பேராசிரியர் கொலை: 15 நாளில் அறிக்கை தர ம.பி. அரசுக்கு மனித உரிமைக் கமிஷன் உத்தரவு
புது தில்லி, செப். 7: பேராசிரியர் சபர்வால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக 15 நாட்களுக்குள் அறிக்கை அனுப்பும்படி மத்தியப்பிரதேச உள்துறைச்செயலாளர் மற்றும் டிஜிபிக்கு தேசிய மனித உரிமைக்கமிஷன் உத்தரவிட்டுள்ளது.
மத்தியப்பிரதேச மாநிலம் உஜ்ஜைனியில் உள்ள மாதவா கல்லூரியில் ஆகஸ்ட் 26 ம் தேதி பேரவைத்தேர்தல் நடைபெற்றது. இதை மேற்பார்வையிட்ட பேராசிரியர் சபர்வாலை பாஜக மாணவர் பிரிவான ஏபிவிபியை சேர்ந்தவர்கள் அடித்து கொலை செய்ததாக குற்றம்சாட்டப்பட்டது.
சம்பவம் நடந்தபோது அங்கே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸôர் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்த்ததாக தொலைக்காட்சிகள் ஆதாரத்துடன் செய்திகள் வெளியிட்டன.
ஆளும் பாஜகவின் மாணவர்கள் பிரிவைச் சேர்ந்தவர்கள் என்பதால் கொலைக்கான ஆதாரங்களையும் போலீஸôர் அழிக்க முயற்சி செய்வதாக பேராசிரியர் சபர்வாலின் மகன் ஹிமான்ஷு சபர்வால் மனித உரிமைக்கமிஷனில் புகார் செய்தார்.
அவரது புகாரைப்பெற்றுக்கொண்ட கமிஷன் பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி செய்திகளின் அடிப்படையில் தானாகவே இந்தப்பிரச்சினையில் மாநில அரசுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்தச்செய்திகள் உண்மையாக இருந்தால் நிச்சயமாக இது மனித உரிமைகளை மீறிய செயலாகும. எனவே இதுகுறித்து விவரங்களை 15 நாட்களுக்குள் அனுப்பவேண்டும் என மாநில தலைமைச் செயலாளர் மற்றும் காவல்துறைத் தலைவருக்கு கமிஷன் உத்தரவிட்டுள்ளது.
பேராசிரியர் கொல்லப்பட்ட சம்பவம்: மீண்டும் ஒரு அறிக்கை கேட்கிறார் ஆளுநர்
போபால், செப். 7: மத்தியப்பிரதேச மாநிலத்தில் கல்லூரி தேர்தலின் போது பேராசியர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக மீண்டும் ஒரு அறிக்கை சமர்ப்பிக்கும்படி மாநில பாஜக அரசை ஆளுநர் பல்ராம் ஜாக்கர் கேட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக மாநில அரசு ஏற்கெனவே ஒரு அறிக்கை சமர்ப்பித்துள்ளது. ஆனால் அதன்பிறகு நடைபெற்ற விசாரணையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம், பாஜக மாணவர் அணியைச் சேர்ந்த இருவர் கைதான விவரம் ஆகியவை குறித்து இன்னொரு அறிக்கை சமர்ப்பிக்கும்படி மாநில அரசை ஆளுநர் ஜாக்கர் கேட்டிருப்பதாக ஆளுநர் மாளிகை வட்டாரங்கள் தெரிவித்தன.
உஜ்ஜைனியில் உள்ள கல்லூரி ஒன்றில் பேரவைத் தேர்தல் நடந்தபோது ஆகஸ்ட் 26 ம் தேதி பேராசியர் சபர்வால் கொல்லப்பட்டார். இந்த படுகொலைச் சம்பவத்தில் பாஜக மாணவர் அணியினருக்கு தொடர்பு இருப்பதாக குற்றம்சாட்டப்பட்டது.
அதுபோல ஏபிவிபியைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால் குற்றவாளிகளை காப்பாற்ற முதல்வர் சிவராஜ் சிங் செüகான் முயற்சி செயகிறார் என காங்கிரஸ் குற்றம்சாட்டியது. இதையடுத்து இதுவரை நடந்த விசாரணை விவரங்களை அறிக்கையாக சமர்ப்பிக்கும்படி ஆளுநர் கேட்டுள்ளார் என அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
பேராசிரியர் அடித்துக் கொல்லப்பட்ட வழக்கு: இன்னொரு சாட்சி பல்டி
உஜ்ஜைனி, பிப். 7: மத்தியப் பிரதேசத்தின் உஜ்ஜைனியில் கல்லூரிப் பேராசிரியர் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் இன்னொருவர் பிறழ் சாட்சியானார். அச் சம்பவம் தொடர்பாக போலீஸôரிடம் அளித்த வாக்குமூலத்தை நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை அவர் மறுத்துவிட்டார்.
அதையடுத்து அவரை பிறழ்சாட்சியாக நீதிபதி அறிவித்தார்.
உஜ்ஜைனியில் உள்ள மாதவ் கல்லூரியில், கடந்த ஆண்டு நடந்த மாணவர் பேரவைத் தேர்தலில் தில்லுமுல்லு நடந்ததை அடுத்து, அதை ரத்துசெய்தார் பேராசிரியர் எச்.எஸ். சபர்வால்.
அதனால் ஏற்பட்ட தகராறில், பாஜக ஆதரவு மாணவர் சங்கமான அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத்தை (ஏபிவிபி) சேர்ந்தவர்கள் என்று கூறப்படும் சிலர் அவரை அடித்து உதைத்ததில் அவர் படுகாயமடைந்து இறந்தார். கடந்த ஆண்டு ஆகஸ்ட் 26-ம் தேதி இக் கொலை நடந்தது.
அது தொடர்பான வழக்கு உஜ்ஜைனி மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி அனில் குமார் சர்மா முன்னிலையில் நடைபெற்றுவருகிறது.
அவ் வழக்கில் செவ்வாய்க்கிழமை நடந்த விசாரணையில், பாஜக தலைவர் சன்வர் பட்டேல் சாட்சியமளித்தார்.
“”பேராசிரியர் சபர்வாலை யாரும் அடித்ததைப் பார்த்ததாக நான் போலீஸôரிடம் வாக்குமூலம் ஏதும் அளிக்கவில்லை” என்று கூறினார் அவர். அதையடுத்து அவரை பிறழ்சாட்சியாக அறிவித்தார் நீதிபதி.
ஏற்கெனவே, திங்கள்கிழமை நடந்த விசாரணையின்போது, வேறு இரு அரசுத் தரப்பு சாட்சிகள், போலீஸôரிடம் கொடுத்திருந்த வாக்குமூலங்களை மறுத்தனர். அவர்களும் பிறழ் சாட்சிகளாக அறிவிக்கப்பட்டனர்.
கல்லூரியின் நூலகர் கோவிந்த் சிங் குஷ்வாகா-வும் செவ்வாய்க்கிழமை நீதிமன்றத்தில் சாட்சியமளித்தார்.
“”கல்லூரி ஊழியர் கோமள் சிங்கும் வேறு சிலரும் கூக்குரலிட்டதை அடுத்து அங்கு விரைந்து சென்றேன். படுகாயமடைந்திருந்த சபர்வாலை மருத்துவமனைக்குக் கொண்டுசென்றேன். ஆனால், மருத்துவர்களால் அவரைக் காப்பாற்ற முடியவில்லை” என்று அவர் நீதிபதி முன் கூறினார்.
உஜ்ஜைன் பேராசிரியர் கொலை வழக்கு: பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலத்துக்கு வழக்கு விசாரணையை மாற்ற வேண்டும் – ம.பி. எதிர்க்கட்சி தலைவர் கோரிக்கை
உஜ்ஜைன், பிப். 14: உஜ்ஜைன் கல்லூரிப் பேராசிரியர் சபர்வால் கொலை வழக்கை, மத்தியப் பிரதேசத்தில் இருந்து பாஜக ஆட்சிப் பொறுப்பில் இல்லாத மாநிலத்துக்கு மாற்ற வேண்டும் என அம் மாநில எதிர்க்கட்சித் தலைவர் ஜமுனா தேவி நீதிமன்றத்தில் கூறினார்.
மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைன் நகரில் அமைந்துள்ள மாதவ் கல்லூரியில் மாணவர் சங்கத் தேர்தலின்போது, பாஜக-வின் மாணவர் அமைப்பான அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத்தைச் சேர்ந்தவர்களால் பேராசிரியர் சபர்வால் கடந்த ஆகஸ்டு 26-ம் தேதி அடித்துக் கொல்லப்பட்டார்.
இது தொடர்பாக சபர்வால் மகன் ஹிமன்சு தொடர்ந்த வழக்கு விசாரணையில் சாட்சியாக செவ்வாய்க்கிழமை ஆஜரானார் ஜமுனா தேவி. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவருக்கு பாதுகாப்பளித்த ம.பி. முதல்வர் சிவராஜ் சிங் செüகானுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றார் அவர். போபால் போலீஸில் முதல்வர் செüகானுக்கு எதிராக அளித்த புகார், ஆளுநர் பல்ராம் ஜாக்கருக்கு அளித்த மனு ஆகியவற்றின் நகல்களை நீதிமன்றத்தில் சமர்பித்தார் ஜமுனா தேவி. கொலை நடந்த மறுநாள் அதை விபத்து என செüகான் பத்திரிகையாளர்களிடம் குறிப்பிட்டதன் மூலம், விசாரணையை திசை திருப்ப முயன்றதுடன், குற்றவாளியை அவர் பாதுகாக்க முயன்றுள்ளார் என ஜமுனா தேவி நீதிபதியிடம் குறிப்பிட்டார்.
ம.பி.யில் ஆட்சிப் பொறுப்பில் உள்ள பாஜக அரசினால் வழக்கு விசாரணை பாதிப்புக்குள்ளாகும். எனவே சபர்வால் கொலை தொடர்பான அனைத்து வழக்குகளையும், பாஜக ஆட்சிப் பொறுப்பில் இல்லாத மாநிலத்துக்கு மாற்றி உத்தரவிட வேண்டும் என்றார் அவர்.
“பாஜக இந்த வழக்கு விசாரணையில், குற்றவாளிகளுக்கு சாதகமாக தலையிடுகிறது. இந்த வழக்கின் சாட்சிகள் பல்டி அடித்ததன் மூலம் அவர்கள் நிர்பந்திக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது தெரிகிறது’ என அவர் குற்றம் சாட்டினார். “ஆதாரத்தை மறைத்ததற்காகவும், குற்றவாளிகளுக்கு புகலிடம் அளித்ததற்காகவும் முதல்வர் செüகான்