Archive for the ‘Thirukonamalai’ Category
Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 16, 2007
திருகோணமலையில் அனல் மின் நிலம் அமைக்க மாற்று இடம் தேர்வு
 |
 |
தேசிய அனல் மின் நிறுவனத்தால் இயக்கப்படும் மின் உற்பத்தி நிலையம் |
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே கைசாத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் படி திருகோணமலையில் 500 மெகாவாட் திறனுள்ள அனல் மின் நிலையத்தை அமைப்பதற்காகன இரண்டு மாற்று இடங்களை தேர்வு செய்துள்ளதாக, இத்திட்டத்தை செயல்படுத்தவுள்ள இந்திய பொதுத் துறை நிறுவனமான, தேசிய அனல் மின் நிறுவனம் கூறியுள்ளது.
திருகோணமலை. சம்பூர் பகுதியில் இந்த அனல் மின் நிலையம் அமைக்கப்படவிருந்தது. ஆனால் பாதுகாப்பு பிரச்சனைகள் காரணமாக இந்த இடத்தில் இருந்து வேறு இடத்துக்கு திட்டத்தை கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டது.
அனல் மின் நிலையத்தை அமைக்க தற்போது இரண்டு இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும், இதில் எந்த இடத்தில் மின் உற்பத்தி நிலையத்தை அமைப்பது என்பது மூன்று வாரங்களில் முடிவு செய்யப்படும் என்றும் தேசிய அனல் மின் நிறுவனத்தின் தலைவர் சங்கரலிங்கம் தமிழோசையிடம் தெரிவித்தார்.
Posted in Army, Coal, defence, Defense, Economy, Electricity, Employment, Industry, Jobs, LTTE, Mega watt, Megawatt, Military, MW, Navy, NTPC, Power, Samboor, Sambur, Sampoor, Sampur, Security, Sri lanka, Srilanka, Thermal, Thirukonamalai, Triconamalee, triconmalee, Viduthalai Puli, Viduthalai Puligal, Viduthalai Pulikal, Vituthalai Puli, Vituthalai Puligal, Vituthalai Pulikal, workers | Leave a Comment »
Posted by Snapjudge மேல் மே 22, 2007
 |
 |
புதிய கொடிகளின் பின்னணியில் பழைய கொடி |
இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்குத் தனித்தனியான கொடிகள்
இலங்கை உயர் நீதிமன்ற உத்தரவை அடுத்து தனித்தனியாகப் பிரிக்கப்பட்ட வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு தனித்தனிக் கொடிகள் உருவாக்கப்பட்டு இன்று திருகோணமலையில் உள்ள ஆளுனர் பணிமனையில் அவை ஏற்றிவைக்கப்பட்டன.
இலங்கையின் 35 வது குடியரசு தினமான இன்று திருகோணமலையில் கிழக்கு மாகாணத்துக்கான ஆளுனரும் வடக்கு மாகாணத்துக்கான பதில் ஆளுனருமான மொஹான் விஜேவிக்கிரம அவர்களின் அலுவலகத்தில் நடந்த சிறப்பு நிகழ்வு ஒன்றிலேயே இந்தக் கொடிகள் தனித்தனியாக ஏற்றிவைக்கப்பட்டன.
 |
வட மாகாணக் கொடி |
முன்னைய இணைந்த வடகிழக்கு மாகாணத்தின் கொடியில் யாழ் மற்றும் மீன் சின்னம் ஆகியன இடம்பெற்றிருந்தன.
ஆனால் தற்போது வடமாகாணத்துக்கான கொடியில் சூரியன் சின்னமும், மற்றும் கிழக்கு மாகாணத்துக்கான கொடியில் கழுகு, மீன் மற்றும் சிங்கம் ஆகியனவும் இடம்பெற்றுள்ளன.
 |
கிழக்கு மாகாணக் கொடி |
வடக்கு கிழக்கு இணைப்பை உடைத்து அதனை நிரந்தமாக்கும் நோக்கிலேயே இந்தக் கொடிகள் அவசரமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக கூறுகிறார் இலங்கையில் 13வது அரசியல் சட்டத்திருத்தம் நிறைவேற்றப்பட்ட பின்னர் உருவான ஒன்றிணைந்த வடகிழக்கு மாகாண சபையின் முதல்வருக்கு செயலராக பணியாற்றியவரும், அப்போது உருவாக்கப்பட்ட வடகிழக்கு மாகாண கொடியை வடிவமைத்ததாகக் கூறுபவருமான, டாக்டர் விக்னேஸ்வரன்.

Posted in Conflict, East, Eelam, Eezam, Eezham, Federal, flags, Governor, Govt, LTTE, Nationalism, North, Northeast, Province, Separatists, Sri lanka, Srilanka, State, Thirukonamalai, Tirukkonamalai, Triconamalee, triconmalee, Viduthalai, Viduthalai Puli, Viduthalai Puligal, Viduthalai Pulikal, Vituthalai, Vituthalai Puli, Vituthalai Pulikal | Leave a Comment »
Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 3, 2006
திருகோணமலையில் நிலக்கரி அனல் மின் நிலையம்
 |
 |
இந்தியாவின் ஒத்துழைப்புடன் நிலக்கரி அனல்மின் நிலையம் |
இலங்கை திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் கிழக்குப் பிரதேசத்தின் சம்பூர் பகுதியில் இலங்கையின் இரண்டாவது நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்தை அமைப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருவதாக எரிபொருள் மின்சக்தி அமைச்சு கூறியுள்ளது.
இந்த திட்டம் இந்தியாவின் உதவியுடன் செயற்படுத்தபடுவதாக கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக இலங்கை மின்சக்தி அமைச்சர் ஜான் சேனவிரத்ன அவர்களை தொடர்பு கொண்டு கேட்ட போது, இத்திட்டம் தொடர்பாக தாங்கள் பல மாத காலமாக ஆராய்ந்து வருவதாகவும், இது தொடர்பாக இந்தியாவில் இருந்து ஒரு குழு இலங்கை வந்ததாகவும், இலங்கையில் இருந்து ஒரு குழு இந்தியா சென்றதாகவும், அவர்கள் தொடர்ச்சியாக பேச்சுவார்த்தைகள் நடத்துவதாக கூறினார்.
சமீபத்தில் இந்தப் பிராந்தியத்தில் விடுதலைப் புலிகளுக்கும், இலங்கை இராணுவத்தினருக்கும் இடையில் மோதல் ஏற்பட்ட நிலையில், சம்பூர்ப் பகுதியில் திட்டம் செயற்படுத்தபடுவது குறித்து அமைச்சரிடம் கேட்கப்பட்ட போது, தற்போது அந்தப் பிராந்தியத்தில் பயங்கரவாதிகள் இல்லை என்றும், தாங்கள் இது தொடர்பாக கடற்படைத் தளபதிகளுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தியதாகவும், அதன் போது அங்கு பயங்கரவாதிகள் இல்லை என்று அவர்கள் தெரிவித்ததாகவும், இதனால் இத்திட்டம் அங்கு செயற்படுத்தபடலாம் என கூறினார்.
இது தொடர்பாகவும், நிலக்கரி அனல் மின் நிலையம் அமைக்க வேண்டிய அவசியம் தொடர்பான கேள்விகளுக்கும் அமைச்சர் வழங்கிய பதில்களை நேயர்கள் தமிழோசையில் கேட்கலாம்.
Posted in Electricity, Factory, Generation, India, Lignite, LTTE, Moothoor, Moothur, Power, Samboor, Sambur, Sri lanka, Tamil, Thirukonamalai, Triconamalee | Leave a Comment »
Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 11, 2006
இலங்கையில் மற்றுமொரு தன்னார்வ அமைப்பு ஊழியர் கொலை
 |
 |
முன்பு கொல்லப்பட்ட ஒரு நிவாரணப் பணியாளரின் இறுதி ஊர்வலம் |
இலங்கையின் கிழக்கே, திருகோணமலையில் மற்றுமொரு சர்வதேச தன்னார்வ அமைப்பின் உள்ளூர்ப் பணியாளர் ஒருவர் இன்று சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
திருகோணமலை நகரில் இருந்து 9 கிலோமீற்றர் தூரத்துக்கு அப்பால் உள்ள இக்பால் நகரை அண்மித்த பகுதியில் வைத்து இன்று பிற்பகல் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த கும்புறுப்பிட்டி காந்தி நகர் வாசியும், அமெரிக்காவில் தலைமையகத்தைக் கொண்டு செயற்படும் தன்னார்வ அமைப்பு ஒன்றில் பணியாற்றுபவருமான எஸ். ரகுநாதன் என்பவர் இன்று பிற்பகல் இனந்தெரியாத நபர்களினால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
இவரது தலையில் துப்பாக்கிச் சூட்டுக்காயங்கள் காணப்படுவதாக கூறப்படுகிறது.
Posted in Aid Worker, Eezham, LTTE, Peace, S Raghunathan, Sri lanka, Tamil, Thirukonamalai, Triconamalee, Volunteer | Leave a Comment »
Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 5, 2006
திருகோணமலை சம்பூரை இராணுவம் கைப்பற்றியதற்கு இலங்கை அரசு விளக்கம்
 |
 |
பொருளாதார இலக்குகள் மீதான அச்சுறுத்தலே காரணம் – இலங்கை அரசு |
இராணுவ ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த சம்பூர் பிரதேசத்தை அரச படைகள் விடுதலைப் புலிகளிடம் இருந்து கைப்பற்றியதற்கு அப்பகுதியில் புலிகள் நிலைகொண்டிருப்பதால் திருகோணமலை இயற்கைத் துறைமுகத்திற்கும், அதனை அண்டியுள்ள பிரிமா மா ஆலை, டோக்கியோ சிமெண்ட் மற்றும் இந்திய எண்ணைய்க் குதங்கள் போன்ற வெளிநாட்டு பொருளாதார முதலீட்டுக்கேந்திர மையங்களிற்கும் நிலவி வந்த ஆர்டிலரி தாக்குதல் அச்சுறுத்தலை இல்லாமல் செய்வதே முக்கிய காரணம் என்று இலங்கை அரசு இன்று மீண்டும் தெரிவித்திருக்கிறது.
அத்துடன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ அவர்கள், சமாதான முயற்சிகள் அடுத்தகட்டத்தை நகருவதற்கு முன்பாக சம்பூரைக் கைப்பற்ற வேண்டியதன் தேவை குறித்து இலங்கைக்கு உதவி வழங்கும் நாடுகளின் இணைத்தலைமை நாடுகளிற்கு ஏற்கனவே எடுத்துக்கூறியிருந்தார் என்றும் அரச தரப்பில் இன்று விளக்கம் அளிக்கப்பட்டிருக்கிறது.
தேசிய பாதுகாப்பிற்கான ஊடக மத்திய நிலையத்தில் இன்று பத்திரிகையாளர் மாநாட்டில் உரையாற்றிய திட்ட அமுலாக்கல் அமைச்சரும், பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளருமாகிய கெஹெலிய ரம்புக்வெல்ல இதனை தெரிவித்தார்.
Posted in Chamboor, Eezham, LTTE, Mahindra, Rajpakse, Srilanka, Tamil, Thirukonamalai, Triconamalee, Viduthalai Pulikal, Vituthalai Puli | Leave a Comment »