‘விடுதலைப் புலிகள் அமைப்பு வலுவிழந்து வருகிறது’
கொழும்பு, பிப். 3: இலங்கையில் தனி ஈழம் கேட்டு போராடும் விடுதலைப் புலிகள் அமைப்பு வலுவிழந்து வருகிறது.
இலங்கை பத்திரிகை ஒன்றில் இதுபற்றி செய்தி வெளியாகி யுள்ளது. விடுதலைப் புலிகள் இயக்கத்தில் உள்ள 17,000 பேர் போரில் ஈடுபட்டுள்ளனர். எனினும் அவர்களில் குறைந்த எண்ணிக்கையிலான வீரர்கள்தான், போரில் பழக்கமானவர்கள்.
அவர்களது கடற்படையில் 1500 பேர் உள்ளனர். அவர்களில் பெரும்பாலோர் புதிதாக படையில் சேர்க்கப்பட்டவர்கள்.
விடுதலைப் புலிகளுக்குத் தேவையான ஆயுதங்களின் வருகையும் குறைந்துவிட்டது.
எனவே உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும் வெடிகுண்டுகளையும் ஆயுதங்களையும் அவர்கள் பயன்படுத்துகின்றனர். சமீபத்தில் வன்னி பகுதிக்கு ஆயுதங்களை எடுத்துச் சென்ற விடுதலைப் புலிகளின் 7 கப்பல்களை இலங்கை கடற்படை தாக்கி மூழ்கடித்தது. இதில் 80,000 டன் வெடிகுண்டுகளும் ஆயுதங்களும் அழிந்தன.
இதனால் புலிகளுக்கு ஆயுதத் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது.
இலங்கை விமானப்படை தாக்குதலில் விடுதலைப் புலிக ளுக்குச் சொந்தமான 3 விமானங்கள் அழிந்தன. புலிகள் படையில் 25 தளபதிகள் கொல்லப்பட்டனர். தற்போது விடுத லைப் புலிகள், அரசு ராணுவத்தால் சுற்றி வளைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களால் எதுவும் செய்ய முடியவில்லை என்று பத்திரி கையில் செய்தி வெளியாகியுள்ளது.
இந்நிலையில் இந்த ஆண்டு விடுதலைப் புலிகள் தங் களது ராணுவ பலத்தை வெளிப்படுத்துவார்கள் என்று அந்த இயக்கத்தின் ஆதரவாளர் களில் ஒருவரான கே. பாலகுமாரன், தமிழீழ டெலிவிஷனுக்கு அளித்த பேட்டியில் கூறியுள் ளார்.
——————————————————————————————————————————————
பிரிட்டன் வாடிக்கையாளர்களின் கிரெடிட் கார்டுகள் விவரத்தை புலிகள் திருடினார்களா?
லண்டன், பிப். 3: கனடாவில் விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த இருவரையும், அவர்களது கூட்டாளிகள் இருவரையும் கடந்த மாதம் 31-ம் தேதி அந்நாட்டு போலீஸôர் கைது செய்தனர்.
கிருபாகரன் செல்வநாயகம் பிள்ளை, சேதுகாவலர் சரவணபவன், பிரதீபன் தம்பு, ஸ்ரீநாதன் ஆகியோரிடமிருந்து ஏராளான பரிசுப் பொருள்கள், கம்ப்யூட்டர் பாகங்கள், லேப்டாப் கம்ப்யூட்டர் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.
அந்த லேப்டாப் கம்ப்யூட்டரை இயக்கிப் பார்த்த போது அதில் ஏராளமான கிரெடிட் கார்டுகள் விபரமும், அவை அனைத்தும் பிரிட்டன் வாடிக்கையாளர்களை பற்றியது என்பதும் தெரியவந்தது.
இதனால் தங்களது நிதித் தேவைக்காக அந்த கிரெடிட் கார்டுகளின் விவரத்தை அவர்கள் திருடியிருக்கலாம் என்று கனடா போலீஸôர் சந்தேகித்துள்ளார். அந்த அடிப்படையில் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.