Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Sivaji Fans’ Category

Shankar, Rajni & AVM’s Sivaji release details in Puthuseri & Karnataka

Posted by Snapjudge மேல் ஜூன் 13, 2007

சினிமா டிக்கெட் வெளியிட்ட புதுவை முதல்வர்

ரஜினிகாந்த் நடித்த “சிவாஜி’ திரைப்படத்தின் டிக்கெட்டை புதன்கிழமை வெளியிடுகிறார் புதுச்சேரி முதல்வர் என்.ரங்கசாமி (வலது). உடன் ரசிகர் மன்ற நிர்வாகிகள்.

புதுச்சேரி, ஜூன் 14: புதுச்சேரியில் ரஜினிகாந்த் ரசிகர்கள் இரு கோஷ்டிகளாகப் பிரிந்து தனித்தனியாக ரசிகர் மன்றக் காட்சிகளுக்கான சிவாஜி பட டிக்கெட்டுகளை வெளியிட்டனர். இந்த இரு கோஷ்டியினரின் டிக்கெட்டுகளையும் புதுவை முதல்வர் என். ரங்கசாமி புதன்கிழமை வெளியிட்டு தொடங்கி வைத்தார்.

புதுச்சேரியில் பிரபலமான நடிகர்களின் படங்கள் திரையிடப்படும்போதும் ரசிகர் மன்றக் காட்சியின்போதும் பல்வேறு விதமான அசம்பாவித சம்பவங்கள் நடைபெற்று வந்தன.

இதனை அடுத்து புதுச்சேரி திரையரங்குகளில் ரசிகர் மன்றக் காட்சிகளைத் தடை செய்ய புதுச்சேரி அரசு முடிவு செய்தது.

ஆனால் பெரும் வரவேற்புடன் வரும் ரஜினிகாந்த் நடித்த சிவாஜி படத்துக்கு ரசிகர் மன்றக் காட்சிக்கு சிறப்பு அனுமதி அளிக்க வேண்டும் என்று ரஜினிகாந்த் ரசிகர்கள் புதுச்சேரி அரசுக்கு வேண்டுகோள் விடுத்தனர். இந்த வேண்டுகோளை ஏற்று சிவாஜி படத்துக்கு ரசிகர் மன்றக் காட்சிகளை நடத்திக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மூன்று திரையரங்குகளில் சிவாஜி படம் வெளியாவதால் ஆங்காங்கே கட்-அவுட்கள், பேனர்கள் என்று வைக்கப்பட்டு வருகின்றன.

ஆனால் புதுச்சேரியில் புதுச்சேரி மாநில தலைமை ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றம் என்ற பெயரில் ஒரு கோஷ்டியாகவும், புதுவை மாநில அனைத்து ரசிகர் மன்றங்களின் கூட்டமைப்பு என்ற பெயரில் ஒரு கோஷ்டியும் செயல்பட்டு வருகின்றனர்.

நாங்கள் ஒன்றாகத்தான் இருக்கிறோம் என்று புதுச்சேரி மாநில தலைமை ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றத்தினர் கூறுகின்றனர். நாங்கள்தான் முறையாகத் தலைமையின் உத்தரவுப்படி செயல்படும் அமைப்பு என்று புதுவை மாநில அனைத்து ரசிகர் மன்றங்களின் கூட்டமைப்பினர் கூறுகின்றனர்.

இந்த நிலையில் புதுச்சேரியில் வெள்ளிக்கிழமை சிவாஜி படம் திரையிடப்படும் மூன்று திரையரங்குகளிலும் ரசிகர் மன்றக் காட்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதில் ரஜினிசங்கர் உள்ளிட்டோர் வந்து ஒரு திரையரங்குக்கான ரசிகர் மன்றக் காட்சிக்கான டிக்கெட்டுகளை வெளியிட்டனர். இதனை புதுவை முதல்வர் என். ரங்கசாமி வெளியிட்டு தொடங்கி வைத்தார்.

இதனைத் தொடர்ந்து புதுவை மாநில அனைத்து ரஜினிகாந்த் மன்றங்களின் கூட்டமைப்பைச் சேர்ந்த ஞானேவேல், கோபி, காமராஜ் உள்ளிட்டோர் மற்றொரு குழுவாக வந்து மற்ற இரு திரையரங்குகளின் ரசிகர் மன்றக் காட்சிகளுக்கான டிக்கெட்டுகளை வெளியிட்டனர். இதனையும் புதுவை முதல்வர் என். ரங்கசாமியே வெளியிட்டு தொடங்கி வைத்தார்.

இரு தரப்பினரும் ரஜினிகாந்த் திரைடப்படத்துக்கு ரசிகர் மன்றக் காட்சிகள் நடத்திக்கொள்ள அனுமதி அளித்ததற்கு வாழ்த்து தெரிவித்து முதல்வர் ரங்கசாமிக்கு மாலை அணிவித்தனர்.

ரஜினிகாந்த் ரசிகர்கர்கள் திரையரங்கில் சேர்களை உடைத்தல், திரைகளை கிழித்தல், குறிப்பிட்ட காட்சிகளை அடிக்கடி ஒளிபரப்ப திரையரங்கு ஊழியர்களை வற்புறுத்தல் போன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது என்று ரசிகர் மன்றங்கள் மூலம் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதற்கான விதிமுறைகள் ரசிகர் மன்றக் காட்சி டிக்கெட்டுகளின் பின்பக்கத்தில் அச்சிடப்பட்டுள்ளன.

——————————————————————————
சிவாஜி திரைப்படத்தை கர்நாடகத்தில் நான்கு தியேட்டர்களுக்கு மேல் திரையிட அனுமதிக்க மாட்டோம்: கன்னட சங்கத் தலைவர் அறிவிப்பு

பெங்களூர், ஜூன் 14: நடிகர் ரஜினிகாந்த் நடித்த “சிவாஜி’ திரைப்படத்தை கர்நாடகத்தில் 4 தியேட்டர்களுக்கு மேல் திரையிட அனுமதிக்க மாட்டோம் என்று கன்னட ரக்ஷணா வேதிகே அறிவித்துள்ளது.

ஏவிஎம் நிறுவனம் தயாரிப்பில் சங்கர் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் ~ ஷ்ரேயா நடித்த “சிவாஜி’ தமிழ் திரைப்படம் வெள்ளிக்கிழமை முதல் உலகம் முதல் திரையிடப்படுகிறது.

சங்கர் இயக்கத்தில் இப்படம் பல கோடி ரூபாய் செலவில் மிகப் பிரமாண்டமாக தயாரிக்கப்பட்டிருப்பதால் இப் படத்துக்கு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

காவிரி நீர்ப் பிரச்சினை காரணமாக கர்நாடகத்தில் தமிழ் திரைப்படங்கள் திரையிடுவதை கன்னட சங்கங்கள் சில மாதங்களாக தடுத்து வந்தன.

இதையும் மீறி தமிழ் படம் திரையிட்ட திரையரங்குகள் மீது கன்னட அமைப்பினர் தாக்குதல் நடத்தினர்.

அண்மையில்தான் தமிழ்ப்படங்கள் கர்நாடகத்தில் மீண்டும் திரையிடப்பட்டு வருகிறது.

இந் நிலையில் சிவாஜி படத்தை திரையிட கர்நாடகத்தில் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. வழக்கமாக ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித், விக்ரம் போன்ற பெரிய நடிகர்கள் படங்கள் கர்நாடகத்தில் திரையிடப்படும்போது பெங்களூரில் 10-க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் இவர்களது படங்கள் திரையிடப்படும்.

ஆனால் சிவாஜி படத்தை கர்நாடகம் முழுவதும் நான்கு தியேட்டர்களிலேயே திரையிட வேண்டும் என்று கன்னட ரக்ஷணா வேதிகே கூறி வருகிறது.

இதுகுறித்து ரக்ஷணா வேதிகேயின் தலைவர் நாராயண கெüடா கூறியதாவது:

பிறமொழிப்படங்கள் கர்நாடகத்தில் திரையிடப்படும்போது சில கட்டுப்பாடுகளை கர்நாடக திரைப்பட வர்த்தக சபை விதித்துள்ளது.

இதன்படி கர்நாடகத்தில் திரையிடப்படும் கன்னடம் அல்லாத பிற மொழிப்படங்களை நான்கு தியேட்டர்களில் மட்டுமே திரையிட வேண்டும்.

மேலும் சுவரொட்டிகள் கன்னடத்தில் மட்டுமே அச்சிடப்பட்டு ஒட்டப்பட வேண்டும். இதுபோல் பிற விளம்பரங்கள் அனைத்தும் கர்நாடகத்தில் கன்னடத்திலேயே வெளியிடப்பட வேண்டும்.

இந்த நிபந்தனைகள்படி ரஜினிகாந்த் படத்தை திரையிட நாங்கள் எதிர்க்கவில்லை.

இதை மீறி பல தியேட்டர்களில் திரையிட்டால் அந்த தியேட்டர்களில் படச்சுருளை கன்னட ரக்ஷணா வேதிகே தொண்டர்கள் பறிமுதல் செய்வர்.

இயக்குநர் சங்கரின் 23-வது புலிகேசி திரைப்படம் கர்நாடகத்தைச் சேர்ந்த புலிகேசி மன்னனை இழிவுபடுத்தி எடுக்கப்பட்டிருந்தது.

இதனால் இப்படத்தை கர்நாடகத்தில் திரையிட நாங்கள் அனுமதிக்கவில்லை.

அதுபோல் சிவாஜி திரைப்படத்திலும் ஏதாவது ஆட்சேபகரமான காட்சிகள் இருந்தால் அதற்கு எங்களது எதிர்ப்புகளைத் தெரிவிப்போம்.

இதற்காக ரக்ஷணா வேதிகே தொண்டர்கள் டிக்கெட் எடுத்து தியேட்டருக்குச் சென்று கண்காணிப்பார்கள் என்றார் அவர்.

13 தியேட்டர்களில் திரையிட நடவடிக்கை: இதற்கிடையே சிவாஜி படத்தை பெங்களூரில் 13 தியேட்டர்களில் திரையிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த 13 தியேட்டர்களிலும் வியாழக்கிழமை முன்பதிவு செய்யப்படுகிறது.

Posted in ARR, AVM, Bangalore, Cauvery, Cinema, Fans, Films, Kannada, Karnataka, Kaviri, Movies, Mysore, Pondicherry, pondichery, Pondy, Pondycherry, Previews, Pudhucherry, Puducherry, Puthucehrry, Puthucherry, Puthuchery, Rajini, Rajiniganth, Rajinikanth, Rajni, Rajniganth, Rajnikanth, Rehman, release, River, Shankar, Shivaji, Shreya, Shriya, Sivaji, Sivaji Fans, Sivaji Story, Sivaji the Boss, Sreya, Sriya, State, Theaters, Theatres | 2 Comments »

Sivaji – The Boss: Theater Reports; Reservation Details; Fan Celebrations

Posted by Snapjudge மேல் ஜூன் 10, 2007

சிவாஜி டிக்கெட் முன்பதிவு: தியேட்டர்களில் அலை மோதிய கூட்டம்

சென்னை, ஜுன். 10-

உலகம் முழுவதும் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த ரஜினி நடித்த “சிவாஜி” படம் வருகிற 15-ந்தேதி திரையிடப்படுகிறது. இந்த படத்தில் ரஜினிகாந்த் ஜோடியாக ஸ்ரேயா நடித்துள்ளார். ஏ.வி.எம். தயாரிப்பில் ஷங்கர் இயக்கியுள்ளதால் “சிவாஜி” படத்துக்கு மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இதனால் எப்போதும் இல்லாத அளவுக்கு தமிழ்நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான ஊர்களில் திரையிடப்படுகிறது. சிறிய ஊர்களில் கூட இரண்டு, மூன்று தியேட்டர்களில் ரிலீசாகிறது. சென்னை நகரிலும், புற நகரிலும் 30 தியேட்டர்களில் சிவாஜி படம் திரையிடப்படுகிறது.

சென்னை நகரில்

  • சத்யம்,
  • சாந்தம்,
  • ஆல்பட்,
  • தேவி,
  • மெலோடி அபிராமி,
  • அன்னை அபிராமி,
  • பாலஅபிராமி,
  • உதயம்,
  • சூரியன்,
  • மினி உதயம்,
  • ஏவி.எம்.ராஜேஸ்வரி,
  • கமலா,
  • பாரத்,
  • மகாராணி ஆகிய 15 தியேட்டர்களில் தினமும் 4 காட்சிகளாக திரை யிடப்படுகிறது.

இதே போல் புறநகர்ப் பகுதியில்

  • மாயாஜால்,
  • பிருந்தா,
  • ஈஞ்சம்பாக்கம் பிரார்த்தனா,
  • ஆராதான,
  • தாம்பரம் ஸ்ரீவித்யா,
  • குரோம்பேட்டை வெற்றி,
  • ராக்கேஷ்,
  • நங்கநல் லூர் வேலன்,
  • வெற்றிவேல்,
  • திருவான்மிïர் தியாகராஜா,
  • கணபதிராம்,
  • ரெட்ஹில்ஸ் ஸ்ரீலட்சுமி,
  • அம்பத்தூர் ராக்கி சினிமாஸ்,
  • முருகன்,
  • திருமுரு கன் ஆகிய 15 தியேட்டர்களிலும் ரிலீசாகிறது.

சிவாஜி படத்துக்கு தமிழ்நாடு முழுவதும் முன்பதிவு இன்று தொடங்கியது. இதையடுத்து சென்னை நகரில் உள்ள தியேட்டர்களில் முன்பதிவு செய்ய அதிகாலையிலேயே ஆயிரக்கணக்கான ரசிகர்கள் குவிந்து இருந்தனர்.

ஒவ்வொரு தியேட்டர்களிலும் ரசிகர்கள் கூட்டம் அலை மோதியது. அவர்கள் ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு நீண்ட வரிசையில் காத்து இருந்தனர்.

சத்யம் தியேட்டரில் கல்லூரி மாணவ-மாணவிகள் ஆயிரக் கணக்கில் முன் பதிவு செய்ய காத்து இருந்தனர். `சாப்ட்வேர்’ கம்பெனி ஊழியர்களும் வந்து இருந்தனர்.

உதயம் தியேட்டரில் தியேட் டருக்கு வெளியே ரோட்டிலும் ஏராளமான ரசிகர்கள் நீண்ட வரிசையில் நின்று இருந்தனர்.

அபிராமி காம்ப்ளக்சில் 3 தியேட்டர்களில் சிவாஜி திரையிடப்படுவதால் அங்கு ஆயிரக்கணக்கான ரசிகர்கள் குவிந்து இருந்தனர்.

அதிகாலை 3 மணிக்கே ரசிகர்கள் வந்து தியேட்டர் வாசல்களில் படுத்து தூங்கிக் கொண்டு இருந்தனர். 4 மணிக்கு கூட்டம் மேலும் குவியத் தொடங்கியது. சாரை சாரையாக தொடர்ந்து ரசிகர் கள் குவியத் தொடங்கி னார்கள்.

தியேட்டர்களில் ரஜினி கட்-அவுட் வைக்கப்பட்டு கொடி- தோரணங்கள் கட்டப் பட்டு இருந்தன. தியேட்டர் கள் அனைத்தும் திருவிழாக் கோலம் பூண்டு இருந்தது. டிக் கெட் கொடுக்க ஆரம்பித்த தும் பட்டாசுகள் கொளுத்தப்பட்டன.

சென்னை மாவட்ட ரஜினி மன்ற தலைவர் ஓம்சேகர் ரசிகர்களை ஒழுங்கு படுத்தி னார். பொதுமக்களுக்கு இடைïறு ஏற்படுத்தாமல் டிக்கெட் வாங்கிச் செல்லுமாறு கூறினார்.

கூட்டம் அதிகம் திரண்டு இருந்ததால் காலை 6 மணிக்கே முன்பதிவு தொடங்கியது. சில மணி நேரங்களிலேயே ஒரு வாரத்துக்கான டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்தன. இதனால் முன்பதிவு செய்ய முடியாத ரசிகர்கள் ஏமாற்றம் அடைந் தனர்.

ரசிகர்கள் கூட்டம் அலை மோதியதை தொடர்ந்து அனைத்து தியேட்டர்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

சிவாஜி முன்பதிவு பெண்கள் ஆர்வம்

சிவாஜி படத்துக்கு முன்பதிவு செய்ய மாணவிகளும், பெண்களும் அதிக ஆர்வத்துடன் வந்திருந்தனர். மற்ற தியேட்டர்களை விட சத்யம் தியேட்டரில் பெண்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் அவர்களுக்கு தனி `கிï’ ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

முன்பதிவு டிக்கெட் வாங்கியதும் மகிழ்ச்சியுடன் டிக்கெட்டை காண் பித்தபடி சென்றனர். ஊனமுற்ற ரசிகர்களும் தவழ்ந்து தவழ்ந்து வந்து கிïவில் நின்றனர்.

சத்யம் தியேட்டரில் டிக்கெட் கவுண்டரில் தொடங்கிய கூட்டம் தியேட்டரைச் சுற்றி வளையம் போல் வந்து அதே டிக்கெட் கவுண்டர் வரை நின்று இருந்தது. அங்கு கூட்டம் முண்டியடித்த தால் நெரிசல் ஏற்பட்டது. கூட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் லேசாக தடியை சுழற்றினார்கள்.

Posted in Cinema, Film, Movies, Previews, Rajini, Rajiniganth, Rajinikanth, Rajni, Rajniganth, Rajnikanth, Reports, Shivaji, Shivaji the boss, Sivaji, Sivaji Fans, Sivaji Story, Sivaji the Boss, Theater, Theatre, Theatres | Leave a Comment »

AVM & Shankar’s ‘Sivaji The Boss’ – Rajni’s 100th Movie

Posted by Snapjudge மேல் மே 21, 2007

திரைக்கதிர்: ரஜினியின் 100 வது படம்!

மனோஜ் கிருஷ்ணா

ஒரு படத்தை விளம்பரப்படுத்துவதற்கு பல விஷயங்களைப் பயன்படுத்துவார்கள். ரஜினி படத்துக்கு அது தேவையே இல்லை. அவர் நடிக்கிறார் என்றவுடன் அதுவே செய்தியாகி, விளம்பரமாகி படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பைக் கூட்டிவிடும். விளம்பரமே தேவைப்படாத ‘சிவாஜி’ படத்தின் விளம்பரத்துக்கும் ஒரு புதிய விஷயம் கிடைத்திருக்கிறது.

அது…

ரஜினிகாந்த் நடிக்கும் 100 வது தமிழ்ப் படம் என்பதுதான். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், வங்காளம், இந்தி, ஆங்கிலம் என இதுவரை ரஜினி 173 படங்களில் நடித்துள்ளார். ஆனாலும் ‘சிவாஜி’ படம் ரஜினியின் 100 வது தமிழ்ப் படம் என்பது அவருடைய ரசிகர்களுக்குக் கூடுதல் உற்சாகத்தைத் தரும்.

பிலிம் நியூஸ் ஆனந்தன், இந்தத் தகவலைப் புள்ளி விவரத்தோடு ரஜினியிடம் கூறியபோது அவருக்கே இது புதிய விஷயமாகத் தோன்றியதாம். அதனால் ‘சிவாஜி’ பட விளம்பரத்தின்போது இந்தத் தகவலைப் பயன்படுத்திக் கொள்ள நினைத்திருக்கிறது ஏவி.எம்.நிறுவனம்.

Posted in 100, AVM, Cinema, Film News, Movie, Rajini, Rajiniganth, Rajinikanth, Rajni, Rajniganth, Rajnikanth, Sankar, Shankar, Shivaji, Shivaji the boss, Sivaji, Sivaji Fans, Sivaji Story, Sivaji the Boss | 1 Comment »

PMK Ramadas, Gemini Labs, AR Rehman – Why ‘Sivaji’ is delayed?

Posted by Snapjudge மேல் மே 8, 2007

ஜூன் மாதம்தான் ‘சிவாஜி’ ரிலீஸ்: சில எதிர்பார்ப்புகளும் எதிர்ப்புகளும்…?

ரஜினியின் ‘சிவாஜி’ படம் வெளிவருவதற்குள் ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளையும் எதிர்ப்புகளையும் உண்டாக்கியிருக்கிறது.

எதிர்பார்ப்புகள்:

* தமிழகத்தில் சிவாஜியை ரிலீஸ் செய்யும் உரிமையை ஜெமினி லேப் நிறுவனம் தட்டிச் சென்றுள்ளது. 65 கோடிக்குதான் படத்தை விற்பனை செய்வோம் என்று கூறி வந்த ஏ.வி.எம் நிறுவனம் 55 கோடிக்கு ஜெமினி லேப் நிறுவனத்திடம் விற்றுள்ளது

* மே 17}ல் ரிலீஸôகும் என்று எதிர்பார்க்கப்பட்ட சிவாஜி, ஜூன் மாதம் தான் திரைக்கு வருகிறாராம். இதற்கு இரு காரணங்கள் சொல்லப்படுகின்றன.

காரணம் 1: ஹிந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன், தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி இருவரும் நடிக்க, ஒரு காட்சி எடுத்து இணைக்கப்பட இருக்கிறது.

காரணம் 2: ஏ.ஆர். ரஹ்மான் படத்தின் பிண்ணனி இசைக்கு கால தாமதம் செய்கிறார்.

எதிர்ப்புகள்:

* படத்தின் டிக்கெட்டுகள் ராகவேந்திரா மண்டபத்தில் வைத்து வியாபாரம் செய்யப்பட்டது சட்டப்படி தவறு. தியேட்டர்களில் வைத்துதான் சினிமா டிக்கெட் விற்பனை செய்யப்பட வேண்டும். கல்யாண மண்டபத்தில் வைத்து விற்பனை செய்ததை எதிர்த்து நீதிமன்றத்தை நாடி பிரச்சினையை கிளப்ப ஒரு குழு தயராகி வருகிறதாம்.

* பாமக நிறுவனர் ராமதாஸ், தனது தொண்டர்களிடம் ரகசிய கட்டளை பிறப்பித்துள்ளதாகவும், அதன்படி சிவாஜி படம் ரிலீஸôகும் தியேட்டர்களில் எங்கெங்கெல்லாம் அதிக விலைக்கு டிக்கெட் விற்கப்பட்டால், உடனே தனது கவனத்திற்கு கொண்டு வர வேண்டும் என்று கூறியுள்ளாராம்.

சிவாஜி என்றாலே போராட்டம்தான் போல…

Posted in Amitabh, Anbumani, ARR, Audio, AVM, Bachan, Chiranchivi, Chiranjeevi, Director, Fans, Gemini, Kollywood, May, music, PMK, Ragavendira, Ragavendra, Ragaventhra, Rahman, Rajini, Rajiniganth, Rajinikanth, Rajni, Rajniganth, Ramadas, Ramadoss, Rehman, Sankar, SC, Shankar, Shivaji, Shivaji the boss, Shreya, Shriya, Sirancheevi, Siranjeevi, Sivaji, Sivaji Fans, Sivaji Story, Sivaji the Boss, Sriya, Tamil, Tamil Actor, Tamil Actors, Tamil Actress, Tamil Actresses, Tamil Audio, Tamil Film, Tamil Films, Tamil Movie, Tamil movie producer, Tamil Movies, Tamil Music, Tamil Padam, Tamil Pictures, Tamil Stars, Tamil Theater, Tamil Theatres, Telugu, Tollywood | 1 Comment »

Dhanush’s Thiruvilaiyadal Aarambam gets lawsuit by Sivaji Fans

Posted by Snapjudge மேல் நவம்பர் 13, 2006

கோர்ட்டில் வழக்கு: தனுஷின் `திருவிளையாடல்’ படம் வெளியாகுமா?

சிவாஜி நடித்த படம் “திருவிளையாடல்”. இப்படம் நீண்ட நாட்கள் ஓடியது. பக்தி படம் என்பதால் கோவில் திருவிழாக்களில் ஒரு காலத்தில் இப்படத்தில் வசனம் ஒலி பரப்பப்பட்டன.

நடிகர் தனுஷ் “திருவிளை யாடல் ஆரம்பம்” படத்தில் தற்போது நடிக்கிறார். அவருக்கு ஜோடி ஸ்ரேயா. பூபதி பாண்டியன் இயக்குகிறார்.

திருவிளையாடல் பெயரில் தனுஷ் நடிக்க சிவாஜி ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

சிவாஜி சமூக நல பேரவை தலைவர் ஏ.சந்திரசேகரன் சிட்டி சிவில் கோர்ட்டில் திருவிளையாடல் படத்துக்கு தடை விதிக்குமாறு வழக்கு தொடர்ந்துள்ளார். இவ்வழக்கு நிலுவையில் உள்ளது.

இந்த நிலையில் தனுசும் படத்தின் தயாரிப்பாளர் டாக்டர் விமலகீதாவும் கோர்ட்டில் பதில் மனு தாக் கல் செய்தனர். வழக்கை தள்ளுபடி செய்யுமாறு இரு வரும் வற்புறுத்தினர். விமல கீதா தாக்கல் செய்துள்ள மனுவில் “திருவிளையாடல்” என்ற பெயரில் படம் எடுக் கவில்லை என்றும் “தனுசின் திருவிளையாடல் ஆரம்பம்” என்று தான் படத்துக்கு பெயர் வைத்துள் ளோம் என்றும் குறிப்பிட்டு உள்ளார்.

இதற்கிடையில் திருவிளையாடல் படத்தை ரிலீஸ் செய்வதற்கான ஏற்பாடுகள் விறு விறுப்பாக நடக்கிறது. விரைவில் இப்படம் வெளியாகும் என்று விளம்பரங்கள் செய்யப்பட்டுள்ளன.

இதற்கு சிவாஜி சமூக நல பேரவை மீண்டும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இப் பேரவையின் சார்பில் வக்கீல் குமரகுரு கூறியதாவது:-

“திருவிளையாடல்” பெயரில் படம் எடுக்கவில்லை என்று எதிர் தரப்பில் கோர்ட் டில் பதில் மனுதாக்கல் செய் யப் பட்டது. ஆனால் விளம்பரங்களில் அதே பெயர் தான் உள்ளது. எனவே இந்த படத்தை வெளியிட தடை விதிக்குமாறு கோர்ட்டில் மீண்டும் மனு தாக்கல் செய் வோம். விரைவில் இந்த மனு தாக்கல் செய்யப்படும் என்றார்.

Posted in AP Nagarajan, Ban, Court, Dhanush, God, Petition, Shivaji, Shreya, Sivaji Fans, Sreya, Stay, Tamil Cinema, Tamil Movie, Thiruvilaiyaadal Aarambam, Thiruvilaiyadal | Leave a Comment »