Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Tollywood’ Category

Asin gets hurt in Vijay’s Pokkiri song picturization by Prabhu Deva

Posted by Snapjudge மேல் திசெம்பர் 7, 2006

படப்பிடிப்பில் அஸின் காயம்

சென்னை, டிச.8: “போக்கிரி‘ படத்தில் இடம்பெறும் ஒரு நடனக் காட்சிக்கான படப்பிடிப்பின்போது நடிகை அஸினுக்கு காயம் ஏற்பட்டது.

நடிகர் விஜய், அஸின் நடித்து வரும் “போக்கிரி’ படத்தின் படப்பிடிப்பு ஏவி.எம். ஸ்டுடியோவில் நடைபெற்று வருகிறது. இப்படத்தின் ஒரு பாடல் காட்சி புதன்கிழமை படமாக்கப்பட்டது.

பட இயக்குநர் பிரபுதேவா நடன அசைவுகளைப் பற்றி விஜய், அஸின் ஆகியோருக்கு விளக்கி படமாக்கிக்கொண்டிருந்தார். அப்போது அஸினிடம் “ஷூவை கழற்றிவிட்டு நடனமாடினால் காட்சி இன்னும் சிறப்பாக வரும்’ என்று கூறியுள்ளார்.

இதனால் பலகைகளால் உருவாக்கப்பட்டிருந்த அந்த மேடையில் அஸின் வெறும் காலுடன் ஆடியுள்ளார். அப்போது பலகையில் இருந்த ஓர் ஆணி அஸின் பாதத்தில் பாய்ந்து ரத்தம் வழிந்துள்ளது.

உடனே அவருக்கு அவசர சிகிச்சை அளிக்கப்பட்டது. மூன்று நாள்கள் ஓய்வுக்குப் பின் மீண்டும் படப்பிடிப்பில் கலந்துகொள்வார் என படக்குழுவினர் தெரிவித்தனர்.

Posted in Accident, Asin, Blood, Dance Master, Heroine, Ilaiya Thalapathi, Ilaiya Thalapathy, Pokkiri, Prabhudeva, Remake, Rest, Shoes, Tamil Actors, Tamil Actress, Tamil Cinema, Tamil Films, Tamil Movies, Tamil songs, Telugu Cinema, Tollywood, Vijay | 4 Comments »

G Varalakshmi passes away – Anjali

Posted by Snapjudge மேல் நவம்பர் 27, 2006

பழம்பெரும் நடிகை வரலட்சுமி காலமானார்

சென்னை, நவ. 27 உடல்நலக் குறைவு காரணமாக பழம்பெரும் தமிழ் திரைப்பட நடிகை ஜி. வரலட்சுமி (80) சென்னையில் ஞாயிற்றுக்கிழமை காலமானார்.

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது மகள் கனகதுர்கா வீட்டில் அவர் காலமானார்.

 • அண்ணி,
 • குலேபகாவலி,
 • நான் பெற்ற பிள்ளை,
 • நல்ல தங்காள்,
 • அரிச்சந்திரா உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட தமிழ் மற்றும் தெலுங்குத் திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார்.

இவரது கணவர் கே.எஸ். பிரகாஷ் ராவ் “வசந்த மாளிகை’ படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Posted in Anjali, Biosketch, Lifesketch, Memoirs, Tamil Actress, Tamil Cinema, Tamil Film, Tamil Movies, Telugu Cinema, Tollywood, Varalakshmi | 1 Comment »

Tharun deceived me – Arthi Aggarwal

Posted by Snapjudge மேல் நவம்பர் 15, 2006

`காதலித்து என்னை ஏமாற்றி விட்டார்’: நடிகர் தருண் மீது ஆர்த்தி அகர்வால் புகார்

பழைய நடிகை ரோஜா ரமணியின் மகன் தருண். தமிழில் `எனக்கு 20 உனக்கு 18‘, `காதல் சுகமானது‘, `புன்னகை தேசம்‘ உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். தெலுங்கிலும் முன்னணி ஹீரோவாக உள்ளார்.

தருணும் நடிகை ஆர்த்தி அகர்வாலும் காதலித்தனர். இந்த காதல் தோல்வியில் முடிந்தது. இதனால் மனம் உடைந்த ஆர்த்தி அகர்வால் தூக்கமாத்திரை தின்று தற்கொலைக்கு முயன்றார். ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று குணமானார்.ஆர்த்தி அகர்வாலும் அவரது குடும்பத்தினரும் திருப்பதி கோவிலுக்கு சாமிகும்பிட வந்தனர். அப்போது நிருபர் களிடம் ஆர்த்தி அகர்வால் கூறியதாவது:-

சொந்த பிரச்சினைகளில் சிக்கி நிறைய கஷ்டப்பட்டேன். விரும்பத்தகாத சம்பவங்களெல்லாம் நடந்து போச்சு.

காதல், கல்யாணம், மரணம் ஆகிய மூன்றும் நாம் நினைக்கும் போது வராது. என்னை ஏமாற்றியவர் தூரமாய் போய் விட்டார். என்னை வேண்டாம் என்று போனவர்கள் பற்றி நான் கண்டுக்க வேண்டிய அவசியம் இல்லை.

நடந்த விஷயங்களை மறந்துட்டு வர்றேன். இனிமேல் அது மாதிரி நடக்காமல் பார்த்துக் கொள்வேன். ஏற்கனவே செய்த தவறை திரும்பவும் செய்ய மாட்டேன். இதுவரை நடந்த தவறுகள் இனி நடக்காது இனிமேல் நான் ஏமாறவும் மாட்டேன்.

என் வாழ்க்கையில் தான் இது மாதிரி நடந்திருப்பதாக நினைக்க வேண்டாம். என்னை மாதிரி ஏமாற்றங்களை சந்தித்த நடிகைகள் நிறைய பேர் இருக்கிறார்கள். என்னைப் பற்றி வெளியே தெரிந்து போச்சு அவர்களை பற்றி வெளியே தெரியல.

இவ்வளவு கஷ்டத்துக்கு இடையிலும் நான் நடிச்ச `அந்தாலராமுடு‘ தெலுங்கு படம் நன்றாக ஓடுது. மேலும் சில படங்களில் நடிக்க கதை கேட்கிறேன்.

என் சரிவுக்கு என்னுடைய குடும்பத்தினர் தான் காரணம் என்பது சரியல்ல. நான் சினிமாவில் உயர என் தந்தை தான் காரணமாக இருந்தார்.இவ்வாறு ஆர்த்தி அகர்வால் கூறினார்.

Posted in Aarthi Agarwal, Arthi Aggarwal, Cheat, Deception, Dharun, Dupe, Enakku 20 Unakku 18, Kaathal Sugamanathu, Kollywood, Love, Marriage, Punnagai Desam, Roja Ramani, Suicide, Tamil Cinema, Tamil Movies, Telugu, Tharun, Tollywood | Leave a Comment »

Humble beginnings of Bhoomika Chawla – Interview

Posted by Snapjudge மேல் நவம்பர் 14, 2006

மின்சார ரெயில் பயணம்: ரூ. 2 ஆயிரம் சம்பளத்தில் கடையில் வேலை பார்த்தேன்: நடிகை பூமிகா பேட்டி 

சினிமா உலகில் இன்று முன்னணி கதாநாயகிகளாக வலம் வரும் நடிகைகள் சிலரிடம் அவர்களின் பழைய வாழ்க்கைப் பற்றி கேட்டால், தாங்கள் ஒரு வசதியான வீட்டு பெண் என்பது போலவே காட்டிக் கொள்வார்கள். சினிமாவில் நடிக்க வராவிட்டாலும் இதே அளவு வசதியோடு வாழ்ந்திருக்க முடியும் என்பது போல் காட்டிக் கொள்வார்கள். நடிகர்கள் தங்களின் பழைய வாழ்க்கையை ஒளிவுமறைவு இல்லாமல் தெரிவிப்பது போல நடிகைகள் தெரிவிப்பதில்லை.

ஆனால் பத்ரி, ரோஜாக் கூட்டம், சில்லுனு ஒரு காதல் போன்ற தமிழ் படங்களில் நடித்தவரும், தென் இந்திய மொழிகளில் மட்டுமல்லாது இந்தி பட உலகிலும் முன்னணி நாயகியாக வலம் வருபவருமான பூமிகா இதிலிருந்து முற்றிலும் மாறுபட்டு இருக்கிறார்.

இன்று கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் அவர் ஒரு காலத்தில் மாதம் ரூ. 2 ஆயிரம் சம்பளத்தில் ஒரு கடையில் சேல்ஸ்கேர்ளாக வேலை பார்த்திருக்கிறார். இதுபற்றி அவர் கூறியதாவது:-

பணம் ஏராளமாக வருகிறது என்பதற்காக நான் தாராளமாக செலவு செய்வதில்லை. பணத்தின் அருமை எனக்கு நன்கு தெரியும். காரணம் என் பழைய வாழ்க்கை அப்படி. ஒரு நடுத்தர குடும்பத்தில் பிறந்தவள்நான். என் குடும் பத்தின் கஷ்டத்தில் பங்கெடுக்க வேண்டும் என்பதற்காக ஒரு கடையில் மாதம் ரூ. 2 ஆயிரம் சம்பளத்தில் சேல்ஸ் கேர்ளாக வேலை பார்த்தேன். அப்போது தினசரி மின்சார ரெயிலில் கூட்ட நெரிசலில் பயணம் செய்து சிரமப்பட்டிருக்கிறேன். வாழ்க்கை எப்போதும் ரோஜாபடுக்கையாகவே இருக்காது. யாருக்கும் எந்த நேரத்திலும் கஷ்டம் வரலாம் என்கிறார் பூமிகா.

முன்னணி கதாநாயகிகள் தாங்கள் சம்பாதிக்கும் பணத்தில் தங்க, வைர நகைகள், ஆடம்பர பொருட்கள் என்று லட்சக்கணக்கான ரூபாயில் பொருட்களை வாங்கிப் போடுவது வழக்கம். ஆனால் இவர் விரும்பி வாங்கும் பொருட்களின் பட்டியலில் புத்தகங்கள், டி.வி.டி.க்கள், மொபைல் ரீசார்ஜ் கார்டுகள் போன்றவைதான் இடம் பெறுகின்றன. பூமிகாவிடம் கிரெடிட் கார்டு கூட கிடையாதாம்.

Posted in Badri, Bhoomika Chawla, Boomika, Chillunnu oru kaathal, Credit card, Interview, Roja koottam, Salesgirl, Tamil Actress, Tamil Cinema, Tamil Movies, Telugu, Tollywood | Leave a Comment »

Trisha Fan clubs record 20,000 Members; Namitha – 3,000

Posted by Snapjudge மேல் நவம்பர் 13, 2006

திரிஷா ரசிகர் மன்றத்தில் 20,000 உறுப்பினர்கள்; நமீதா மன்றத்தில் 3000 பேர்

ரஜினி, கமல், விஜய், அஜீத் என முன்னணி நடிகர்களுக்கு ரசிகர் மன்றங்கள் உள்ளன. விஜயகாந்த் தனது ரசிகர் மன்றத்தை அரசியல் இயக்கமாக மாற்றினார்.

நடிகர்களைப் போல் நடிகைகளுக்கும் ரசிகர் மன்றங்கள் முளைத்துள்ளன.

முதல் முறையாக குஷ்பு வுக்கு 1991-ல் திருச்சி ரசிகர் கள் கோவில் கட்டினர். தற்போது திரிஷா, நமீதா ஆகி யோருக்கு ரசிகர் மன்றங்கள் தொடங்கப்பட்டு உள்ளன.

திரிஷா ரசிகர் மன்ற தலைவியாக ஜெஸி பொறுப் பேற்றுள்ளார். இம் மன்றத் துக்கு புதிய உறுப் பினர் சேர்ப்பு பணி முடுக்கி விடப் பட்டுள்ளது. கல்லூரி மாண விகள், குடும்பத் தலை விகள் என 20 ஆயிரம் பேர் உறுப்பினர்களாக சேர்ந் துள்ளனர். ஒரு லட்சம் பேரை உறுப்பினராக்க இலக்கு நிர்ணயித்துள்ளனர.

திரிஷா படங்கள் ரிலீசாகும் போது அவர் ரசிகர்கள் தியேட் டர்களில் கட்அவுட், கொடி தோரணங்கள் அமைத்து அமர்க்களப்படுத்தி வரு கிறார்கள். திரிஷா பிறந்த நாளில் அடையாறு புற்று நோய் ஆஸ்பத்திரியில் குழந்தை களுக்கு உணவு, உடைகள் வழங்குவதையும் வழக்க மாக வைத்துள்ளனர்.

திரிஷா தற்போது தெலுங்கு படங்களில் பிசியாக நடித்து வருகிறார். அவருக்கு ஆந்திர அரசின் நந்தி விருது கிடைத்துள்ளது. தமிழில் சாமி, கில்லி படங்கள் அவரை முன்னணி நடிகையாக்கின. ஜெயம் ரவியுடன நடித்த உனக்கும் எனக்கும் படம் ரிலீசாகி 100 நாட்களை தாண்டி ஓடிக் கொண்டிருக்கிறது.

நமீதா `ஏய்’ `கோவை பிரதர்ஸ்’ `பச்சக்குதிர’ உள் ளிட்ட படங்களில் நடித்துள் ளார். சமூக சேவைகளில ஈடுபாடுள்ள அவர் அவ்வப் போது குடிசைப் பகுதிகளுக்கு சென்று ஏழைகளுக்கு உதவிகள் வழங்கி வருகிறார்.

நமீதாவுக்கு முதன்முதலாக செல்வம் என்பவர் ரசிகர் மன்றத்தை தொடங்கினார். தற்போது இவர் நமீதா ரசிகர் மன்றங்களின் அகில இந்திய தலைவராகி உள்ளார்.

சென்னையில் நமீதாவுக்கு 50 ரசிகர் மன்றங்கள் உள் ளன. இவற்றில் 3000 பேர் உறுப்பினர்களாக சேர்ந் துள் ளனர். இவர்களில் பெரும் பாலானோர் கல்லூரி மாண விகள். நமீதா ரசிகர் மன்றமும் சமூக சேவை பணிகளில் தீவிரமாக களம் இறங்கி உள்ளது.

முதல்கட்டமாக 20 ஆயி ரம் பேரை மன்றத்தில் உறுப் பினராக்க முடிவு செய் துள்ளனர்.

Posted in Fan Clubs, Kushboo, Movies, Namitha, Tamil Cinema, Telugu, Thrisha, Tollywood, Trisha | 3 Comments »

Andhra Pradesh bans dubbed films – Sivaji (The Boss) may be Tamil Exclusive

Posted by Snapjudge மேல் நவம்பர் 13, 2006

தமிழ் டப்பிங் படங்களுக்குத் தடை: தெலுங்கு தயாரிப்பாளர் சங்கம் முடிவு

ஹைதராபாத், நவ. 13: தமிழ் மற்றும் பிற மொழி டப்பிங் திரைப்படங்களின் வெற்றியால், பெரும் நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கிறது தெலுங்கு திரை உலகம்.

இதையடுத்து, ஆந்திரத்திலும் பிறமொழி டப்பிங் திரைப்படங்களை வெளியிட தடைவிதிக்க முடிவு செய்துள்ளது அந்தமாநிலத் தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம்.

சிறிய பட்ஜட்டில் படம் தயாரிக்கும் தெலுங்கு தயாரிப்பாளர்களின் நலனைப் பாதுகாக்கவே இந்த முடிவை மேற்கொண்டுள்ளதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. டப்பிங் திரைப்படங்களின் வரவும், வெற்றியும் தெலுங்கு திரைப்படத் துறைக்கு மிகுந்த நஷ்டத்தை ஏற்படுத்தி இருப்பதாகவும் அவ்வமைப்பு தெரிவித்துள்ளது.

பிற மொழிப் படங்களின் டப்பிங் உரிமையை வாங்கக் கூடாது என்று தனது உறுப்பினர்களுக்கு தயாரிப்பாளர்கள் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.

இந்த முடிவு அந்த மாநிலத்தில் திரைப்படத் துறையினரிடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திரத்தில் கடந்த 2 வருடங்களாக டப்பிங் திரைப்படங்கள், குறிப்பாக தமிழ் திரைப்படங்கள் பெரும் வெற்றி பெற்று வருகின்றன. மாநிலத்தில் இந்த ஆண்டு 200 திரைப்படங்கள் வெளியாயின. அவற்றில் மூன்றில் ஒரு பங்கு திரைப்படங்கள் டப்பிங் செய்யப்பட்டவை.

 • சந்திரமுகி,
 • அந்நியன்,
 • கஜினி,
 • மன்மதன்,
 • காதல்

ஆகிய திரைப்படங்கள் தெலுங்கில் டப் செய்யப்பட்டு, ஹிட் திரைப்படங்களாக ஓடின.  தமிழ் திடைப்படங்களைத் தவிர, ஆங்கில டப்பிங் படங்களையும் மக்கள் விரும்பிப் பார்க்கின்றனர்.

டப்பிங் திரைப்படங்கள் வசூலைக் குவித்து வரும் அதே நேரத்தில், ஆந்திரத்தில் தயாரான தெலுங்கு திரைப்படங்கள் தோல்வியை சந்தித்து வருகின்றன. “மெகா ஸ்டார்’ சிரஞ்சீவி உள்பட பல முன்னணி தெலுங்கு நடிகர்களின் படங்கள் வெளிவந்த வேகத்தில், பெட்டிக்குள் சுருங்கிவிட்டன.

கடந்த ஆண்டு 131 தெலுங்கு படங்கள் வெளியாகின. அவற்றில் மூன்றே மூன்று திரைப்படங்கள்தான் ஹிட் படங்களாக வெற்றி பெற்றன. ஏழெட்டு படங்களால் மட்டும்தான், செலவிட்ட பணத்தை மீட்க முடந்தது. மற்ற தெலுங்கு திரைப்படங்கள் அனைத்தும் பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தின.

இது குறித்து தெலுங்கு முன்னணி தயாரிப்பாளர் டி.சுரேஷ் பாபு, “பெரும் பணச்செலவில் தயாரிக்கப்பட்ட தெலுங்கு திரைப்படங்கள் கூட சரிவை சந்திக்க டப்பிங் படங்களின் வெற்றியே காரணம்’ என்றார்.

ஆனால் பிறமொழி டப்பிங் படங்களை தடை செய்யும் முடிவுக்கு டப்பிங் கலைஞர்கள், பாடலாசிரியர்கள், வசன எழுத்தாளர்கள், திரையரங்க உரிமையாளர்கள் மற்றும் தயாரிப்பாளர்களில் ஒரு பிரிவினரும்கூட எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

தற்போது தெலுங்கு திரைப்படங்கள் மிக அதிக செலவில் தயாரிக்கப்படுகின்றன. சிறு தயாரிப்பாளர்களால் இவ்வளவு பெரிய தொகையைச் செலவிட்டு திரைப்படம் தயாரிக்க இயலவில்லை. எனவேதான் நாங்கள் குறைந்த செலவில், படங்களை டப் செய்து வெளியிடுகிறோம் என்று கூறியுள்ளார் சிறு தயாரிப்பாளர் ஒருவர்.

Posted in Andhra Pradesh, Ban, Dubbing, Rajni, Remake, Sivaji, Superstar, Tamil Films, Tamil Movie, Tamil Pictures, Telugu, Tollywood | Leave a Comment »

‘Vallavan is my best movie’ – Nayan Thara

Posted by Snapjudge மேல் நவம்பர் 9, 2006

`சிவாஜி’ படத்தில் ரஜினியுடன் ஒரு பாடலுக்கு மட்டும் ஆடுவது ஏன்?- நயன்தாரா பேட்டி

தீபாவளிக்கு ரிலீசான மூன்று படங்களில் நயன்தாரா நடித்திருக்கிறார். தொடர்ந்து அவரது மார்க்கெட் ஏறுமுகத்திலேயே உள்ளது. தமிழில் மட்டுமல்லாத பிற மொழிகளிலும் கலக்கி வரும் நயன்தாரா முன்னணி கதாநாயகியாக இருந்தாலும் `சிவாஜி’யில் ஒரு பாடலுக்கு ஆட சம்மதித்திருக்கிறார். அது ஏன்? இந்த பேட்டியில் அவரே விளக்குகிறார்.

நான் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த போது என்னை கவனித்த சத்யன் அதிகாடு மலையாள படம் ஒன்றில் கதாநாயகியாக அறிமுகப்படுத்தினார். அதிலிருந்து கடந்த இரண்டரை வருடமாக மிகவும் பிஸியாக நடித்துக்கொண்டிருக்கிறேன். கல்லூரியில் படிக்கும் போது தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், சமஸ்கிருதம், ஹிந்தி என பல மொழிகளை கற்றுத் தேர்ந்தேன். அது இப்போது பல மொழிகளில் நடிப்பதற்கு பெரும் உதவியாக இருக்கிறது.

இதுவரை

 • 5 மலையாளம்,
 • 8 தமிழ்,
 • 2 தெலுங்கு

என 15 படங்களில் நடித்தாயிற்று.

நான் நடித்த எல்லாபடங்களும் சிறந்தவைதான் என்றாலும் எனக்கு ரொம்பப்பிடித்தது வல்லவன். அந்த படத்தில் என்னுடைய வேடம், படத்தை சிம்பு இயக்கியிருந்த விதமும் வல்லவன் எனக்கு மிகவும் பிடித்துப்போகக் காரணங்கள்.

இதுவரை என்னை எல்லோரும் ஹோம்லியான வேடங்களிலேயே நடிக்க வைத்தார்கள். ஆனால் வல்லவனில் முதன் முதலாக புதுவித உணர்வுகளை வெளிப்படுத்த வாய்ப்பு கிடைத்தது. வித்தியாசமான அந்த வேடம் ஆபாசம் இல்லாமல் சொல்லப்பட்டிருக்கிறது.

கிசு கிசுக்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதில்லை. அதுபற்றியெல்லாம் யோசித்துக்கொண்டிக்கும் அளவுக்கு எனக்கு நேரம் கிடையாது. அவற்றை உடனே மறந்துவிடுவேன்.

சிவாஜியில் ஒரு பாடலுக்கு தோன்றி நடனமாடுவதற்கு சம்மதித்ததற்கு மூன்று காரணங்கள் இருக்கிறது.

 1. முதலாவதாக இது சூப்பர் ஸ்டார் ரஜினி படம்.
 2. இரண்டாவது சந்திரமுகியின் பிரம்மாண்ட வெற்றிக்குப்பிறகு ரஜினியுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருப்பது.
 3. மூன்றாவதாக இதை சங்கர் இயக்குவது. கடந்த தீபாவளி என் வாழ்நாளில் மறக்க முடியாத நாள். காரணம் அன்று நான் நடித்த மூன்று படங்கள் ரிலீசாயின.

மலையாளத்தில் மம்முட்டியுடன் ஒரு படத்தில் நடித்து வருகிறேன். அதில் படம் முழுக்க 4 சேலைதான் காஸ்டிïம். அழுக்கான ஆடை, மேக்கப் இல்லாத தோற்றம் என படு யதார்த்தமான வேடம் அது. இந்த படத்தில் நடிப்பதில் மிகவும் சந்தோஷம். காரணம் என்னால் கமர்ஷியல் படங்களிலும் நடிக்க முடியும், மாறுபட்ட படங்களிலும் நடிக்க முடியும் என்பதை காட்டு வதற்கு இது நல்ல வாய்ப்பு.

நேரம் இல்லாததால் டப்பிங் பேச முடியவில்லை. ஆர்ட் படங்களில் நடிப்பதற்கு எனக்கு ஆர்வம் அதிகம். இந்த வேடத்திற்கு நமக்கு விருது கண்டிப்பாக கிடைக்கும் என்று உறுதியாகத் தோன்றினால் அந்த படத்திற்கு நிச்சயம் டப்பிங் பேசுவேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Posted in Chandramukhi, Interview, Malayalam, Nayan Thara, nayandhara, Rajini, Rajniganth, Shankar, Shivaji, Silambarasan, Simbu, Sivaji the Boss, Tamil Film, Tamil Movies, Telugu, Tollywood, Vallavan | Leave a Comment »

Minister Dasari Narayana Rao in domestic violence case

Posted by Snapjudge மேல் நவம்பர் 3, 2006

மகனுக்கு 2-வது திருமணம் செய்ய முயற்சி: மத்திய மந்திரி மீது மருமகள் பரபரப்பு புகார்- குடும்ப வன்முறை சட்டத்தில் நடவடிக்கை எடுக்க மனு

ஐதராபாத், நவ. 3-

பிரபல தெலுங்கு பட இயக்குனரான தாசரி நாராயணராவ் மத்திய மந்திரியாக பதவி வகிக்கிறார். இவரது மூத்த மகன் தாசரிபிரபு. இவருக்கும் சுசீலா என்ற பெண்ணுக்கும் 1995-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 11 வயதில் தாசரி நாராயணன் என்ற மகன் இருக்கிறான். குடும்ப தகராறு காரணமாக தாசரி பிரபுவும் சுசீலாவும் பிரிந்து வாழ்கிறார்கள்.

கடந்த ஆண்டு சுசீலா தனது கணவர் மீதும் மாமனார் தாசரி நாராயணராவ் மீதும் போலீசில் வரதட்சணை புகார் கொடுத்து இருந்தார். இந்த வழக்கு போலீஸ் விசாரணையில் உள்ளது.

இதற்கிடையே சுசீலா கணவர் மீதும் தாசரி நாராயண ராவ் மீதும் மீண்டும் பரபரப்பு புகார் கொடுத்துள்ளார். அதில் தன்னை தனிமைப்படுத்திவிட்டு தாசரி பிரபுவுக்கு மறுமணம் செய்து வைக்க முயற்சிப்பதாகவும், எனவே இருவர் மீதும் குடும்ப வன்முறை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

இந்த புகாரை கொடுப்பதற்காக சுசீலா ஐதராபாத் போலீஸ் நிலையம் வந்திருந்தார். அவரை போலீசார் 3 மணிநேரம் காக்க வைத்தபிறகு புகாரை பெற்றுக்கொண்டனர். ஆனால் அதன் மீது முறைப்படி வழக்கு எதுவும் பதிவு செய்யவில்லை.

இது பற்றி போலீசாரிடம் கேட்டதற்கு தாசரி நாராயண ராவ் மற்றும் அவரது மகன் மீது ஏற்கனவே சுசீலா வரதட்சணை புகார் கொடுத்து இருக்கிறார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு நிலுவையில் உள்ளது. தற்போது குடும்ப வன்முறை சட்டத்தின் கீழ் வந்துள்ள புகாரையும் அதனுடன் சேர்க்க முடியுமா என்பது குறித்து ஆலோசித்து வருகிறோம்” என்றனர்.

புதிய புகார் பற்றி தாசரி பிரபுவிடம் கேட்டபோது, சுசீலாவை நான் திருமணம் செய்தது முதல் என் மீது அவள் ஒருபோதும் அன்பு காட்டியது இல்லை. பண ஆசை பிடித்தவள். பணத்தின் மீதே குறியாக இருப்பாள். பணத்துக்காக அவள் எதை வேண்டுமானாலும் செய்வாள்’ என்றார்.

கணவன்- மனைவி பிரச்சினையில் இவர்களது 11 வயது மகன் தாசரி நாராயணன் தவிக்கிறான்.

Posted in abuse, Cabinet, Dasari, domestic violence, Dowry, Hyderabad, Marriage, Minister, Narayana Rao, Telugu, Tollywood | Leave a Comment »

Telugu actor Chiranjevi to get Honorary Doctorate from Andhra University

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 30, 2006

நடிகர் சிரஞ்சீவிக்கு டாக்டர் பட்டம்: ஆந்திர பல்கலைகழகம் வழங்குகிறது

தெலுங்கு பட உலகின் சூப்பர் ஸ்டாராக திகழ்பவர் சிரஞ்சீவி. 25 வருடங்களுக்கு மேலாக திலையுலகில் இருக்கும் இவர் தெலுங்கு பட உலகின் உச்ச நட்சத்திரமாக திகழ்கிறார். ரஜினியின் நெருங்கிய நண்பரான இவர் ராணுவவீரன், மாப்பிள்ளை உள்ளிட்ட சில தமிழ்படங்களிலும் நடித்திருக்கிறார்.

சிரஞ்சீவியின் கலை உலக சேவையைப் பாராட்டி ஆந்திர பல்கலைக்கழகம் அவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்க இருக்கிறது. வருகிற 6-ந் தேதி நடைபெற உள்ள அப்பல்கலைக்கழகத்தின் பட்ட மளிப்பு விழாவில் டாக்டர் பட்டத்தை சிரஞ்சீவி பெற்றுக் கொள்வார்.

இதே பட்டமளிப்பு விழாவில் ஆந்திர மாநில முன்னாள் கவர்னர் ரங்க ராஜனுக்கும் கவுரவ டாக்டர் பட்டத்தை ஆந்திர பல்கலைக்கழகம்ë வழங்கு கிறது.

மேற்கண்ட தகவலை அப்பல் கலைகழகத்தின் துணை வேந்தர் வேணுகோபாலரெட்டி நிருபர்களிடம் தெரிவித்தார்.

Posted in Actor, Andhra University, Chiranjeevi, Doctorate, Film, Governor, Honorary, Movies, Raanuva Veeran, Rengarajan, Siranjivi, Superstar, Tamil, Telugu, Tollywood, Venugopala Reddy, Vice-chancellor | Leave a Comment »

‘Stalin’ Released – Four Dead in the Melee

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 21, 2006

சிரஞ்சீவியின் “ஸ்டாலின்’ ரிலீஸ்: 4 ரசிகர்கள் சாவு

நகரி, செப். 22: தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியின் புதிய படமான “ஸ்டாலின்’ வெளியான திரையரங்குகளில் ஏற்பட்ட நெரிசலிலும், மின்சாரம் தாக்கியும் 4 ரசிகர்கள் உயிரிழந்தனர்.

இதுகுறித்த விவரம்:

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிரஞ்சீவி, நடிகை த்ரிஷா நடித்துள்ள “ஸ்டாலின்’ படம் புதன்கிழமை இந்தியா முழுவதும் வெளியானது. படத்தை முதல் நாளே பார்த்துவிட வேண்டும் என்ற ஆவலில் திரையரங்குகளில் ரசிகர்கள் குவிந்தனர். இதனால் கடும் நெரிசல் ஏற்பட்டது.

இதில் அனந்தபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஆதிநாராயணா (24), கர்ணூல் மாவட்டத்தைச் சேர்ந்த ரங்கசாமி (30) ஆகிய இருவர் உயிரிழந்தனர்.

மேலும் குண்டூர் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஒரு திரையரங்கில் சிரஞ்சீவியின் “கட்-அவுட்’ வைப்பதில் மும்முரமாய் இருந்தனர் ரசிகர்கள். அப்போது மின்சாரம் தாக்கியதில் நாகராஜ் (24), சேக் உசேன் (23) ஆகிய இருவரும் உயிரிழந்தனர்.

Posted in Ananthapoora, Ananthapur, Andhra, Andhra Pradesh, AP, Chiranjeevi, Cinema, Crazy, Cut-outs, dead, Fans, First day first show, Guntur, Melee, Moviegoers, Movies, Murugadoss, Sirancheevi, Stalin, Tamil, Telugu, Tollywood, Trisha | Leave a Comment »

Dega Devakumar Reddy denies allegations that Sneha’s movie is based on Naga Ravi’s Real Life

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 21, 2006

தடை விதிக்கப்பட்ட தெலுங்கு படம் சினேகா கதை அல்ல: தயாரிப்பாளர்

சென்னை, செப். 22: நீதிமன்றத்தால் தடை விதிக்கப்பட்ட படம் நடிகை சினேகா வாழ்க்கை பற்றிய கதை அல்ல என்று அப்படத்தின் தயாரிப்பாளர் தேகா தேவகுமார் ரெட்டி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்த விவரம்:

நடிகை சினேகா “மனசு பலிகே மெüன ராகம்‘ என்ற படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். “ஏன் இந்த மெüனம்‘ என்ற பெயரில் தமிழிலும் இந்தப் படம் தயாராகி வருகிறது. இதன் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் சினேகாவின் முன்னாள் காதலர் நாகா ரவி, இந்தப் படம் தனக்கும், சினேகாவுக்கும் முன்பு இருந்த உறவை மையப்படுத்தி எடுக்கப்படுகிறது; இப்படம் வெளியானால் சமுதாயத்தில் தனது நற்பெயர் பாதிக்கப்படும் என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

நீதிமன்றமும் இந்தப் படம் வெளியாவதற்குத் தடை விதித்தது. இதையடுத்து படத் தயாரிப்பாளர் தேகா தேவகுமார் ரெட்டி வெளியிட்டுள்ள அறிக்கை விவரம்: இந்தக் கதை, யாருடைய சொந்த வாழ்க்கையையும் பற்றியது அல்ல; தத்துவ மேதை ஜே.கிருஷ்ணமூர்த்தியின் சிந்தனைகளை அடிப்படையாகக் கொண்டது.

காதல் இருக்கும் இடத்தில் சுயநலம் இருக்காது; சுயநலம் இருக்கும் இடத்தில் காதல் இருக்காது என்பதுதான் கதை. ஒரு படம் அதன் தரத்தால் மட்டுமே பேசப்பட வேண்டும் என்று விரும்புகிறோம்.

வீணான சர்ச்சைகள் மூலம் கிடைக்கும் விளம்பரத்தால் படத்தை வெளியிட விரும்பவில்லை. எனவே, தற்போது படத்தைப் பற்றி வெளிவந்துள்ள தவறான சர்ச்சைகளுக்கு நாங்கள் பொறுப்பல்ல என்று தெரிவித்துள்ளார்.

Posted in AP, Cinema, Dega Devakumar Reddy, Film, Manasu Palige Mauna Raagam, Movies, Naga Ravi, Pictures, SNEHA, Tamil, Telugu, Tollywood | Leave a Comment »

Fan Clubs will facilitate Free Food on all Religion’s Festivals – Thrisha

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 20, 2006

ரசிகர் மன்றங்கள் மூலம் சாதி, மத வேறுபாடின்றி அனைத்துப் பண்டிகை தினத்திலும் அன்னதானம்: த்ரிஷா

சென்னை, செப்.21: என்னுடைய ரசிகர்கள் மன்றங்கள் மூலம் சாதி, மத வேறுபாடின்றி அனைத்துப் பண்டிகை தினங்களிலும் அன்னதானம், ரத்த தானம், நற்பணிகள் செய்யப்படும் என்று நடிகை த்ரிஷா தெரிவித்தார்.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி, த்ரிஷா நடித்த “ஸ்டாலின்‘ என்ற தெலுங்கு படம் இந்தியா முழுவதும் புதன்கிழமை வெளியானது.

இந்த படத்துக்காக துவரை இல்லாத அளவு அதிக பிரிண்ட்டுகள் தயாரிக்கப்பட்டு படம் திரையிடப்பட்டுள்ளது.

சென்னையில் சத்யம், மாயாஜால், கேசினோ உள்ளிட்ட சில திரையரங்குகளிலும் இந்தப் படம் வெளியாகியுள்ளது. இதையொட்டி த்ரிஷா ரசிகர் மன்றத்தினர் கேசினோ திரையரங்கில் கொடிகள், தோரணங்கள், விளம்பரப் பதாகைகள் போன்றவற்றை வைத்திருந்தனர்.

அதோடு அடையாறு புற்றுநோய்க் கழகத்தில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள், சிறார்களுக்கு அன்னதானம் வழங்கினர். த்ரிஷா நடித்த எந்த மொழிப் படம் வந்தாலும் அன்னதானம், ரத்ததானம் வழங்கும் காரியங்கள் தொடரும் என்று ரசிகர் மன்றத்தினர் கூறினர்.

தமிழகம் முழுவதும் ரசிகர் மன்ற உறுப்பினர் சேர்க்கை நடைபெற்று வருவதாகவும் கூறினர்.

இதுதொடர்பாக த்ரிஷாவைத் தொடர்புகொண்ட போது அவர், மகேஷ்பாபுவுடன் நடிக்கும் “சைனி குடு‘ என்ற தெலுங்குப் படப்பிடிப்புக்காக ஹைதராபாத்தில் இருந்தார். ரசிகர் மன்ற செயல்பாடுகள் குறித்து கேட்ட போது த்ரிஷா கூறியது:

ரசிகர் மன்றங்கள் மூலம் நற்பணிகள் செய்வது மனதுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. “கட்-அவுட்’ வைப்பது, பாலபிஷேகம் செய்வது போன்றவற்றை நான் அனுமதிப்பதில்லை.

ஆதரவற்றவர்களுக்கும், இயலாதவர்களுக்கும் நம்மால் இயன்ற உதவிகளைச் செய்யும்போது கிடைக்கும் திருப்தி வேறு எதிலும் கிடைக்காது.

இனி வரும் நாள்களில் எந்தப் பாகுபாடும் பார்க்காமல் அனைத்து பண்டிகை தினங்களிலும், முக்கிய தினங்களிலும் ரசிகர் மன்றங்கள் மூலம் அன்னதானம், ரத்த தானம், நற்பணிகள் போன்றவற்றை செய்யவுள்ளோம் என்றார் த்ரிஷா.

Posted in Abhishekam, Actress, Annadanam, Birthday, Cut-out, Fan Clubs, Free Food, Kollywood, Secular, Tamil, Tamil Cinema, Telugu Movies, Tollywood, Trisha | Leave a Comment »

Manasu Palige Mauna Raagam – Sneha’s Telugu Flick gets Stay Order by Naag Ravi

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 20, 2006

சினேகா நடித்த தெலுங்கு படத்துக்குத் தடை

சென்னை, செப்.20: நடிகை சினேகா நடித்த தெலுங்கு படத்துக்கு உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. நாக் ரவி என்பவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதி ராஜேஸ்வரன் இத்தடையை விதித்தார்.

மனுவில் நாக் ரவி கூறியிருப்பதாவது:

எனக்கும் நடிகை சினேகாவுக்கும் சில காலம் தொடர்பு இருந்தது. பின்னர் அவர் என்னைப் பற்றி தவறாக பத்திரிகைகளுக்குப் பேட்டி அளித்ததால், அவரிடம் இருந்து நான் விலகிவிட்டேன்.

இந்நிலையில் “மனசு பலிகே மௌன ராகம்’ என்ற பெயரில் தயாராகும் தெலுங்கு படத்தில் கதாநாயகியாக சினேகா நடிக்கிறார். இப்படம் தமிழிலும் வெளியாகவுள்ளது. எனது சொந்த வாழ்க்கையில் நடந்த சம்பவங்களே இந்தப் படத்தின் கதையாக அமைந்துள்ளது. இப்படம் வெளியானால் எனக்கு மன உளைச்சல் ஏற்படும். எனவே இப்படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று மனுவில் ரவி கூறியுள்ளார்.

நீதிபதி ராஜேஸ்வரன் இவ்வழக்கை விசாரித்தார். மனுதாரர் சார்பாக வழக்கறிஞர் சங்கர் ஆஜரானார். 3 வாரத்துக்கு இப்படத்தை வெளியிட நீதிபதி இடைக்காலத் தடை விதித்தார். 3 வாரத்தில் பதில் அளிக்க இந்த படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.

Posted in Actress, Andhra, Andhra Pradesh, AP, Cinema, Court Order, Manasu Palige Mauna Raagam, Naag Ravi, SNEHA, Story, Tamil, Telugu, Telugu (తెలుగు), Telugu Movies, Tollywood | Leave a Comment »