்னைவாசிதான்.

‘‘இந்தக் காலத்தில் ஆணும் பெண்ணும் சமமாக சம்பாதித்து வாழ்க்கை நடத்தி-னாலும் எண்ணங்கள் மட்டும் மாறவேயில்லை. வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் பெண்களை மட்டம் தட்டும் வேலையை இணையத்திலும் செய்கிறார்கள். சினிமா–வில் பெண்களை அடி முட்டா-ளாகக் காட்டுவதைக் கண்டித்து சமீபத்தில் ஒரு பதிவு போட்டிருந்-தேன்.

‘ஆண்களுக்கு இன்ட்டலக்ச்சுவல் பெண்- களைப் பிடிக்காது. டிகிரி முடித்து ரெண்டு வருஷம் வீட்டில் இருந்து விட்டு, தையல், சமையல் என்று கற்றுக் கொண்டு கல்யாணத்–துக்காகவே காத்திருக்கும் பெண்களைத்-தான் பிடிக்கும். அதைத்தான் சினிமாவில் காட்டுகிறார்கள்’ என்று ஒரு கருத்தை மெத்தப் படித்த நண்பர் ஒருவர் எழுதினார்.

கற்பு பற்றி குஷ்பு வெளியிட்ட கருத்து போல அவரது இந்தக் கருத்து வலைப்-பதிவாளர்கள் மத்தியில் மிகப்-பெரும் விவாதமாகவே பற்றியெரிந்தது. ஆக்ரோஷமாகத் தொடங்கினாலும் ஆரோக்கியமான சிந்தனைகளோடு முடிவது-தான் இப்படிப்பட்ட விவாதங்-களின் சிறப்பு’’ என்று பரவசப்படும் லஷ்மி ஒரு சாஃப்ட்வேர் என்ஜினீயரும் கூட!

‘‘அமெரிக்காவில் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோதுதான் வலைப்பதிவு எனக்கு அறிமுகமானது. பொதுவாகவே என் வேலையில் சின்னச் சின்ன டென்ஷன்களும் எரிச்சல்களும் சகஜம். அதை மறக்கவும் ஜெயிக்கவும் நிச்சயமாக இந்த வலைப்பதிவு உதவுகிறது’’ என்று சான்றிதழும் தருகிறார் லஷ்மி.

‘சீரியஸான விவாதங்களுக்கு மட்டு-மில்லை.. ஜாலியாக கலாய்க்கவும் இங்கே ஆட்கள் இருக்கிறார்கள்’ என்பதற்கு அத்தாட்சிதான் ஈரோட்டைச் சேர்ந்த காயத்ரி. சேலத்திலுள்ள லோக்கல் சேனல் ஒன்றில் ‘காம்பியரிங்’ செய்யும் இவர், வலைப்பதிவு ஆரம்பித்து ஆறு மாதங்கள்தான் ஆகிறதாம். அதற்குள் உலகம் முழுவதிலும் இருந்து இவர் எழுத்துக்கு ரசிகர்கள் குவிகிறார்கள்.

‘‘நான் வலைப்பதிவு தொடங்-கியதற்கு கிடைத்த பிரமாதமான பரிசு, நண்பர்கள்-தான். சில மாதங்களுக்கு முன்பு வரை சொல்லிக் கொள்ளும் அளவுக்கு நெருங்கிய நட்பு வட்டமே இல்லாமல் இருந்த எனக்கு, இப்போது கடல் தாண்டி கண்டங்கள் தாண்டி முகம் தெரியாத நட்புகள் கிடைத்திருக் கின்றன.

சமீபத்தில் வந்த என் பிறந்த நாளில் முந்தின நாள் இரவு தொடங்கி வரிசையாக இ&மெயிலிலும், செல்-போனிலும் வந்த வாழ்த்துச் செய்தி-களில் நனைந்து விட்டேன். இதற்கு முன் என் பிறந்த நாளை நான் இந்த அளவுக்குக் கொண்டாடியதே இல்லை.’’ என்று நெகிழும் இவர், சமீபத்தில் தன் காமெடிகளைக் குறைத்துக் கொண்டு, தமிழ் இலக்கியத்தில் உள்ள ‘குறுந்தொகை’ பற்றி எளிய முறையில் ஒரு கட்டுரை எழுத, அதற்கு வரவேற்பு அள்ளிக் கொண்டு போயிருக்கிறது. ‘‘இனிமேல் என்னை இலக்கியவாதியாகவும் பார்க்கப் போகிறீர்கள்’’ என்கிறார் நகைச்சுவை உணர்வு பொங்க.

பெரும்பாலும் வலைப்பதிவு எழுதும் அனைத்துப் பெண்களுமே அறிந்த நபராக இருக்கிறார் பொன்ஸ் என்ற பூர்ணா. சென்னையைச் சேர்ந்த இவர், வலைப்-பதி வா-ளர்களுக்கான தொழில்நுட்ப விஷயங்களை கற்றுக் கொடுப்பதற்காக ‘வலைப்பதிவாளர் பயிற்சிப் பட்டறைகள்’ பலவற்றை நடத்தியவர். தற்போது அமெரிக்காவில் சாஃப்ட்வேர் என்ஜினீயராக இருக்கும் பொன்ஸிடம் பேசினால், பல ஆச்சர்ய தகவல்களைத் தருகிறார்.

‘‘இன்றைய நிலையில் சுமார் 150 பெண்கள் வலைப்-பதிவு எழுத்தாளர்களாக இருக்கிறார்கள். இவர்களில் சுமார் நூறு பேரை ஒருங்கிணைத்து ‘மகளிர் சக்தி’ என்கிற திரட்டியை (வலைப்பதிவுகளை ஒன்று திரட்டும் இணைய தளம்) உருவாக்கியிருக்கிறோம். வலைப்பதிவு எழுதும் பெண்கள் இதில் பதிவு செய்து கொண்டால், அடுத்தடுத்த முறை தங்களது வலைப்பதிவில் அவர்கள் புதிய பதிவுகள் எழுதும்போது, அதை உடனே ‘மகளிர் சக்தி’யில் பார்க்கலாம்.

கணினி துறையில் பெண்களின் எண்ணிக்கை பெருகிவரும் நிலையில், வலைப்பதிவு எழுதுபவர்களின் எண்ணிக்கையும் வரும் காலங்களில் அதிகரிக்கவே செய்யும்’’ என்கிறார் பளிச்சென்று.

இவர்கள் ஐந்து பேரும் ஒரு சாம்பிளுக்கு மட்டுமே. மற்றபடி வலைப்பதிவில் எழுதும் எல்லாப் பெண்களுமே தங்களுக்கான ஸ்பெஷல் எழுத்து நடையோடு தேர்ந்த இலக்கியவாதி போலத்-தான் எழுதுகிறார்கள். படித்து முடித்து, கை நிறைய சம்பாதித்தாலும் எழுதும் ஆர்வத்தை நிறுத்தி வைக்காமல் தங்களுக்கென்று ஒரு தளம் அமைத்துக் கொண்டவர்கள்தான் அனைவருமே.

இந்தக் காலப் பெண்களின் ‘தொழில்நுட்பம் சார்ந்த எழுத்துப் புரட்சி!’ என்று இதற்குப் பட்டம் கொடுக்கலாமா என்றுகூடத் தோன்றுகிறது!

தமிழ்நதி 

“பாவாடை காலிடற ஓடித் திரியும் குழந்தை-களில், நாதஸ்வர இசையில், மரங்களினி-டையே தெரியும் பிறைத் -துண்டில், வன்னி-மரத்தின் ஆழ்ந்த மௌனத் தில், யாரையும் புண்படுத்த முடியாத அந்தச் சூழலில் இறைத்-தன்மை இருக்கிறது. இறைத்தன்மை என்பது கல்லில் மட்டும் இருப்ப-தாக எவர் சொன்னது?”-

செல்வநாயகி  

‘‘நீயும் நானும் பூமிக்கு வந்தபோது இருந்த ஆர்வம் இத்தனை வருடங்களிலும் எத்தனை முறை துளிர்த்திருக்க வேண்டும்? சொட்டுச் சொட்டாய்க் குறையவிடலாமா அதை? வெளிவருவதற்காய் நமக்கும், வெளித்தள்ளுவதற்காய் அன்னையருக்கும் நிகழ்ந்த போராட்டங்களோடு–தானே பூமிக்கு வந்–தோம்? தொடர்வதும் அதுதான். துவள்–வது எதற்கு?”

 லஷ்மி

 ‘தொண்டையை வறளச் செய்யும்
இந்த தாகம் பயமுறுத்தினாலும்
தூரத்தில் தெரியும் நீர்ப்பரப்பு
கண்ணில் தூவிய
நம்பிக்கை காரணமாய்
உயிர்த்திருக்கிறேன் இன்னமும்..
தயவு செய்து அது
கானல் நீராயிருப்பினும்
என்னிடம் யாரும் சொல்லிவிடாதீர்கள்..
இன்னும் சற்று நேரமேனும்
நான் உயிர் வாழ விரும்புகிறேன்!’’

காயத்ரி

‘‘நான் கஸ்டப்பட்டு ப்ளஸ் டூ பரீட்சை எழுதி முடிச்சதும், ‘எப்பதான் உனக்கு பொறுப்பு வரும் காயத்ரி?’ன்னு என் உள்மனசு பெஞ்ச் மேல நிக்க வச்சு கேள்வி கேட்டதால நான் அந்த விபரீத முடிவை எடுக்க வேண்டி வந்துச்சு. அதாங்க.. சமையல் கத்துக்குறது! உடனே, ‘நான் இன்னும் கொஞ்சம் நாள் வாழணும்னு ஆசைப்படுறேன்’ அப்படினு சொல்லிட்டு சித்தி வீட்டுக்குப் போயிட்டான் என் தம்பி. நான் அசரலையே.. ‘அப்பா’னு ஒரு அப்பாவி ஜீவன் இருக்கும்போது எனக்கென்ன கவலை..!

ஆனா, இன்னமும் எனக்கு சரியா டீ போட வராது. இதனால எங்க வீட்டுக்கு மழையில நனைஞ்சுக்கிட்டே விருந்தாளிக வந்தாலும், ‘ஜூஸ் சாப்பிடுறீங்களா..?’னுதான் கேப்பேன்.’’

Posted in Aval Vikadan, Blogger, bloggers, Blogs, Blogspot, Faces, Female, Feminism, Ladies, Lady, Media, MSM, people, Poems, Profiles, She, Tamil, Tamil Blogs, Vikadan, Vikatan, Women, Wordpress | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , | Leave a Comment »

Chennai Bandh & Oct 1 Fasting by Kalainjar Karunanidhi – Anandha Vikadan Editorial

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 5, 2007

கருமமே கண்ணாயினார்!

Ôதமிழக அரசை டிஸ்மிஸ் செய்ய மத்திய அரசு தயங்கக் கூடாதுÕ என்று கோபம் காட்டியிருக்கிறது உச்ச நீதிமன்றம். தமிழக ஆளும் கூட்டணியில் அதற்குச் சில எதிர்வினைகள்..!

Ôகோர்ட் சொன்னால் என்ன… பஸ்ஸை நிறுத்திப் பார்ப்போமே என்று என்னைப் போன்றவர்கள் எங்கள் தலைவரிடம் சொன்னோம்!Õ என்று உண்ணாவிரத மேடையில் நின்று பொங்கியிருக்கிறார் ஓர் அமைச்சர்.

Ôகர்நாடக அரசும் கேரள அரசும் தீர்ப்புகளை மதிக்காமல் போனபோது, உச்ச நீதிமன்றம் ஏன் இதுபோன்ற கடுமையைக் காட்டவில்லை?Õ என்று கேட்டிருக்கிறார் இன்னொரு தலைவர்.

உணர்வுகளில் என்னதான் வேகம் இருந்தாலும்… கடைசியில் என்ன ஆனது? நிறுத்தப்பட்டிருந்த பேருந்துகள் அவசரமாக Ôஓட்டப்பட்டனÕ; Ôமூடப்பட்டÕ கடைகள் காவல்துறை உந்துதலோடு Ôதிறக்கப்பட்டனÕ; அரசு ஊழியர்கள் உடனே ஆஜராகும்படி அழைக்கப்பட்டனர்!

Ôவேண்டாம் அரசு பந்த்Õ என்று உச்ச நீதிமன்றம் சொன்னதும், Ôஅதே நாளில் வேறு வழியில் எதிர்ப்பைக் காட்டுவோம்Õ என்று உணர்ச்சிவசப்பட்டிருக்கத் தேவையில்லை! உண்ணாவிரதப் போராட்டத்தை, ஒரே ஒருநாள் மட்டும் தள்ளிவைத்து, அந்தத் தத்துவத்தின் ஆதிகர்த்தாவான மகாத்மா காந்தியின் பிறந்த நாளன்று நடத்தியிருந்தால்… உணர்வுகள் இன்னும்கூடப் பலமாக வெளிப்பட்டு இருக்குமே! அரசு விடுமுறை என்பதால், எந்தக் கேள்விக்கும் இடமில்லாமலும் போயிருக்கும்.

தமிழகத்தின் நலனுக்காகவே சேது சமுத்திரத் திட்டத்தைக் கொண்டுவருவது அரசின் நோக்கமாக இருந்தால்… இனியாவது, உணர்ச்சிவேகத்தில் முடிவுகள் எடுக்கக் கூடாது; யார் வாய்க்கும் அவல் போடக் கூடாது; யார் பெரியவர் என்கிற கௌரவ யுத்தத்துக்கு வழிவகுக்கக் கூடாது; நோக்கமே மறந்துபோகுமளவு விவகாரம் திசை திரும்பிச் செல்ல துளியும் இடமளிக்கக் கூடாது!

கருமமே கண்ணாயினார்க்கு இவையும்தான் தகுதிகள்!

Posted in Bandh, Chennai, Editorial, Fast, Hartal, Harthal, Kalainjar, Karunanidhi, Karunanidhy, Karunanidi, Karunanithi, Madras, MK, Op-Ed, Sathyagraha, Satyagraha, Vikadan, Vikatan | Leave a Comment »

Sakthi Vikadan – Samayapuram Mariyamman Temple: Backgrounder, Details

Posted by Snapjudge மேல் ஜூலை 19, 2007

தலங்கள்.. தகவல்கள்

ஆலயம் தரும் அபூர்வ சேதிகள்!

சமயபுரம் மாரியம்மன்


சமயபுரம்& சக்தி திருத்தலங்களுள் குறிப்பிடத் தக்கது. தமிழகத்தில் உள்ள மாரியம்மன் திருத்தலங்களில் தலைமைத் தலமாக விளங்குவது.

கண்ணனூர், விக்கிரமபுரம், மாகாளிபுரம், கண்ணபுரம் ஆகிய பெயர்களிலும் அழைக்கப்படும் இந்தத் தலம், திருச்சிக்கு வடக்கில் சமயபுரத்தின் கண்ணனூர் அருகில் பெருவளை வாய்க்கால் கரையோரத்தில் மகாசக்தி பீடமாக விளங்குகிறது.

திருச்சியில் சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 15 கி.மீ. தூரத்தில் உள்ள சமயபுரத் துக்கு நகரப் பேருந்துகள் அடிக்கடி உண்டு.

பழநிக்கு அடுத்து இரண்டாவதாக அதிக வருமானம் பெறும் தலம் சமயபுரம்.

உரிய காலத்தில் தேவையான& கேட்கும் வரம் தந்து காப்பவள் என்பதால், ‘சமயபுரத்தாள்’ என்பது இந்த அம்மனது அடைமொழி.

சோழ மன்னன் ஒருவன், தன் தங்கையைக் கங்க நாட்டு மன்னன் ஒருவனுக்கு மணம் முடித்து, அவர்களுக்குச் சீதனமாக ஒரு கோட்டையையும் நகரத்தையும் அளித்தான். அதுவே கண்ணனூர். பிற்காலத்தில் பாண்டியர் படையெடுப்பால் கோட்டையும் நகரமும் அழிந்தன. அந்த இடம் பின்னர் வேப்ப மரக் காடாயிற்று.

சமயபுரம் மாரியம்மன், ஆதியில் ‘வைஷ்ணவி’ என்ற நாமத்தில் ஸ்ரீரங்கத்தில் குடி கொண்டிருந்ததாகக் கூறுவர். இந்த அம்பாள், கோரைப் பற்கள் மற்றும் சிவந்த கண்களுடன் விளங்கியதால், அங்கு அப்போதிருந்த ஜீயர் சுவாமிகள், இந்த அம்மனை வேறோர் இடத்தில் பிரதிஷ்டை செய்ய ஏற்பாடு செய்தார்.

அதன்படி, சிலர் அந்தத் திருவுருவை எடுத்துக் கொண்டு வடக்கு நோக்கி கிளம்பினர். வழியில் ஓர் இடத்தில் இளைப்பாறினர் (அந்த இடம் தற்போது இனாம் சமயபுரம் எனப்படுகிறது!).

அவர்கள் கண்ணனூர் அரண்மனை மேட்டை அடைந்து, அம்பாள் திருவுருவை அங்கு ஓலைக் கொட் டகை ஒன்றில் வைத்து விட்டுச் சென்றனர். எனவே, அம்மன், ‘கண்ணனூர் அம்மன்’ என்றும், ‘கண்ணனூர் மாரியம்மன்’ என்றும் அழைக்கப்பட்டாள்.

இந்த நிலையில் தென்னாட்டின் மீது படையெடுத்து வந்த விஜயநகர மன்னர், தன் படைகளோடு கண்ணனூர் காட்டில் முகாமிட்டார். அப்போது அங்கிருந்த மாரியம்மனை வழிபட்ட மன்னர், போரில் வெற்றி பெற்றால், அம்மனுக்குக் கோயில் கட்டுவதாக வேண்டிக் கொண்டார். அதன்படியே அம்மனுக்குத் திருக்கோயில் கட்டிய விஜயநகர மன்னர், பரிவாரத் தெய்வங்களாக விநாயகரையும், கருப்பண்ணசாமியையும் பிரதிஷ்டை செய்து, குடமுழுக்கு விழா நடத்தி, நித்திய பூஜைக்கான ஏற்பாடுகளையும் செய்தார்.

தற்போதைய ஆலயம் கி.பி. 1804&ல் விஜயரங்க சொக்கநாத நாயக்க மன்னரால் கட்டப்பட்டது.

‘சோழர் காலத்திலேயே இங்கு மாரியம்மன் கோயில் இருந்திருக்க வேண்டும். இது பிந்தைய விஜய நகர மற்றும் நாயக்கர் மன்னர்கள் காலத்தில் சிறப்புப் பெற்றிருக்க வேண்டும்!’ என்பது ஆய்வாளர்களின் கருத்து.

சமயபுரம் கோயில் கொடி மரத்தை அடுத்துள்ள மண்டபத் தூண்களின் கீழ்ப் பகுதியில் நாயக்க மன்னர்களது உருவங்கள் வடிவமைக்கப்பட்டுள் ளன. எனவே, இந்தத் தலம் சுமார் 700 ஆண்டுகளுக்கு மேலாக சக்தித் தலங்களுள் ஒன்றாக விளங்குவதை அறியலாம்.

இந்த மாரியம்மன் கோயிலின் வடக்கே செல்லாயி அம்மன், போஜீஸ்வரன் மற்றும் கிழக்கே உஜ்ஜயினி மாகாளி முக்தீஸ்வரன் கோயிலும் இடம்பெற்றுள்ளன.

மாயனின் சகோதரியான சமயபுரத்தாள், திருவரங்கத்திலிருந்து வந்தவள் என்பதால், இந்தக் கோயிலின் நிர்வாகமும் பல நூற்றாண்டுகளாக திருவரங்கம் கோயில் வசமே இருந்தது. பக்தர்களது முயற்சியால், 1984&ஆம் ஆண்டு முதல் சமயபுரம் மாரியம்மன் கோயில், தனி நிர்வாகத்துக்கு மாறியது.

பக்தர்களிடம் வசூலித்த பணம் மூலம் கிருபானந்த வாரியார் இந்தக் கோயிலுக்கு ஒரு முறை குடமுழுக்கு நடத்தியுள்ளார்.

சமயபுரத்தாள் கோயில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. கிழக்கு& மேற்காக சுமார் 280 அடி நீளத்துடனும் தெற்கு& வடக்காக 150 அடி அகலத்துடனும் அமைந்துள்ளது.

மூன்று திருச்சுற்றுகள் கொண்ட இந்தக் கோயில் முகப்பில் நீண்ட மண்டபம் ஒன்றுள்ளது. மூன்றாம் பிராகாரத்தில் பௌர்ணமி மண்டபம், நவராத்திரி மண்டபம், வசந்த மண்டபம் ஆகியவை அமைந்துள்ளன. 2&ஆம் பிராகாரத்தில் விநாயகர், மாரியம்மனின் உற்சவ மூர்த்தி மற்றும் கருப்பண்ணசாமி ஆகியோரது சந்நிதிகள் உள்ளன.

இங்கு ஒரே சந்நிதியில் மூன்று விநாயகர்கள் அருள் புரிகிறார்கள். அன்றைய கோயில் நிர்வாகத்தினர், இங்குள்ள அம்பாளின் உக்கிரத்தை தணிக்க, என்ன செய்யலாம் என்று ஸ்ரீகாஞ்சி பெரியவரின் ஆலோசனையை வேண்டினர். அதன்படி நுழைவாயிலின் வலப் புறத்தில், ஒரே சந்நிதியில் ஞான சக்தி, இச்சா சக்தி, கிரியா சக்தி வடிவங் களாக மூன்று விநாயகர்களை பிரதிஷ்டை செய்தனர். அதன்பின் அம்மனின் மூல விக்கிரகத்தில் கோரைப் பற்கள் அகற்றப்பட்டு, சாந்த சொரூபியாக மாற்றி 1970&ல் கும்பாபிஷேகம் செய்தனர்.

அம்பாளின் கருவறையைச் சுற்றி எப்போதும் நீர் நிறைந்திருக்கு மாறு ஈரத் தன்மையுடன் வைத்திருக் கிறார்கள். அம்பாள் எப்போதும் குளிர்ச்சியாக இருப்பதற்காக இந்த ஏற்பாடு.

சமயபுரத்தாளின் கருவறை மற்றும் கருவறை விமானம் தங்கத் தகடுகளால் வேயப்பட்டுள்ளன. இந்தப் பணிக்காக பக்தர்கள் காணிக்கை வழங்கிய தங்கத்தின் எடை 71 கிலோ& 127 கிராம். இத்துடன் 3 கிலோ& 288 கிராம் செம்பு பயன் படுத்தப்பட்டுள்ளது. இதன் மொத்த மதிப்பு சுமார் ஏழு கோடி ரூபாய்.

உள்ளே அம்மன் சுகாசினியாகக் காட்சி தருகிறாள். அவளின் தலைக்கு மேல் ஐந்து தலை நாகம் படம் விரித்த நிலையில் காட்சி தருகிறது. இடக் காலை மடித்து வைத்துள்ளாள். கீழே தொங்க விட்டுள்ள வலக் காலின் கீழ் அசுரர்களது தலைகள் காணப்படுகின்றன. இவளின் எட்டுத் திருக்கரங்களில் முறையே கத்தி, கபாலம், சூலம், மணிமாலை, வில், அம்பு, உடுக்கை, பாசம் ஆகியவற்றை ஏந்தியுள்ளாள். நெற்றியில் திருநீறு மற்றும் குங்குமம். ஜொலிக்கும் தோடுகள், மூக்குத்தி ஆகிய அலங்காரத்துடன், 27 நட்சத்திரங்களின் ஆதிக்கங்களையும் தன்னுள் அடக்கி, 27 யந்திரங்களாக திருமேனி பிரதிஷ்டையில் இங்கு அருள் புரிகிறாள் சமயபுரத்தாள்.

சிவசக்தி சொரூபமாக வாழ்ந்த ஜமதக்னி முனிவரின் மனைவி ரேணுகாதேவியே, மாரியம்மனாக மாறினாள் என்பது கர்ண பரம்பரை கதை.

சிவபெருமான், மன்மதனை எரித்த வெப்பத்தின் அனல் தாங்காமல் தேவர்களும், மனித உயிர்களும் தவித்தனர். எனவே, அவர்கள் பார்வதியை வேண்டினர். அவள் அந்த வெப்பத்தை உள்வாங்கிக் கொண்டாள். அந்த சக்தி சொரூபமே சீதளாதேவி என்றும், மாரியம்மன் என்றும் வழங்கப்படுகிறது என்கிறார்கள்.

வசுதேவர்&தேவகி தம்பதியின் எட்டாவது குழந்தையான கண்ணன் யசோதை வீட்டுக்கும், நந்தகோபன்& யசோதையின் பெண் குழந்தை கம்சனது சிறைச்சாலைக்கும் இடம் மாற்றப்படுகின்றனர். அந்தப் பெண் குழந்தையை சிறைக்கு வந்து கம்சன் கொல்ல முயன்றபோது, அவனிடம் இருந்து தப்பித்து வானில் உயர்ந்து, ‘உன்னைக் கொல்லும் எமன் கோகுலத்தில் வளர்கிறான்!’ என்று கூறி மறைந்தது அந்த மாயக் குழந்தை. மாயாதேவி எனப்படும் அந்தக் குழந்தைதான் மாரியம்மன் என்கிறார்கள். அவளே சமயபுரத்திலும் அம்மனாக விளங்குகிறாள் என்பதும் ஐதீகம்.

இந்த மாரியம்மனுக்கு மகமாயி, அகிலாண்ட நாயகி, ஆயிரம் கண்ணுடையாள், சாம்பிராணி வாசகி, கௌமாரி, காரண சௌந்தரி, சீதளதேவி, கண்ணபுரத்தாள் ஆகிய பெயர்களும் உண்டு.

சமயபுரத்தாள் விக்கிரகம் மூலிகைகளால் ஆனதால், இதற்கு அபிஷேகம் கிடையாது. உற்சவர் அம்மனுக்கு மட்டுமே அபிஷேகம்.

கருவறையின் பின்புறம் அம்மனின் பாதங்கள் உள்ளன. இதற்கு மலர் சூடி, தீபம் ஏற்றி வழிபடுகிறார்கள்.

கோயிலின் முன் மண்டபத்தில் படுத்து உறங்குபவருக்கு அர்த்த ஜாமத்தில் அம்பாளின் கொலுசுச் சத்தம் கேட்கும் அதிசயம் இன்றும் நிகழ்கிறது. அம்மை நோய் தீர்க்கவும், நகர சாந்திக்காகவும் அம்பாள் இரவு நேரத்தில் வலம் வருவதாக ஐதீகம்.

காலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, பக்தர்கள் தரிசனத்துக்காக இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.

சமயபுரம் கோயிலின் தல விருட்சம், மருத்துவ குணங்கள் நிறைந்த வேப்ப மரம்.

இங்குள்ள பெருவளை வாய்க்கால் சிறப்பு மிகுந்த தீர்த்தமாக விளங்குகிறது. ஆலயத்தின் மேற்கே அமைந்துள்ள திருக்குளம் மற்றொரு புண்ணிய தீர்த்தம். இதற்கு ‘மாரி தீர்த்தம்’ என்று பெயர்.

சமயபுரம் கோயிலில் சுமார் 20 லட்சம் ரூபாய் செலவில் செய்யப்பட்ட தங்க ரதம் ஒன்று உள்ளது. பக்தர்கள் காணிக்கையாக ரூ.700 கட்டினால், தங்க ரதத்தை இழுக்க அனுமதிக்கப்படுகின்றனர். திருவிழா இல்லாத நாட்களில் மட்டுமே தங்க ரதம் இழுக்க அனுமதிக்கப்படுகிறது. அப்போது அம்பாளுக்கு தங்கக் கவசமும் அணிவிக்கப்படும்.

இங்குள்ள அம்மனை மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை பாலாலயம் செய்து பின்னர் ஆலய பீடத்தில் மீண்டும் அமர்த்துகிறார்கள்.

இந்த மாரியம்மனை அயோத்தி மன்னன் தசரதன் வழிபட்டதாகவும், அருகில் உள்ள ஓம்கார உஜ்ஜயினி காளி ஆலயத்துக்கு விக்கிரமாதித்ய மகாராஜா வந்து வழிபட்டதாகவும் கதைகள் உள்ளன.

உலகை ஆள்பவள் மாரியம்மன். என்றாலும், கண்ணபுரத்தின் காவல் மற்றும் எல்லை தெய்வம் செல்லாண்டி அம்மன். ஆகையால் இங்கு முதல் பூஜை அவளுக்குக் கொடுத்த பின்னரே ஏற்றுக் கொள்கிறாள் சமயபுரத்தாள்.

இங்கு, அம்பாள் சிவ ரூபமாகக் கருதப்படுவதால் விபூதி விசேஷ பிரசாதமாக வழங்கப்படுகிறது. பிற அம்மன் கோயில்களில் பண்டாரத்தார் பூஜை செய்வார்கள். இங்கு மட்டும் சிவச்சார்யர்கள் பூஜிக்கிறார்கள்.

விஜயநகரப் பேரரசின் காலத்தில் ஸ்தல விருட்சத்துக்குக் கீழே உள்ள புற்றில் நாகம் ஒன்று வசித்ததாம். அர்த்த ஜாம பூஜை முடிந்ததும் இந்த நாகம் கருவறைக்குச் சென்று அம்மனை பூஜிக்குமாம். அதனால் அம்மனின் நிர்மால்ய பூக்கள் கருவறைக்குள் சிதறிக் கிடக்கும். இந்தக் காட்சியை மறு நாள் உஷத்கால பூஜைக்கு கருவறைக்குள் நுழையும் அர்ச்சகர்கள் தவறாமல் காண்பது வழக்கமாம். காலப்போக்கில் பக்தர்கள் நடமாட்டம் அதிகமானதால், அந்த நாகம் வெளியே வருவதில்லையாம். அந்த இடத்தில் தற்போது கம்பிக் கதவு போட்டிருக்கிறார்கள்.

தைப்பூசத்தின்போது அம்மன், கொள்ளிடக் கரையின் தென் பகுதியில் நீராட வருவாள். கொள்ளி டம்தான் அண்ணன் ஸ்ரீரங்கநாதரையும், தங்கை சமயபுரத்தாளையும் பிரிக்கிறது. அன்று ஸ்ரீரங்கம் பெருமாள் ஆலயத்திலிருந்து பட்டுப் புடவைகள், மாலைகள், தளிகைகள் ‘மகமாயி’க்கு சீராக அனுப்பி வைக்கும் வழக்கம் தொன்று தொட்டு இருந்து வருகிறது. இதை தீர்த்தவாரி விழா என்பர். தை மாத பெருவிழாவின் 2&ஆம் திருநாளிலிருந்து 8&ஆம் நாள் வரை சிம்மம், பூதம், அன்னம், ரிஷபம், யானை, சேஷம், குதிரை ஆகிய வாகனங்களில் அம்மன் உலா வருகிறார். 9&ஆம் நாள் தெப்பத் திருவிழா.

சமயபுரம் மகமாயிக்கு நடைபெறும் முக்கியமான விழாக்கள்: சித்திரை மாதத்தின் முதல் செவ்வாய்க் கிழமையன்று நடைபெறும் & தேர்த் திருவிழா, வைகாசி மாதத்தின் முதல் நாளன்று நடைபெறும் பஞ்சப் பிரகார விழா, மாசி மாதத்தின் கடைசி ஞாயிறன்று நடைபெறும் பூச்சொரிதல் விழா.

பக்தர்கள் அம்பாளை வேண்டி விரதம் இருப்பது நடைமுறை. ஆனால், இங்கு பக்தர்களுக்காக அம்மனே விரதம் இருக்கிறாள்! இது ‘பச்சைப் பட்டினி விரதம்’ எனப்படுகிறது. மாசி மாதக் கடைசி ஞாயிறன்று நடைபெறும் பூச்சொரிதல் திருவிழாவுடன் அம்மனின் இந்த விரதம் துவங்குகிறது. பூச்சொரிதலின்போது அம்மனுக்கு பூக்கள் வந்து குவியும்.

விரத காலமான மாசி முதல் பங்குனி கடைசி ஞாயிறு வரை 27 நாட் களும் அம்பாளுக்கு ஒரு வேளை மட்டும் அதாவது சாயரட்சை பூஜையின்போது இளநீர், மோர், பானகம், துள்ளு மாவு (பச்சை அரிசி மாவு + நாட்டுச் சர்க்கரை), வெள்ளரிப் பிஞ்சு ஆகியவை நிவேதிக்கப்படுகின்றன. இந்தக் காலத்தில் ஊர் மக்களும் அம்மனுடன் சேர்ந்து விரதம் இருப்பது வழக்கம்.

சித்திரை மாதத்தின் கத்தரி வெயிலில் அம்மை& வைசூரி போன்ற நோய்கள் மக்களுக்கு ஏற்படும். அந்த வெப்பத்தைத் தான் ஏற்றுக் கொண்டு, மக்களை குளிர வைக்கும் மாரித்தாயின் உடல் வெப்பத்தை தணிக் கவே, பக்தர்கள் அம்பாளுக்கு பூமாரி பொழிந்து, அவளை குளிரச் செய்கிறார்கள். அப்போது அயல் நாடுகளில் இருந்தும் பக்தர்கள் கூடை கூடையாகப் பூக்களை அனுப்பி வைக்கிறார்கள்.

பூச்சொரிதல் திருவிழாவையட்டி விக்னேசுவர பூஜை, புண்யாகவஜனம் முடித்த பிறகு முறைப்படி மாரியம்மனுக்குக் காப்பு கட்டுகிறார்கள். பிறகு, திருக்கோயிலின் தென்கரையிலுள்ள சுப்ரமணியசுவாமி கோயிலில் சிறப்புப் பூஜை செய்து, மூன்று யானைகள் மீது பூத்தட்டுகள் வைத்து திருக்கோயில் முன்மண்டபத்திலிருந்து ஊர்வலமாக எடுத்துச் செல்வார்கள். தேரோடும் வீதிகள் நான்கின் வழியாகத் தேரடி வந்து, பின்னர் ராஜ கோபுரம் வழியாகப் பிரதட்சணம் செய்து, பூத்தட்டுகள் கருவறைக்கு எடுத்துச் செல்லப்பட்டு அம்மனுக்கு அர்ப்பணிக்கப்படுகிறது.

பங்குனி& சித்திரையில் 13 நாட்களுக்கு சித்திரைப் பெரு விழா நடக்கும். சித்திரை மாதம் முதல் செவ்வாய் தேரோட்டமும், அதற்கு அடுத்த வெள்ளிக்கிழமை தெப்பமும் நடைபெறும். அப் போது முடி காணிக்கை, ஆடு, மாடு, கோழி காணிக்கை, அக்னி சட்டி எடுத்தல் ஆகிய நேர்த்திக்கடன்கள் நிறைவேற்றப் படும்.

தேர்த் திருநாளில் பக்தர்கள் ஆற்றில் குளித்து ஈர உடையுடன் ஆற்று நீரைச் சுமந்து அம்மனின் பாதத்தில் ஊற்றிக் குளிர வைப்பர். வைசூரி அகலவும், மழை பொழியவும், பால் சுரக்கவும், வறுமை நீங்கவும் இது நம்பிக்கையுடன் செய்யப்படுகிறது. அன்றைய தினம் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறும்.

தேர்த் திருவிழாவின் எட்டாம் நாளன்று, சமயபுரத்தாள், இனாம் சமயபுரத்துக்குச் சென்று ஒரு நாள் இரவு தங்குகிறாள். 9&ஆம் நாள் குதிரை வாகனத்தில் புறப்பட்டு வருவார். பத்தாம் நாளில் திருவானைக்காவில் அருள் புரியும் ஸ்ரீஜம்புகேஸ்வரர், மாரியம்மனுக்கு சீர்வரிசை அனுப்பி வைப்பார். அண்ணனிடமும், ஈஸ்வரனிடமும் சீர்வரிசை பெறும் அம்மன் இவள் மட்டுமே!

இனாம் சமயபுரத்தில் உள்ள ஆதி மாரியம்மன் கோயிலுக்குச் சென்று வணங்கிய பின்னரே, கண்ணனூர் சமயபுரம் மாரியம்மனை தரிசிப்பது சுற்றுப்புற கிராம மக்களது வழக்கம்.

சித்திரை மாத இறுதியில் தொடங்கி வைகாசி முதல் தேதி வரை பஞ்சப் பிராகார உற்சவம் நடக்கும்.

சமயபுரம் மாரியம்மன் கோயிலில் பால், பன்னீர், பஞ்சாமிர்தம், இளநீர் ஆகிய அபிஷேகங்கள் ஆடி& தை வெள்ளிக் கிழமைகள், சித்ரா பௌர்ணமி, நவராத்திரி ஆகிய தினங்களில் விசேஷமாகச் செய்யப் படுகின்றன.

புரட்டாசியில் வரும் மகாளய அமாவாசை அன்று இங்குள்ள அம்மன் முன், புதிய மூங்கில் தட்டு ஒன்றில் பச்சரிசி, தேங்காய், பழம், வெற்றிலை& பாக்கு மற்றும் காய்கறிகள் ஆகியவற்றைச் சமர்ப்பித்து பூஜிக்கிறார்கள். அதன் பிறகு, அவற்றை அந்தணர்கள் அல்லது ஏழைகளுக்கு தானமாக அளிக்கிறார்கள் பக்தர்கள். இதனால் பித்ரு தோஷம் நீங்கும் என்பது நம்பிக்கை.

இங்கு பக்தர்கள் ஈர உடை யுடன் அங்கப்பிரதட்சணம் செய்து, வழிபடுவதுடன், ஆடு, கோழி, தானியங்கள், உப்பு, வெல்லம் ஆகியவற்றுடன் நேர்ந்து கொண்ட வெள்ளியால் ஆன உறுப்புகளையும் தன்னைப் போன்ற மணி பொம்மையையும் காணிக்கை செலுத்துகின்றனர். மேலும், பக்தர்கள் மல்லாந்து படுத்துக் கொண்டு தங்களின் வயிறு மற்றும் கண்களில் மாவிளக்கு தீபம் ஏற்றி வைத்தும் அம்மனை வழிபடுகின்றனர்.

தாலி பலத்துக்காக சுமங்கலிப் பெண்கள் தாம்பூலம், வளையல், கண்ணாடி போன்ற மங்கலப் பொருட்களை தானம் அளித்தால், அம்பாளே பெண்மணியின் உருவில் வந்து இவற்றைப் பெற்றுக் கொண்டு ஆசீர்வதிக்கிறாள் என்பது ஐதீகம்.

குழந்தைப்பேறின்மை, தொழில் பிரச்னை, ராகு&கேது தோஷம் உள்ளவர்கள் சமயபுர மகமாயியை தரிசித்தால், அவள் கண்டிப்பாக பலன் தருவாள் என்பது பக்தர்களின் ஆழமான நம்பிக்கை.

பிரபல சரித்திர நாவலாசிரியர் கோவி. மணி சேகரனுக்கு பார்வை குன்றியபோது இங்கு வந்து மனமுருகி பிரார்த்தித்தாராம். அதனால் மீண்டும் பார்வை பெற்றார் என்கிறார்கள். சமயபுரம் மாரியம் மனைத் துதித்து பாடல்கள் எழுதியுள்ளார் இவர்.

பார்வை இழந்த சிவந்திலிங்க சுவாமிகள் இந்த அன்னையின் மீது அருட்பாக்கள் பாடி கண்ணொளி பெற்றிருக்கிறார்.

அம்மை நோய் பீடித்தவர்கள் தங்கி குணம் பெற இங்கு தனி மண்டபம் ஒன்று உள்ளது. இந்த நோயாளிகளுக்கு தினமும் அம்மனின் அபிஷேகத் தீர்த்தம் பிரசாதமாக வழங்கப்படுகிறது. இதனால் விரைவில் நோய் குணமடைவதாக பக்தர்கள் நம்புகின்றனர். இங்கு உயிர்ப்பலி கிடையாது. அம்மனுக்கு மாவிளக்கும், எலுமிச்சம் பழ மாலையும் விருப்பமானவை.

நமது குறைகளை ஒரு காகிதத்தில் எழுதி, ஸ்தல விருட்சமான வேப்ப மரத்தில் கட்டி விட்டுப் பிரார்த்தித்தால், குறைகள் தீரும். இதற்கான மஞ்சள் காகிதங்களை ஆலய நிர்வாகமே விற்பனை செய்கிறது.

இங்கு ‘கரும்புத்தூளி எடுத்தல்’ என்ற விசேஷப் பிரார்த்தனை பிரசித்தம். குழந்தைப்பேறு இல்லாத தம்பதிகள் நேர்ந்து கொள்வது இந்த வேண்டுதல். அன்னையின் அருளால் கருவுற்று, சீமந்தம் முடிந்த பின், சீமந்தப் புடவை& வேஷ்டியைப் பத்திரமாக வைத்திருப்பர். குழந்தை பிறந்ததும் ஆறாவது மாதத்தில் இதைச் செய்கிறார்கள். அன்று பத்திரப்படுத்திய துணிகளை மஞ்சள் நீரில் நனைத்து கரும்புத் தொட்டில் தயார் செய்து அதில் குழந்தையைக் கிடத்துகிறார்கள். அந்தத் தொட்டிலைப் பிடித்தபடி தந்தை முன்னே செல்ல, தாய் பின்தொடர மூன்று முறை வலம் வந்து பிரார்த்தனை செலுத்துகிறார்கள். துணிகளைப் பூசாரி எடுத்துக் கொண்டு, கரும்பை பக்தர்களுக்கு விநியோகிக்கிறார்கள்.

சமயபுர மகமாயிடம் அதிக பக்தி கொண்டவர் சூரப்ப நாயக்கர். இவர், ஒரு முறை அன்னையின் ஆசி பெறாமல் புதிய உற்சவர் விக்கிரகம் ஒன்று செய்து பிரதிஷ்டை செய்ய முயன்றார். அதற்குப் பல தடைகள் ஏற்பட்டன. இறுதியில் சூரப்ப நாயக்கர் கண்ணீர் மல்க அன்னையிடம் மன்றாடி மன்னிப்புக் கோரினார். அன்னை மனமிரங்கி அவருக்கு அனுமதி அளித்தாள். இன்றும் பிரம்மோற்சவத்தின் ஒன்பதாம் நாள் திருவீதி உலாவின்போது சூரப்ப நாயக்கர் செய்த விக்கிரகம் இடம் பெறுகிறது.

Posted in Backgrounder, Chola, Chozha, Details, Facts, Festival, God, Hindu, Hinduism, Mariamman, Mariyamman, Religion, Sakthi, Samaiapuram, Samaiyapuram, Samayapuram, Temple, Temples, Thiruchi, Thiruchirapalli, Thiruchirappalli, Thiruchy, Trichirappalli, Trichy, Vikadan, Vikatan | 3 Comments »

Sakthi Vikadan – Srivilliputhoor Andal Temple: Backgrounder, Details

Posted by Snapjudge மேல் ஜூலை 19, 2007

தலங்கள்… தகவல்கள்

ஆலயம் தரும் அபூர்வ சேதிகள்!

ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் திருக்கோயில்

ஸ்ரீவில்லிப்புத்தூரின் பெருமைகள் வராக புராணம்& ரகஸ்ய காண்டத்தில் ஒன்பது அத்தியாயங்களில் விவரிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீவராக அவதாரம் நிகழ்ந்த தலமாக ஸ்ரீவில்லிப்புத்தூர் கருதப்படுவதால், இதை ‘வராக «க்ஷத்திரம்’ என்பர். இதையட்டி, இங்கு ஸ்ரீவராகர் சந்நிதி திகழ்கிறது.

மதுரையிலிருந்து 74 கி.மீ. தூரத்திலும், விருதுநகரிலிருந்து 45 கி.மீ. தூரத்திலும் அமைந்துள்ளது ஸ்ரீவில்லிப்புத்தூர்.

ஸீ தமிழக அரசின் அதிகாரபூர்வமான சின்னமாகத் திகழ்வது ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் ஆலய ராஜ கோபுரம். இந்தக் கோபுரத்தை தமிழக அரசின் சின்னமாக ஏற்பது என்று அன்றைய சென்னை மாகாண முதல்வர் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் தலைமையிலான அமைச்சரவை முடிவு செய்தது. ‘மதச்சார்பற்ற நாட்டில் குறிப்பிட்ட ஒரு மதத்தைச் சார்ந்த கோயில் கோபுரத்தை அரசு சின்னமாக அறிவிக்கக் கூடாது!’ என்று சிலர் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

அப்போதைய பிரதமர் நேருஜி இது குறித்து ஓமந்தூராரி டம் விளக்கம் கேட்டார். ‘இந்தக் கோபுரத்தை சமயச் சின்னமாகப் பார்க்காமல், திராவிடக் கட்டடக் கலையின் எடுத்துக்காட்டாகக் கொள்ள வேண்டும்!’ என்று விளக்கம் அளித்தார் ஓமந்தூரார். இதன் பின் ஸ்ரீவில்லிப்புத்தூர் கோபுரம் அரசின் சின்னமாக ஏற்கப்பட்டது.

வைணவ திவ்ய தேசங்கள் நூற்றியெட்டில் முதலாவது ஸ்ரீரங்கம். இது ஆண்டாளின் புகுந்த வீடு. கடைசித் தலம் ஸ்ரீவில்லிப்புத்தூர். இது அவளது தாய் வீடு. எனவே, ‘108 திவ்ய தேசங்களையும் மாலையாக அணிந்தவள்’ என்ற பெருமை ஆண்டாளுக்கு உண்டு.

பன்னிரு ஆழ்வார்களுள் ஒருவரான பெரியாழ்வார், குரோதன ஆண்டு, ஆனி மாதம், வளர்பிறை ஏகாதசியில், சுவாதி நட்சத்திரத்தில் ஞாயிற்றுக் கிழமை அன்று இங்கு அவதரித்தார். நள வருஷம், ஆடி மாதம், வளர்பிறை சதுர்த்தசியில் பூரம் நட்சத்திரத்தில் செவ்வாய்க் கிழமை அன்று இங்கு அவதரித்தவள் கோதை நாச்சியார் எனப்படும் ஆண்டாள். தவிர, வில்லிபாரதம் அருளிய வில்லிப்புத்தூரார், தருமபுரம் ஆதீனத்தை நிறுவிய குரு ஞானசம்பந்தர் ஆகியோரும் அவதரித்த புண்ணியத் திருத்தலம் ஸ்ரீவில்லிப்புத்தூர்.

சுமார் 1,300 ஆண்டுகளுக்கு முன்பு, பெரியாழ்வார் புஷ்ப கைங்கரியம் செய்யும் தனது நந்தவனத்தில் துளசி பாத்திக்கு அருகில், சர்வ லட்சணங்களும் பொருந்திய குழந்தை ஒன்றைக் கண்டெடுத்தார். குழந்தைக்கு கோதை என்று பெயர் சூட்டினார்.

பெருமாள் வழிபாட்டுக்காக தினமும் பெரியாழ்வார் தொடுத்து வைக்கும் மலர் மாலையை முதலில் கோதை சூடி மகிழ்வது வழக்கம். ஒரு முறை அதைக் கண்டு கோபம் கொண்ட ஆழ்வார் மகளைக் கடிந்து கொண்டார். அன்று இரவில் அவர் கனவில் தோன்றிய பெருமாள், ‘ஆண்டாள் சூடிக் கொடுத்த மாலையே எமக்கு உகந்தது!’ என்றருளினார். அது முதல் கோதைக்கு, ‘சூடிக் கொடுத்த சுடர்க்கொடி!’ என்று பெயர் உண்டாயிற்று.

திருமண வயதடைந்த ஆண்டாள், ‘அரங்கனைத் தவிர வேறு எவருக்கும் மாலையிட மாட்டேன்!’ என்றாள். பெரியாழ்வார் குழம்பினார். மீண்டும் அவரது கனவில் தோன்றிய பெருமாள், ‘ஆண்டாள் தெய்வப் பிறவி. அவளை ஸ்ரீரங்கத்துக்கு அழைத்து வா!’ என்று அருளி மறைந்தார். அதன்படி ஸ்ரீரங்கம் வந்த கோதை, காவிரிக் கரையை அடைந்ததும் காணாமல் போனாள். பெரியாழ்வார் கலங்கினார். கோதை தனக்குத் திருவடிச் சேவை செய்வதை பெரியாழ்வாருக்குக் காட்டினார் பெருமாள்.

ஆனால், ஸ்ரீவில்லிப்புத்தூர் வந்துதான் கோதையை மணம் முடிக்க வேண்டுமென்று பெரியாழ்வார் வேண்டினார். அதன்படி ஸ்ரீவில்லிப்புத்தூரில் எழுந்தருளி ஒரு பங்குனி உத்திர நன்னாளில் கோதையை திருமணம் செய்து கொண்டார் பெருமாள் என்கிறது தல புராணம். இப்படி கோதை ஆண்டவனை ஆட்கொண்டதால் ஆண்டாள் எனச் சிறப்பிக்கப்பட்டாள்.

இப்போதும் சித்ரா பௌர்ணமி அன்று மதுரை தல்லாகுளத்தில் குதிரை வாகனத்தில் எழுந்தருளும் கள்ளழகர், ஆண்டாள் சூடிக் கொடுத்த மாலை மற்றும் பரிவட்டங்களை அணிந்த பிறகே வைகையில் இறங்குகிறார்.

மு. ராகவையங்கார், ஆண்டாளது காலத்தைக் கணிக்க உதவும் அபூர்வமான வானியல் நிகழ்ச்சிகளைச் சுட்டிக் காட்டியுள்ளார்.

வெள்ளி எழுதலும், அதே சமயம் வியாழன் உறங்குதலும் அபூர்வ நிகழ்ச்சி. 8&ஆம் நூற்றாண்டில் இம்மாதிரி நிகழ்ந்தது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். 731 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 18 ஆம் தேதி அதிகாலை 3.50 மணி முதல் 4.00 மணிக்குள் அந்த மார்கழி பௌர்ணமியே திருப்பாவை தோன்றியதாக கூறப்படுகிறது. கி.பி.716 ஆம் ஆண்டு திரு ஆடிப்பூரத்தில் ஆண்டாள் தோன்றியதாக வரலாறு கூறுகிறது. தன் பதினைந்தாம் வயதில் (கி.பி.731) ஆண்டாள் திருப்பாவை இயற்றினாள் என்பர்.

ஆண்டாள் பாடிய நாச்சியார் திருமொழியில் உள்ள வாரணமாயிரம் என்று தொடங்கும் முதல் பாடல் உட்பட 11 பாடல்களையும் கன்னியர் தினமும் பக்தியுடன் பாடினால் விரைவில் திருமணம் நிகழும்.

திருமலை ஐயங்கார் தன் அண்ணா வேங்கடம் ஐயங்காருடன் இணைந்து பெரியாழ்வாருக்குத் தனியே பெரிய சந்நிதி ஒன்றைக் கட்டினார். பெரியாழ்வாரின் திருமேனி சிதிலம் அடைந்தபோது அப்போதைய திருப்பதி ஜீயரது ஆணைப்படி பெரியாழ்வாரின் திருமேனியில் தங்கக் கவசம் சாற்றியவரும் திருமலை ஐயங்கார்தான். இதை இங்குள்ள கல்வெட்டுகள் கூறுகின்றன.

இது இரட்டைக் கோயிலாக அமைந்துள்ளது. வட கிழக்கில் மிகப் பழைமையான வடபத்ரசாயி கோயில். மேற்கில் ஆண்டாள் திருக்கோயில். இரண்டுக்கும் இடைப்பட்ட பகுதியில் இருப்பதே பெரியாழ்வார் உருவாக்கிய நந்தவனம். இங்கு ஆண்டாளுக்குத் தனிச் சந்நிதி ஒன்றும் அதன் முன்புறம் துளசி மாடம் ஒன்றும் உள்ளது. இங்கிருக்கும் மண்ணை எடுத்து நெற்றியில் இட்டுக் கொண்டாலோ, சிறிதளவு எடுத்துச் சென்று வீட்டில் பத்திரப்படுத்தினாலோ திருமணத் தடை நீங்கி செல்வம் சேரும் என்று பக்தர்கள் நம்புகின்றனர். மாடத்தின் அடியில் ஆண்டாளின் சிற்பம் வடிக்கப்பட்டுள்ளது.

பெரியாழ்வார் ஸ்ரீஆண்டாளுடன் வாழ்ந்த வீடு ‘வென்று கிழியறுத்தான் வீதி’யில் உள்ளது. கி.பி. 14&ஆம் நூற்றாண்டில் மாவலி பாணாதிராயர் என்பவரால் இந்த வீடு திருக்கோயிலாக மாற்றப்பட்டது (ஆண்டாள் கோயிலின் கருவறை உட்பட அர்த்த மண்டபம், மகா மண்டபம் ஆகியவற்றையும் மாவலி பாணாதிராயர் கட்டி யதாக கல்வெட்டுத் தகவல் கூறுகிறது). இதன் கருவறையில் ஸ்ரீஆண்டாள், ஸ்ரீரங்க மன்னார் மற்றும் கருடாழ்வார் எழுந்தருளி உள்ளனர்.

11 நிலைகளுடன் 11 கலசங்கள் கொண்ட ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ராஜ கோபுரம், 196 அடி உயரமுடையது.

ஆண்டாளின் திருக்கோயில் முழுதும் கருங்கற்களால் ஆனது. கருவறை விமானத்தில் திருப்பாவை பாசுரங்களின் கருத்துகளைப் பிரதிபலிக்கும் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. இங்குள்ள கல்யாண மண்டபம், துவஜஸ்தம்ப மண்டபம், ஏகாதசி மண்டபம் ஆகியன சிற்ப வேலைப்பாடு மிகுந்தவை.

ஒரே கல்லாலான பெரிய தூண் துவஜஸ்தம்பம். இதன் இரு பக்கங்களிலும் வேணுகோபாலன், ஸ்ரீராமர், விஸ்வகர்மா, நடன தாரகை, சூர்ப்பணகையைத் தாக்கும் லட்சுமணன், சரஸ்வதி, அகோர வீரபத்திரர், ஜலந்தரர், மோகினி, சக்தி ஆகிய சிற்பங்கள் உள்ளன.

ராஜ கோபுரத்தின் வடபுறம் ஏகாதசி மண்டபம், பரமபத வாயில் ஆகியவை உள்ளன. ஏகாதசி மண்டபத்தில் கர்ணன், அர்ஜுனன், குகன், சாத்தகி, ஊர்த்துவமுக வீரபத்திரன், நீர்த்தமுக வீரபத்திரன், ரதி, மன்மதன் ஆகிய சிற்பங்கள் கலை நயம் மிக்கன.

கோயில் ராஜ கோபுரத்தின் முன்புறம் இருப்பது பந்தல் மண்டபம். உள்ளே இடப் பக்கம் திருக்கல்யாண மண்டபம். இதில் ராமாயண நிகழ்ச்சிகளை விளக்கும் ஓவியங்கள் உள்ளன. அடுத்துள்ள அறை அணி மண்டபத்தில் கொடிமரம், பலிபீடம் காணப்படுகின்றன.

உட் பிராகாரத்தில் தேக்குமர வேலைப்பாடுகளுடன் விளங்குகிறது மாதவிப் பந்தல். அடுத்து மணி மண்டபம். இங்கு கம்பம் ஒன்றில், ஆண்டாள் முகம் பார்த்த வெண்கலத் தட்டு (கண்ணாடி) காணப்படுகிறது. இதை தட்டொளி என்பர்.

மகா மண்டபத்தில் தங்கமுலாம் பூசப்பெற்ற ‘வெள்ளிக் கிழமை குறடு’ என்ற மண்டபம் ஒன்று உள்ளது. இதன் தூண்களில் திருமலை நாயக்கர் மற்றும் அவரின் மனைவியர் இருவரது சிலைகள் உள்ளன.

அர்த்த மண்டபத்தில் தங்கமுலாம் பூசப்பெற்ற மஞ்சத்தில் இடக் கையில் கிளியை ஏந்தி நிற்கும் ஆண்டாளுடன் ரங்க மன்னார் திருக்கல்யாண கோலத்தில் எழுந்தருளியுள்ளார். அருகில் கூப்பிய கரங்களுடன் கருடாழ்வார். கருவறையில் ஆண்டாள்& ரங்க மன்னார், கருடாழ்வார் (பெரிய திருவடி) ஆகியோர் சேவை சாதிக்கிறார்கள். திருவரங்கன், திருமணக் கோலத்தில் ராஜகோபாலனாக செங்கோல் ஏந்தி கிழக்கு நோக்கி காட்சி தருகிறார். மூல விக்கிரகங்களுக்கு முன்னால் தங்கத்தாலான கோபால மஞ்சத்தில் உற்சவர்களாக இந்த மூவரும் எழுந்தருளி உள்ளனர்.

ஸ்ரீவில்லிப்புத்தூர் உற்சவர்& ரங்கமன்னார், ராஜ மன்னார் ஆகிய பெயர்களில் அழைக்கப்படுகிறார். விரத நாட்கள் தவிர மற்ற நாட்களில், இவர் மாப்பிள்ளைக் கோலத்தில் காட்சி தருகிறார். அப்போது அந்தக் கால நிஜார் மற்றும் சட்டை அணிவார். அருகில் மணப்பெண் அலங்காரத்தில் ஆண்டாள்.

‘மன்னாருக்கு தொடை அழகு’ என்பர். ஆண்டாளின் மாலையை (தொடை& மாலை) அணிந்து கொண்டு அவர் காட்சி அளிப்பது உலகப் பிரசித்தம்.

ஸ்ரீநாச்சியார் திருக்கோயிலின் முதல் பிரகாரம் பெரியாழ்வாரது நெஞ்சகச் சுவராகக் கருதப்படுகிறது.அதில் 108 திவ்ய தேச மூர்த்திகளது திருவுருவம் வண்ணத்தில் வரையப்பட்டுள்ளது. இதன் தென்கிழக்கு மூலையில் பெரியாழ்வார் வழிபட்ட ‘ஸ்ரீலட்சுமி நாராயணர்’ உள்ளார்.

2&ஆம் பிராகாரத்தில் மகாலட்சுமியும், அனுமனும் அருள் பாலிக்கின்றனர். வைகுண்ட ஏகாதசியன்று இதன் வடக்கு வாசல் வழியே சொர்க்கவாசல் திறக்கப்பட்டு, பெரிய பெருமாள் சந்நிதியின் வடபுறம் சேவை நடைபெறும். இங்குள்ள கலைமகள் சிற்பத்தில் நாசியும், கால் பெருவிரல் நுனியும் ஒரே நேர்க்கோட்டில் அமைந்திருப்பது சிற்பக் கலையின் சிறப்புக்கு உதாரணம்.

நந்தவனத்துக்கும் வடபெருங் கோயிலுக்கும் இடையில் சக்கரத்தாழ்வார் சந்நிதி உள்ளது.

அந்நிய படையெடுப்பால் ஏற்படும் ஆபத்தைத் தவிர்க்க ஒரு முறை ஆண்டாள் திருவுருவை திருவனந்தபுரத்துக்கு எடுத்துச் சென்றனராம். அதுவரை அங்கு உக்கிரமாக விளங்கிய சக்கரத்தாழ்வார், ஸ்ரீஆண் டாள் வந்ததும் சாந்தம் அடைந்தாராம். பிறகு ஸ்ரீஆண்டாள் ஸ்ரீவில்லிப்புத்தூர் திரும்பியபோது சக்கரத்தாழ்வாரும் உடன் வந்ததாகக் கூறுவர். ஸ்ரீசக்கரத்தாழ்வார் மூன்று கண்கள் மற்றும் 16 கைகளுடன் திகழ்கிறார். இவரின் பின்புறம் யோகநரசிம்மர் விளங்குகிறார். ஸ்ரீசக்கரத்தாழ்வார் கிரக தோஷங்களைப் போக்குபவர்.

வடபத்ரசயனர் கோயிலின் தரைத் தளத்தில் ஸ்ரீலட்சுமி நரசிம்மர் அருள் பாலிக்கிறார். ஒரு காலத்தில் செண்பக வனத்தின் அடையாளமாக இங்கு விளங்கிய புற்றுக்கோயில், புனர் அமைப்பின்போது நீக்கப்பட்டு விட்டது. முதல் தளத்தின் கருவறையில் பள்ளி கொண்ட பெருமாள் அருள் பாலிக்கிறார். அவருடன் ஸ்ரீதேவி& பூதேவி, நாபிக்கமல பிரம்மா மற்றும் திருமாலின் திருப்பாதத்தின் அருகே வடபெருங்கோயிலை எழுப்பிய வில்லியும் கண்டனும் இடம்பெற்றுள்ளனர்.

கொடிமரத்துக்கும் ராஜ கோபுரத்துக்கும் இடையில் பெரியாழ்வார் மற்றும் ராமானுஜரின் சந்நிதிகள் உள்ளன.

தண்ணீர் பஞ்ச காலத்திலும்கூட இந்தத் திருக்கோயிலின் முன்புறமுள்ள நூபுர கங்கையில் நீர் வற்றுவது இல்லை. இந்த நீர் எங்கிருந்து வருகிறது என்பதை அறியவும் முடியவில்லை.

கருவறையில் விமலாக்ருதி விமானத்தின் கீழ் அரவணைப் பள்ளியில் ஸ்ரீதேவி& பூதேவி சமேதராக உள்ள வடபத்ர சாயியை மூன்று வாசல்களின் வழியாக தரிசிக்கலாம். தலைமாட்டில் பிருகு முனிவரும், கால்மாட்டில் மார்க் கண்டேயரும் வணங்கி நிற்கின்றனர். மேலும் பஞ்ச மூர்த்திகள், தும்புரு, நாரதர், சனத்குமாரர், கின்னரர், சூரியன், சந்திரன், மது& கைடபர் ஆகியோரும் காணப்படுகின்றனர்.

சம்ஸ்கிருதத்தில் வடபத்ரம் எனப்படும் ஆலிலையில் பள்ளி கொண்ட பரமன் ஆதலால், இவர் ‘வடபத்ர சயனர்’ எனப்படுகிறார்.

கள்ளழகருக்கு நூறு குடம் வெண்ணெயும், அக்கார வடிசலும் சமர்ப்பிப்பதாக தனது விருப்பத்தை ஆண்டாள் பாடினாள். அதை ஸ்ரீராமானுஜர் நிறைவேற்றினார். பின்னர் ஸ்ரீராமானுஜர் ஸ்ரீவில்லிப்புத்தூர் வந்தபோது ‘என் அண்ணன் அல்லவோ!’ என்று அசரீரி ஒலியுடன் ஆண்டாள் விக்கிரகம் முன்னோக்கி நகர்ந்து ஸ்ரீராமானுஜரை வரவேற்றது.

தினமும் விடியற் காலையில் பிராட்டியின் சந்நிதியில் காராம்பசு ஒன்று வந்து நிற்கும். தேவியின் திருப்பார்வை காரம்பசுவின் பின்புறம் விழும். தேவி தினமும் கண் விழிப்பது இப்படித்தான்.

ஆண்டாள் சூடிய மாலைக்குத் தனி மகத்து வமே இருக்கிறது. வேங்கடாசலபதியே இந்த மாலையை ஆசையுடன் அணிகிறாரே! வேங்கடேசன் மீது அளவற்ற பக்தி கொண்ட ஆண்டாள், அவரைத் துதித்து நாச்சியார் திருமொழியில் பாடினாள். இதனால் மகிழ்ந்த வேங்கடேசன், ஆண்டாள் அணிந்த மாலையை அன்புடன் ஏற்றுக் கொள்கிறார் என்கிறது புராணம். திருப்பாவையில் முதல் பத்தில் ‘அவன் திருநாமத்தைச் சொல்லு’ என்றும், இரண்டாவது பத்தில், ‘உயரியதான அவன் திருவடியை அர்ச்சனை செய்’ என்றும், கடைசி பத்து பாட்டுக்களில் ‘அவன் திருவடியில் உன்னை அர்ப்பணி’ என்றும் வலியுறுத்துகிறாள் ஆண்டாள்.

ஆண்டாளின் திருமணத்துக்கு பெருமாளை விரைவாகச் சுமந்து வந்தவர் கருடன். அதனால் அவர் இங்கு மாப்பிள்ளைத் தோழனாக பெருமாளின் அருகிலேயே இருக்கிறார்.

ஆண்டாளுக்குச் சாத்தப்படும் மாலை, மறு நாள் காலையில் வடபெருங்கோயில் உடையவருக்கு சாத்தப்படுகிறது.

இங்கு ஆண்டாள் உலா வரும்போது, ‘நாலாயிர திவ்யப் பிரபந்தம்’ பாடப்படுகிறது. செங்கோல் ஏந்தி அரசாளும் மதுரை ஸ்ரீமீனாட்சிக்கு வலத் தோளில் கிளி. அன்பால் இறையாட்சி புரியும் ஸ்ரீஆண்டாளுக்கு& இடத் தோளில் கிளி. இதைப் பிரசாதமாகப் பெறுவோர் பெரும் பாக்கியசாலிகள். இந்தக் கிளி தினமும் புதிதாகச் செய்யப்படுகிறது. கிளி மூக்கு& மாதுளம் பூ; மரவல்லி இலை& கிளியின் உடல்; இறக்கைகள்& நந்தியாவட்டை இலையும் பனை ஓலையும்; கிளியின் வால் பகுதிக்கு வெள்ளை அரளி மற்றும் செவ்வரளி மொட்டுகள்; கட்டுவதற்கு வாழை நார்; கிளியின் கண்களுக்கு காக்காய்ப் பொன். இப்படித் தயாராகிறது ஆண்டாள் கிளி. இந்தக் கிளியை உருவாக்க ஐந்து மணி நேரம் தேவைப்படுகிறது.

ஆண்டாளின் கிளிக்குச் சொல்லப்படும் கதை: ஸ்ரீஆண்டாள் சுகப்பிரம்மம் என்ற ரிஷியை கிளி ரூபத்தில் ரங்கநாதரிடம் அனுப்பியதாகவும், தூது சென்று வந்த கிளியிடம், ‘என்ன வரம் வேண்டும்?’ என்று ஆண்டாள் கேட்க, சுகப்பிரம்மம், ‘இதே கிளி ரூபத்தில் உங்கள் கையில் தினமும் இருக்க அருள் புரிய வேண்டும்!’ என்று வேண்டிக் கொண்டார் என்றும், அதனால் ஆண்டாளின் கையில் கிளி இடம் பெற்றிருப்பதாகவும் புராணம் கூறுகிறது.

தான் அணிந்து கொண்ட பூமாலையுடன், கோதை இங்குள்ள கிணற்று நீரில் அழகு பார்த்துக் கொள்வது வழக்கமாம். அதனால் இங்குள்ள கிணறு ‘கண்ணாடிக் கிணறு’ என அழைக்கப்படுகிறது.

ஸ்ரீஆண்டாள் கோயிலின் திருக்குளம், கோயிலில் இருந்து சில தெருக்கள் தாண்டி வாழைக்குளத் தெரு முனையில் அமைந்துள்ளது. இதன் மேற்கு கரையில் எண்ணெய்க் காப்பு நீராடல் உற்சவ மண்டபமும், கிழக்குக் கரையில் தீர்த்தவாசி மண்டபமும் உள்ளன.

காலநேமி எனும் அசுரனை அழித்ததால், மகா விஷ்ணுவின் சக்ராயுதம் களங்கம் அடைந்தது. அதைத் தூய்மையாக்க கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய மூன்று நதிகளும் தங்களது தீர்த்தத்தை சக்ராயுதத்தின் மீது சொரிந்து புனிதமாக்கின. ஆண்டாள் நோன்பு இருந்தபோது உதவிய கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய மூன்று நதிகளும் சங்கமிப்பதால் இது ‘திருமுக்குளம்’ எனப்படுகிறது.

திருவிழாவின்போது ஆண்டாள் தைலம் தயாரிக்கப்பட்டு ஆண்டா ளுக்கு எண்ணெய்க் காப்பு உற்சவம் நடத்தப்படுகிறது.நல்லெண்ணெய், பசும் பால், தாழம்பூ, நெல்லிக்காய், இளநீர் போன்றவற்றுடன் சுமார் 61 மூலிகைகளை உள்ளடக்கிய இந்தத் தைலத்தைக் காய்ச்ச 40 நாட்கள் ஆகின்றன. இரண்டு பேரால் காய்ச்சப்படும் இதன் கொள்ளளவு சுமார் 7 படி. இதை ‘சர்வ ரோக நிவாரணி’ என்பர்.

சித்திரை& நீராழி மண்டப விழா, வைகாசி& வசந்த சேவை, ஆனி& பெரியாழ்வார் உற்சவம், ஆவணி& திருப்பவித்ர விழா, புரட்டாசி& பிரம்ம உற்சவம், ஐப்பசி& தீபாவளி, கார்த்திகை& சொக்கப்பனை, தை& கம்பர் விழா, மாசி& தெப்பத்திருவிழா என்று ஆண்டு முழுவதும் ஸ்ரீஆண்டாளுக்கு விழாக் கோலமே!

சித்திரையில் நெசவாளர் தரும் புடவையை ஆண்டாளுக்குச் சாற்றுவர். அன்று, நெசவாளர்கள் ஆண்டாளை சேவிப்பர். சித்ரா பௌர்ணமி அன்று வாழைக்குளத் தெருவில் உள்ள தீர்த்தவாரி மண்டபத்தில், நெசவாளர்கள் வந்து தொழுவர்.

மார்கழி& எண்ணெய்க் காப்பு உற்சவத்தின் போது ஸ்ரீஆண்டாள், தினமும் காலையில், பல பெருமாள்களின் திருக்கோலத்தில் நீராட்ட மண்டபத்துக்கு எழுந்தருள்வார். அந்த உற்சவத்தின் ஆறு மற்றும் எட்டாம் நாட்களில் நடக்கும் சவுரித் திருமஞ்சனம் விசேஷமானது.

அப்போது ஒரு நாள், மூக்குத்தி சேவை நடைபெறும். ஆண்டாளின் மூக்கருகே, தங்க மூக்குத்தியைக் கொண்டு சென்றதும், அது தானாகவே ஆண்டாளின் மூக்குடன் ஒட்டிக் கொள்கிறது. மார்கழி உற்சவத்தன்று முக்குலத்தோர் வீதி வழியே இரவுப் புறப்பாடு நடக்கும். அன்று, ஆண்டாள் வாழைக்குளத் தெரு மண்டபத்திலிருந்து வந்த வழியே திரும்பிச் செல்வது வழக்கம்.

ஸ்ரீஆண்டாளின் மடியில் ஸ்ரீரங்க மன்னார் படுத்திருக்கும் ‘சயன உற்சவம்’ அருகில் உள்ள ஸ்ரீகிருஷ்ணர் கோயிலிலும், ஸ்ரீகிருஷ்ணரின் சயன உற்சவம் ஆண்டாள் கோயிலிலும் நடைபெறும்.

ஸ்ரீரங்கம் தலத்தில் நடப்பது போலவே இங்கும் ‘அரையர் சேவை’ நடைபெறுகிறது. அப்போது ஆழ்வார் பாசுரங்களைப் பக்தி சிரத்தையுடன், பாவம், லயம், இசை, சந்தத்துடன் பாடுகிறார்கள்.

மார்கழியில் சாற்று மறையின்போது ஆண்டாள் முன்பாக பதிமூன்று தீர்த்தக் காரர்களும், அரையர்களும், திருப்பள்ளி யெழுச்சி பாடக் காத்திருப்பர். மற்றொரு பக்கம் வேதபிரான் பட்டர்கள் நிற்பர். அப்போது அரையர்கள், தொண்டரடிப் பொடியாழ்வாரது பத்துப் பாசுரங்களைப் பாடித் திருப்பள்ளி எழுச்சி செய்கின்றனர். தொடர்ந்து பெரியாழ்வாருக்கும், சுவாமிக்கும் திருமஞ்சன சேவை நடைபெறுகிறது. பூசணிக்காய் மசியலும், பாசிப் பருப்புப் பொங்கலும் சுவாமிக்கு நிவேதனம் ஆகிறது.

மந் நாத முனிகள் பரம்பரையில் வந்த அரையருக்கு கோஷ்டி சேவா காலம் முடிந்த பிறகு, தீர்த்தம் வழங்கப் படுவது மரபு. அதன் பின்னரே அடியவர்களுக்குத் தீர்த்தமும், பிரசாதமும் வழங்குவர்.

மார்கழி மாதத்தில் 23&ஆம் நாளன்று வடபத்ரசாயிப் பெருமாள் முன்னால் திருப்பாவைப் பாசுரம் பாடி அரையர் சேவை துவங்குகிறது. ஆண்டாளைப் போலவே பாசுரம் பாடி அதன் பொருளை அபிநயத்தில் நடித்துக் காட்டுவர் அரையர். முதல் நாள் உற்சவத்தைப் பிரியாவிடை உற்சவம் என்பர். அதாவது பாவை நோன்பு நோற்க ஆண்டாள் விடை கேட்கிற மாதிரி அமைந்தது அது.

ஆடி ஐந்தாம் நாள் உற்சவம். அன்று இரவில் ஸ்ரீபெரிய பெருமாள், ஸ்ரீரங்க மன்னார், ஸ்ரீநிவாசர், ஸ்ரீசுந்தர்ராஜன், திருத்தண்கால் அப்பன் ஆகிய ஐந்து பெருமாள்களும் அன்று கருட வாகனத்தில் எழுந்தருள்வர். அப்போது ஆண்டாளும், பெரியாழ்வாரும் அன்ன வாகனத்தில் எழுந்தருள்வர்.

ஸ்ரீஆண்டாளின் அவதார தினமான ஆடிப் பூரம் அன்று தேர்த்திருவிழா நடைபெறுகிறது. தமிழகத்தின் மூன்றாவது பெரிய தேராகக் கருதப்படும் இதில், சுமார் 1000 தேவ&தேவியர், ரிஷிகள், முனிவர்கள் ஆகியோரது உருவங்களுடன் மகாபாரதம், ராமாயணக் காட்சிகளும் இடம் பெற்றுள்ளன. இந்தத் தேரை வடம் பிடித்து இழுக்க 3,030 ஆட்களாவது வேண்டுமாம். பெரிய தேர், ஆலயக் கோபுரத்தின் உயரத்திலிருந்து முக்கால் பங்கு உயரம் உள்ளது. வானமாமலை ஜீயரால் வழங்கப்பட்ட இந்தத் தேர் நவாம்சம் பொருந்தியது.

தேர்த் திருவிழாவன்று ஸ்ரீஆண்டாளும், ஸ்ரீரங்கமன்னாரும் இந்தத் தேரில் எழுந்தருளி வீதி உலா வருவார்கள். திருத்தேர், நிலையை அடைந்ததும் கோயில் முகப்பில் இருக்கும் சிங்கம்மாள் குறட்டுக்கும் பின்னர் நந்தவனத்தில் உள்ள திருப்பூர மண்டபத்துக்கும் எழுந்தருள்வார்கள். அங்கு அவர்களுக்கு திருமஞ்சனம், திருஆராதனம் ஆகியவை நடைபெறுகின்றன.

ஆடிப்பூர உற்சவத்தின் ஏழாம் நாள் அன்று ஸ்ரீஆண்டாள் ஒரு காலைக் கிடத்தி, மறு காலை மடக்கி அமர்ந்திருப்பாள். அவள் மடியில் தலை சாய்த்துப் படுத்திருக்கும் கோலத்தில் ஸ்ரீரங்கமன்னார் நமக்கு சேவை சாதிப்பார்.

இந்தத் தேரைத் தவிர மேலும் இரண்டு தேர்கள் இங்கு உள்ளன. ஆடிப்பூர உற்சவத்தின் முதல் நாள்& பதினாறு கால்கள் கொண்ட சப்பரத் தேர் வீதி உலா வரும். தஞ்சையிலிருந்து கலைஞர்கள் வரவழைக்கப்பட்டு பனையோலை குருத்துக்களால் வடிவமைக்கப்படும் இந்த தேர், பக்தர்களுக்கு பதினாறு வகையான செல்வங்களையும் வழங்கக் கூடியது என்பது ஐதீகம்.

அடுத்தது& செப்புத்தேர். இதை ‘கோ ரதம்’ என்றும் அழைப்பர். பங்குனி மாதம் ஆண்டாள் திருக்கல்யாணம், ஆனி மாதம் பெரியாழ்வார் உற்சவம், புரட்டாசி மாதம் பெரிய பெருமாள் உற்சவம் ஆகிய நாட்களில் இந்தக் கோரதம் பவனி வருகிறது.

இந்த ஆலயத்தில் நடக்கும் பத்தாம் நாள் திருவிழா அன்று, ‘முத்துக் குறி’ எனப்படும் விசேஷமான நிகழ்ச்சியின்போது ஆண்டாளின் பிறந்த நாள் பலாபலன்களைச் சொல்வர்.

பங்குனி உத்தரத்தன்று ஸ்ரீரங்கமன்னார்& ஸ்ரீஆண்டாள் திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது. இதன் ஐந்தாம் நாளன்று பஞ்ச கருட சேவை நடைபெறும். ஸ்ரீபெரிய பெருமாள், ஸ்ரீநிவாசன், சுந்தரராஜன், திருத்தண்கால் அப்பன் ஆகியோர் ஆண்டாளை திருமணம் செய்யப் போட்டி இடுவர். இவர்களுடன் ஸ்ரீரங்கநாதரும் போட்டியில் கலந்து கொள்வார். முதலில் வரும் ஸ்ரீரங்கநாதரையே ஆண்டாள் திருமணம் முடிப்பாள். ஆண்டாளை திருமணம் முடிக்க வருபவர்களை பெரியாழ்வார் உபசாரம் செய்வதே பஞ்ச கருட சேவை.

பங்குனி திருக்கல்யாணத் தின்போது, திருப்பதி ஸ்ரீவேங்கடாசலபதி கோயிலிலிருந்து பரிவட்டமும் (பட்டு), ஆடிப்பூரத் தேரோட்டத்துக்கு, மதுரை அழகர் கோயில் கள்ளழகர் திருக்கோயிலிருந்து பட்டுப் புடவையும் அனுப்பி வைக்கப்பட்டு ஆண்டாளுக்கு சாத்துப்படி செய்வது வழக்கம்.

பெரியாழ்வார் இந்த ஆலயத்தின் முதல் தர்மகர்த்தாவாகப் போற்றப் படுகிறார். அவர் தர்மகர்த்தாவாக இருந்த போது, ஸ்ரீஆண்டாளிடம் வரவு& செலவை ஒப்புவிப்பாராம்! இந்த நிகழ்ச்சி, வருடம்தோறும் ஆடி மாதம் 7&வது நாளில் ஆலயத்தின் வடக்குப் பிராகாரத்தில் உள்ள மண்டபத்தில் ‘நெல் அளக்கும்’ வைபவமாக நடைபெறுகிறது.

ஆண்டாளுக்கும் ஸ்ரீரங்கமன்னாருக்கும் திருமஞ்சன நீராட்டின்போது கட்டியம் கூறும் உரிமையை நிரந்தரமாகப் பெற்றுள்ளவர்களை ‘வேத பிரான் பட்டர்’ என்கிறார்கள். பெரியாழ்வாரின் சகோதரர் ஆதிகேசவரின் அபிமான புத்திரரான நாராயணதாசரின் வழிவந்தவர்கள் இவர்கள்.

ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோயிலின் விசேஷம் அரவணைப் பிரசாதம். பெருமாளுக்கும், ஆண்டாளுக்கும் இரவில் படைக்கப்படும் இதில் வடை, தேன்குழல் (முறுக்கு) அப்பம், புட்டு, வெண்பொங்கல், சர்க்கரைப் பொங்கல், பால் ஆகிய ஏழு வித பதார்த்தங்கள் இடம்பெறுகின்றன.

வடபத்ரசாயி கோயிலுக்கு அருகில் தெற்கு ரத வீதியில், திருமலை மன்னர் எழுப்பிய அரண்மனை ஒன்று உள்ளது. அதில் இன்று அரசு அலுவலகங்கள் மற்றும் நீதிமன்றங்கள் செயல்படுகின்றன.

ஸ்ரீஆண்டாள் நாச்சியார் குறித்து ஸ்வாமி வேதாந்த தேசிகன் இயற்றிய ‘கோதா ஸ்துதி’யில் 29 பாசுரங்கள் உள்ளன. 30 பாசுரங்களைக் கொண்ட ஆண்டாளின் திருப்பாவைக்கு இணையாக அமையக் கூடாது என்பதற்காக ஸ்வாமி வேதாந்த தேசிகன் இவ்வாறு அமைத்தாராம்.

திருமலை நாயக்கர், ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோயிலின் நைவேத்திய நேரத்தைத் தெரிந்து கொள்ள ஸ்ரீவில்லிப்புத்தூரில் இருந்து மதுரை வரை ஒவ்வொரு மைல் தோறும் ஒவ்வொரு மணி மண்டபம் அமைத்திருந்தார். ஒவ்வொரு மண்டபத்திலும் இருக்கும் மணிகள் ஒலித்து நைவேத்திய நேரத்தை திருமலை நாயக்கருக்குத் தெரியப்படுத்தினவாம். அவற்றில் ஒன்று, மதுரை& ஸ்ரீவில்லிப்புத்தூர் சாலையில் சிதிலமடைந்து காணப்படுகிறது.

நாடகக் குழுவை நடத்தி வந்த கன்னையா, கடன் சுமை தாங்காமல் தற்கொலை முடிவுக்கு வந்தார். அவர் ஸ்ரீஆண்டாளை தரிசிக்க ஸ்ரீவில்லிப்புத்தூர் வந்தார். அன்றிரவு கனவில் தோன்றிய ஆண்டாள், தனது கதையை நாடகமாக்குமாறு அருளி மறைந்தாள்.

அப்படியே செய்தார் கன்னையா. அந்த நாட கத்தைக் கண்டு மகிழ்ந்த ஒருவர், நாடகக் குழுவைச் சிங்கப்பூர் அழைத்துச் சென்றார். கன்னையாவுக்குப் பொருளும் புகழும் சேர்ந்தது. இதற்கு நன்றிக் கடனாக யானை, ஒட்டகம் மற்றும் அபிஷேகத்துக்குத் தங்கக் குடம் என்று பல காணிக்கைகளைச் செலுத்தினார் கன்னையா. அவர் அளித்த குடம், ‘கன்னையா குடம்’ என்றே குறிப்பிடப்படுகிறது.

கவிச்சக்ரவர்த்தி கம்பர் ஒரு முறை ‘மார்கழி நீராடல்’ உற்சவத்தைக் காண ஸ்ரீவில்லிப்புத்தூருக்குக் கிளம்பினார். ஆனால், குறித்த நேரத்துக்குள் அவரால் திருமுக்குளத்துக்கு வந்து சேர இயலவில்லை. ‘நீராடல் வைபவத்தை தரிசிக்க முடியாதோ’ என்ற ஆதங்கத்துடன் உற்சவ மண்டபத்துக்கு வந்து சேர்ந்த கம்பருக்கு ஆச்சரியம் காத்திருந்தது. அதுவரை விழா ஆரம்பமாகவில்லை. காரணத்தை கம்பர் கேட்டபோது, ‘‘எண்ணெய்க் காப்பு நீராடல் முடிந்ததும், ஸ்ரீஆண்டாளுக்கு வைர மூக்குத்தி சேவை நடைபெறும். அந்த மூக்குத்தியைக் காணோம்’’ என்று பதில் அளித்தனர் விழாக் குழுவினர்.

உடனே, கம்பர் தன் கையிலிருந்து மூக்குத்தி ஒன்றை எடுத்து அவர்களிடம் காட்டி, ‘‘இதுவா பாருங்கள்?’’ என்றார். எல்லோருக்கும் ஆச்சரியம். ‘ஸ்ரீஆண்டாளின் வைர மூக்குத்தி கம்பரிடம் எப்படி வந்தது?’ எனக் கேட்டனர். கம்பர், ‘‘திருமுக்குளம் கரை ஏறியபோது ஏதோ ஒன்று மின்னியதைக் கண்டு எடுத்து வந்தேன்!’’ என்றார். நீராடல் வைபவத்தைக் கம்பர் காண வேண்டும் என்பதற்காக ஸ்ரீஆண்டாள் நடத்திய திருவிளையாடலே இது என்று அனைவரும் உணர்ந்தனர்.

Posted in Andaal, Andal, Backgrounder, Details, Facts, Hindu, Hinduism, Madurai, Periyaalvaar, Periyaalvar, Periyaalwar, Periyaazhwar, Periyaazwar, Periyalwar, Periyazhwar, Religion, Srirangam, Srirengam, Srivilliputhoor, Srivilliputhur, Temple, Temples, Thirupathi, Thirupathy, Tips, Tour, Tourist, Tower, Travel, Vaishnava, Vikadan, Vikatan, Villiputhoor, Villiputhur, Virudhunagar, Virudunagar, Viruthunagar | 4 Comments »

Web2.0 World – R Venakadesh

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 12, 2006

முடிவில்லாத ஒரு ஆரம்பம்!

ஆர்.வெங்கடேஷ்

இன்றைக்கு சாதா சந்திப்பு, ஸ்பெஷல் சந்திப்பு அல்லது ஸ்பெஷல் மசாலா  சந்திப்பு என்று எந்த கூட்டம் நடந்தாலும், கழுத்தில் டை கட்டிய புண்ணியவான்கள் எல்லாம் ஒரே வார்த்தையைத்தான் உபயோகிக்கிறார்கள்: ‘வலை 2.0’ (கீமீதீ 2.0). தொழில்நுட்ப ரீதியாக புதிதாக ஏதாவது செய்ய வேண்டும் என்றாலும் இந்த ‘வலை 2.0’ சார்ந்து இருக்கிறதா என்று பார்த்துக் கொள்கிறார்கள்.

‘வலை 2.0’ இப்போது ‘பிசினஸ் 2.0’&வையும் கொண்டுவந்து விட்டது. இதெல்லாம் என்ன, ஒரே உட்டாலக்கடியாக இருக்கிறதே என்று யோசிக்கிறீர்களா?

இதில் புதிர் ஒன்றுமில்லை. இணையத்தின் அடுத்த கட்ட வளர்ச்சியைத்தான் ‘வலை 2.0’ என்று சொல்கிறார்கள். அது உருவாக்கப் போகும் தொழில் மாற்றங்களையே ‘பிசினஸ் 2.0’ என்று சொல்கிறார்கள்.

அது என்ன ‘வலை 2.0?’

‘வலை 1.0’ என்பதைப் புரிந்துகொண்டால், ‘வலை 2.0’&வைப் புரிந்துகொள்வது சுலபம். இன்றைக்கு நாம் கணினியில பயன்படுத்தும் ஒவ்வொரு மென்பொருளும், ஒவ்வொரு சேவையும் ஒரு நிறுவனம் அல்லது பல நிறுவனங்கள் தயாரித்தவை. உதாரணமாக நீங்கள் எழுதப் பயன்படுத்தும் ‘வேர்டு’ அல்லது கணக்கிடப் பயன்படுத்தும் ‘எக்ஸெல்’ எல்லாம் ‘மைக்ரோசாஃட்’டின் தயாரிப்புகள். இவற்றை எல்லாம், நம்மைப் போன்ற பயனர்களின் தேவையைக் கண்டுபிடித்து, அதை ஒழுங்குபடுத்தி, வடிவம் கொடுத்து, ‘மைக்ரோசாஃப்ட்’ உருவாக்கியிருக்கிறது. இதைச் செய்ய என்று ஒரு மென்பொருளாளர் குழு உட்கார்ந்து, நிரல் எழுதி, டெஸ்ட் செய்து பார்த்து, பின்னரே மார்க்கெட்டுக்குக் கொண்டு வருகிறார்கள்.

மார்க்கெட்டுக்கு வரும்போது, அதன் தலை மேல் ஒரு விலை இருக்கிறது. ஒவ்வொரு கணினி வாங்கும்போதும், ஒவ்வொரு முறையும் இந்த ‘எம்.எஸ்.ஆபீஸ்’ மென்பொருளுக்குப் பணம் கட்ட வேண்டும். இதெல்லாம் முற்றிலும் இணையத்துக்கு வெளியே நடக்கிறது.

இன்றைக்கு இணையம் பெரிய அளவில் வளர்ந் திருக்கும்போது, எதற்கு இதெல்லாம் இணையத்துக்கு வெளியே இருக்க வேண்டும்? இணையத்துக் குள்ளேயே இதையெல்லாம் உருவாக்கலாம் அல்லவா? இணையத்தில், இது போன்ற மென்பொருள்கள், சேவைகளை உருவாக்குவதே ‘வலை 2.0.’

அடுத்து, முக்கியமானது நம் எல்லோருடைய அறிவும் ஒன்றிணைவது (சிஷீறீறீமீநீtவீஸ்மீ மிஸீtமீறீறீவீரீமீஸீநீமீ). அதாவது, ஒரே ஒரு குழு உட்கார்ந்துகொண்டு நிரல்கள் எழுதி, அதை ஆதியோடந்தம் டெஸ்ட் செய்து பார்த்து, இது சூப்பரான சாஃப்ட்வேர் என்று நம் பயன்பாட்டுக்குக் கொடுப்பது இன்று இருக்கும் முறை. இது ஒரு குழுவின்திறமை, மூளை ஆகியவற்றின் வெளிப்பாடு மட்டுமே. ‘வலை 2.0’ மென்பொருள்கள் இப்படிச் செய்யப்படுவதில்லை. அது கூட்டு உழைப் பினால், அவர்களது பங்களிப்பினால் உருவா வது. அதனால், அந்த மென்பொருளில் தொடர்ந்த முன்னேற்றம் இருக்கும். தொடர்ந்த மாற்றங்கள் இருந்துகொண்டே இருக்கும். இங்கே ஒவ்வொரு சக பயன்பாட்டாளரும் ஒரு சக மென்பொருளாளர் ஆகிவிடுவார். மேலும் இப்படி தொடர்ந்த முன்னேற்றம் இருப்பதால், இறுதி வடிவம் என்று கிடையவே கிடையாது. எல்லாமே ‘பீட்டா’ எனப்படும் வளர்ச்சி மற்றும் டெஸ்ட்டிங் ஸ்டேஜ்தான்.

அடுத்தது, பயன்படுத்துபவரின் ஈடுபாடும் பங்களிப்பும் முக்கியம். நீங்கள் ஒரு சாஃப்ட்வேரைப் பயன்படுத்துவது உங்கள் பக்கத்திலேயே உட்கார்ந்திருக்கும் மற்றொரு நபர் பயன்படுத்துவதுபோல் இருக்காது. ஒவ்வொருவருக்கும் ஒரு குணம், ஒரு முறை இருக்கும். அவர் தனது முறையில் பயன்படுத்தும்போது, அவர் அந்த குறிப்பிட்ட மென்பொருளுக்குத் தெரிந்தோ தெரியாமலோ பங்களிப்புச் செய்கிறார். இதுபோன்ற பங்களிப்பு என்பது ‘வலை 1.0’ இருந்ததில்லை. அங்கே எல்லாம் ஒன்வே டிராஃபிக் மாதிரிதான். ‘வலை 2.0’ என்பது மல்டிலேயர் டிராஃபிக்.

இப்படி பலரது பங்களிப்பால் ஒரு சேவை அல்லது மென்பொருள் தயாரிக்கப்படும்போது, அங்கே எல்லாரும் சமம். மேலாளன், தொழிலாளி என்ற பாகுபாடு கிடையாது. எல்லாரும் சக பயணிகள். அங்கே எல்லாரையும் ஒன்றிணைக்க வேண்டுமே தவிர, கட்டுப் படுத்தக் கூடாது.

இனிமேல் யாரும், ‘நான் ஒரு பெரிய வலைதளத்தை உருவாக்கப் போகிறேன், எல்லா சேவைகளையும் நானே தரப் போகிறேன்’ என்ற பஜனையெல்லாம் செய்ய முடியாது. எப்படி சிறுசிறு நதிகள் ஓடிவந்து கலந்து மிகப் பெரிய சமுத்திரம் உருவாகிறதோ, அதுபோல் சிறுசிறு வலைதளங்கள் ஒன்றிணைந்து மிகப் பெரிய வலைப்பின்னலை உருவாக்கப் போகின்றன. இந்த வலைப்பின்னல் அவ்வளவு நெருக்கமாக, ஒன்றைச் சார்ந்து அடுத்தொன்று இருக்கும். அதன்மூலம் உருவாகும் இணையம் என்பது இன்னும் பயனுள்ளதாக இருக்கும்.

‘வலை 2.0’ என்பதை இன்னும் தெளிவாகப் புரிந்துகொள்ள ஒரே ஒரு உதாரணத்தை மட்டும் சொல்கிறேன். நீங்கள் எல்லாம் நன்கு அறிந்த தேடுபொறி ஒன்று உண்டென்றால், அது ‘கூகுள்’. என்ன விஷயத்தை இணையத்தில் தேட வேண்டுமென்றாலும் நாம் எல்லாரும் கூகுளில்தான் குதிக்கிறோம். அந்த அளவுக்கு நமது நம்பிக்கையை கூகுள் பெறக் காரணம் என்ன தெரியுமோ? அது நீங்களும் நானும் யோசிப்பது போன்று இயல்பாக யோசிப்பதனால்தான்.

அது என்ன இயல்பான யோசனை? நீங்கள் ரஜினிகாந்த் ரசிகர் என்று வைத்துக் கொள்வோம். கூகுளில் போய் ‘ரஜினிகாந்த்’ என்று தட்டச்சு செய்து தேடினால், என்ன ரிசல்ட்கள் வருகின் றன என்று பாருங்கள். ரஜினிகாந்த்தின் இணைய விசிறிகள் அசோசியேஷன், அவரது வரலாற்றைத் தரும் விக்கிபீடியா லிங்க் என்று நீங்கள் என்ன தேடப் போனீர்களோ அது உடனே கிடைக்கும். அதுவே ‘ரஜினி சிவாஜி’ என்று கொடுத்துப் பாருங்கள். ரஜினி நடிக்கும் ‘சிவாஜி’ படத்தைப் பற்றிய தகவல்களைக் கொட்டும். நீங்கள் விரும்பும் தகவலை எப்படி ஒரு தேடுபொறியால் தரமுடிகிறது என்று என்றாவது யோசித்திருக்கிறார்களா?

இப்படி ஒரு குறிப்பிட்ட சொல்லின் தேவை என்ன என்பதைத் தீர்மானிக்க, கூகுள் ஒரு ‘அல்காரிதம்’ உருவாக்கியிருக்கிறது. அந்த ‘அல்காரிதம்’ நாம் சிந்தனை செய்வதுபோலவே உருவாக்கப்பட்டிருக்கிறது. இன்னும் சரியாகச் சொல்லவேண்டுமென்றால், அதற்கு ‘வலைப் பக்கங்களை வரிசைப்படுத்துதல்’ (றிணீரீமீ ஸிணீஸீளீவீஸீரீ) என்று பெயர்.

பெருந்தலைவர் காமராஜரை நாம் ஏன் அப்பழுக்கற்ற அரசியல்வாதி என்று சொல்கிறோம்? அவர் அப்படி வாழ்ந்தது ஒரு பகுதி என்றால், அப்படி வாழ்ந்தார் என்று அவரோடு வாழ்ந்தவர்கள், அவரின்சகாக்கள், அவரது கட்சித் தொண்டர்கள் போன்றவர்கள் தொடர்ந்து சொல்லியும் எடுத்துக்காட்டி எழுதியும் வந்திருக்கிறார்கள். அப்படிப்பட்ட காமராஜர், அண்ணாதுரையை ஏதோ ஓரிடத்தில் நெஞ்சுருகப் பாராட்டியிருந்தார் என்று வைத்துக் கொள்வோம். அதைப் படிக்கும்போது, உங்களுக்கு அண்ணாதுரை மேல் அபரிமிதமான ஒரு மரியாதையும் அன்பும் கௌரவமும் பிறக்கும் இல்லையா? அப்படிப் பாராட்டப்பட்ட அண்ணா, கருணாநிதியை மனம்விரும்பி ஓரிடத்தில் வாழ்த்தி, அவர் பெருமையைப் போற்றிச் சொல்லியிருந்தால் இப்போது கருணாநிதி மேல் உங்களுக்கு எப்படிப்பட்ட அபிமானம் பிறக்கும் என்று யோசித்துப் பாருங்கள். இதுதான் ‘டபுள் ஸ்ட்ராங்’ பாராட்டு என்பது.

இதுதான் கூகுள் அல்காரிதத்தின் அடிப்படை. எந்த ஒரு வலைப்பக்கத்தில் இதுபோன்று டபுள் ஸ்ட்ராங், டிரிபிள் ஸ்ட்ராங் பாராட்டும் மதிப்பும் இருக்கிறதோ, அது வரிசைப்படுத்துதலில் மேலே வரும். நமது சிந்தனையை அப்படியே கணினியும், இணையமும்அதன் சேவைகளும் பிரதிபலிக்க வைப்பதுதான் ‘வலை 2.0.’

மொத்தத்தில் ‘வலை 2.0’ என்பது மக்களால், மக்களுக் காக உருவாகிவரும் மாற்றங்கள். மக்கள் எண்ணங்களின் நேரடி பிரதிபலிப்பு.

வரும் இதழ்களில், ‘வலை 2.0’ சேவைகளை ஒவ்வொன்றாகப் பார்க்கலாம்.

Posted in JuVi, R Venakadesh, Tamil, Tech, Technology, Vikadan, Web2.0, Webdesign | Leave a Comment »

Flickr Photo Sharing – R Venkatesh

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 12, 2006

பேசும் புகைப்படங்கள்!

புகைப்படங்களை பகிர்ந்துகொள்ளவும், அதைப் பற்றிப் பேசவும் என்றே இணையத்தில் பல வலைதளங்கள் இருக்கின்றன. அதில் முக்கியமானது, ‘ஃப்லிக்கர்’ (http://www.flickr.com/). இதன் புகழைப் பார்த்துவிட்டு, ‘யாஹ§’ நிறுவனம் இந்த ‘ஃப்லிக்க’ரை வாங்கிப் போட்டுவிட்டது.

‘ஃப்லிக்கரி’ல் என்ன செய்யலாம்? உங்களுக்கு யாஹ§ மின்னஞ்சல் முகவரி இருந்தாலே போதும். அந்த யூஸர் நேமையும் பாஸ்வேர்ட்டையும் வைத்துக்கொண்டே இங்கே நுழையலாம். பின்னர் உங்களுக்கு விருப்பமான புகைப்படங்களை அதில் வலையேற்றலாம். இதன்பின்னர்தான் ‘வலை 2.0’ வாசனையே தொடங்குகிறது.

உங்கள் படங்களை உங்கள் நண்பர்களோடு பகிர்ந்துகொள்ளலாம். அவர்களை கமென்ட் எழுதச் சொல்லலாம். அதேபோல் நண்பர்களின் குழுவை உருவாக்கிக்கொண்டு, குழுவாக உரையாடலாம். உங்களுக்குப் பிடித்த படங்களை புக்மார்க் செய்துவைக்கலாம். அல்லது டேக் (tணீரீ) செய்து வைக்கலாம்.

மேலும் குறிப்பிட்ட புகைப்படம் என்ன மனநிலையில் எடுக்கப்பட்டது, என்ன ஆங்கிள் அல்லது லென்ஸ் கொண்டு எடுக்கப்பட்டது போன்ற விவரங்களையும் நேரடியாக வலைப்பதிவு செய்யலாம். இதை ‘போட்டோ பிளாகிங்’ என்றே அழைக்கிறார்கள். பொதுவாக ‘ஒரு புகைப்படம் ஆயிரம் சொற்களுக்கு நிகரானது’ என்பார்கள். இங்கே புகைப்படத்தோடு உங்கள் எண்ணங்களையும் கருத்துக்களையும் உங்களுக்குப் பிடித்த நண்பர்களோடு பகிர்ந்துகொள்வது நடக்கிறது. அதன்மூலம் உங்கள் திறமை குன்றிலிட்ட விளக்காகப் பளிச்சிடுவதுடன், உங்களுக்கான பெரிய ரசிகர் பட்டாளத்தையும் உருவாக்கிக் கொள்ளலாம்.

இதேபோல், புகைப்படங்களைக் கொண்டே உருவாகியுள்ள வலை சமூகங்கள் இவை:

1. சோடோ (http://zoto.com/)
2. கிளைட் (http://glidedigital.com)
3. ஷட்டர்புக் (http://shutterbook.com)

Posted in Blogs, Flickr, Images, Online, Photo Sharing, Pictures, R Venkatesh, Social Bookmarking, Tamil, Vikadan, Web, Web2.0 | Leave a Comment »

MySpace Generation – R Venkatesh

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 12, 2006

இளையவர்களின் இணைய சாதனை!

ஆர்.வெங்கடேஷ்

கனவுகள் கோலம் போடும் காலம் ஒன்று உண்டென்றால், அது டீன்ஏஜ் பருவம்தான். நமக்குத் தெரிந்த அத்தனை சாகசங்களையும் செய்து காட்டி, மிரட்டிவிட வேண்டும் என்ற உற்சாகம் கொப்பளிப்பதும் அப்போதுதான்.

எதற்கு இப்படி ஓர் இளமைப் பிரசங்கம் என்று கேட்கிறீர்களா? விஷயத்துக்கு வருகிறேன்…

இன்றைக்கு இணைய உலகத்தையே கலக்கிக் கொண்டிருப்பது யார் தெரியுமா? இளைஞர்கள்தான்! ‘யாஹ¨’, ‘கூகுள்’, ‘எம்.எஸ்.என்.’ போன்ற பெரிய பிஸ்தா வலைதளங்களையே பின்னால் தள்ளிவிடும் அளவுக்கு அசுர வேகத்தில் வளர்ந்துகொண்டிருப்பது, இளைஞர்களின் வலைதளங்கள் தான். இதுநாள்வரை இருந்த பார்வையையே புரட்டிப் போட்டுவிடும் வளர்ச்சி இது.

‘மைஸ்பேஸ் டாட் காம்’… (லீttஜீ://ஷ்ஷ்ஷ்.விஹ்ஷிஜீணீநீமீ.நீஷீனீ) இதுதான் இன்றைய இளைஞர்களின் சரணாலயம். கொஞ்சம் இந்த விவரங்களைப் பாருங்கள்… இதுவரை இந்த வலைதளத்தில் பதிவுசெய்து கொண்டவர்கள் ஒன்பதரை கோடி பேர். ஒவ்வொரு மாதமும் ஐந்து லட்சம் புது பயனர்கள் இந்த வலைதளத்தில் பதிவுசெய்து கொள்கிறார்கள். அதிக பார்வையாளர்களைக் கொண்ட ஆங்கில மொழி வலைதளங்களில், ‘மைஸ்பேஸ்’ வலைதளத்துக்கு நான்காவது இடம். அதுவும் எத்தனை ஆண்டுகளில்… மூன்றே ஆண்டுகளில்! 2003&ல்தான் இந்த வலைதளமே உருவாக்கப்பட்டது. பத்தாண்டுகள், பதினைந்து ஆண்டுகளுக்கு மேல் கொட்டை போட்ட சர்வீஸ்காரர்களான ‘யாஹ¨’, ‘கூகுள்’, ‘எம்.எஸ்.என்.’ வலைதளங்களுக்கே இன்னும் கொஞ்சம் மாதங்களில் பெப்பே காட்டிவிட்டு ‘மைஸ்பேஸ்’ முதலிடத்தைப் பிடித்துவிடும் என்கிறார்கள் நிபுணர்கள்.

இதையெல்லாம் விட ஆச்சர்யம், சென்ற வாரம் ‘யாஹ¨’ நிறுவனம் 2006&ல் தனது காலாண்டு வருமானத்தை வெளியிட்டது. அதன் வருமானத்தில் சரிவு. நிபுணர்கள் சொல்லும் ஒரு காரணம் என்ன தெரியுமா? ‘மைஸ்பேஸி’ன் அபாரமான வளர்ச்சி திக்குமுக்காட வைக்கிறது என்பதுதான்.

‘மைஸ்பேஸி’ல் அப்படி என்ன இருக்கிறது? மிகவும் எளிமையான ஒரு கருத்தை ஒட்டி உருவாக்கப்பட்ட வலைதளம் அது. நட்பு மற்றும் தொடர்புகளைப் பேணுதல், வளர்த்தல், மேம்படுத்துதல் என்பவைதான் அதன் நோக்கம். இதுபோன்ற தொடர்புகளைப் பேணும், வளர்க்கும் வலைதளங்களுக்கு ‘சமூக வலைப்பின்னல் வலைதளங்கள்’ (ஷிஷீநீவீணீறீ ழிமீtஷ்ஷீக்ஷீளீவீஸீரீ ஷிவீtமீs) என்று பெயர்.

‘சோஷியல் நெட்வொர்க்கிங்’ என்பது ஒன்றும் புதிய கருத்து இல்லை. சொல்லப்போனால் ‘ஜியோசிட்டீஸ் டாட் காம்’, ‘ஏஞ்சல்பையர் டாட் காம்’ போன்ற வலைதளங்கள் இந்த வேலையைத்தான் செய்தன. ஒவ்வொருவரும் தமக்கான ஒரு வலைப்பக்கத்தை இலவசமாக வடிவமைத்துக் கொள்ளவும், நண்பர்களிடையே அதைப் பரிமாறிக்கொள்ளவுமே அந்த வலைதளங்கள் உருவாயின. இன்று ‘மைஸ்பேஸ§’ம் அதையேதான் செய்கிறது. ஆனால், இன்னும் மேம்பட்டதாக, உபரி வசதிகளுடன்.

இணையத்தில் ஆரம்ப காலத்தில் இருந்து ஒரு போக்கு இருந்து வருகிறது. அதாவது ஒரு பதிப்பாளர் இருப்பார். அவர்தான் எல்லாவற்றையும் சொல்வார். செய்திகள், கட்டுரைகள், கருத்துக்கள் என்று எல்லாமே ஒரே திசையில் இருந்து வாசகர்களான உங்களை நோக்கியே வரும். வாசகர்கள் வெறுமனே பார்வையாளராக மட்டுமே இருக்க வேண்டும்.

இணையம் என்பது இருவழித் தொடர்புக்கான மீடியா. அதில், ‘நான் மட்டுமே பேசிக்கொண்டே இருப்பேன். நீ கேட்க வேண்டும்’ என்ற சங்கதியே உதவாது. சொல்லப்போனால், அது ஒரு அராஜகம் என்று வெகுண்டெழுந்தவர்கள் பலர். அவர்கள்தான் இணையத்தின் சாத்தியத்தை மேம்படுத்தியவர்கள். இன்று நாம் சொல்லும் வலைப்பதிவுகள், விவாத அரங்கம், உடனடி தூதுவன் (மிஸீstணீஸீt விமீssமீஸீரீமீக்ஷீ) எல்லாமே இதுபோன்ற ஜனநாயகவாதிகளின் கைவண்ணம். இளைஞர்களுக்கும் இந்த ஜனநாயகம்தானே வேண்டும்! இந்த பரிமாற்றம்தானே வேண்டும்!

‘மைஸ்பேஸ்’ செய்த முதல் வேலை, இணையத்தில் சாத்தியமாக உள்ள அத்தனை இன்டர்ஆக்டிவிட்டியையும் ஒரே இடத்தில் குவித்தது. நீங்கள் ஒருமுறை ‘மைஸ்பேஸி’ல் பதிவுசெய்து கொண்டால் போதும். உடனே உங்களுக்கு ஒரு இ&மெயில் ஐடி கிடைக்கும். கூடவே, நீங்கள் வலைப்பதிவுகள் தொடங்கி உங்கள் எண்ணங்களை எழுதலாம், பாட்டுக்களைப் பதிவு செய்து ஒலிபரப்பலாம், வீடியோ காட்சிகளை இணைக்கலாம். அதோடு, உங்களுக்கு விருப்பமான நண்பர்களை உங்கள் வலைஇல்லத்துக்கு அழைத்து வந்து காட்டலாம். அவர்களுடைய கருத்துக் களை அங்கேயே எழுதச் சொல்லலாம். பின்னர் அவர்களோடு தூதுவன் மூலம் பேசி உரையாடலாம். மேலும் உங்களுக்குப் பிடித்த நண்பர்களின் ‘மைஸ்பேஸ் வலைஇல்லங்களை உங்களுடைய இல்லத்தோடு இணைக்கலாம். நண்பர்களோடு குழுத் தொடங்கி, உரையாடலாம்.

ஓர் இளைஞனுக்கு வேறு என்ன வேண்டும், சொல்லுங்கள்! அப்படியே ஆணி அடித்தாற்போல், ‘மைஸ்பேஸோ’டு கட்டுண்டு கிடக்கிறான் ஆன்லைன் இளைஞன். தனக்கு விருப்பமான குழுவோடு இணைந்துகொண்டு, தனக்குப் பிடித்த நண்பர்களோடு அளவளாவிக் கொண்டு, தனக்குப் பிடித்த பாடலைக் கேட்டுக்கொண்டு, தான் பார்த்து ரசித்த வீடியோ காட்சிகளை மற்றவர்களோடு பகிர்ந்துகொண்டு, வெளியுலகில் அவன் செய்த அனைத்தையும் ஆன்லைனிலும் செய்ய… சைட் சூப்பர்ஹிட்!

இதன் இன்னொரு வளர்ச்சிதான் இன்னும் சூப்பர். என் வலை இல்லத்தின் முகப்பு எனக்குப் பிடித்த மாதிரி இல்லையே? மாற்றிக்கொள்ளலாமா? தாராளமாக. இது உங்கள் வீடு எனும்போது, அது உங்கள் விருப்பப்படி இருக்க வேண்டியது அவசியம் அல்லவா…. அப்புறமென்ன? இணையத்தில் இன்றைக்கு எண்ணற்ற மாடல் டெம்பிளேட்டுகள் கிடைக்கின்றன. அதை அப்படியே சுட்டுவந்து, தன் வலைஇல்ல முகப்பையே மாற்றி அமைத்துக்கொள்கிறான்.

இதெல்லாம் செய்தபின், உங்கள் விருப்பமான நண்பர்களிடம் காட்ட வேண்டுமல்லவா? அவர்களை அழைத்து வருவதையும் நீங்களே செய்யுங்கள். தெருமுனையில் உருவான நட்புவட்டம், இப்போது அப்படியே ஆன்லைனுக்கு இடம்பெயர்ந்துவிட்டது.

இன்றைக்கு ‘மைஸ்பேஸ்’ மூலம் பல இசைக்குழுக்கள் புகழ்பெற்றுவிட்டன. பல அழகிகள் உருவாகிவிட்டார்கள். பல்துறைப் பிரபலங்கள் உருவாகிவிட்டார்கள். தங்களை ‘மைஸ்பேஸ்’ புகழ் பிரபலங்கள் என்று பறைசாற்றிக்கொள்வதில் அவர்களுக்கு எல்லாம் அளவில்லா மகிழ்ச்சி.

வளர்ச்சி என்றால், உங்கள் வீட்டு, எங்கள் வீட்டு வளர்ச்சி இல்லை. அசுரத்தனமான வளர்ச்சி. விளைவு, Ôஸ்டார் டி.வி.Õ அதிபர் ரூபர்ட் முர்டாக்குக்கு மூக்கு வியர்த்துவிட்டது. சர்வதேச மீடியா சக்ரவர்த்தியான முர்டாக், நல்லதொரு முகூர்த்த நாளில், வெற்றிலை பாக்கோடு, 580 மில்லியன் டாலர் கொடுத்து இந்த ‘மைஸ்பேஸ்’ வலைதளத்தை வாங்கிவிட்டார். சட்டென அப்போதுதான் சர்வதேச சந்தை தலையை உதறிக்கொண்டு விழித்துக்கொண்டது.

அதுவரை இணையம் என்றால் போணியாகாது, இனி கடையைக் கட்டிக்கொண்டு கிளம்ப வேண்டியதுதான் என்று நினைத்தவர்கள் எல்லாம் ஒரு வினாடி நின்று நிதானமாகப் பார்த்தார்கள். தங்கள் மூக்குக் கீழேயே ஒரு அபாரமான வாய்ப்பு, திமுதிமுவென வளர்ந்து நிற்பதைப் பார்த்தார்கள். ‘சோஷியல் நெட்வொர்க்கிங்’ என்பதன் உண்மையான வீச்சை அப்போதுதான் உணர்ந்துகொண்டார்கள்.

இன்றைக்கு ‘மைஸ் பேஸி’ன் வளர்ச்சி புதிய பரிமாணங்களைப் பெற்றி ருக்கிறது. வேலைக்கு ஆள் வேண்டுமா? ‘மைஸ்பேஸி’ல் போய்த் தேடு. புதிய எழுத் தாளன் வேண்டுமா? ‘மைஸ்பேஸி’ல் தேடு. புதிய இசையமைப்பாளன் வேண் டுமா? ‘மைஸ்பேஸி’ல் எட்டிப் பார். கண்ணுக்கு அழகான நடிகை வேண்டுமா? ‘மைஸ் பேஸ§’க்கு ஒரு விசிட் அடி. இளைஞர்களின் கூட்டம் அங்கேதான் மொய்க் கிறது. எந்தத் திறமை வேண்டு மானாலும் அங்கேதான் கொட்டிக் கிடக்கிறது.

நல்லது இருந்தால், கூடவே கொஞ்சம் கெட்டதும் இருக்கத்தானே வேண்டும்! ‘மைஸ்பேஸ்’ பற்றிய விமர்சனங்களில் முக்கியமானது, டீன்ஏஜ் பார்ட்டிகள் கெட்டுப் போகிறார்கள். சகவாசம் கெட்டுப் போகிறது என்று குமுறும் பெற்றோர்கள் இருக்கிறார்கள். இன்னொரு குற்றச்சாட்டு, நட்பு என்று உருவாகி பின்னர் பாலியல் பலாத்காரம் வரை போய்விடுவதாகச் சொல்கிறார்கள்.

இதையெல்லாம் மீறி ‘மைஸ்பேஸி’ல் திமுதிமுவென இளைஞர் கூட்டம் சேர்ந்துகொண்டே இருக்கிறது!

Posted in Blogdom, Blogworld, Bookmarks, myspace, Networking, R Venkatesh, Social, Tamil, Vikadan, Young, Youth | Leave a Comment »

Social Bookmarking – R Venkatesh

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 12, 2006

புக் மார்க்கிங்கில் அடுத்த கட்டம்!

புத்தகம் படித்தாலும் சரி, பத்திரிகை படித்தாலும் சரி, பாதியில் நிறுத்திவிட்டு வரும் போது, மீண்டும் விட்ட இடத்தில் இருந்து தொடர்ந்து படிக்க ஒரு துண்டு சீட்டை வைப்போம். அதற்கு ஞாபகக் குறி (புக்மார்க்) என்று பெயர். கனமான புத்தகங்களில் பதிப்பகமே இந்த புக்மார்க்கை வைத்து அனுப்பிவிடும். மிகவும் உபயோகமான இந்த புக்மார்க் ஐடியாவை கணினியின் உலாவியிலும் பார்க்கலாம். அப்புறம் படித்துக்கொள்ளலாம் என்று நீங்கள் நினைக்கும் வலைப்பக்கங்களை புக்மார்க்கரில் சேமித்து வைத்துக்கொள்வீர்கள்.

இணையம் இன்று அபரிமிதமாக வளர்ந்தபின், படிக்கக் கிடைக்கும் விஷயங்களும் அதிகமாகி விட்டன. அவை எல்லாவற்றையும் உங்கள் உலாவியில் சேமித்து வைத்துக் கொள்ளவும் முடியாது. இங்குதான் வலை 2.0 தன் வேலையைக் காட்டுகிறது.

சுவையானது என்று பொருள்படும் ‘டெலிஷியஸ் டாட் காம்’ (http://del.icio.us/) என்ற வலைதளம் இந்த புக்மார்க்கிங் செய்வதை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் சென்றுவிட்டது. இது ஒரு கூட்டு புக்மார்க்கிங் (Social Bookmarking) சேவை. அதாவது நீங்கள் படித்த, அல்லது மேலும் படிக்க வேண்டும் என்று நினைக்கும் வலைப்பக்கங்களை இங்கே சேமித்து வைப்பீர்கள். உங்களைப் போலவே இணையத்தில் உலவும் பல கோடி பயனர்களும் தங்கள் ஆர்வங்களை புக்மார்க் செய்து வைப்பார்கள்.

அவ்வளவுதான்! எது சிறந்த வலைப்பக்கம், எந்தப் பக்கம் சூப்பர் பக்கம், எந்த செய்தி அதிகம் கவனம் பெற்றது, எந்தப் பக்கம் அதிகம் பார்க்கப்பட்டது என்று எல்லா விவரங்களும் இந்த வலைதளத்தில் தெரிந்துவிடும். நமது வாசகர்களின் சுவை என்ன என்பதைச் சுலபமாகத் தெரிந்துகொள்ளும் ஒரே இடம் இதுதான்.

இதே போல் உள்ள மற்ற முக்கிய சோஷியல் புக்மார்க்கர்கள்:

1. பிலிங்க்லிஸ்ட் (http://blinklist.com)

2. ஷேடோஸ் (http://shadows.com/)

3. க்ளிப்மார்க்ஸ் (http://clipmarks.com/)

Posted in Anandha Vikatan, Bookmarks, del.icio.us, R Venkatesh, Social Bookmarking, Tamil, Technology, Vikadan, Web2.0 | Leave a Comment »

Naarana Duraikannan – Biosketch : 100th Anniversary

Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 23, 2006

“உயிரோவியம்’போல் உயர்ந்த மனிதர்

உதயை மு. வீரையன்

ஒருவரே தேசியவாதிகளுக்கும், திராவிட இயக்கத்தவர்க்கும் தோழமையாக இருக்க முடியுமா? சிறந்த பத்திரிகையாளரே ஒரு சமுதாய சீர்திருத்தவாதியாகவும் திகழ முடியுமா? நல்ல நாவலாசிரியரே நல்ல நாடக ஆசிரியராக விளங்க முடியுமா?

“முடியும்’ என்பதற்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்தவரே நாரண. துரைக்கண்ணன். இவரது புனைபெயர் “ஜீவா’.

இவரது காலம் சுதந்திரப் போராட்டக் காலம்; தேசபக்தர் பரலி சு. நெல்லையப்பர் மூலம் “லோகோபகாரி‘ வாரப் பத்திரிகையில் உதவி ஆசிரியராக அறிமுகம். அந்தக்காலத்தில் பத்திரிகைகளுக்கும் அற்ப ஆயுள்தானே! அதன்பின் தேசபந்து, திராவிடன், தமிழ்நாடு எனத் தொடர்ந்தது. இறுதியாக 1932 ஆம் ஆண்டு “பிரசண்ட விகடன்‘ ஆசிரியர் பொறுப்பினை ஏற்றார். 1934-ல் “ஆனந்த போதினி‘யின் ஆசிரியர் பொறுப்பும் வந்தது.

இவர் பத்திரிகையாளராக மட்டும் இருந்துவிடாமல் மிகச் சிறந்த படைப்பாளராகவும் இருந்தார். ஆரம்ப காலத்தில் தமிழ்ப் பத்திரிகை உலகில் நாவலுக்கென ஓர் இடம் பெற்றுத் தந்தவர்கள் கல்கியும், நாரண. துரைக்கண்ணனுமே! ஆனந்த விகடன் மூலம் கல்கியும், பிரசண்ட விகடன் மூலம் “ஜீவா‘ என்ற புனைபெயரில் நாரண. துரைக்கண்ணனும் தமிழ் எழுத்துலகில் புதிய மாற்றத்தினை உருவாக்கினர்.

இவர் எழுதிய “உயிரோவியம்’, “நான் ஏன் பெண்ணாகப் பிறந்தேன்?’, “தாசி ரமணி’ முதலிய பெண்ணுரிமை பற்றிய புதினங்கள் படித்தவரைச் சிந்திக்கத் தூண்டின. “தீண்டாதார் யார்?’ என்னும் சமுதாயப் புரட்சி நாடகமும், “காதலனா? காதகனா?’ என்னும் மாணவர் சீர்கேட்டைச் சுட்டிக்காட்டும் நாவலும், “இலட்சிய புருடன்’ என்னும் அரசியல் புதினமும், வேலைக்காரி, நடுத்தெரு நாராயணன் முதலிய சமூக சீர்திருத்தக் கதைகளும் என இவர் எழுதிய நூல்கள் 130-க்கும் மேல். இந்தப் பட்டியலில் இவரது கவிதைகளும், கட்டுரைகளும், ஆராய்ச்சிகளும், மொழியாக்கங்களும் அடங்கும்.

டி .கே.எஸ். சகோதரர்கள் நடத்திய நாரண. துரைக்கண்ணனின் “உயிரோவியம்’ நாடகத்தைப் பார்த்துவிட்டு, “”காதலைப் பற்றி மிகத் தூய்மையாகவும், மேன்மையாகவும், புனிதமாகவும் சித்திரித்துள்ள நாடகம்…” என்று பாராட்டி தமிழ் நாடகத் தந்தை பம்மல் சம்பந்த முதலியார் எழுதி அனுப்பிய கட்டுரையே “உயிரோவியம்’ நாடக நூலில் முன்னுரையாக அச்சிடப்பட்டது.

இவர் எழுத்தாளர் மட்டுமல்ல, எழுத்தாளர்களின் உரிமைக்கும் போராடியவர். பாரதியார் பாடல்களுக்குத் தனியொருவர் உரிமை கொண்டாடுவது சரியல்ல, அவை நாட்டுடைமை ஆக்கப்பட வேண்டும் என்று உரிமைக்குரல் எழுந்தது. அதற்காக “பாரதி விடுதலைக் கழகம்‘ அமைக்கப்பட்டது. அதன் தலைவர் நாரண. துரைக்கண்ணன் – செயலாளர்கள் “சிவாஜி’ ஆசிரியர் திருலோக சீதாராம் மற்றும் வல்லிக்கண்ணன்.

அப்போது தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்தவர் ஓமந்தூர் இராமசாமி ரெட்டியார். அவரது உதவியை நாடியபோது, பாரதியார் மனைவியான செல்லம்மாள் பாரதியிடமிருந்து ஓர் இசைவுக் கடிதம் வாங்கி வந்தால் ஆவன செய்வதாகக் கூறிவிட்டார்.

செல்லம்மாள் பாரதியும் ஒப்புதல் கடிதம் தந்தார். பின்னர் முதலமைச்சர் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் முயற்சியால், ஏ.வி.எம். செட்டியார் மனமுவந்து பாரதி பாடல்கள் மீதிருந்த உரிமையை விட்டுக் கொடுத்தார். பாரதியார் பாடல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டன.

செல்லம்மாள் பாரதியைச் சந்திக்கும் நெல்லைப் பயணத்தின்போது நாரண. துரைக்கண்ணனின் மகன் நோய்வாய்ப்பட்டிருந்தவர் இறந்து போனார். அந்தச் சோகத்தையும், இழப்பையும் சுமந்து கொண்டு, வெளியில் காட்டாமல் கருமமே கண்ணாக இருந்தார் என்பது அவரது தன்னலமற்ற தொண்டுகளுக்குச் சிகரமாகும்.

சென்னை மயிலாப்பூரில் 1906 ஆகஸ்ட் 24 அன்று இவர் பிறந்தார். தந்தையார் நாராயணசாமி; தாயார் மீனாம்பாள். இவரது இளமைக்கல்வி திண்ணைப் பள்ளியிலும், திருவல்லிக்கேணி இந்து உயர்நிலைப் பள்ளியிலும்!

பட்டம் பதவிகளுக்கு அப்பாற்பட்டவராகவே வாழ்ந்தார். தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவராகவும், சென்னை கம்பர் கழகச் செயலாளராகவும், முற்போக்கு எழுத்தாளர் சங்கத் தலைவராகவும், தென்னிந்திய பத்திரிகையாளர் பெருமன்றத்தின் துணைத் தலைவராகவும், தமிழ்க் கவிஞர் மன்றத் தலைவராகவும் பணியாற்றியதும்கூட தவிர்க்க முடியாத தேவையின் காரணமாகவே.

1952-இல் உலக மொழிகளில் நடத்தப்பட்ட நாடகங்களில் தலைசிறந்ததெனப் பிரெஞ்சு நாட்டு ஏடொன்று இவரது “உயிரோவிய’த்தைத் தேர்வு செய்து பாராட்டியது.

மனிதனுக்கு உயிர்; மனித சமுதாயத்துக்கு உயிரோவியம். இவர் படைத்த “உயிரோவியம்’போல் இவரும் உயர்ந்த மனிதரே!

(இன்று நாரண. துரைக்கண்ணன் நூற்றாண்டு தினம்).

Posted in Anandha Vikatan, Anniversary, Biosketch, Jeeva, Journals, Magazines, Memoirs, Naarana Duraikannan, Prasanda Vikadan, Tamil, Vikadan | Leave a Comment »