Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Teach’ Category

Iranian Textbooks Teach Islamic Supremacy, Inequality for Women and Non-Muslims, Study Finds

Posted by Snapjudge மேல் மார்ச் 19, 2008

இரானில் பள்ளிக் குழந்தைகளுக்கு ‘இஸ்லாமியர்களே உயர்ந்தவர்கள்’ என பாடம் புகட்டப்படுவதாக அமெரிக்க அமைப்பு குற்றச்சாட்டு

இரானின் பள்ளிக் குழந்தைகள் இஸ்லாத்தின் ஈடு இணையற்ற உயர் நிலையை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும், முஸ்லிம் அல்லாதவர்களை சந்தேகக் கண்கொண்டு பார்க்கவேண்டும் என்றும், இரானிய அரசு அவர்களுக்கு பாடம் புகட்டி வருகிறது என்று அமெரிக்காவில் இருந்து இயங்கும் ‘ஃபிரீடம் ஹவுஸ்’ என்ற அமைப்பு கூறியுள்ளது.

இரானிய பள்ளிக்கூடங்களில் கட்டாயப் பாடமாக்கப்பட்டுள்ள பாட நூல்களில் 95 நூல்களை ஆராய்ந்து வெளியிட்டுள்ள மதிப்பீட்டு அறிக்கையில், பள்ளிச் சிறார்களின் சகிப்புத்தன்மை மிகவும் முறையாக அகற்றப்பட்டுள்ளது என்றும், இதனை தற்செயலானது என்று கூற முடியாது என்றும் கூறப்பட்டுள்ளது.

இரானின் உள்ளூரில் பார்சி மொழி பேசுவோரால் நடத்தப்பட்ட இந்த மதிப்பீட்டின்படி, பெண்கள் ஆண்களைவிட கருத வேண்டும் என்றும், மேற்குலக நாடுகளை சாத்தான்கள் போலக் கருத வேண்டும் என்றும், இரானிய பாட நூல்கள் பள்ளிச் சிறார்களுக்கு பாடம் புகட்டுவது தெரிகிறது.

இரானின் அடுத்த தலைமுறையினர் வெளியுலகத்தை எவ்வாறு நோக்க வேண்டும் என்பதையே இந்த நூல்கள் திட்டமிட்டு வடிவமைப்பதாக அந்த அறிக்கை கூறுகிறது.

Posted in inequality, Iran, Islam, Muslims, Students, Supremacy, Teach, Textbooks, Women | 1 Comment »

Backward Region Grant Fund: Appraisal of Panchayat Raj by Mani shankar Iyer – Failure of local governments

Posted by Snapjudge மேல் நவம்பர் 15, 2007

மக்களைச் சென்றடையுமா மத்திய அரசின் நிதி?

க. பழனித்துரை

மத்திய பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் சார்பாக “”பிற்படுத்தப்பட்ட பகுதி மேம்பாட்டுக்கான நிதி” என்ற தலைப்பில் தில்லியில் அண்மையில் நடைபெற்ற கருத்தரங்கில் சிறப்புரை ஆற்றிய அமைச்சர் மணிசங்கர் அய்யர், அதிர்ச்சியளிக்கும் ஒரு தகவலைக் கூறினார். இந்தியாவில் உள்ள மிகவும் பின்தங்கிய 250 மாவட்டங்களில், வறுமையைக் குறைக்கவும் பஞ்சாயத்துகளுக்கு வலுவூட்டவும் தமது அமைச்சகத்தில் ரூ. 4,600 கோடி நிதி உள்ளது என்று அவர் கூறினார்.

இந்த நிதியைப் பயன்படுத்த மாவட்டத் திட்டக்குழுத் தலைவர்கள் வளர்ச்சித் திட்டத்தைத் தயாரித்துத் தரவேண்டும். இத் திட்டத்தில் இரண்டு முக்கியக் குறிக்கோள்கள் வைக்கப்பட்டுள்ளன.

ஒன்று – வறுமைக் குறைப்பு; மற்றொன்று – ஊராட்சியை வலுப்படுத்துதல். இதுவரை, ஒரு சில மாவட்டங்கள் மட்டும் 220 கோடி செலவு செய்து பணிகளை நிறைவேற்றியுள்ளன. எஞ்சிய தொகை செலவிடப்படாமல் அமைச்சகத்தில் அப்படியே இருக்கிறது என்பதுதான் அதிர்ச்சியான விஷயம்.

பணமிருந்தும் தேவை இருந்தும் ஏன் செலவிடப்படவில்லை என்றால், மாவட்டத்திற்கான திட்டத்தைத் தயாரித்துத்தர மாவட்டத் திட்டக்குழுக்களால் இயலவில்லை. இந்தப் புதிய திட்டம் பலருக்குப் புரியவுமில்லை. திட்டமிட்டுச் செயலாற்ற நம் பஞ்சாயத்துகள் இன்னும் தங்களைப் பழக்கப்படுத்திக் கொள்ளவில்லை.

உள்ளாட்சி அமைப்புகளிடமிருந்து திட்டங்களை வாங்கி மாவட்டத் திட்டக்குழு தொகுத்து மாநில அரசின் உயர்நிலைக் குழுவின் ஒப்புதலுடன் அனுப்பினால் குறைந்தபட்சம் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ரூ. 15 கோடி வரை கிடைக்கும். அதேபோல் பஞ்சாயத்துகளை வலுப்படுத்த, தலைவர்களையும் அதிகாரிகளையும் பயிற்சியளித்துத் திறன் கூட்டுவதற்கு ஆண்டுக்கு ஒரு கோடி வீதம் ஆறு ஆண்டுகளுக்கு ரூ. 6 கோடி ஒவ்வொரு மாவட்டத்திற்கும் கிடைக்க வாய்ப்பிருக்கிறது.

அதுமட்டுமல்ல, ஒவ்வொரு மாவட்டமும் ஐந்தாண்டுக்கான திட்டத்தைத் தயாரிக்கும்போது மக்களின் தேவைகளையும் அரசாங்கத்தின் திட்டங்களையும் ஒன்றுசேர்த்து இணைத்துவிடலாம். இதன்மூலம் அரசுத்துறைகள், பஞ்சாயத்துக்கு செய்கின்ற பணிகள் அனைத்தையும் இத்துடன் இணைத்து விடும். அதுமட்டுமல்ல, பஞ்சாயத்துடன் சேர்ந்து வேலைசெய்யவேண்டிய கட்டாயத்திற்கு அரசுத்துறை அலுவலர்களும் வந்துவிடுவார்கள்.

வாய்ப்பிருந்தும் மாவட்டத் திட்டக்குழுத் தலைவர்கள் நிதி பெறுவதற்கும் பஞ்சாயத்துகளை வலுப்படுத்தவும் ஏன் பணியாற்றவில்லை என மணிசங்கர் அய்யர் அந்த நிகழ்ச்சியில் ஒரு கேள்வியை எழுப்பினார்.

மாவட்டப் பஞ்சாயத்துத் தலைவர்களுக்கு இத் திட்டம் பற்றிய விழிப்புணர்வு இல்லை என்பது புலனாகிறது. இந்த நிதியை எப்படியாவது தங்கள் மாவட்டத்திற்குக் கொண்டு சென்றுவிட வேண்டும் என்ற ஆவல் அனைவரது பேச்சிலும் தொனித்தது. பெரும்பாலான மாநிலங்கள் மாவட்டத் திட்டக்குழுக்களை வலுப்படுத்தவில்லை.

தமிழகத்தைப் பொருத்தவரை,

  • திருவண்ணாமலை,
  • கடலூர்,
  • விழுப்புரம்,
  • திண்டுக்கல்,
  • நாகப்பட்டினம்,
  • சிவகங்கை

ஆகிய மாவட்டங்கள் இந்தத் திட்டத்தால் பயன்பெறுபவை. ஒட்டுமொத்தமாக இந்த ஆறு மாவட்டங்களுக்கும் ரூ. 85.39 கோடி பணிகளுக்காகவும் ரூ. 36 கோடி பயிற்சிக்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளன. மொத்த ஒதுக்கீட்டில் ரூ. 120 கோடி தமிழகத்துக்கு வரவேண்டும்.
வட மாநிலப் பிரதிநிதிகள் பலர், விரைவில் இதற்கான திட்டத்தினை உருவாக்க முயற்சி செய்கிறோம் என்று உறுதியளித்தனர். அப்பொழுது குறுக்கிட்ட மணிசங்கர் அய்யர், இதுவரை 31 மாவட்டங்கள் திட்டங்களைத் தயாரித்து அனுப்பிவிட்டன என்றும் மத்தியப்பிரதேசம் போன்ற மாநிலங்களில் உள்ள மாவட்டத் திட்டக்குழுக்கள் மிக நல்ல திட்டங்களைத் தயாரித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இப்படி மத்திய அரசு தரும் நிதியை,

  • பஞ்சாயத்து அலுவலகக் கட்டட விரிவாக்கம்,
  • இந்திரா குடியிருப்புத் திட்ட வீடுகளைப் பழுதுபார்த்தல்,
  • பாலவாடி, அங்கன்வாடி கட்டடங்களைப் பழுதுபார்த்தல்,
  • புதிய கட்டடம் கட்டுதல்,
  • பள்ளிக் கட்டடங்கள் சீரமைப்பு,
  • விளையாட்டு மேம்பாட்டிற்கு வசதிகள்,
  • கழிப்பறை,
  • சுற்றுச்சுவர்,
  • மேஜை, நாற்காலி வாங்குதல்
  • மதிய உணவு சமையலறைக் கட்டடம்

உள்ளிட்ட பணிகளுக்குப் பயன்படுத்தலாம் என விளக்கினார் அமைச்சர்.
மத்திய அரசு 99 வகையான திட்டங்களின் மூலம் செலவிடும் தொகை ரூ. 81,000 கோடி. இதே திட்டங்களுக்கு வாஜ்பாய் தலைமையிலான அரசு ஒதுக்கிய நிதி ரூ. 32,000 கோடி. இன்றைக்கு இந்தத் திட்டங்களில் 10 சிறந்த திட்டங்களின் மூலம் ஊரக வளர்ச்சி அமைச்சகம் கிராம அளவில் மேம்பாட்டுக்காகச் செலவிடும் தொகை ரூ. 65,000 கோடி என்பது குறைவான தொகை அல்ல.

இந்தத் தொகை முழு அளவில் பயனாளிகளைச் சென்றடைய வேண்டும். இந்த நிதி பஞ்சாயத்து மூலமாக மக்களைச் சென்றடைவதில்லை; துறைகள் மூலமாகவே செலவிடப்படுகின்றன. பின்தங்கிய மாவட்ட மேம்பாட்டு நிதித் திட்டத்தில், மாவட்டத்திற்கு ஒரு வளர்ச்சித் திட்டத்தை உருவாக்கி எல்லா அரசின் திட்டநிதிகளையும் இந்தத் திட்டத்திற்குள் கொண்டுவந்துவிட்டால், பெருமளவில் ஊழலைக் குறைத்துவிடலாம் என அரசு கருதியதால், இத்திட்டத்தை வலியுறுத்தி வருகிறது.

பின்தங்கிய மாவட்ட நிதியுதவி திட்டத்தின் நோக்கம் வறுமையைக் குறைப்பது மட்டுமல்ல; பஞ்சாயத்தையும் மாவட்டத் திட்டத்தையும் வலுப்படுத்துவதும்தான்.

கருத்தரங்கில் நிறைவுரை ஆற்றிய திட்டக்குழுத் துணைத்தலைவர் மாண்டேக் சிங் அலுவாலியா “”இந்தத் திட்டத்தின் அடிப்படையே மாவட்டத்தில் திட்டமிடுதல்” என்ற வழக்கத்தை உருவாக்க வேண்டும் என்பதுதான் என்று கூறினார். கிடைக்கும் நிதியை முறைப்படி கிராமங்களிலும் நகரங்களிலும் பயன்படுத்தினால் மிகப்பெரிய மாற்றங்களை உருவாக்கமுடியும். இதைத்தான் உள்ளாட்சிகள் செய்யவேண்டும். இதை உணர்ந்து மாவட்டத்திற்கு ஒரு திட்டத்தினை உருவாக்கவேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.

மத்திய அரசின் நிதியை வாங்க ஏன் தயக்கம் என்று வடமாநிலங்களிலிருந்து வந்த சில தலைவர்களையும், அதிகாரிகளையும் கேட்டபோது, பணம் வாங்கத் தயக்கம் இல்லை; மத்திய அரசு வகுத்த விதிமுறைகளைப் பின்பற்றி, ஒரு மாவட்டத் திட்டம் தயாரிக்க வேண்டும். அது அவ்வளவு எளிதான வேலை அல்ல என்று கூறினர்.

ஊராட்சி, பேரூராட்சி, ஒன்றியம், நகராட்சி போன்றவற்றிலிருந்து திட்டங்களைப் பெற்று தொகுத்து மாவட்டத் திட்டம் ஒன்றை உருவாக்க வேண்டும். இதற்குப் புள்ளிவிவரம் தேவை.

அரசின் நலத் திட்டங்களைக் கண்டுபிடித்து தேவைகளுடன் பொருத்தவேண்டும். மத்திய, மாநிலத் திட்டங்கள் மாவட்டத் திட்டத்திற்குள் கொண்டுவரப்பட்டுவிட்டால், மாவட்ட அரசுத்துறைகள், அதிகாரிகள் நினைத்தபடி செயல்பட முடியாது. இது, நிதிவிரயத்தைப் பெருமளவில் குறைத்துவிடும். அத்துடன் ஊழலையும் குறைத்துவிடும்.

ஆனால் மாவட்டங்களில் உள்ள திட்டக்குழு, கேரளத்தைத் தவிர வேறு எந்த மாநிலத்திலும் வலுவாக – அதிகாரிகள், நிபுணர்கள் அடங்கியதாக இல்லை. மாநில அரசின் வளர்ச்சித் துறை அதிகாரிகள் இதில் ஆர்வம் காட்டவில்லை என்றால் திட்டம் தயாரிப்பது என்பது ஒரு கானல்நீர்தான் என்று பதிலளித்தனர் பலர்.

இந்தத் திட்டத்தை மேலோட்டமாகப் பார்த்தால், மத்திய அரசு ஒரு மாவட்டத்திற்கு அளிக்கும் 20 கோடி ரூபாய்க்கு இவ்வளவு பெரிய வேலையைச் செய்ய வேண்டுமா எனத் தோன்றும். ஆனால் இந்தத் திட்டம் பணத்திற்காக அல்ல. இந்த நிதி பெரும்பாலும் திட்டத்தில் உள்ள இடைவெளியை அடைப்பதற்காகத்தான்.

மாவட்டத் திட்டம் உருவாக்குவதில் பல்வேறு சிரமங்கள் உள்ளன. ஒரு சில மாநிலங்கள் தங்களுக்கான நிதியைப் பெற முயன்றுள்ளன. திட்டங்களைச் சமர்ப்பித்து நிதியையும் பெற்றுவிட்டன. தமிழகம் இப்பொழுதுதான் இந்தத் திட்டத்தை நோக்கிப் பயணிக்க ஆரம்பித்துள்ளது. நமது பஞ்சாயத்துகள் விரைந்து செயல்பட்டு, திட்டத்தினை உருவாக்கி நமக்குக் கிடைக்கக்கூடிய 120 கோடி ரூபாயைப் பெற்று வறுமையைக் குறைக்க முயல வேண்டும்.

—————————————————————————————————————————————————

ஐந்தாண்டுத் திட்டம்: தமிழகம் சாதித்தது என்ன?

 எம். ரமேஷ்

ஐந்தாண்டுகளுக்கொரு முறை ஐந்தாண்டு திட் டங்கள் பற்றி பேசப்ப டுகிறது. இது என்ன வென்று எத்தனை பேருக்குத் தெரியும்.
ஏதோ செய்தித்தாளில் 11-வது ஐந்தாண்டு திட்டம் என்றும் அறிவிப்பு வெளியானது.
இதற்குத் திட்ட ஒதுக்கீடாக ரூ. 36 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்பது மட் டும் தெரியும்.
இந்த ஆண்டு செயல்படத் தொடங்கும் 11-வது ஐந்தாண்டு திட்ட காலத்தில் தமிழ கத்துக்கு மட்டும் ரூ. 85 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தில்லியி லிருந்து திரும்பியவுடன் முதல்வர் கருணா நிதி பெருமைபட அறிவித்தார். ஒட்டு மொத்தமாக அனைத்து மாநிலங்களுக்கும் சேர்த்து ரூ. 10 லட்சம் கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.
சுதந்திர இந்தியாவில் 1950-ம் ஆண்டு பல்வேறு இலக்குகளை எட்ட வேண்டும் என்ற குறிக்கோளுடன் கொண்டுவரப்பட் டதுதான் ஐந்தாண்டு திட்டம்.
அந்த வகையில் பல்வேறு இலக்குகளை முன்னிறுத்தி 11-வது ஐந்தாண்டு திட்டத் துக்கு மாநில முதல்வர்கள் ஒப்புதல் அளித் துள்ளனர். இதில் முக்கியமாக வறுமை ஒழிப்பு, வேலை வாய்ப்பு, அனைவருக்கும் கல்வி, மக்கள் தொகையைக் கட்டுப்படுத்து தல், அனைத்துக் கிராமங்களுக்கும் சுகாதா ரமான குடிநீர் வசதி உள்ளிட்ட அனைத் தும் 2013-ம் ஆண்டுக்குள் எட்டப்பட வேண்டும் என்று 11-வது திட்டக் காலத் தில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சரி, புதிய திட்டத்தைச் செயல்படுத்தும் முன் 10-வது ஐந்தாண்டு திட்டத்தின் இலக்கு எந்த அளவுக்கு எட்டப்பட்டுள் ளது என்பதை, காலச் சக்கரத்தைப் பின் னோக்கிப் பார்ப்பது, தவறுகளைக் களை வதற்குப் பயன்படும். ஒட்டுமொத்த இந்தி யாவைப் பார்ப்பதைவிட தமிழகத்தில் மட் டும் எத்தகைய வளர்ச்சி எட்டப்பட்டது, எட்டாமல் விடப்பட்டது எவை எவை என்று பார்ப்பது சாலப் பொருத்தம்.
10-வது ஐந்தாண்டு திட்டக் காலத்தில் தமிழகத்தில் 8 சதவீத பொருளாதார வளர்ச்சி எட்டப்பட வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் எட்டப்பட்டதோ 5.9 சதவீத வளர்ச்சியே.
இலக்கை எட்டாததற்குக் காரணம் இயற்கை சீற்றம் என்று கூறப்படுகிறது.
இதேபோல வேளாண் துறையில் 4 சத வீத வளர்ச்சி எட்டவேண்டும் என்று இலக் கும், உணவு உற்பத்தி இலக்கும் எட்டப்பட வில்லை.
தொழில்துறையில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கு 7.12 சதவீதம். ஆனால் எட்டி யதோ 5.37 சதவீதம்தான். சேவைத் துறை யில் அபரிமித வளர்ச்சி எட்டப்பட்டு 9.77 சதவீதத்தைத் தொட்டது.
பத்தாவது ஐந்தாண்டு திட்டக் காலத்தில் எதிர்பார்க்கப்பட்ட முதலீடு 2,62,502 கோடி. இதில் மாநில அரசின் பங்களிப்பு ரூ. 40 ஆயிரம் கோடி. மத்திய அரசின் பங்க ளிப்பு ரூ. 48 ஆயிரம் கோடி. எஞ்சிய ரூ. 1,74,502 கோடி தனியார் மற்றும் அன்னிய முதலீடு மூலம் திரட்ட இலக்கு நிர்ணயிக் கப்பட்டது. ஆனால் இதில் ஓரளவே எட் டப்பட்டது.
மாநில நிதி பற்றாக்குறையை 3.6 சதவீ தத்திலிருந்து 1.5 சதவீதமாகக் குறைக்க வேண்டும் எனத் திட்டமிடப்பட்டது.
ஆனால் மாநில நிதி பற்றாக்குறை 2006-07-ம் ஆண்டில் 2.6 சதவீதமாக இருந்தது.
2007-ம் ஆண்டுக்குள் வறுமை ஒழிப்பு 10 சதவீதமாக இருக்க வேண்டும் என்றும் 2012-க்குள் முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டபோதி லும் தமிழகத்தில் ஏழ்மையில் வாடுவோர் நிலை 22 சதவீதம் என்பது வருத்தமளிக்கும் விஷயமே.
பத்தாவது ஐந்தாண்டு திட்டக் காலத்திற் குள் அதாவது 2007-க்குள் மாநிலத்தில் உள்ள அனைவருக்கும் 100 சதவீத கல்வி அளிக்க வேண்டும் என்ற இலக்கு நிர்ண யிக்கப்பட்டது. ஆனால் தொடக்கக் கல்வி யைப் பாதியிலேயே கைவிடும் சிறுவர்க ளின் சதவீதம் 3.81 ஆகவும் நடுநிலைக் கல் வியைக் கைவிடுவோர் எண்ணிக்கை 7.58 சதவீதமாகவும் உள்ளதே யதார்த்த நிலை.
22,877 சதுர கிலோமீட்டர் பரப்பள வுள்ள வனப் பகுதியை அதிகரிக்க வேண் டும் என்ற இலக்கும் எட்டப்படவில்லை.
அனைத்துக் கிராமங்களுக்கும் 2007-ம் ஆண்டுக்குள் பாதுகாக்கப்பட்ட குடிநீர் அளிக்க வேண்டும் என்ற இலக்கில் 968 கிராமங்கள் விடுபட்டு போயுள்ளன.
தமிழகத்தில் மிகவும் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை எட்டியது தகவல் தொழில் நுட்பம் சார்ந்த துறைகள் மட்டுமே. ஐடி, ஐடிஇஎஸ், பிபிஓ துறைகள் அபரிமித வளர்ச்சியை எட்டியதை மறுக்க முடி யாது. தொழில்துறை வளர்ச்சியை முடுக்கி விட பிரத்யேகத் தொழில் கொள்கையை யும் தமிழக அரசு வெளியிட்டது.
இதேபோல மக்கள் தொகை பெருக்கத் தைக் கட்டுப்படுத்துவதிலும் தமிழக அரசு இலக்கை எட்டியுள்ளது.
இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 7 சதவீத பங்களிப்பை அளித்து மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது தமி ழகம். அதேபோல தனிநபர் சராசரி வருவா யிலும் நான்காவது இடத்தில் தமிழகம் உள் ளது பெருமையான விஷயமே.
அதேசமயம் ஏழ்மையில் வாடும் மக்கள் அதிகம் வாழும் மாநிலங்களில் நான்கா வது இடத்தில் தமிழகம் உள்ளது வருத்தப் பட வேண்டிய விஷயம். தமிழகத்தில் 80 லட்சம் பேர் வறுமையில் வாடுவதாகப் புள் ளிவிவரம் தெரிவிக்கிறது. இது மொத்த மக் கள் தொகையில் 20 சதவீதமாகும். ஒட்டு மொத்த இந்தியாவில் உள்ள வேலை வாய்ப்பற்ற இளைஞர்களில் 10 சதவீதம் பேர் தமிழகத்தில் உள்ளனர் என்பதும் அதிர வைக்கும் உண்மைத் தகவல். ஒட்டு மொத்த இந்தியாவில் இது 6.09 சதவீதமே.
முதலாவது ஐந்தாண்டு திட்டக் காலத் துக்கு மத்திய அரசு ஒதுக்கிய தொகை ரூ. 2,069 கோடி.

ஐம்பது ஆண்டுகளில் இதற் கான ஒதுக்கீடு பல மடங்கு அதிகரித்துள் ளது. ஆனால் ஒவ்வொரு ஐந்தாண்டு திட்டக் காலத்திலும் அதன் இலக்கு எட் டப்பட்டதா என்று திட்டத்தை வகுப்ப வர்கள் அலச வேண்டும். இலக்கு எட்ட வில்லையெனில் அதற்குரிய காரண, காரி யங்களைக் கண்டறிய வேண்டும். வெறு மனே நிதியை ஒதுக்கியதோடு தங்களது கடமை முடிந்து விட்டதாக அரசியல்வா திகளும், கடனே என்று திட்டத்தைச் செயல்படுத்த அதிகாரிகளும் முனைந் தால், நூறாண்டுகள் கடந்தாலும் நிர்ண யிக்கப்படும் இலக்கு வெறும் காகிதத்தில் மட்டுமே இருக்கும். அதை எட்டவே முடி யாது.

எம். ரமேஷ்

Posted in 5, Administration, ADMK, Allocation, Appraisal, backward, Biz, BPO, Budget, Buildings, Caste, Census, Center, City, Community, Computer, Control, Council, Development, DMK, Economy, Education, Expenses, Exports, family, Finance, Fund, GDP, Governments, Govt, Grant, Growth, Homes, Housing, Hygiene, Improvements, Inaction, Income, Info, InfoTech, infrastructure, investments, IT, ITIS, JJ, Kalainjar, Karunanidhi, Kids, KK, local, Mani, Mani shankar, ManiShankar, Measures, Metrics, Money, NGO, Outsourcing, Panchayat, Panchayat Raj, Panchayath, parliament, Planning, Plans, Play, Playgrounds, Policy, Poor, Population, Progress, Refer, Reference, Region, Residences, Resources, Restrooms, Rich, Rural, Sanitary, Schools, Sector, Services, Software, Spend, Spending, Sports, Stalin, State, Statistics, Statz, Students, TamilNadu, Teach, Teachers, Technology, Telecom, TN, Toilets, Villages, Zones | Leave a Comment »

Vidya Sagar – Community Mental Health and Development (CMHD): mental illness – Schizophrenia

Posted by Snapjudge மேல் நவம்பர் 5, 2007

சேவை: மனம் இருந்தால் “மார்க்’ உண்டு!

மன வளர்ச்சி குன்றியோர் காப்பகங்கள் பல உருவாகியுள்ளன. ஆனால் அவர்களை அவர்களே காத்துக் கொள்வதற்கான பயிற்சிகளும் அளிக்கப்படும் அமைப்புகள் அவற்றில் சிலவே.

இத்தகையவர்களுக்காகக் கடந்த 22 ஆண்டுகளாக சென்னை கோட்டூர்புரத்தில் இயங்கி வந்த ஸ்பாஸ்டிக் சொûஸட்டி ஆஃப் இந்தியா அமைப்பு, இப்போது “வித்யாசாகர்’ என்ற பெயரில் இயங்கத் தொடங்கியிருக்கிறது. ஏன் இந்தப் பெயர் மாற்றம் என்று அவர்களிடம் காரணம் கேட்ட போது, “”பெயரில்கூட அவர்களின் மன வளர்ச்சியை நினைவுபடுத்தி காயப்படுத்த வேண்டாம் என்பதால்தான்” என்கிறார் ஜெயந்தி நடராஜன். இந்த அமைப்பின் விற்பனை மற்றும் வேலைவாய்ப்புப் பிரிவைச் சேர்ந்தவர் இவர். இத்தகையவர்களுக்கான வேலைவாய்ப்புகளுக்காகவும் முனைப்பாகச் செயல்பட்டு வருகிறார்.

“”கடந்த 22 ஆண்டுகளாக மூளை முடக்குவாதம் சம்பந்தமான ஊனமுற்றோரின் மேம்பாட்டுக்காகவும் மாணவர்களைப் பயிற்றுவிக்கவும் பாதுகாக்கவும் செயல்பட்டு வந்த நாங்கள் இப்போது அவர்களுக்கு இலவசமாகத் தொழிற் பயிற்சிகள் அளிக்கவும் ஆரம்பித்திருக்கிறோம்.

எந்தப் பணி இடத்திலும் ஆங்கிலத்தின் தேவை அதிகரித்து வருவதால் அதற்கான பயிற்சியை அளிக்கிறோம். கணினி சம்பந்தமான குறைந்தபட்ச திறன் இப்போது எல்லா துறைகளிலும் தேவையாகிவிட்டது. அதற்கான பயிற்சியையும் “பிஹேவியரல் ஸ்கில்’ எனப்படும் நடத்தைத் திறனுக்கான பயிற்சியையும் அளிக்கிறோம். இவையாவும் இரண்டு மாத இலவச பயிற்சித் திட்டங்களாகும். நடத்தைத் திறன் என்பது உளவியல் ரீதியாக அவர்களை செழுமைப்படுத்துவதாகும். பழகும் தன்மை, செய்தியை விளங்க வைக்கும் திறமை போன்றவை சம்பந்தமானது.

18 வயது முதல் 35 வயதுக்கு உட்பட்ட உடல் ஊனமுற்ற யாவரும் இதில் சேரலாம். உடல் ஆரோக்கியத்துடன் எல்லா திறமையும் இருந்தும் போட்டியை எதிர் கொள்வதற்கான மனோ தைரியம் இல்லாதவர்கள் இருக்கும் சூழலில் எங்களிடம் பயிற்சி பெறுபவர்களின் கண்களில் தெரியும் நம்பிக்கை ஒளி உண்மையில் பிரமிக்க வைக்கிறது” என்கிறார் அவர்.

மனசுகள் முடங்காதவரை எதுவும் யாரையும் எதுவும் முடக்கிவிடமுடியாதுதானே? மனம் இருந்தால் “மார்க்’ உண்டு!

Posted in Behavioral, Challenged, CMHD, cure, Development, Disabled, Disease, Free, Health, Illness, Mental, Phsychological, Schiz, Schizophrenia, service, Skills, Spastic, Students, Teach, Teachers, Vidhyasagar, VidiyaSagar, Vidya Sagar, Vidyasagar, VithiyaSagar, VithyaSagar | Leave a Comment »

Lightening the load of 10th Standard Tamil Textbook: State of Tamil Nadu Education

Posted by Snapjudge மேல் நவம்பர் 1, 2007

தமிழுக்கு அநீதி!

ச. செந்தில்நாதன்

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான தமிழ்ப் பாட நூலின் அளவைக் குறைத்து தமிழக அரசு ஓர் ஆணையை கடந்த ஜூலை மாதம் வெளியிட்டிருக்கிறது. மாணவர்களுக்குச் “சுமை’ அதிகமாக இருக்கிறது என்பது உண்மைதான். இயல்பான வளர்ச்சிக்கு அது குறுக்கே நிற்கிறது என்பதும் உண்மைதான். ஆனால் எந்தப் பாடத்தில் அளவைக் குறைக்க வேண்டும், எதை எடுக்க வேண்டும் என்பதுதான் கேள்வி.

அரசாணையில் திருக்குறளின் அளவைக் குறைத்திருப்பது வியப்பையும் அதிர்ச்சியையும் அளிக்கிறது. புதிய பாடத்திட்டத்தை அறிமுகம் செய்யும் பணிகளுக்காக மாநிலத் திட்டக்குழு துணைத் தலைவரான நாகநாதனைத் தலைவராகக் கொண்ட குழு சென்ற ஆண்டு அமைக்கப்பட்டது. பின்னர் மெட்ரிக் பள்ளிகளில் 10-ம் வகுப்பு தமிழ்ப் பாட நூலின் அளவைக் குறைப்பது குறித்து அரசுக்கு அறிக்கைதர பள்ளிக்கல்வி இணை இயக்குநர் ராஜராஜேஸ்வரி தலைமையில் இன்னொரு குழு அமைக்கப்பட்டது. இது இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அமைக்கப்பட்டது. இந்தக் குழுவும் அறிக்கை தந்திருக்கிறது.

அரசு அந்தக் குழுக்களின் பரிந்துரைகளைப் பரிசீலித்து அதனை ஏற்க, பள்ளி கல்வித்துறைச் செயலர் 26-7-2007-ல் அரசாணை வெளியிட்டுள்ளார். இந்த அரசாணைப்படி குறைக்கப்பட்ட பாடத்தில் திருக்குறளும் அடங்கும்.

10-ம் வகுப்பு பாடத்தில் திருக்குறளிலிருந்து

  1. “புகழ்’,
  2. “வெகுளாமை’,
  3. “இடனறிதல்’,
  4. “ஊக்கமுடைமை’

என நான்கு அதிகாரங்கள் இடம் பெற்றன. இவற்றுள் “இடனறிதல்’, “ஊக்கமுடைமை’ ஆகிய இரு அதிகாரங்களிலும் பத்து பத்து வரிகள் – அதாவது, இருபது வரிகள் நீக்கப்பட்டுள்ளன. நம்முடைய கேள்வி, இந்த இருபது வரிகள், மாணவர்களுக்கு ஒரு சுமையா? திருக்குறளைக் கூடுதலாகப் படிப்பது நல்லதுதானே? குறைக்க வேண்டும் என்றால் ஏற்கெனவே அளவில் குறைந்த குறளின்மேல் ஏன் கைவைக்க வேண்டும்? இந்த இருபது வரிகள் மாணவர்களுக்கு ஒரு சுமையா?
நீக்கப்பட்டவைகளில் ஐந்து வரிகளைக் கொண்ட குறுந்தொகைப் பாடலும் உண்டு. இந்தப் பாடல் நீக்கத்திற்கு வேண்டுமானால் ஒரு சமாதானம் சொல்ல முடியும். அதாவது, அது அகப்பாடல், காதல் சம்பந்தமான பாடல் என்று சொல்லலாம். 16 வயதிலே குறுந்தொகைக் காட்சியைக் காட்ட வேண்டாம் என்று குழு நினைத்திருக்கலாம். ஆனால் குழு ஒன்றைக் கவனிக்க மறந்துவிட்டது. மாணவர்கள் ஏற்கெனவே காதல் காட்சிகள் நிறைந்த திரைப்படங்களைப் பார்க்கிறார்கள். திரைப்படத்திலும் தொலைக்காட்சியிலும் காணாத காட்சியா குறுந்தொகைக் காட்சி? திரைக்காதலுக்குப் பதிலாக ஓர் ஆரோக்கியமான காதலை அவர்கள் குறுந்தொகையில் தரிசித்து விட்டுப் போகட்டுமே!

கவிஞர் தமிழ் ஒளியின் “”அந்தரத்தில் மேடை அமைத்தார்” என்ற பாடல் முழுமையாக நீக்கப்பட்டுள்ளது. இது நியாயமல்ல. பாரதி, பாரதிதாசனுக்குப்பின் தமிழுலகம் அறியப்பட வேண்டிய கவிஞர் தமிழ் ஒளி. எனவே அவர் பாடல்கள் பாடத்தில் வருவதுதான் சரியாக இருக்கும். மேலும் “”அந்தரத்தில் மேடை அமைத்தார்” என்ற கவிதை அறிவியல் வளர்ச்சியையும், மனித ஆற்றலையும் வெளிப்படுத்துவது. இதை ஏன் நீக்க வேண்டும்? இளைய தலைமுறை தமிழ் ஒளியை அறிய வேண்டாம் என்று நினைக்கிறார்களா? நீர்த்துப்போன கவிதைகளை எல்லாம் பாடப்புத்தகத்தில் நிறுத்திக்கொண்டு, அடர்த்தியான கவிதைகளை அவசர அவசரமாக நீக்குவதேன்?

உரைநடைப் பகுதியில் டாக்டர் ராஜம்மாள் தேவதாஸ் எழுதிய மனையியல் என்ற கட்டுரை எடுக்கப்பட்டிருக்கிறது. அடுத்து துணைப்பாடத்தில் இரண்டு கதைகள் நீக்கப்பட்டுள்ளன.

நீக்கப்பட்ட ஒரு கதை அசோகமித்திரனின் “விடிவதற்குள்’ என்ற சிறு கதையாகும். சென்னை நகரில் தண்ணீர் பஞ்சத்தால், விடிவதற்குள் தண்ணீர் பிடித்து வைப்பதற்காக அலையும் ஒரு குடும்பத்தலைவியின் கதை இது. தண்ணீர்த் தட்டுப்பாடு தலைவிரித்து ஆடும்போது, எளிய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்ன பாடுபடுகிறார்கள் என்பதைச் சித்திரிக்கும் கதை இது.

தண்ணீர்த் தட்டுப்பாட்டை இப்படி படம்பிடித்துக் காட்டினால், அரசு மீது தவறான எண்ணத்தை ஏற்படுத்திவிடும் என்ற எண்ணமோ தெரியவில்லை; நீக்கிவிட்டார்கள். இது ஒரு யதார்த்தமான கதை. ஒரு வாழ்க்கைப் பதிவு. அப்படித்தான் குழு பார்த்திருக்க வேண்டும். ஆனால் குழு அரசியல் நோக்கில் கணக்குப்போட்டு கழித்தல் வேலையைச் செய்திருக்கிறது. இப்படிப் பார்த்தால் வாழ்க்கையின் சிரமங்களைச் சித்திரிக்கும் எந்தக் கதையும் பாடப் புத்தகத்தில் இடம் பெற முடியாமல் போய்விடும்.

முற்போக்கு எழுத்தாளர் சோலை சுந்தர பெருமாளின் “மண்ணாசை’ நீக்கப்பட்ட, இன்னொரு கதை. இந்தக் கதையின் நீக்கத்திலும் அரசியல் இருக்கிறது.

பட்டாளத்தில் வேலைபார்த்து சொந்த மண்ணுக்குத் திரும்பும் பட்டாளத்தார் தாம் கொண்டுவந்த பணத்தை எல்லாம் நிலத்தில்கொட்டி மா, பலா, கொய்யா என்று மரங்களை வளர்த்து, தன் வாழ்க்கையையே அவற்றோடு பிணைத்துக்கொள்கிறார்.

அவருடைய மகன் கொஞ்சம் தோட்டத்தை வைத்துக்கொண்டு, மீதித் தோட்டத்தை எல்லாம் மனைகளாகப் பிரித்து, புதிய நகரை உருவாக்கப்போகும் நபர்களுக்கு விற்க ஏற்பாடு செய்து, கடைசியில் தோட்டம் விற்கப்படுகிறது. பத்திரத்தைப் பதிவு செய்துவிட்டு வரும் பட்டாளத்தார், அதற்குள் மரங்கள் வெட்டப்படுவதைப் பார்த்து, மரத்தோடு மரமாய் சரிந்து விழுகிறார். மரணப் படுக்கையில் நாள்கள் ஓடுகின்றன. மண்ணாசைதான் உயிரைப் பிடித்து இழுத்துக் கொண்டிருக்கிறது என்று சொல்லும் அவருடைய மைத்துனர், தோட்டத்திற்குப்போய் மண் எடுத்து வந்து, தண்ணீரில் கரைத்து பட்டாளத்தார் வாயில் ஊற்றுகிறார். சிறிது நேரத்தில் ஒரே விக்கலோடு உயிர்போய்விடுகிறது.

இந்தக் கதையைப் பாடத்திலிருந்து விலக்குவதில் ஓர் உள்ளார்ந்த அரசியல் இருப்பதாகத் தெரிகிறது. நிலங்களைக் கையகப்படுத்தும் சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கும், பெரும் தனியார் நிறுவனங்களுக்கும் மக்கள் மத்தியில் இப்போது எதிர்ப்பு வலுத்து வருகிறது.

இந்தச் சூழலில் “மண்ணாசை’ கதையைப் படித்தால் மண்ணாசை அதிகமாகுமே என்ற எண்ணமும் இக்கதையை நீக்க ஒரு காரணமாக இருக்கக்கூடும்.

தமிழ் ஒளி, சோலை சுந்தரபெருமாள் போன்றவர்கள் முற்போக்குச் சிந்தனையாளர்கள். முற்போக்கு வாசத்தை மாணவர்கள் நுகர்ந்துவிடக் கூடாது என்பதும் குழுவின் குறிக்கோளாக இருந்திருக்க வேண்டும். திருக்குறளின் அளவைக் குறைப்பது என்பது குழுவின் நோக்கமாக இருந்திருக்காது. தாங்கள் அரசியல்நோக்கில் எடுத்த முடிவை அமலாக்க “திருக்குறளிலேயே சில குறள்களை எடுத்துவிட்டோம்’ என்று காரணம் காட்டுவதற்குத்தான் திருக்குறளிலும் கைவைத்திருக்கிறார்கள் என்று கருதத் தோன்றுகிறது.

மாணவர்களின் பாடச்சுமையைக் குறைக்க வேண்டும் என்பது கல்வியாளர்களின் கோரிக்கைதான். அதற்காக மாணவர்கள் சிரமப்படும் பாடங்களில் சுமையைக் குறைக்க வேண்டுமே தவிர, சிந்திக்க வைக்கும் பாடங்களை நீக்கக்கூடாது.

தமிழக அரசு தாமதம் செய்யாமல் தன்னுடைய அரசாணையைத் திரும்பப்பெற வேண்டும்.

(கட்டுரையாளர்: தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க முன்னாள் மாநிலத் தலைவர்)

Posted in 10th, Ami, Answers, Asokamithiran, Asokamithran, Asokamitran, Avoid, Books, Conservative, Couplets, Decrease, Delete, Education, Exams, Fiction, Kural, Kurunthogai, Kurunthokai, Language, Learn, Lessons, Liberal, Life, Lighten, Literature, Load, Main, Non-detail, Obsolete, PAK, papers, Planning, Poems, Poet, Questions, Read, Reduce, Sample, Sangam, Schools, Second, Songs, standard, State, Students, Tamil, Tamil Nadu, TamilNadu, Teach, Teachers, Tenth, Textbook, Textbooks, Thirukkural, Thirukural, Thiruvalluvar, TV, Valluvar | Leave a Comment »

Teachers Day Special – Radhakrishnan to APJ Abdul Kalam

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 5, 2007

சர்வேப்பள்ளி முதல் ராமேசுவரம் வரை!

அ. கோவிந்தராஜு

(கட்டுரையாளர்: முதல்வர், டிஎன்பிஎல் மெட்ரிக் மேனிலைப்பள்ளி, கரூர்).

ஓர் ஆசிரியர் தம்மிடம் படிக்கும் மாணவர்களிடம் ஏற்படுத்தும் தாக்கம் அளப்பரியது. ஆசிரியரின் நடை, உடை, சிந்தனை, சொல், செயல் அத்தனையும் மாணவர்களிடத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் கூறுகளாகும். பார்த்துக் கற்றல் என்னும் உளவியல் நிகழ்வு மாணவப் பருவம் முழுவதும் நடைபெறுகிறது என்பதை ஆசிரியப் பெருமக்கள் உணர்ந்து, தம் அகவாழ்வையும் புறவாழ்வையும் சிறப்பாக வைத்துக்கொள்ள வேண்டியது இன்றியமையாத ஒன்றாகும்.

வீட்டுச்சூழல் எவ்வளவு மோசமாக இருந்தாலும், நன்மாதிரியாக பின்பற்றத்தக்க ஆசிரியர்கள் அமைந்துவிட்டால், சேற்றில் முளைத்த செந்தாமரைபோல மாணவர்கள் நல்ல குடிமக்களாக உருவாவார்கள்.

படித்து முடித்து, பணியில் சேர்ந்து, தம் தந்தையின் ஓராண்டு ஊதியத்தை ஒரே மாதத்தில் சம்பாதிக்கும் இளைஞர்கள், அறவாழ்வில் நாட்டமின்றி, மனம்போன போக்கில் வாழும் நிலைகெட்ட மாந்தர்களாக மாறுவதற்குக் காரணம் என்ன? படிக்கும் காலத்தில் பாடஅறிவைப் பெற்ற அளவுக்கு, மனிதநேயக் கல்வியைப் பெறவில்லை அல்லது ஆசிரியர்கள் தரவில்லை என்பதேயாகும்.

“வாடி மனம் மிக உழன்று, பிறர் வாடப் பல செயல்கள்’ செய்யும் இவர்கள், ஒருகாலத்தில் வகுப்பறையில் பாடம் கற்ற மாணவர்கள்தாம். நாற்றில் கோளாறா, நடப்பெற்ற சேற்றில் கோளாறா? கல்வி நிலையங்கள் எல்லாம் நாற்றங்கால்கள் ஆகும். அவற்றைப் பராமரிக்கும் பொறுப்பில் உள்ளவர்கள் ஆசிரியப் பெருமக்கள். நாற்றங்கால்கள் பழுதுபட்டால் ஒட்டுமொத்த சமுதாயமே பாழ்பட்டுவிடும். இதை நன்கு உணர்ந்தவர் டாக்டர். சர்வேப்பள்ளி ராதாகிருஷ்ணன். வாழ்வாங்கு வாழும் வழிமுறைகளை அவர் தம் மாணவர்களுக்குக் கற்பித்தார். வழிமுறைகள் சரியாக இருந்தால்தான் முடிவுகள் சரியாக இருக்கும் என்பதில் அசையாத நம்பிக்கை கொண்டவர் அவர்.

உண்ணும் உணவு, ஒருவனுடைய மனப்போக்கை மாற்றும் என்கின்றனர் உடற்கூறு வல்லுநர்கள். உடுக்கும் உடை ஒருவனுடைய மனப்போக்கை மாற்றும் என உளவியலார் கூறுகின்றனர். இவ்விரண்டிலும் டாக்டர். ராதாகிருஷ்ணன் மிகுந்த கவனம் செலுத்தினார். 1950-ஆம் ஆண்டு ரஷிய நாட்டின் தூதராக நியமிக்கப்பட்டார். சர்வாதிகாரி ஸ்டாலின் ஆண்ட காலம்; கடுமையான குளிர்நிறைந்த அந்நாட்டில் அவர் எப்போதும்போல எளிய, தூய்மையான உடையணிந்து வாழ்ந்தார். ஒருபோதும் மது, மாமிசம் போன்றவற்றைத் தொட்டதும் இல்லை. சொல்லப்போனால் அந்நாட்டு மரபுப்படி, விருந்துகளில் மது அருந்தியாக வேண்டும். ஆனால் அதுபோன்ற நிகழ்ச்சிகளில் அவர் பழச்சாறு மட்டும் அருந்துவார். எந்தவொரு தீயபழக்கமும் இல்லாத முன்மாதிரி பண்பாளர் அவர்.

புனிதமான ஆசிரியப் பணிக்குத் தம் தீயநடத்தை மூலம் களங்கம் சேர்க்கும் சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள். மற்ற துறைகளில் ஒரு தவறு நடந்தால் அது அந்தத் துறையை மட்டுமே பாதிக்கும்; ஆனால் கல்வித்துறையில் நடக்கும் தவறு ஒட்டுமொத்த சமுதாயத்தையே பாதிக்கும். மற்ற துறைகளின் செழுமையும் செயல்பாடும் கல்வித்துறையின் அறநெறிகளைப் பொருத்தே அமையும் என்பார் கல்வி நிபுணர் டர்க்ஹிம். ஆசிரியர் தினத்தையொட்டி, இவற்றையெல்லாம் ஆசிரியர் சமுதாயம் எண்ணிப் பார்க்க வேண்டும்.

டாக்டர். ராதாகிருஷ்ணன் ஆசிரியப் பணியை முதன்மைப் பணியாகக் கொண்டார். தூதராக, குடியரசுத் தலைவராகப் பணியாற்றிய அவர், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்திலும் பணியாற்றியிருக்கிறார். இன்று, ஆசிரியர்களில் சிலர் ஆசிரியப் பணியைத் துணைத்தொழிலாகவும், விவசாயம், வணிகம் போன்றவற்றை முதன்மைத் தொழிலாகவும் கொண்டுள்ளனர். இவர்கள், சக்தி எல்லாம் தீர்ந்துபோய், சக்கையாக வகுப்பில் நுழைந்தால் எப்படி மாணவர் மனம் கவரும் வகையில் பாடம் நடத்த முடியும்? இந்த நிலை அடியோடு மாறும் நாள் எந்நாளோ?

1964-ல் அரசால் நியமிக்கப்பட்ட கோத்தாரி குழு, ஒழுக்கமும் பண்பாடும் உடையவர்களை மட்டுமே ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும் என்று வலியுறுத்தியது. இது எவ்வளவு இன்றியமையாதது என்பது ஆய்வு மாணவிகளின் சோகக்கதையைக் கேட்டால் புரியும். ஆய்வு ஏட்டில் சில வழிகாட்டிகளின் கையெழுத்தைப் பெறுவதில் சிரமங்கள் பல உள்ளன.

இவர்களை ஆசிரியர்கள் என்று எப்படி ஒப்புக்கொள்ள முடியும்? தம்மிடம் பயிலும் குழந்தைகளுக்கு தாம் இரண்டாவது பெற்றோர் என்பதை எப்போதும் உணர்ந்து ஆசிரியர்கள் செயல்பட வேண்டும்.

நேர்மையாக உழைக்கும் ஆசிரியர்களுக்கு அரசும் சமுதாயமும் உரிய அங்கீகாரத்தை எப்போதும் தரும்; தரவும் வேண்டும். சர்வேப்பள்ளி ராதாகிருஷ்ணன் என்ற ஆசிரியரையும், ராமேசுவரம் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் என்ற ஆசிரியரையும் குடியரசுத் தலைவர்களாக அமர வைத்து அழகு பார்த்ததே நம் நாடு. இது சமுதாயம் தந்த அங்கீகாரம்தானே?

ஒரு குக்கிராமத்து ஆசிரியருக்குக் கிடைத்த அங்கீகாரத்தைப் பற்றி அறிந்தால் நீங்கள் வியப்படைவீர்கள். ஈரோடு மாவட்டத்தில் மலையப்பாளையம் என்னும் சிற்றூரில் ஆசிரியப் பணியை அறப்பணியாகச் செய்து ஓய்வு பெற்ற ஓர் அரசுப் பள்ளித் தலைமையாசிரியருக்கு (சொ. அய்யாமுத்து) அந்த ஊர் மக்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து தம் வருவாயில் ஒரு பகுதியை அளித்து, 2400 சதுர அடியில் ஒரு நிலம் வாங்கி நன்றிக் கடனாக வழங்கினார்கள்.

எனவே, பண்டைய குருகுலத்தில் தொடங்கிய ஆசிரியப் பாரம்பரியம் – “சர்வேப்பள்ளி முதல் ராமேசுவரம்’ வரை பேணிப் போற்றப்பட்ட அந்த ஆசிரியப் பாரம்பரியம் – தொடர்ந்து பராமரிக்கப்பட வேண்டும். வணங்கத்தக்க நம் ஆசிரியப் பெருமக்கள் இனி இந்த உணர்வோடு, “இன்று புதிதாய்ப் பிறந்தோம்’ என்னும் புத்துணர்வோடு நாளை வகுப்பிற்குள் காலடி எடுத்து வைக்க வேண்டும். செய்வார்களா?

(இன்று ஆசிரியர் தினம்)

Posted in APJ, class, Classroom, Instructor, Kalam, President, Presidents, Professor, Radha, Radhakrishnan, Student, Teach, Teacher | Leave a Comment »

Arts club for Mentally disabled in Chennai – Rasa

Posted by Snapjudge மேல் ஜூலை 13, 2007

மனவளர்ச்சி குன்றியோரின் கலைக் குழு: “ரஸா’ அமைப்பு உருவாக்குகிறது
மனவளர்ச்சி குன்றியோரின் கலைத்திறனை வெளிப்படுத்தும் வகையிலும், அந்தத் திறமையின் மூலம் அவர்கள் வருவாய் ஈட்ட உதவும் விதத்திலும் “சிறப்பு கலைக் குழு’வை சென்னையைச் சேர்ந்த “ரஸா‘ (ரமணா சூன்ருத்யா ஆலயா) அமைப்பு உருவாக்குகிறது.

இதற்காக 14 முதல் 30 வயதுக்கு உட்பட்ட மனவளர்ச்சி குன்றிய 15 பேரை வரும் 21-ம் தேதி கலைத்திறன் தேர்வுகளை நடத்தி, தேர்ந்தெடுக்க உள்ளதாக அமைப்பின் நிறுவனர் -இயக்குநர் டாக்டர் அம்பிகா காமேஷ்வர் தெரிவித்தார். 1989 அக்டோபரில் தொடங்கப்பட்ட இந்த அமைப்பு, மன வளர்ச்சி குன்றிய குழந்தைகளின் கலைத்திறனை வளர்க்கும் பணியில் முனைப்புடன் ஈடுபட்டுள்ளது. இங்கு பயிலும் மாணவர்களிடம் எத்தகைய கட்டணமும் வசூலிக்கப்படுவது இல்லை.

ரஸா‘ நடத்தும் சிறப்புப் பள்ளியில் மன வளர்ச்சி குன்றிய 100 பேர் தற்போது பயின்று வருகின்றனர். அவர்களுக்கு இசை, நாட்டியம், நாடகம், முக பாவங்களுடன் கதை சொல்லுதல் உள்ளிட்ட கலைகளில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

அவ்வப்போது ஏதாவது நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு, கலை நிகழ்ச்சிகளை நடத்தி தங்களது திறமையை வெளிப்படுத்தி பாராட்டுகளைப் பெற்று வருகின்றனர். அதே நேரத்தில், முழுக்க முழுக்க மன வளர்ச்சி குன்றியோரை மட்டுமே கொண்ட கலைக் குழுவை உருவாக்க வேண்டும் என்பது “ரஸô’வின் நோக்கம்.

கலைக் குழுவில் இடம்பெறத் தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு இலவச பயிற்சி தரப்படும். பயிற்சிக் காலத்தில் அவர்களுக்கு உதவித் தொகை அளிக்கப்படும்.

மேலும் விவரங்களுக்கு “ரஸா, 1/1 அபிராமபுரம் முதல் தெரு, சென்னை -600 018′ என்கிற முகவரியிலோ, 2499 7607, 6528 1970 என்கிற தொலைபேசிகளிலோ தொடர்பு கொள்ளலாம்.

Posted in Arts, Chennai, Dance, Disabled, Drama, Free, Help, Madras, music, Narration, Performance, Rasa, service, Stage, Story, Students, Teach, Theater, Volunteer | Leave a Comment »

Sindhu Suresh Profile – Decorative arts & handicraft Giftmaking

Posted by Snapjudge மேல் ஜூன் 29, 2007

கலை: பிரெட்டின் விலை ரூ.500!

இட்லி வகையாக இருக்க விரும்புகிறீர்களா? பிரெட் துண்டு வகையாக இருக்க விரும்புகிறீர்களா?

மீந்துபோன இட்லியை உதிர்த்து அம்புஜம் பாட்டி உப்புமா கிண்டுவது -இட்லி வகை!

மீந்துபோன பிரெட் துண்டுகளை உதிர்த்து சென்னை ஆழ்வார்பேட்டை சிந்துசுரேஷ் பல்வேறு அலங்காரப் பொருட்கள் செய்வது -பிரெட் வகை!

மேற்சொன்ன பிரெட் வகையைச் சேர்ந்த சிந்துசுரேஷ் பிரெட்டில் மட்டுமல்ல காகிதம் உட்பட பல பொருட்கள் பயன்படுத்தி ஏ டு இசட் கலைப்பொருட்களைச் செய்யக்கூடியவர். செராமிக் ஒர்க், கிளாஸ் பெயின்டிங், மட்பாண்டங்களில் அலங்காரம், எம்ப்ராய்டரி என எல்லாவற்றிலும் கலைத்தேர்ந்தவர். தமக்குத் தெரிந்த கலையைப் பிறருக்குச் சொல்லியும் கொடுக்கக் கூடியவர். வீட்டையே தம் கைவண்ணத்தில் கலைக்கோயிலாக மாற்றியுள்ள அவரின் கலைப்பேச்சு:

“”பி.எஸ்ஸி மேக்ஸ் படித்து முடித்துள்ளேன். எனக்கு ஏனோ படித்து முடித்து வேலைக்குப் போகவேண்டும் என்ற எண்ணம் சிறுவயதிலிருந்தே இருந்தது இல்லை. பெற்றோர்கள் படிக்க வைத்தார்கள் என்பதற்காகப் படித்தேன். ஆனால், எனக்கு ஓவியம் வரைவது என்றால் சிறு வயதிலிருந்தே கொள்ளை ப்ரியம். சிறிது நேரம் கிடைத்தால்கூட ஏதாவது படங்கள் வரைந்துகொண்டு இருப்பேன். இது திருமணம் முடிந்த பிறகும் தொடர்ந்தது. என்னுடைய கணவர் பிசினஸ்மேன். அவர் இல்லாத நேரங்களில் வரைவதோடு புதியபுதிய பொருட்களைச் செய்து பார்க்கத் தொடங்கினேன். எளிதாக வந்தது. அப்படி நான் செய்த பல பொருட்கள்தான் இப்போது எனது வீட்டை அலங்கரிக்கிறது.

கலைப்பொருட்கள் செய்வதற்கு நான் எங்கும் சென்று பிரத்யேகப் பயிற்சி எதுவும் பெறவில்லை. துணிகளில் செய்யக்கூடிய பெயின்டிங் மட்டும் ஒருவரிடம் கற்றுக்கொண்டேன். மற்றபடி எந்தவகையான கலைப்பொருட்கள் செய்யவும் நான் பயிற்சி பெறவில்லை. ஒரு பொருளைப் பார்த்தே அந்த வகையான முறையில் வெவ்வேறு வடிவங்களில் புதுப்புதுப்பொருட்களைச் செய்யக்கூடிய திறன் எனக்கு இயல்பாக இருக்கிறது. இதற்காக நான் செய்வது ஒன்றே ஒன்றுதான்.

கைவினைப்பொருட்கள் கண்காட்சி எங்கு நடந்தாலும் சென்று பார்ப்பேன். அங்கு என்னென்ன பொருட்கள் வந்திருக்கின்றன. அதன் புதிய வேலைப்பாடுகள் என்ன என்பதையெல்லாம் தெரிந்துகொண்டு அப்படியே நான் செய்துவிடுவேன். இப்படித்தான் எல்லாவகையான கலைப்பொருட்களையும் செய்யத் தொடங்கினேன். நான் கற்ற கலையை கடந்த பத்துவருடமாக பலருக்குச் சொல்லியும் தருகிறேன்.

கிளாஸ் பெயின்டிங், ரிவர்ஸ் கிளாஸ் பெயின்டிங், மதுபானி கிளாஸ் பெயின்டிங், செராமிக் வேலைப்பாடுகள், போன்ஸôய் செயற்கை மரங்கள் தயாரிப்பு போன்றவை சொல்லிக் கொடுத்தாலும் கிளாஸ் பெயின்டிங் கற்றுக்கொள்வதற்குதான் அதிகமானோர் வருகிறார்கள். இதோடு சீனா நாட்டைச் சேர்ந்த மேக்ரேம் வகையிலான அலங்காரப் பொருட்களையும் செய்கிறேன். கற்றும் கொடுக்கிறேன்.

மேக்ரேம் வகையான பொருட்கள் செய்வதற்கு அதிகச் செலவினங்கள் ஆகாது. சணல், நைலான், என எதில் வேண்டுமானாலும் செய்யலாம். ஆரம்பத்தில் அரைஞாண்கயிறு கொண்டுதான் செய்துகொண்டிருந்தேன். விதவிதமான பைகள், பாத்திரங்களுக்குக் கீழே வைக்கக்கூடிய மேட்கள், விநாயகர் போன்ற கடவுளின் உருவங்கள் என எதையும் இதில் செய்யலாம். மிகவும் அழகாக இருக்கும். இந்தவகையான கலைப்பொருட்களுக்கு அதிக வரவேற்பு இப்போது மக்கள் மத்தியில் இருக்கிறது.

ஒரு கலைப்பொருளை செய்வதற்குக் கற்றுக் கொள்ளக்கூடிய காலகட்டம் அவரவர்களின் திறமையைப் பொறுத்திருக்கிறது. சிலர் மூன்று வகுப்புகளிலேயே ஒரு பொருளைக் கற்றுகொடுத்துவிடுகிறார்கள். நான் ஐந்து வகுப்பு முதல் எட்டு வகுப்புவரை கூட எடுக்கிறேன். நான் ஒரு கலைப்பொருளைச் செய்வதற்குக் கற்றுகொடுத்தால், கற்றவர்கள் அவர்களே பல புதிய பொருட்களைச் செய்யக்கூடிய திறனைப் பெறுவார்கள். அதைப்போல என்னிடம் பயிற்சி பெற்ற பிறகு எந்தப் பொருளையும் அவர்கள் தூக்கிப் போடமாட்டார்கள். பழைய காகிதங்களாக இருந்தால் அதை ஒரு கலைப்பொருளாகப் பார்க்கத் தொடங்கிவிடுவார்கள். என் வீட்டில் இருக்கக்கூடிய பொருள்களில் பெரும்பாலானவை பழைய பொருட்களிலிலிருந்து செய்யப்பட்டவை. பார்ப்பவர்களுக்கு அவை ஒருபோதும் தெரியவே தெரியாது. பழைய காகிதங்கங்களை எல்லாம் சேர்த்து பூக்கூடை ஒன்றும், பேனா, பென்சில் போட்டு வைக்கிற ஸ்டாண்ட் ஒன்றும் செய்துள்ளேன். இதைப்போலவே சாப்பிடுகிற பிரெட்டைக் கொண்டும் ஒரு புதுவித ஒர்க் செய்கிறேன். இதற்கும் நல்ல வரவேற்பு இருக்கிறது.

இரண்டு மூன்று நாட்களான பிரெட்டுகளைத் தூளாக்கிக் கொள்ளவேண்டும். பிரெட் என்றால் எறும்பு வரும் இல்லையோ? எறும்போ பூச்சிகளோ வராமல் இருக்க சிங் ஆக்ûஸடு ஒரு சொட்டு மற்றும் ஃபெவிகால் கலந்து சாப்பாத்திக்கு மாவு பிசைவதுபோல நன்றாகப் பிசைந்து கொள்ள வேண்டும். இதன்பிறகு நமக்கு தேவையான உருவங்களில் எதைவேண்டுமானாலும் வடித்துக்கொள்ளலாம். இதன் பிறகு காய வைத்து பெயின்டு மற்றும் வார்னிஷ் அடித்துவைத்துக்கொள்ளலாம். இது எத்தனை ஆண்டுகளானாலும் கெடாமல் இருக்கும். செய்வதும் சுலபம். பார்த்தவுடனேயே எல்லோரையும் கவரும். 10 ரூபாய்க்கு பிரெட் வாங்கி 500 ரூபாய் வரையிலான பொருட்கள் செய்து விற்கலாம்!

என்னிடம் எல்லாவகையான கலைகளையும் கற்றுக் கொள்வதற்கு 2 ஆயிரம் ரூபாய் வசூலிக்கிறேன். ஒரு பொருளை மற்றும் கற்றுக்கொள்வதற்கு 450 ரூபாய் வரை வசூலிக்கிறேன். 450 ரூபாய் கட்டிப் பயிற்சி பெறுகிறவர்கள் பயிற்சி பெறுவதற்கான பொருட்களையும் அவர்களே வாங்கி வரவேண்டும்.

என்னிடம் பயிற்சிபெற்ற பலபேர் அவர்களும் பலருக்குப் பயிற்சி அளித்து லட்சக்கணக்கில் சம்பாதிக்கிறார்கள். இந்தப் பயிற்சியைப் பெற்றவர்கள் சாதாரணமாகவே அறுபதாயிரம் வரை சம்பாதிக்கலாம்.” என்கிறார் சிந்துசுரேஷ்.

-சாப்பிடுவது ஒருவகை. சாப்பிடுகிற பொருட்களைக்கொண்டே புதுப்புது பொருட்களைச் செய்து சாதிப்பது புதுவகை!

Posted in Arts, Bread, Ceramic, chemicals, Crafts, Decorations, Earn, Exhibition, Exports, Gift, Handicrafts, job, Learn, Opportunity, Paintings, profile, Sale, Sculptures, Sindhu, Sindhu suresh, Sindhusuresh, Sindu, Skill, Suresh, Teach | Leave a Comment »

Interview with D Rambabu – Publisher & Editor of English to Telugu to Tamil Dictionary

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 26, 2007

முகங்கள்: தமிழுக்கு ஒரு புது வரவு!

ந. ஜீவா

சிலர் ஒன்றை இப்படித்தான் செய்ய வேண்டும் என்று நினைத்துச் செய்வார்கள். ஆனால் அது பிள்ளையார் பிடிக்கக் குரங்காய் முடிந்துவிடும். ஆனால் சிலர் செய்யும் செயல்களோ அவர்களே எதிர்பாராத வகையில் சிறப்பாக அமைந்துவிடும். தமிழ் வழிக் கல்வி என்றாலே ஏளனமாகப் பார்க்கும் இக்காலத்தில் மருத்துவம் பயிலும் மாணவர்களுக்கும் நர்சு பயிற்சி மேற்கொள்பவர்களுக்கும் ஏன் நோயாளிகளுக்கும் பயன்படும் விதமாக மருத்துவத்துறையில் வழக்கத்தில் உள்ள ஆயிரக்கணக்கான சொற்களுக்கு ஓர் அகராதியைத் தொகுத்துப் பதிப்பித்திருக்கிறார், டி.ராம்பாபு. இது ஆங்கிலம் – தெலுங்கு – தமிழ் அகராதியாகும்.

சென்னை விஜயா குரூப் ஆஃப் ஹாஸ்பிட்டலின் நிதி, கணக்குப் பிரிவின் பொது

மேலாளராகப் பணிபுரியும் ராம்பாபு,

தமிழுக்கோ, தெலுங்குக்கோ பெரிய தொண்டு செய்வதாக நினைத்தெல்லாம் இதைச் செய்யவில்லை.

அவரைச் சந்தித்துப் பேசிய போது…

தமிழிலும் தெலுங்கிலும் இப்படியொரு மருத்துவ அகராதியைக் கொண்டுவர வேண்டும் என்ற எண்ணம் எப்படித் தோன்றியது?

நான் விஜயா குரூப் ஆப் ஹாஸ்பிட்டலில் 1984 ல் வேலைக்குச் சேர்ந்தேன். நிறைய பேஷன்ட்ஸ் ஆந்திராவிலிருந்து இங்கு வந்து அட்மிட் ஆவார்கள். எனது பூர்வீகம் ஆந்திரா என்பதால் டாக்டர்கள் ஆங்கிலத்தில் எழுதிக் கொடுத்த மருத்துவக் குறிப்புகள் என்னவென்று தெரியாமல் அவர்கள் என்னிடம் வந்து கேட்பார்கள். எனக்குத் தெரிந்த அளவுக்கு த் தெலுங்கில் அவர்களுக்குச் சொல்வேன். ஆனால் பல வார்த்தைகளுக்கு எனக்கு அர்த்தம் தெரியாது. அதற்காக எத்தனையோ டிக்ஷனரிகளைப் புரட்டியிருக்கிறேன். இருந்தும் பல வார்த்தைகளுக்கு அர்த்தம் தெரியாது.

ஆங்கிலத்தில் உள்ள மருத்துவத் துறை சொற்களுக்குத் தமிழிலோ, தெலுங்கிலோ பொருள் கண்டுபிடிப்பது எவ்வளவு கஷ்டம் என்று உணர்ந்தேன். எனவே நான் கண்டறிந்த சொற்களுக்கான பொருளைத் தொகுத்து ஓர் அகராதியாக வெளியிட்டால் என்ன என்று தோன்றியது.

நீங்கள் தயாரித்துள்ள இந்த அகராதி யாருக்குப் பயன்படும்?

சாதாரண மனிதனுக்கே இந்த அகராதி பயன்படும். டாக்டர் தனது மெடிக்கல் ரிப்போர்ட்டில் ஏ/பஎன்று போட்டிருப்பார். இதற்கு என்ன அர்த்தம் என்று பேஷன்ட்டுக்குத் தெரியாது. இந்த அகராதியைப் பார்த்தால் ஏ/ப என்றால் ஹைப்பர் டென்சன் என்றும் தமிழில் மிகை ரத்த அழுத்தம் என்றும் தெரிந்து கொள்ளலாம். க்ஷ.ண்.க். என்று மருந்துச் சீட்டில் குறிப்பிட்டிருப்பார்கள். இதற்கு அர்த்தம் ஒரு நாளைக்கு இரண்டு முறை என்று இந்த அகராதியின் மூலமாகத் தெரிந்து கொள்ளலாம்.

அடுத்து மருத்துவம் பயிலும் மாணவர்களுக்கு, நர்சிங் பயிலும் மாணவர்களுக்கு இந்த அகராதி பயன்படும். ஆங்கிலத்தில் புரியாத சொற்களுக்கு தமிழில், தெலுங்கில் என்ன பொருள் என்று தெரிந்து கொள்ளலாம். குறிப்பாக நர்ஸ்களுக்கு அதிகம் பயன்படும். டாக்டர் என்ன எழுதியுள்ளார், மெடிக்கல் ரிப்போர்ட் என்ன சொல்கிறது என்பதைப் பார்த்து வேலை செய்ய வேண்டியவர்கள் அவர்கள். அவர்களுக்கு இது அதிகம் பயன்படும்.

தமிழ், தெலுங்கு இரண்டு மொழிகள் எதற்கு?

தமிழகத்திலிருந்து ஆந்திராவிற்குச் சென்று மருத்துவம், நர்சிங் பயிலும் மாணவர்கள் இருக்கின்றனர். அதுபோல ஆந்திராவிலிருந்து தமிழகத்திற்கு வந்து பயிலும் மாணவர்களும் உள்ளனர். எனவே இருமொழிக்காரர்களுக்கும் பயன்படும்விதமாக இந்த மருத்துவ அகராதியைத் தயாரித்தேன். மேலும் எனக்குத் தாய்மொழி தெலுங்கு என்பதால் இந்தப் பணி சிரமமாகத் தெரியவில்லை.

மருத்துவ அகராதியைத் தயாரிப்பது என்பது வேறு; புத்தகப் பதிப்புத் துறை என்பது வேறு. அப்படியிருக்க நீங்களே இதை ஏன் வெளியீட்டீர்கள்?

அடிப்படையில் நான் டாக்டர் இல்லை. நான் அக்கவுன்ட்ஸ் படித்தவன். மருத்துவமனையில் நீண்டநாள் பணி புரிந்தாலும் நிறைய மருத்துவர்களுடன் பழக்கம் வைத்திருப்பதாலும் இந்த டிக்ஷனரியைத் தொகுக்க முடிந்தது. மேலும் நீங்கள் நினைப்பது மாதிரி புத்தகப் பதிப்புத் துறை எனக்குப் புதியதல்ல. நான் ஏற்கனவே “அனைத்து தேவதை காயத்ரி மந்திரங்கள்’ என்ற சிறு புத்தகத்தை ஆங்கிலத்திலும் தமிழிலும் ஒரே புத்தகமாக வெளியிட்டிருக்கிறேன். அது இப்போது மூன்று பதிப்புகள் வந்துவிட்டது. எனவே எனக்குப் புத்தகத் தயாரிப்பு புதியதல்ல.

ஒரு டாக்டர் அல்லாத நீங்கள் இப்படி ஓர் அகராதியைத் தொகுத்ததற்கு வரவேற்பு எப்படி இருந்தது?

இது நூலாக வெளிவரும் முன்பு ஆந்திராவில் உள்ள ஒரு டாக்டரிடம் கையெழுத்துப் பிரதியைக் காட்டினேன். “நீ ஒரு டாக்டரா?’ என்று கேட்டார். “இல்லை’ என்றதும் கையெழுத்துப் பிரதியைப் புரட்டிக் கூடப் பார்க்கவில்லை. ‘சர்ய்-ம்ங்க்ண்ஸ்ரீஹப் – ஆ இருந்துக்கிட்டு எப்படி எழுதுற? நீ மெடிக்கல் ஆள் இல்ல. அதனால பார்க்க மாட்டேன்’ என்று சொன்னார். மூன்று வருடங்களுக்கும் மேலாக இரவு இரண்டு மணி வரை கண்விழித்து செய்த முயற்சிக்குக் கிடைத்த வரவேற்பு. ரொம்பவும் மனம் வருத்தப்பட்டேன். ஆனால் சென்னை ஸ்ரீராமச்சந்திரா மெடிக்கல் காலேஜின் டாக்டர் தணிகாசலம் என்னை மிகவும் பாராட்டினார். இதைப் புத்தகமாக வெளியிடணும்

என்று என்கரேஜ் பண்ணினார். “இது மருத்துவத்துறை ஆசிரியர்கள் செய்ய வேண்டிய வேலை, நீங்க

பண்ணியிருக்கீங்க’ன்னு புகழ்ந்தார். அது எனக்கு மிகுந்த

தெம்பைக் கொடுத்தது. அப்புறம் எனக்குப் பழக்கமான நிறைய டாக்டர்கள் அகராதியைத் தொகுக்கும் போது ஏற்பட்ட நிறையச் சந்தேகங்களைத் தீர்த்து வைத்தனர். அவர்கள் கொடுத்த ஊக்கத்தினால்தான் இது எனக்குச் சாத்தியமானது.

ஆங்கிலத்தில் உள்ள மருத்துவத் துறை சொற்களுக்கு தமிழில் பொருள் கண்டுபிடிப்பது சிரமமான காரியமாயிற்றே?

இந்த மருத்துவ அகராதியில் உள்ள எல்லாச் சொற்களையும் தொகுத்தது, அதற்கு விளக்கமளித்தது என் வேலையாக இருந்தது. அதை மொழிபெயர்த்தவர் வி.வி.ரத்னஸ்ரீ. என்றாலும் மொழிபெயர்க்கும் போது உடனிருந்து அதிலும் பங்கு பெற்றவன் என்கிற முறையில் அதன் சிரமங்களை அறிவேன். மேலும் இந்த அகராதி தயாரிப்பதற்கு தமிழ், ஆங்கிலம், தெலுங்கு என்று மொழிகள் மட்டும் தெரிந்தால் மட்டும் போதாது. மருத்துவத்துறை தொடர்பான அறிவும் அவசியம். இல்லையென்றால் சரியாக மொழிபெயர்க்க முடியாது.

தெலுங்கைவிட தமிழில் மொழிபெயர்க்கச் சிரமப்பட்டோம். காரணம், தெலுங்கில் நிறைய எழுத்துகள் உள்ளன. உதாரணமாக தெலுங்கில் நான்கு “க’ உள்ளது. தமிழிலோ ஒன்றே ஒன்றுதான். அதுபோல ந, ண, ழ, ள, ல போன்றவற்றில் எந்த “ந’ போடுவது, எந்த “ல’ போடுவது என்பது பிரச்சினையாக இருந்தது. இது எங்களுடைய முதல் முயற்சி என்பதால் எங்களுக்கே தெரியாமல் பிழைகள் இருக்கக்கூடும். சுட்டிக்காட்டினால் அடுத்தடுத்த பதிப்புகளில் திருத்திக் கொள்வோம்.

இப்போது தமிழ்வழிக் கல்வி கற்பதில் ஆர்வம் குறைவாக உள்ளது. அப்படியிருக்க இந்த அகராதி மாணவர்களுக்கு எப்படி உதவும்?

நீங்கள் சொல்வதில் ஓரளவு உண்மையிருக்கிறது. என்றாலும் ஆங்கில வழி பயிலும் மாணவர்கள் என்னதான் ஆங்கிலத்தில் படித்தாலும் தமிழில் அதைத் தெரிந்து கொண்டால் சிறப்பாகப் படிக்க முடியும். மேலும் ஆங்கிலத்தில் உள்ள ஒரு மருத்துவம் தொடர்பான சொல்லுக்குத் தமிழில் என்ன அர்த்தம் என்று தெரிந்து கொள்ள இந்த அகராதி உதவும்.

சினிமாவை ரசிக்கப் புரிந்து கொள்ள மொழியே தேவையில்லை என்றாலும் எத்தனை டப்பிங் திரைப்படங்கள் வருகின்றன? டி.வி.யிலும் கூட டப்பிங் படங்களை ஒளிபரப்புகிறார்களே! எனவே தாய்மொழிக்கெனத் தனிச் சிறப்பு இருக்கவே செய்கிறது.

உங்களுடைய அகராதியில் மருத்துவத் துறை தொடர்பான சொற்களுக்கான பொருள்கள் தவிர வேறென்ன சிறப்பு அம்சம் உள்ளது?

இந்த அகராதியில் நிறைய மருத்துவம் தொடர்பான பொதுவிஷயங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த அகராதி மொத்தம் 6 பிரிவாகப் பகுக்கப்பட்டுள்ளது.

முதல் பகுதியில் மனித உடல், உடல்நலன் தொடர்பான பொதுவான விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இரண்டாம் பகுதியில் ஒவ்வொரு நோய்க்கும் என்னென்ன உணவு சாப்பிட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. மூன்றாம் பகுதியில் மருத்துவத் துறையில் பயன்படுத்தப்படும் சுருக்கக் குறியீடுகளுக்கான விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. நான்காம் பகுதியில் மருத்துவத் துறையில் பயன்படுத்தப்படும் கருவிகள் எல்லாவற்றையும் பற்றிய விளக்கம் உள்ளது. ஐந்தாம் பகுதி அகராதி. ஆறாம் பகுதியில் மனித உடலின் பல்வேறு பாகங்களின் படங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

புத்தகத்திற்கு வரவேற்பு?

சாதாரண மனிதனுக்கும் மாணவர்களுக்கும் பயன்படும் என்ற நோக்கத்தில் தான் இந்த அகராதியைத் தொகுத்து வெளியிட்டேன். ஆனால் அது தமிழுக்குச் செய்த சேவையாகக் கருதப்படுவது மனதுக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. இது நான் எதிர்பாராதது.

Posted in Accountant, Andhra Pradesh, AP, Books, D Rambabu, Dictionary, Dinamani, Doctor, Editor, Education, English, Enrichment, Explanation, Help, Interview, Kathir, Language, Learn, Medicine, service, Students, T Rambabu, Tamil, Teach, Technical, Telugu, Terminology, Translation, Vijaya Hospital | Leave a Comment »

Manipuri Language Banned by Naga Students

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 10, 2006

மணிப்புரி மொழிக்கு நாகா மாணவர் தடை

இம்பால், செப். 10: மணிப்பூர் மாநிலத்தில் நாகா பிரிவினர் வாழும் 4 மலைப்பகுதி மாவட்டங்களில் மணிப்புரி மொழியைப் பயன்படுத்த நாகா மாணவர் அமைப்பு தடை விதித்துள்ளது.

இது உடனடியாக அமலுக்கு வருகிறது என்றும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த அமைப்பு வெள்ளிக்கிழமை விடுத்துள்ள அறிக்கையில், “நாகா பிரிவினர் மீது மணிப்புரி மொழியை திணிப்பதை சகித்துக் கொண்டிருக்க முடியாது’ என்று தெரிவித்துள்ளது. மேலும், மணிப்புரி பாடல்கள், திரைப்படங்களுக்கும் வரும் 17-ம் தேதி முதல் தடை விதிக்கப்பட உள்ளதாக அந்த அமைப்பு கூறியுள்ளது. இதுகுறித்து அதிகார வட்டாரங்கள் கூறுகையில், “நாகா பிரிவினர் மீது மணிப்புரி மொழி திணிக்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளது.

Posted in Immersion, India, Language, Manipuri, Movies, Nagaland, North East, Regional, Songs, State, Students, Tamil, Teach | Leave a Comment »

Tamil teaching in US – Integration with School Curriculum

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 10, 2006

அமெரிக்காவில் தமிழ்க் கல்வி:
பள்ளிகள் திறக்கும் நேரம்…

மனநலம் மன்உயிர்க்கு ஆக்கம்; இனநலம்
எல்லாப் புகழும் தரும். (குறள் 457)

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு!

தமிழ்பேசும் நன்னாட்டிலிருந்து தொலை தூரம் வந்துவிட்டோமே என்று எண்ண இடம் கொடுக்காமல், பல தமிழ் அமைப்புகளும் அமெரிக்காவில் ஆங்காங்கே தமிழ் கற்றுக் கொடுக்கின்றன. ஆங்கிலமே பேசி அமெரிக்கச் சூழலில் வளரும் குழந்தைகள் இங்கே அகர வரிசையில் தொடங்கி தமிழைப் பேசவும், படிக்கவும் எழுதவும் முறையாகப் பயில முடிகிறது. தமிழ் ஆர்வலர்களால் ஒரு தன்னார்வ முயற்சியாக நடத்தப்படும் இக்கூடங்களில் இலவசமாகவோ அல்லது பொருட்களுக்கான அடிப்படைக் கட்டணம் மட்டும் வசூலித்தோ வகுப்புகள் நடத்தப் படுகின்றன. சில இடங்களில் பெரியோரும் கற்கின்றனர் என்பதோடு, அமெரிக்கரும் கற்பதுண்டு என்பது வியப்பான செய்தி.

புதிய கல்வியாண்டு தொடங்கும் இந்த நேரத்தில் பல இடங்களிலும் தமிழ் வகுப்பு களும் தொடங்க இருக்கின்றன.

உங்களுக்கு அருகிலும் ஒரு தமிழ் பயிற்று மையம் இருக்கக் கூடும். விவரங்கள் இதோ:

சான்·பிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதி

கலி·போர்னியா தமிழ்க் கழகத்தால்
3 இடங்களில் வகுப்புகள் நடத்தப்படுகின்றன.

மாணவர்களுக்கான நேரடிப் பதிவு கீழ்க் கண்ட பள்ளிகளிலும் ஆகஸ்ட் 27 முதல் தொடங்குகிறது. தவிர http://www.catamilacademy.org என்ற வலைதளம் மூலமும் பதிய வசதி உண்டு.

தமிழார்வம் கொண்ட சில அன்பர்களால் ஆரம்பிக்கப்பட்ட இந்தக் கழகம், இப்போது 80-க்கும் மேற்பட்ட ஆசிரியர்/ஆசிரியைகள் மற்றும் பள்ளி அலுவலர்களால் நடத்தப்பட்டு, 500-க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் களுக்கு நன்மை பயிற்று வருகிறது. இந்தக் கழகத்தில் பள்ளி மாணவ மாணவியர் களோடு, பெரியோர்களும் தமிழ் மொழியைக் கற்று வருகிறார்கள். மழலையர்களுக்கான
(3 வயது நிரம்பிய) ஆரம்ப வகுப்பு முதல், இடைநிலை, கடைநிலை, முதுநிலை, உரையாடல் வகுப்புகள் வரை எல்லா வயதினருக்கும் பாடத்திட்டங்கள் அமைக்கப் பட்டு திறம்பட நடத்தப்பட்டு வருகிறது.

வகுப்புகள் தொடங்கும் நாள்:
செப்டம்பர் 10, 2006, ஞாயிறு
காலை 10:00 – 11:30.

1. ·ப்ரீமாண்ட் கிளை:
Horner Junior School, 41365 Chapel Way, Fremont, CA 94538
தொடர்புகொள்ள:
ஏ.நல்லப்பன் – 510.438.0958, andy.nallappan@gmail.com

2. கூபர்ட்டினோ கிளை:
De Anza College, Cupertino, CA
தொடர்புகொள்ள:
ஸ்ரீவித்யா வேல்சாமி – 408.873.8910, srividya.velchamy@gmail.com

3. சான் ஹோஸே (எவர்கிரீன்) கிளை:

Matsumoto School, 4121 Mackin Woods Lane, San Jose, CA
தொடர்புகொள்ள:
தில்லைகுமரன் – 408.267.8006, thillai@sbcglobal.net

அட்லாண்டா
·புல்டன் ஓ.சீ.இ.இ. நூலகத் தமிழ் மையம்.
ஆகஸ்டு மாதம் முதல்
பிரதி சனிக்கிழமையும் இரண்டு
மணி நேரம் வகுப்புகள் நடக்கும்.
கட்டணம் கிடையாது.

பயிற்றுவிப்போர்:
சுந்தரிகுமார், இந்துமதி ரமேஷ், நர்மதா ஜெகந்நாதன், சுந்தரி மெய்யப்பன், தமிழகம் மற்றும் சிங்கப்பூரில் தமிழ்ப் பணியாற்றி ஓய்வுபெற்ற முனைவர் கு. கோவிந்தசாமி ஆகியோர் தமிழ் ஆசிரியர்களாகப் பணியாற்றுகின்றனர். மேலும் பலர் பணியாற்ற முன்வந்துள்ளனர். இங்குள்ள தமிழ்ச்சங்கமும் ஊக்கம் கொடுத்து வருகிறது.

தமிழ்மொழி, பண்பாடு, உரையாடல் பற்றிய பாடங்கள் நடக்கும். அரிச்சுவடி முதல் தாமாகப் படிக்கும் மாணவர் வரை நான்கு நிலை களாகப் பிரித்திருக்கிறோம். மாத இறுதியில் சிறுதேர்வும், ஆண்டு இறுதியில் விரிவான தேர்வும் நடத்தப்படும். கடந்த ஆண்டு மாணவர்கள் தங்கள் மொழித்திறமைகளை நாடகம், பாடல்கள் மூலம் வெளிப்படுத்தினர்.

தொடர்புகொள்ள:
முனைவர் கு. கோவிந்தசாமி
140 Witheridge Drive, Duluth, G.A. 30097
770.623.3322
swamy2006swamy@yahoo.com

சிகாகோ
செப்டம்பர் 9, 2006
அன்று வகுப்புகள் தொடங்கும்.

எட்டுப் பள்ளிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இவை இல்லியனாய்சில் பதிவுபெற்ற அமைப்பாகி, உலகத் தமிழ்மொழி அறக் கட்டளையின் மேற்பார்வையில் நடந்து வருகின்றன. சிகாகோ தமிழ்ச்சங்கம், இடை மேற்கு மாநிலத் தமிழ்ச்சங்கம், மில்வாக்கி தமிழ்ச்சங்கம் ஆகியவை உதவுகின்றன.

வகுப்பின் ஆரம்பம் குறளோடு! வாழ்விற்கு உகந்த, தேவையெனப்பட்ட 10 குறள் களோடும், ஒளவையின் ஆத்திச்சூடியும், தமிழ்த்தாய் வாழ்த்துடனும் அமைந்துள்ளது. வகுப்பு நிலைகள் ‘துளிர்கள்’ துளிர்கள்-2, மொட்டுக்கள், மொட்டுக்கள்-2, அரும்புகள், அரும்புகள்-2, மலர்கள் என அமைந்துள்ளது. வகுப்பு நிலைகளுக்கேற்ப பாட அட்ட வணையும் அமைந்துள்ளது. தமிழைப் படிக்கவும், எழுதவும் அமையும் இக்காலப் பகுதியில் 10-15 நிமிடங்கள் ”காண்பித்துச் சொல்லல்” என்ற வடிவில் தமிழில் பேசவும் ஒரு வாய்ப்பு அமைந்துள்ளது. ஒரு கதையோ, ஒரு பாடலோ என்று கேட்டு, பாடி வருவது தமிழ்ப் பள்ளி சிறார்களுக்கு மிகவும் பிடித்த மான ஒன்று. ‘எங்கள் வீட்டுக் கன்றுக் குட்டி, துள்ளி ஓடும் செல்லக்குட்டி!” பாடல் சிகாகோ முழுமையும் ஒலிக்கும் பாட்டு தமிழ்ப்பிள்ளை களுக்கு! குறளோடு ஆரம்பமான தமிழ்பள்ளி முடிவதோ ஒரு திருக்குறளும், விளக்கமும் என்ற வகையில் அமைந்துள்ளது. வீடு திரும்பும் பெற்றோர்களும், செல்வங்களும் மனதில் அசைபோட்டுச் செல்ல உதவுகிறது. ”வாழ்வு நூல்” வள்ளுவர் தந்த திருக்குறள் என்பதை அமெரிக்கத் தமிழ்சிறார்க்கு கற்பிப்பதும் தமிழ்ப்பள்ளிகளின் பெரும் நோக்கமாக அமைந்துள்ளது.

குறிப்பு:
எல்லா இடங்களுக்கும் பொதுவாக தொடர்புகொள்ள, தகவல் அறிய:
தமிழ்ப்பள்ளிகள் ஒருங்கிணைப்பாளர்
திரு. வி.சா. பாபு – 708.599.3116
annaiillam@hotmail.com. அணுகவும்.

உங்கள் பகுதியில் புதிதாக தமிழ்ப்பள்ளி தொடங்க வேண்டுமென்றாலும் இவருடன் தொடர்புகொள்ளலாம்.

இடங்கள்:
1. கர்ணி தமிழ்ப்பள்ளி,
5725 Steams School Road,
Gurnee, IL 60031

மூன்று ஞாயிற்றுக் கிழமைகளுக்கு ஒருமுறை (09.17.06 தொடங்கி) காலை 10.00; ஆண்டு முழுதும் வகுப்புகள் உண்டு.
தொடர்புகொள்ள:
அருள் பாலு – 847.856.0940, arulsid@aol.com

2. சாம்பர்க் தமிழ்ப்பள்ளி,
Schaumburg Library, S.W.Corner of Schaumburg and Roselle Road, Schaumburg, Il 60173.

இரண்டு சனிக்கிழமைகளுக்கு ஒருமுறை (9.9.06 தொடங்கி) மாலை 3.00;
தொடர்புகொள்ள:
முரளி – 847.923.0716, muralixx@yahoo.com

3. சாம்பெய்ன்ஸ் தமிழ்ப்பள்ளி
புதிதாகத் தொடங்குகிறது. இடம், நேரம், தொடக்க நாள் முதலியவை விரைவில் அறிவிக்கப்படும்.
தொடர்புகொள்ள:
பிரியா பாலசந்தர் – 217.356.0529, priyachander95@yahoo.com

4. டெஸ்பிளெய்ன்ஸ் தமிழ்ப்பள்ளி,
St. Zachrya Church, 567 W. Algonquin Road, Desplaines, Il 60016.
இரண்டு சனிக்கிழமைகளுக்கு ஒரு முறை (9.16.06) காலை 10.00.

5. டேரியன் தமிழ்ப்பள்ளி
புதிதாகத் தொடங்குகிறது. இடம், தொடக்க நாள் முதலியவை விரைவில் அறிவிக்கப்படும்.

இரண்டு ஞாயிற்றுகிழமைகளுக்கு ஒருமுறை (9.10.06) காலை 10.00.

6. நேப்பர்வில் தமிழ்ப்பள்ளி,
North Central College, 30 N,
Brainard St, Il 60540
இரண்டு சனிக்கிழமைகளுக்கு ஒரு முறை (9-9-06) காலை 10.00.
தொடர்புகொள்ள:
சாக்ரடீசு – 630.499.1246, socratesponnusamy@yahoo.com

7. மன்ஸ்டர் தமிழ்ப்பள்ளி,
1329 Fitzgerald Dr., Munster, IN 46321
ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் (9.10.06) காலை 10.00
தொடர்புகொள்ள:
கலைச்செல்வி – 219.924.2519, kalai_gopal@sbcglobal.net

8. மில்வாக்கி தமிழ்ப்பள்ளி,
The Sheperd of the Hill church. Pewaukee, WL
இரண்டு ஞாயிற்றுக்கிழமைகளுக்கு ஒருமுறை (9.10.06) மாலை 2.00
தொடர்புகொள்ள:
மீனா வைரவன் – 414.243.9373, mvairavan@gmail.com

ஹியூஸ்டன்

பாரதி கலை மன்றத்தினரால் மீனாட்சி அம்மன் கோவில் வளாகத்தில் நடத்தப் படுகிறது. தவிர கேட்டி, உட்லேண்ட்ஸ், சுகர்லேண்ட் போன்ற புறநகரப் பகுதிகளிலும் கிளைகள் உள்ளன. விவரங்களுக்கு: http://www.bkmhouston.org

தமிழ் வகுப்பு நிலைகள் ஆறு. முதல் நிலையில் உயிர் எழுத்து, மெய் எழுத்துக்களை எழுதவும் படிக்கவும் கற்றுத்தரப்படுகிறது. பின்னர் எண்கள், நிறங்கள், உடல் உறுப்புகள், பழங்கள், காய்கள், பூக்கள், மரங்கள், உறவுகள், வாரநாட்கள், உணவு வகைகள், பறவைகள், விலங்குகள் போன்றவகள் சொல்லித் தரப் படுகிறது. இரண்டாவது நிலையில் உயிர்மெய் எழுத்துக்கள் அனைத்தும் எழுதவும் படிக்கவும் கற்றுத்தரப்படுகிறது. மூன்றாவது நிலையில் இரண்டு எழுத்து வார்த்தையில் தொடங்கி ஐந்து எழுத்து வார்த்தைகள் வரையில் எழுதவும் படிக்கவும் கற்றுத்தரப்படுகிறது. நான்காவது நிலையில் சின்ன சின்ன வாக்கியங்கள் அமைத்து எழுதவும் படிக்கவும் கற்றுத்தரப் படுகிறது. ஐந்தாவது நிலையில் ஆரம்ப இலக் கணங்கள், வினைச்சொல், பெயர்ச்சொல், காலங்கள், ஒருமை, பன்மை, தன்னிலை, முன்னிலை, படர்க்கை கற்றுத்தரப்படுகிறது. ஆறாவது நிலையில் கட்டுரைகள் எழுதவும் படிக்கவும் கற்றுத்தரப்படுகிறது. எல்லா நிலை களிலும், கதைகள், பாடல்கள், திருக்குறள் போன்றவைகளும் இடம் பெறுகிறது.

பதிவுக்கட்டணம்: $25. பாரதி கலைமன்ற உறுப்பினர் குடும்பத்தினருக்கு $20 மட்டும்.

தொடர்புகொள்ள:
டாக்டர் கோபாலகிருஷ்ணன், (ஒருங்கிணைப்பாளர்), 281 578 5685, bkmgopal@yahoo.com

தமிழரசி கணேசன்
(இணை ஒருங்கிணைப்பாளர்),
713 436 0301, tamilg@hotmail.com

தகவல்: கோபால் (கலி·போர்னியா), கோவிந்தசாமி (அட்லாண்டா),
வி.சா. பாபு (சிகாகோ), கோபாலகிருஷ்ணன் (ஹியூஸ்டன்).

Posted in Alphabets, America, Curriculum, Junior, Kindergarden, School, Tamil, Tamil Paadam, Tamil Palli, Teach, Thamizh Vaguppu, US | Leave a Comment »