சமச்சீர் கல்வி முறை: குழு அமைப்பு
சென்னை, செப். 8: அனைத்துப் பள்ளிகளிலும் ஒரே தரமான கல்வி வழங்கும் கல்வி முறையை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக தமிழக அரசுக்கு பரிந்துரை செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அரசு வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
- நர்சரி,
- மெட்ரிகுலேஷன்,
- ஆங்கிலோ-இந்தியன்,
- மாநில வாரியம்
உள்ளிட்ட பல்வேறு கல்வி முறைகளை ஆய்வு செய்து, ஒரே தரமான கல்வியை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக அரசுக்கு அறிக்கை அளித்திட பாரதிதாசன் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் முத்துக்குமரன் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிகுலேஷன் மற்றும் உயர்நிலைப் பள்ளி நிர்வாகங்களின் சங்கத் தலைவர் டி. கிறிஸ்துதாஸ், ஏற்காடு மாண்ட்போர்ட் பள்ளி நிர்வாகி ஜார்ஜ், புதுக்கோட்டை நிஜாம் ஓரியண்டல் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் எஸ். காஜாமுகைதீன், கல்வியாளர் எஸ்.எஸ். ராஜகோபாலன், தொடக்கக் கல்வி இயக்குநர், மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குநர், அரசுத் தேர்வுகள் இயக்குநர் ஆகியோர் உறுப்பினராகவும், பள்ளிக் கல்வி இயக்குநர் உறுப்பினர் செயலராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.