சட்டப் பேரவை மாற்றுத் தலைவராக 6 பேர் நியமனம்
சென்னை, மார்ச் 27: சட்டப் பேரவையின் மாற்றுத் தலைவர்களாக 6 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்த அறிவிப்பை பேரவைத் தலைவர் ஆவுடையப்பன் தெரிவித்தார்.
திங்கள்கிழமை சட்டப்பேரவை நிகழ்ச்சிகள் தொடங்கியதும் இது குறித்த அறிவிப்பை பேரவைத் தலைவர் வெளியிட்டார்.
பேரவையின் 5-வது கூட்டத் தொடருக்கு மாற்றுத் தலைவர்களாக
- ரங்கநாதன்,
- துரை.சந்திரசேகரன்,
- இ.எஸ்.எஸ்.ராமன்,
- தி.வேல்முருகன்,
- பாலபாரதி,
- வை.சிவபுண்ணியம் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் சட்டப் பேரவையில் இந்த மாதம் 30-ம் தேதி வரை கேள்வி நேரத்தை ஒத்திவைக்கும் தீர்மானத்தை அவை முன்னவரும், நிதி அமைச்சருமான க.அன்பழகன் கொண்டு வந்தார். அத்தீர்மானம் ஏகமனதாக நிறைவேறியது.