பிளஸ் டூ பொதுத் தேர்வு (மாதிரி) வினா
பிளஸ் டூ பொதுத் தேர்வு (மாதிரி) வினா
மேல்நிலை – இரண்டாம் ஆண்டு – பொதுத் தமிழ்
பகுதி-1 – தமிழ் – முதல் தாள் தொடர்ச்சி
(செய்யுளும், இலக்கணமும்)
காலம்: 3 மணிமதிப்பெண்: 100
குறிப்பு: (1) விடைகள் தெளிவாகவும் குறிப்பிட்ட அளவினதாகவும் சொந்த நடையில் அமைதல் வேண்டும்.
(2) வினா யஐ-க்கான விடை மட்டும் செய்யுள் வடிவில் அமைதல் வேண்டும்.
9. உரிய விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
16*1 = 16
33. “ஒன்றே யென்னின்’ என்னும் கடவுள் வாழ்த்துப் பாடல் அமைந்துள்ள காண்டம்
(அ) அயோத்தியா காண்டம் (ஆ) சுந்தர காண்டம் (இ) யுத்த காண்டம்
34. புறநானூற்றின் திணைகள்
(அ) ஐந்து (ஆ) பதினொன்று (இ) பத்து
35. எட்டுத் தொகை நூல்களுள் ஒன்று
(அ) குறிஞ்சிப்பாட்டு (ஆ) முல்லைப்பாட்டு (இ) பரிபாடல்
36. திருக்குறளின் பெருமையை உணர்த்துவது
(அ) பழமொழி (ஆ) திருவள்ளுவமாலை (இ) நாலடியார்
37. வரி என்பது
(அ) சந்தப் பாடல் (ஆ) இசைப் பாடல் (இ) கலிப் பாடல்
38. தனயை யென்ற சொல்லின் பொருள்
(அ) அம்மா (ஆ) உடன் பிறந்தாள் (இ) மகள்
39. வீரமாமுனிவர் தொகுத்த அகராதி
(அ) சதுரகராதி (ஆ) பேரகராதி (இ) அரும்பத அகராதி
40. தமிழில் தோன்றிய முதல் கலம்பகம்
(அ) மதுரைக் கலம்பகம் (ஆ) நந்திக் கலம்பகம் (இ) காசிக் கலம்பகம்
41. பாரதிதாசன் வெளியிட்ட இதழ்
(அ) தேன்மழை (ஆ) குயில் (இ) தென்றல்
42. வடமொழியில் பாரதம் பாடியவர்
(அ) வான்மீகி (ஆ) வியாசர் (இ) காளிதாசர்
43. “”நமக்குத் தொழில் கவிதை நாட்டிற்கு உழைத்தல்” என்று பாடியவர்
(அ) பாரதிதாசன் (ஆ) வாணிதாசன் (இ) பாரதியார்
44. செந்தமிழைச் செழுந்தமிழாகக் காண விரும்பியவர்
(அ) பாரதியார் (ஆ) பாரதிதாசன் (இ) கம்பதாசன்
45. தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் தமிழன்னை விருது பெற்ற கவிஞர்
(அ) அப்துல் ரகுமான் (ஆ) சுரதா (இ) தாராபாரதி
46. உவமைக் கவிஞர் எனப் பாராட்டப்பட்டவர்
(அ) சுப்பிரமணியபாரதி (ஆ) சுரதா (இ) கண்ணதாசன்
47. கிறித்துவக் கம்பர் என்றழைக்கப்பட்டவர்
(அ) கம்பர் (ஆ) வீரமா முனிவர் (இ) எச்.ஏ. கிருஷ்ணப்பிள்ளை
48. சின்னச் சீறா என்ற நூலை எழுதியவர்
(அ) உமறுப்புலவர் (ஆ) குணங்குடி மஸ்தான் (இ) பனுஅகுமது மரைக்காயர்
ல. கோடிட்ட இடங்களை நிரப்புக
2+2 = 4
49. எண்ணிய எண்ணியாங் ………….. எண்ணியர்
திண்ணியர் ……… பெரின்
50. நன்றி மறப்பது …………. நன்றல்ல
தன்றே மறப்பது ………..
விடைகள் -கேள்வி எண் 29-48
29) உ 30) அ 31) ஆ 32) இ 33) இ 34) ஆ 35) இ 36) ஆ 37) ஆ 38) இ 39) அ 40) ஆ 41) ஆ 42) ஆ 43) இ 44) ஆ 45) அ 46) ஆ 47) இ 48) இ
தமிழ் இரண்டாம் தாள்
(உரைநடை, துணைப் பாடம், செய்யுள் நயம் பாராட்டல், தமிழாக்கம், படைப்பாற்றல், மொழித்திறன்)
காலம்: 3 மணி மதிப்பெண்: 80
குறிப்பு: விடைகள் தெளிவாகவும் குறிப்பிட்ட அளவினவாகவும் சொந்த நடையிலும் அமைதல் வேண்டும்.
1. பின்வரும் வினாக்களுள் எவையேனும் மூன்றனுக்கு (ஒவ்வொன்றிற்கும் பத்து வரிகளில் மிகாது) விடை எழுதுக.
3*4 = 12
1. இசைத்தமிழ் என்பது யாது? முற்காலத்தும் இக்காலத்தும் விளங்கும் இசைத்தமிழ் நூல்கள் யாவை?
2. நாடு என்னும் பற்றால் சமரசத்தை இழப்பது பற்றித் திரு.வி.க. உரைப்பன யாவை?
3. கவிதைக்குரிய நல்லியல்புகளைக் கம்பன் உரைக்குமாறு யாங்ஙனம்?
4. பழந்தமிழ் மக்கள் பெரிய முயற்சியையே மதித்து ஒழுகினர் என்பதனை விளக்குக.
5. செம்மொழியின் இலக்கணம் யாது? அவ்விலக்கணம் தமிழ்மொழியின்பால் பொருந்தியிருப்பதனை விளக்குக.
2. பின்வரும் வினாக்களுள் எவையேனும் மூன்றனுக்கு (ஒவ்வொன்றிற்கும் பத்து வரிகளில் மிகாது) விடை எழுதுக.
3*4 = 12
6. ஆவின் சிறப்புகளாகப் பாவாணர் விதந்துரைப்பன யாவை?
7. “”செல்வம் நிலைபேறு உடையதன்று” என்பதனை
நாலடியார் எங்ஙனம் நயம்பட நவில்கின்றது?
8. ஒருபடி முன்னேற்றம் என்று மு.வ. உரைப்பது யாது?
9. இலக்கியங்களில் காணப்படும் கட்டடக் கலைச் செய்திகளைக் கூறுக.
10. “ஆயன்’ என்ற அரசனைக் குறிக்கும் “கோ’ எனப்பட்டது என்பதை விளக்குக.
3. பின்வரும் வினாக்களுடன் ஏதேனும் ஒன்றனுக்கு (இருபது வரிகளில் மிகாது) விடை எழுதுக.
1*6 = 6
11. நாடு, சமயம், சாதி இவற்றை அடிப்படையாகக் கொண்டு சமரச உணர்வினின்று மாறுபடுதல் தவறாம் என்று திரு.வி.க. வாதிடுவதனை விளக்குக.
12. நீதி கூறும் போதும் நயம்படக் கூறியவர் திருவள்ளுவர் என்பதனைச் சான்றுகளுடன் விளக்குக.