மிஸஸ் ஹோம் மேக்கர்
ஜெயா டி.வி.யில் இல்லத்தரசிகள் பங்கேற்கும் சுவாரஸ்யமான “மிஸஸ் ஹோம் மேக்கர்’ நிகழ்ச்சி வரும் நவ.23-ம் தேதி முதல் ஒளிபரப்பாகிறது.
இல்லத்தரசிகள் பங்கேற்கும் இந்த சமையல் நிகழ்ச்சியில் கேஸ் அடுப்பு, நவீன சமையல் பாத்திரங்கள் போன்றவற்றைப் பயன்படுத்தக்கூடாது.
மாறாக, நம் பாரம்பரிய உடையணிந்து கிராமியச் சூழலில் விறகு அடுப்பு மூட்டி அறுசுவை உணவுகளைத் தயாரிக்க வேண்டும்.
இந்நிகழ்ச்சியில் அறிவுசார்ந்த போட்டிகளும் படைப்பாற்றலைப் பரிசோதிக்கும் போட்டிகளும் இடம்பெறுகின்றன.
இல்லத்தரசிகளைக் குதூகலப்படுத்த வரும் இந்நிகழ்ச்சி, நவ.23 முதல் வெள்ளிக்கிழமைதோறும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது. மறு ஒளிபரப்பு சனிக்கிழமை காலை 11 மணி.
————————————————————————————————————————————–
முகவரி
மக்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் “முகவரி’ நிகழ்ச்சி நேயர்களிடையே சிறப்பான வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்நிகழ்ச்சி மூலம் சிறு வணிகர்களும் சிறு விளம்பரதாரர்களும் குறு விளம்பரம் மூலம் மிகக் குறைந்த கட்டணத்தில் தங்கள் தயாரிப்புகளை விளம்பரப்படுத்திக்கொள்ள முடிகிறது.
நேயர்களைத் தொலைக்காட்சி வாயிலாகவே கடைவீதிக்கு அழைத்துச் சென்று சந்தையில் கிடைக்கும் பல்வேறு பொருள்களையும் சேவைகளையும் இந்நிகழ்ச்சி அறிமுகப்படுத்துகிறது.
மேலும் இந்நிகழ்ச்சி, பல வணிக நிறுவனங்களின் முகவரிகளையும் பயனுள்ள இலவச இணைப்புகள் பற்றியும் நுகர்வோர் அறிந்துகொள்ள ஒரு பாலமாக இருக்கிறது. திவ்யா தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சி திங்கள் முதல் வெள்ளி வரை பிற்பகல் 1.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.