Thatstamil.com
சிவாஜி ‘லேட்’ ஆகும்?
ரஜினிகாந்த்தின் சிவாஜி திட்டமிட்டபடி தமிழ் புத்தாண்டு அன்று ரிலீஸ் ஆகாது, மே மாதத்திற்குத் தள்ளிப் போகும் எனக் கூறப்படுகிறது. பிரமாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில், ஏவி.எம். தயாரிப்பில் ரஜினிகாந்த், ஷ்ரியா, நயனதாரா, ரகுவரன் நடிப்பில் உருவாகும் சிவாஜி படு வேகமாக வளர்ந்து கொண்டுள்ளது.
ஒவ்வொரு காட்சியையும் படு நேர்த்தியாக செதுக்கி வருகிறார் ஷங்கர். வழக்கமாக படு நிதானமாக படப்பிடிப்புகளை நடத்தும் ஷங்கர், ரஜினியை முன்னிட்டு சற்றே வேகம் பிடித்து ஓடிக் கொண்டுள்ளார்.
இதுவரை எடுக்கப்பட்ட காட்சிகளையும், பாடல் காட்சிகளையும் ரஜினிக்கு சில நாட்களுக்கு முன்பு போட்டுக் காட்டினாராம் ஷங்கர். படத்தைப் பார்த்த ரஜினி வியப்படைந்து விட்டாராம். இது நான்தானா? என்று தன்னைப் பார்த்து தானே ஆச்சரியமடைந்தாராம்.
இப்போது தனக்கு நெருக்கமானவர்களிடம், எனது படங்களிலேயே சிவாஜி மிகப் பெரிய படம், முக்கியமான படமாக இருக்கப் போகிறது பாருங்கள் என்று பாராட்டித் தள்ளி வருகிறாராம். இன்னும் 2 மாத ஷýட்டிங் பாக்கி உள்ளதாம்.
இந்தக் காட்சிகளை தற்போதுள்ள வேகத்தில் ஷங்கர் எடுத்தால் திட்டமிட்டபடி முடித்து விடலாமாம். இருப்பினும் படத்தை ஏப்ரல் 14ம் தேதி வெளியிடாமல் சற்றே தள்ளி வெளியிடலாம் என்று பேச்சு எழுந்துள்ளதாம்.
ஏப்ரல் 14க்குப் பதில் மே 8க்கு ரிலீஸ் தேதி தள்ளிப் போகும் என்று கூறப்படுகிறது. இதற்கு நியூமரலாஜி சென்டிமென்ட்தாõன் காரணம் என்று தெரிகிறது. ஷங்கருக்கு ராசியான எண் 8. எனவேதான் மே 8க்கு படத்தை வெளியிட திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.
‘லேட்’டா வந்தாலும், ‘லேட்டஸ்’டாதானே வருவார் தலைவர்!