பாடலோடு வாழ்ந்து….
“திருமகன்’ – மாளவிகா, எஸ்.ஜே.சூர்யா
எஸ்.ஜே.சூர்யா இயக்கிய படங்களிலும், நடித்த படங்களிலும் பாடல்கள் சூப்பர் ஹிட் ஆகிவிடும். ரத்னகுமார் இயக்கத்தில் அவர் கதாநாயகனாக நடிக்கும் “திருமகன்’ படத்தைப் பற்றிக் கேட்டபோது…
“” நான் இயக்கிய “குஷி’ “வாலி’ படங்களுக்குப் பிறகு இந்தப் படத்தின் மூலம் இசையமைப்பாளர் தேவா என்னுடன் கூட்டணி சேர்ந்துள்ளார். நான் நடித்திருக்கிறேன் என்பதற்காகச் சொல்லவில்லை… தேவா இசையமைத்த படங்களிலேயே இதுதான் பெஸ்ட். இதுவரை அவர் இசையமைத்த படங்களில் இந்தப் படத்தின் ரீரெக்கார்டிங்குக்காகத்தான் அதிக நாள்கள் செலவிட்டுள்ளார்.
கிராமிய மணம் கமழும் இந்தக் கதைக்கு வைரமுத்துவின் பாடல் வரிகளும், தேவாவின் இசையும் பெரிய பலம். குறிப்பாக
- “பொறந்தது’,
- “இதுக்குத்தானா’,
- “ஷாக்கடிக்குது’,
- “திருமகனே’ போன்ற பாடல்களைக் கேட்டு, பார்த்து மட்டும் மகிழாமல் பாடியும், பாடலோடு வாழ்ந்தும் மகிழ்வீர்கள். நான் இதுவரை பணியாற்றிய படங்களில் பாடல்கள், வெஸ்டர்ன் கலந்து அல்ட்ரா மாடர்ன் டைப்பில் இருக்கும்; கிராமியப் பின்னணியிலான “திருமகன்’ பாடல்கள் அல்ட்ரா டைப் ஆசாமிகளையும் அசத்தும்” என்றார் எஸ்.ஜே.சூர்யா.