இந்தியா வந்துள்ளார் ஜப்பானியப் பிரதமர்
![]() |
![]() |
ஜப்பானியப் பிரதமர் ஷின்சோ ஆபே |
ஜப்பானியப் பிரதமர் ஷின்சோ ஆபே இரண்டு நாள் விஜயமாக இந்தியா வந்துள்ளார். அவருடன் பெரிய அளவிலான வர்த்தகக் குழுவும் வந்துள்ளது.அவருடைய இந்த வருகை இந்தியா ஜப்பானுக்கிடையேயான வர்த்தக உறவை மேம்படுத்துவதற்காக என்று கூறப்பட்டாலும், கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த விடயங்களும் இந்த விஜயத்தின் போது விவாதிக்கப்படும் என்று தெரிகிறது.
இந்தப் பேச்சுவார்த்தைகளின் போது அமெரிக்கா ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பானை உள்ளடக்கிய ஒரு பரந்துபட்ட பாதுகாப்பு வலையத்தில் இந்தியாவையும் கொண்டுவர முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன என்று பிபிசியின் இராஜாங்கச் செய்தியாளர் தெரிவிக்கிறார்.
இந்த கலந்துரையாடல்களின் நோக்கம் சீனாவை கட்டுப்படுத்துவதாக இல்லாவிட்டாலும், ஆசியாவில் பெரிய அளவில் ஆதிக்கம் செலுத்திவரும் சீனாவை சமன்படுத்த மற்றொறு சக்தி தேவை என்பதன் வெளிப்பாடாக இருக்கக் கூடும் எனவும் அவர் மேலும் தெரிவிக்கிறார்.
சீனா தனது இராணுவத்தை நவீனப்படுத்தி வருவது இந்தப் புதிய உறவுக்கான உந்துதலாக தெளிவாகத் தெரிகிறது என்றாலும், சீனாவின் வளர்ந்து வரும் பொருளாதாரமும் இராஜாங்க பலமும் முக்கியமானவை என்றும் அவர் கருத்து வெளியிடுகிறார்.