கணவர் முகேஷ் கொடுமைப்படுத்துவதாக புகார்: நடிகை சரிதா விவாகரத்து மனு
சென்னை, மார்ச். 16-
“தப்புத் தாளங்கள்,” படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை சரிதா தொடர்ந்து நூல்வேலி, மவுனகீதங்கள், அச்சமில்லை அச்சமில்லை, அக்னிசாட்சி, நெற்றிக்கண், ஜுலி கணபதி உள்பட ஏராளமான தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளப் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக திகழ்ந்தார்.
சில வருடங்களுக்கு முன் மலையாள நடிகர் முகேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்தார். முகேஷ் தமிழில் “ஜாதிமல்லி” உள்பட சில படங்களில் நடித்துள்ளார். திருமணத்துக்குப் பின் சரிதா கணவர் முகேசுடன் கேரள மாநிலம் கொச்சியில் வசித்து வந்தார்.
இவர்களுக்கு 17 வயது, 15 வயதில் 2மகன்கள் உள்ளனர். திருமணத்துக்குப் பின் சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்த சரிதா மீண் டும் படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.
பாலமகேந்திரா டைரக்ஷ னில் “ஜுலி கணபதி” படத்திலும், ஜோதிகாவுடன் “ஜுன்-ஆர்” படத்திலும் டி.வி. சீரியல்களிலும் நடித்தார். சரிதா கணவரைப் பிரிந்து தனியாக வசித்து வந்தார்.
இதற்கிடையே கணவரிடம் இருந்து விவகாரத்து கேட்டு நடிகை சரிதா சென்னை குடும்ப நல நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்தார். தன்னை கணவர் முகேஷ் கொடுமைப்படுத்துவதாகவும், எனவே அவரிடம் இருந்து விவகாரத்து பெற்றுத் தருமாறும் கூறி இருந்தார்.
இந்த மனு நீதிபதி தேவதாஸ் முன்னிலையில் இன்று விசார ணைக்கு வந்தது.
அப்போது நடிகை சரிதா கோர்ட்டில் நேரில் ஆஜர் ஆனார். மனுவை ஏற்றுக் கொண்ட நீதிபதி வழக்கு விசாரணையை வருகிற 26-ந் தேதிக்கு தள்ளி வைத்தார்.
இதே போல் சரிதாவின் கணவர் முகேஷ் கொச்சி கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அதில் தனது 2 மகன்களும் சரிதா வசம் உள்ளனர். மகன்களை மாதத் துக்கு ஒரு முறை பார்க்கவும், சந்தித்து பேசவும், அனுமதி வழங்க வேண்டும் என்று கூறி உள்ளார்.