உள்ளாட்சித் தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஒதுக்கப்பட்ட இடங்கள் அறிவிப்பு
![]() |
![]() |
உள்ளாட்சி மன்றத் தொகுதிகள் மாவட்ட அளவில் பேசி முடிவு செய்யப்படும் – திமுக தலைவர் |
தமிழகத்தில் எதிர்வரும் அக்டோபர் மாதம் நடக்க இருக்கும் தமிழக உள்ளாட்சித் தேர்தல்களில் மாநிலத்தை ஆளும் திமுக தலைமையிலான கூட்டணிக்கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களின் எண்ணிக்கையை திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.கருணாநிதி செவ்வாய்க்கிழமை அறிவித்தார்.
![]() |
திமுக கூட்டணி பங்கீடு மாநகராட்சி மன்ற மேயர்கள் மொத்த இடங்கள் 6 திமுக 4 காங் 2 முதல்நிலை நகராட்சி தலைவர்கள் மொத்த இடங்கள் 102 திமுக 52 காங் 25 பாமக 12 மா. கம்யூ 8 இ.கம்யூ 5 பேரூராட்சி தலைவர்கள் மொத்த இடங்கள் 561 திமுக 284 காங் 134 பாமக 70 மா. கம்யூ 45 இ.கம்யூ 28 |
செவ்வாய்கிழமையன்று அறிவிக்கப்பட்டுள்ள எண்ணிக்கையின் அடிப்படையில் கூட்டணிக்கட்சிகள் போட்டியிடும் உள்ளாட்சி மன்றத்தொகுதிகளை, திமுகவும் அதன் தோழமை கட்சிகளும் மாவட்ட அளவில் பேசி முடிவு செய்வார்கள் என்றும் கருணாநிதி கூறினார்.
இவரது அறிவிப்பை வைத்துப்பார்க்கும்போது, கடந்த சட்டமன்றத்தேர்தல்களின் போது திமுக கூட்டணிக்கட்சிகளுக்கிடையில் ஏற்பட்ட சதவீதக் கணக்கின் அடிப்படையிலேயே தற்போது உள்ளாட்சி மன்ற தேர்தலிலும் தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாக தெரிகிறது.
அதேசமயம், இந்த தொகுதிப்பங்கீடு காரணமாக உள்ளாட்சிமன்றங்களில் ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்காத சூழல் உருவாகியிருப்பதாகவும், கூட்டணிகட்சிகள் ஆதரவளித்தால் மட்டுமே உள்ளாட்சிமன்றத்தலைவர் பதவிகளை கட்சிகள் பிடிக்க முடியும் என்பதோடு அவர்களின் அதரவு தொடர்ந்தால்தான் உள்ளாட்சி அமைப்புகளை நடத்தமுடியும் என்கிற சூழலும் உருவாகி இருப்பதாகவும் கணிக்கப்படுகிறது.