Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Salem’ Category

1.5 mn Commercial (lorry) vehicles keep off roads in Karnataka – Truckers strike enters second day

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 24, 2008

3-வது நாளாக லாரி ஸ்டிரைக்: பல கோடி வர்த்தகம் பாதிப்பு

நாமக்கல், பிப். 23: தமிழகம் மற்றும் கேரளத்தில் 3-வது நாளாக நடைபெறும் லாரிகள் வேலைநிறுத்தத்தால் பல கோடி மதிப்பிலான வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த வாகனங்களுக்கும், கர்நாடகத்துக்குள் நுழையும் வாகனங்களுக்கும் வேகக் கட்டுப்பாடு கருவி பொருத்த வேண்டும் என்ற உத்தரவை திரும்பப் பெற வலியுறுத்தி கர்நாடக லாரி உரிமையாளர்கள் வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இப் போராட்டத்துக்கு தமிழக லாரி உரிமையாளர்களும் ஆதரவு தெரிவித்து கர்நாடகத்துக்கு செல்லும் லாரிகளை நிறுத்தி வைத்துள்ளனர்.

வேலை நிறுத்தம் 3-வது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் நீடிக்கிறது. இதனால், வட மாநிலங்களுக்கான தரைவழிப் போக்குவரத்து முற்றிலும் தடைபட்டுள்ளது. ஈரோடு, திருப்பூர், கோவை, நாமக்கல், சேலம் மற்றும் தென் மாவட்டங்களில் இருந்து வட மாநிலங்களுக்கு செல்லும் தீப்பெட்டி, ஜவுளி, மஞ்சள், இரும்பு, உதிரிப் பாகங்கள், தொழிற்சாலை பொருள்கள் என அனைத்தும் மூன்று நாள்களாக வட மாநிலங்களுக்கு செல்லாமல் அப்படியே தேங்கி உள்ளன வட மாநிலங்களில் இருந்து வரும் கோழித் தீவன மூலப் பொருள்கள், எலக்ட்ரானிக் பொருள்கள், மார்பிள்ஸ், பர்னிச்சர்கள், காய்கறிகள், பழங்கள் வரத்தும் தடைபட்டுள்ளது. போராட்டம் காரணமாக பல கோடி மதிப்பிலான வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. போராட்டம் நீடித்தால் கோழித் தீவன தட்டுப்பாடு ஏற்பட்டு அதன் விலை மேலும் உயரும் அபாயமுள்ளது.

கர்நாடகத்தில் தமிழக லாரிகளை தடையின்றி இயக்கலாம்: போக்குவரத்துத் துறை விளக்கம்

சென்னை, பிப். 23: கர்நாடக மாநிலத்தில் தடையின்றி தங்கள் லாரிகளை இயக்கலாம் என்று தமிழக லாரி உரிமையாளர்களுக்கு, போக்குவரத்துத் துறை அறிவுறுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த வாகனங்களுக்கும், கர்நாடகத்துக்குள் நுழையும் வாகனங்களுக்கும் வேகக் கட்டுப்பாடு கருவி பொருத்த வேண்டும் என்று அந்த மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதை திரும்பப் பெற வலியுறுத்தி, கர்நாடக லாரி உரிமையாளர்கள் வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இப் போராட்டத்துக்கு தமிழக லாரி உரிமையாளர்களும் ஆதரவு தெரிவித்து கர்நாடகத்துக்கு செல்லும் லாரிகளை நிறுத்தி வைத்துள்ளனர்.

தமிழக லாரிகளை தடையின்றி கர்நாடக மாநிலத்தில் இயக்கலாம் என்று தமிழக போக்குவரத்துத் துறை விளக்கம் அளித்துள்ளது. இதுகுறித்து, இணைப் போக்குவரத்து ஆணையர் டி.நாராயணமூர்த்தி சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழகத்தைச் சேர்ந்த வாகனங்களை கர்நாடகத்தில் இயக்கும் போது, வேகக் கட்டுப்பாடு கருவி பொருத்த வேண்டும் என்ற உத்தரவு வரும் ஜூன் மாதம் வரை வற்புறுத்தப்பட மாட்டாது என கர்நாடக அரசு தெரிவித்துள்ளது.

எனவே, தமிழக லாரி உரிமையாளர்கள் மற்றும் லாரி உரிமையாளர் சங்கத்தினர் எந்தவித தடையுமின்றி கர்நாடக மாநிலம் வழியாக தங்கள் லாரிகளை இயக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.

கர்நாடகத்தில் லாரிகள் வேலைநிறுத்தம் எதிரொலி
தமிழ்நாட்டில் பலகோடி ரூபாய் பொருட்கள் தேக்கம்

சென்னை, பிப்.24-

கர்நாடகத்தில் லாரிகள் வேலைநிறுத்தம் நடைபெறுவதால், தமிழ்நாட்டில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் தேங்கி உள்ளன.

லாரிகள் வேலைநிறுத்தம்

கர்நாடகத்தில் ஓடும் லாரிகளுக்கு வேக கட்டுப்பாடு கருவி பொருத்த வேண்டும் என்று அந்த மாநில ஐகோர்ட்டு உத்தரவிட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அந்த மாநிலத்தில் லாரி உரிமையாளர்கள் நேற்று முன்தினம் இரவு முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். இதனால் அங்கு லாரிகள் ஓடவில்லை.

இந்த போராட்டத்துக்கு தமிழக லாரி உரிமையாளர்கள் சங்கமும் ஆதரவு தெரிவித்து இருப்பதால், தமிழ்நாட்டில் இருந்து கர்நாடகம் மற்றும் கர்நாடகத்தின் வழியாக செல்லும் அனைத்து லாரிகளும் நிறுத்தப்பட்டு உள்ளன. ஏற்கனவே கர்நாடகத்துக்கு புறப்பட்டு சென்ற லாரிகள் எல்லையில் நிறுத்தப்பட்டு இருக்கின்றன.

பல கோடி ரூபாய் பொருட்கள் தேக்கம்

மேலும் கோவை, ஈரோடு, கரூர், திண்டுக்கல், சேலம் உள்ளிட்ட நகரங்களில் இருந்து கர்நாடகத்துக்கு செல்ல வேண்டிய லாரிகள் புறப்படாமல் நிறுத்தப்பட்டு உள்ளன. இதனால் அங்குள்ள பார்சல் அலுவலகங்களில் பார்சல்கள் குவிந்து உள்ளன. இதனால் தமிழ்நாட்டில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் தேங்கி கிடக்கின்றன.

இந்த வேலை நிறுத்த போராட்டத்தால் தமிழகத்தில் இருந்து வடமாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படும் தீப்பெட்டி, தேங்காய், ஜவுளி, ஜவ்வரிசி, மஞ்சள் போன்ற பொருட்கள் தடைப்பட்டுள்ளன. இதனால் நாள் ஒன்றுக்கு தமிழகம் முழுவதும் ஏறத்தாழ ரூ.100 கோடி மதிப்புள்ள பொருட்கள் தேக்கம் அடைந்து வருகின்றன. லாரி உரிமையாளர்களுக்கும் நாள் ஒன்றுக்கு ரூ.5 கோடி வீதம் இழப்பு ஏற்பட்டு வருகிறது என்று தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் செங்கோடன் கூறினார்.

கோயம்பேடு மார்க்கெட்

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு காய்கறிகள் அதிக அளவில் கர்நாடக மாநிலத்தில் இருந்து தான் கொண்டு வரப்படுகின்றன. குறிப்பாக தக்காளி, கோஸ், கேரட், பீன்ஸ் போன்ற முக்கியமான காய்கறிகள் அங்கிருந்துதான் வருகின்றன. லாரிகள் வேலைநிறுத்தம் காரணமாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) காய்கறி வரத்து பெரிய அளவில் பாதிக்கப்படும் என்று தெரிகிறது.

இதுகுறித்து கோயம்பேடு மார்க்கெட் தக்காளி வியாபாரிகள் சங்க நிர்வாகி செல்வராஜிடம் கேட்டபோது, “தினமும் 50 லாரிகளில் தக்காளி கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வரும். நேற்றைய தினம் வழக்கமாக வரும் அனைத்து காய்கறிகளும் வந்து விட்டன. இன்றைய தினம் தான் வழக்கமாக வரும் லாரிகளில் காய்கறிகள் வருமா என்று எதிர்பார்த்திருக்கிறோம்” என்றார்.

விலை உயர வாய்ப்பு

சென்னை கோயம்பேடு எம்.எம்.சி. உரிமம் பெற்ற வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் சவுந்திரராஜன் கூறும்போது, “தக்காளி தவிர 60 லாரிகளில் மற்ற காய்கறிகள் கர்நாடக மாநிலத்தில் இருந்து வருகின்றன. நேற்றைய தினம் வழக்கமாக வரவேண்டிய காய்கறிகள் வந்தன. இன்றைய தினம் குறைந்த அளவில்தான் காய்கறிகள் வரும் என்று எதிர்பார்க்கிறோம். அப்படி குறைந்த அளவு காய்கறிகள் வருகின்ற பட்சத்தில் காய்கறிகளின் விலையும் சற்று அதிகரிக்க வாய்ப்புள்ளது” என்றார்.

ஈரோடு

ஈரோடு மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் நாச்சிமுத்து கூறியதாவது:-

வழக்கமாக ஈரோட்டில் இருந்து ஜவுளி, மஞ்சள், எண்ணை போன்ற பொருட்கள் கர்நாடகம் மற்றும் மராட்டியம், அரியானா, டெல்லி உள்பட பல வடமாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படும். கர்நாடகத்தில் பொருட்கள் ஏற்றி இறக்கும் சுமார் 200 லாரிகள் மற்றும் கர்நாடகம் வழியாக செல்லும் லாரிகள் உள்பட சுமார் 1,500 லாரிகள் ஓடவில்லை. இதனால் ஈரோட்டில் பல கோடி போய் மதிப்புள்ள வர்த்தகம் பாதிக்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

கோவை லாரி உரிமையாளர்கள் சங்க செயலாளர் கே.எஸ்.கலியபெருமாள் கூறுகையில், கோவை மாவட்டத்திலிருந்து கர்நாடகத்திற்கு லாரிகள் செல்லாததால் தினமும் ரூ. 25 கோடிக்கு வர்த்தக பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்றார்.

சேலம்

சேலம் மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் சென்னகேசவன் கூறியதாவது:-

லாரிகளுக்கு வேககட்டுப்பாடு கருவி பொருத்த வேண்டும் என்ற கர்நாடக ஐகோர்ட்டின் உத்தரவு தமிழக லாரி உரிமையாளர்களுக்கும் பெரும் சுமையை ஏற்படுத்தியுள்ளது. 40 கிலோ மீட்டர் வேகத்துக்கு மேல் போகக்கூடாது என்றால், காய்-கறிகள் மற்றும் பழங்கள் போன்ற அழுகும் பொருட்களை குறிப்பிட்ட நேரத்தில் லாரியில் கொண்டு செல்லமுடியாமல் பாதிப்பு ஏற்படும். கர்நாடக லாரி உரிமையாளர்கள் ஸ்டிரைக்கால், சேலம் மாவட்டத்தில் இருந்து கர்நாடகம் மற்றும் வெளிமாநிலங்களுக்கு கொண்டு செல்லப்பட வேண்டிய சரக்குகள் ஒரே நாளில் ரூ.10 கோடி மதிப்பில் தேக்கம் அடைந்து உள்ளன.

இவ்வாறு சென்னகேசவன் தெரிவித்தார்.

வேலைநிறுத்தம் தொடரும்

இதற்கிடையே கர்நாடக லாரி உரிமையாளர் மற்றும் ஏஜெண்டுகள் சங்க நிர்வாகிகள் சங்க தலைவர் ஜி.ஆர்.சண்முகப்பா தலைமையில் கவர்னரின் ஆலோசகர் தாரகன் மற்றும் போக்குவரத்து துறை முதன்மை செயலாளர் தங்கராஜ் ஆகியோரை நேற்று சந்தித்து பேசினார்கள். அப்போது கவர்னர் தனது அதிகாரத்தை பயன்படுத்தி வேகக்கட்டுப்பாட்டு கருவி பொருத்தும் திட்டத்தை வாபஸ் பெற வேண்டும் என்று லாரி உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்தனர். பேச்சுவார்த்தையின் போது அரசு தரப்பில் எந்த ஒரு உறுதி மொழியும் கொடுக்கப்படாததால் வேலை நிறுத்தம் தொடரும் என்று ஜி.ஆர்.சண்முகப்பா கூறினார்.

கர்நாடகத்தில் லாரிகள் வேலை நிறுத்தம் காரணமாக ரூ.100 கோடி மதிப்புள்ள சரக்குகள் தேக்கம் அடைந்து இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் தனியார் பஸ், வாடகை கார், சுற்றுலா வேன் உரிமையாளர்களும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு இருப்பதால் பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.

Posted in Accidents, Biz, commercial, Dangerous, dead, Death, drivers, DUI, DWI, Economy, Employment, Erode, Exports, Finance, Food, Freight, Goods, Impact, Jobs, Karnataka, Law, Limits, Lorry, Loss, Operators, Order, Parcel, Perishable, Profit, Salem, Services, Speed, Strike, Transport, Transporters, Truckers, Trucks, Vegetables | Leave a Comment »

Ignoring the sports development opportunity in Southern TN: Why only Chennai & why just cricket?

Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 9, 2007

தெரிந்தே செய்யும் தவறுகள்

தமிழகத்தைப் பொருத்தவரை விளையாட்டு அரங்கத்தில் நமது பங்களிப்பு எப்போதுமே இருந்து வந்திருக்கிறது. அகில இந்திய ரீதியில் கிரிக்கெட், ஹாக்கி, செஸ், டென்னிஸ் போன்ற விளையாட்டுகளில் நமது வீரர்கள் பிரமிக்கத்தக்க சாதனைகளைப் புரிந்துவந்திருக்கிறார்கள். இதற்கு முக்கியமான காரணம் அரசு தரும் ஊக்கம் என்பதைவிட, நமது இளைஞர்கள் மத்தியில் காணப்படும் ஆர்வம்தான்.

விளையாட்டுத் துறைக்கான தனி ஆணையம் செயல்படுவதுடன், கணிசமான அளவு நிதி ஒதுக்கீடும் மாநில அரசாலும் மத்திய அரசாலும் விளையாட்டுக்காக ஒதுக்கவும் செய்யப்படுகிறது. இத்தனை இருந்தும், கிராமப்புற நிலையிலிருந்து முறையாக விளையாட்டு வீரர்களை அடையாளம் கண்டு, அவர்களுக்குத் தொடர்ந்து ஊக்கம் அளித்து அகில இந்திய அளவில் எல்லா விளையாட்டுகளிலும் நமது வீரர்களை முன்னணியில் நிறுத்த இன்னும் ஏன் முடிவதில்லை என்கிற கேள்விக்கு, அரசும் விளையாட்டு சம்பந்தப்பட்ட ஆணையமும்தான் பதில் சொல்ல வேண்டும்.

எதிர்க்கட்சித் தலைவி ஜெயலலிதா குமரி மாவட்டத்தில் மத்திய அரசின் விளையாட்டுப் பயிற்சி மையம் அமைக்கும் திட்டம் நடவடிக்கை எடுக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டு விட்டதாகக் குற்றம்சாட்ட, அதற்கு பதிலளிக்கும் முகமாக, ஒரு கோடி ரூபாய் செலவில் இந்திய விளையாட்டு ஆணையத்தின் துணை மையம் திருநெல்வேலி மாவட்டத்தில் அமைய இருப்பதாகவும், அதற்கான பூர்வாங்கப் பணிகள் நடைபெறவுள்ளதாகவும் அறிவித்திருக்கிறார் முதல்வர் கருணாநிதி. வரவேற்கப்பட வேண்டிய விஷயம்.

விளையாட்டுத் துறையைப் பற்றிய மிகப்பெரிய குறைபாடு, சர்வதேசத் தரத்திலான விளையாட்டு அரங்கங்களும் பயிற்சிக்கூடங்களும் சென்னையில் மட்டுமே அமைந்திருக்கின்றன என்பதுதான். நெல்லையில் அமைய இருக்கும் இந்திய விளையாட்டு ஆணையத்தின் துணை மையம்போல, உலகத் தரம் வாய்ந்த தடகள மைதானங்கள், கிரிக்கெட் மைதானங்கள், கால்பந்து, கைப்பந்து, பூப்பந்து மற்றும் ஹாக்கி மைதானங்கள் போன்றவை தமிழகத்திலுள்ள அனைத்து மாநகராட்சிகளிலும் அமைய வேண்டியது அவசியம்.

விளையாட்டு என்பதே சென்னையை மட்டுமே மையமாகக் கொண்ட விஷயமாகி விட்டது. ஆனால், விளையாட்டு வீரர்களோ, மாவட்டங்களிலிருந்துதான் அதிகமாக உருவாகிறார்கள். பள்ளிக் கல்விக்கும் சுற்றுலாவுக்கும் தரப்படும் முக்கியத்துவம் விளையாட்டுத் துறைக்கும் அளிக்கப்பட வேண்டும் என்கிற கோரிக்கை நீண்ட காலமாகவே இருந்து வருகிறது. தனியார் கல்வி நிலையங்கள் பல, முறையான விளையாட்டுப் பயிற்சியாளர்களோ, மைதானமோ இல்லாமலே செயல்படுகின்றன என்பது அரசுக்குத் தெரிந்தும், இந்த விஷயத்தில் அரசு கண்மூடி மௌனம் சாதிப்பது ஏன் என்பது தெரியவில்லை.

இளைஞர்கள் மத்தியில், கிரிக்கெட் விளையாட்டிற்கு மிகப்பெரிய வரவேற்பு ஏற்பட்டிருப்பது மறுக்க முடியாத உண்மை. குக்கிராமம் வரை கிரிக்கெட்டின் பாதிப்பு நன்றாகவே தெரிகிறது. ஆனால், சென்னையைத் தவிர வேறு எந்த நகரிலும் சென்னையில் இருப்பதுபோல கிரிக்கெட் ஸ்டேடியம் இல்லையே, ஏன்?

சென்னையில், தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் கட்டுப்பாட்டில் சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானம் இருக்கிறது என்பது மட்டுமல்ல, இந்த மைதானம் சர்வதேசத் தரத்திலான மைதானம் என்பதும் உலகறிந்த உண்மை. அப்படி இருக்கும்போது, பழைய மகாபலிபுரம் சாலையில் கருங்குழிப்பள்ளம் கிராமத்தில் இன்னொரு கிரிக்கெட் ஸ்டேடியம் அமைக்க 50 ஏக்கர் நிலத்தை 30 ஆண்டுகளுக்கான குத்தகைக்குத் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்திற்குத் தமிழக அரசு வழங்க ஒப்புதல் அளித்திருப்பது ஏன்?

கோடிக்கணக்கில் பணமிருக்கும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்திற்கு அரசு நிலம் அளித்து உதவியதற்குப் பதிலாக, திருச்சி, நெல்லை, மதுரை, கோவை அல்லது சேலத்தில் ஏன் ஒரு நல்ல கிரிக்கெட் மைதானத்தை அரசின் பராமரிப்பில் கட்டக் கூடாது? வேட்டி கட்டிய தமிழக முதல்வரால் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்திற்குள் நுழைய முடியாது என்பதாவது அவருக்குத் தெரியுமா? தெரிந்துமா இப்படியொரு தவறு நடந்திருக்கிறது?

——————————————————————————————————————————

விளையாட்டு ஆணையத்தின் கவனத்துக்கு…

வி. துரைப்பாண்டி

தமிழகத்தில் விளையாட்டு வீரர், வீராங்கனைகள் “உருவாக்கம்’ அரிதாகிவருவது, விளையாட்டு ஆர்வலர்களிடம் மிகவும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

“சாம்பியன்ஸ்’ மேம்பாட்டுத் திட்டம் உள்பட பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வரும் தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (ஸ்போர்ட்ஸ் டெவலப்மென்ட் அத்தாரிட்டி ஆஃப் தமிழ்நாடு- எஸ்டிஏடி) இளம் வீரர்களை உருவாக்குவதிலும், அதற்கான பயிற்சியாளர்களை நியமனம் செய்வதிலும் கவனம் செலுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

“கேட்ச் தெம் யங்’ (இளமையில் தெரிந்தெடுத்தல்) எனும் பெயரில் முன்னர் செயல்பட்டுவந்த திட்டம் தற்போது இல்லை. அந்த குறைபாட்டால்தான் என்னவோ அண்டை மாநிலமான கேரளத்திலிருந்து வீரர், வீராங்கனைகளை கல்லூரிகள் “இறக்குமதி’ செய்யும் அவலம் ஏற்பட்டுள்ளதோ என்ற அச்சம் எழுகிறது.

வீரர், வீராங்கனைகளின் உருவாக்கம் குறைந்துபோனதற்கு நமது கல்வி முறையின் வளர்ச்சிகளைக் காரணமாகக் கூறும் அதிகாரிகளும் ஆர்வலர்களும், சர்வதேச அளவிலான போட்டிகளில் இந்தியா தோற்கும்போது “என்ன மோசமப்பா இது’ என ஆதங்கப்படுவது எந்த விதத்தில் நியாயம் எனத் தெரியவில்லை.

தமிழ்நாட்டில் வீரர், வீராங்கனைகள் திறமையை வெளிப்படுத்துவதற்கு வாய்ப்பளிக்கும் களமாக பெரும்பாலும் தலைநகரம் திகழ்கிறது. பெரும்பாலான போட்டிகள் இங்குதான் அரங்கேறுகின்றன. போட்டிகளை நடத்தும் கட்டமைப்பு வசதிகள் இருப்பது முக்கியமான காரணம் என்றாலும், அவற்றை சிறப்பாக நடத்துவதற்கு ஆதரவு (ஸ்பான்சர்கள்) அளிக்கும் முக்கிய நிறுவனங்களும் சென்னையில்தான் அதிகம் உள்ளன. ஆனால் லயோலா உள்ளிட்ட சென்னையில் உள்ள கலைக் கல்லூரிகளில் வீரர், வீராங்கனைகளுக்கான அட்மிஷன், தேக்கத்தை அல்லவா சந்தித்து வருகிறது?

கூடைப்பந்தாட்டம் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளில் ஜாம்பவானாகத் திகழ்ந்த லயோலா, இன்று பொறியியல் கல்லூரிகளிடம் உதை வாங்கும் பின்னடைவைப் பெற்றுள்ளது. சென்னையிலேயே இப்படி என்றால் திருச்சி, மதுரை, கோவை, நெல்லை போன்ற நகர்களில் உள்ள கலைக் கல்லூரிகளின் நிலைமை நிச்சயம் பரிதாபமாகத்தான் இருக்கும். இதற்கு அப் பகுதியில் உள்ள கல்லூரிகளைக் குறை சொல்ல முடியாது. சிறுவயதிலேயே இனம்கண்டு வீரர், வீராங்கனைகளை ஊக்குவித்து விளையாட்டு ஆர்வத்தை வளர்க்க வேண்டியது அரசின் கடமை. அதற்கேற்ப திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும்.

திறமையான வீரர், வீராங்கனைகளுக்கு ஊட்டிவிடாத குறையாக போட்டி போட்டுக்கொண்டு என்னவெல்லாம் கொடுக்கமுடியுமோ அவ்வளவையும் இலவசமாகக் கொடுத்து தங்களைப் பிரபலப்படுத்தி வருகின்றன பொறியியல் கல்லூரிகள். சென்னையில் இது மாதிரியான தாக்கம் அதிகம். சில கல்லூரிகள் கேரளத்திலிருந்து நேரடியாக வீரர், வீராங்கனைகளை வரவழைத்து “திறமை’யை வெளி உலகுக்கு காட்டுகின்றன.

இதனாலேயே தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் செயல்பாடுகளை ஆராய்ந்து பார்க்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் 30 மாவட்டங்கள் உள்ளன. அனைத்திலும் ஓர் அதிகாரியின் கீழ் விளையாட்டு மன்றங்கள் உள்ளன. ஆனால் அங்கெல்லாம் போதுமான மைதானங்களோ, பயிற்றுநர்களோ இருக்கிறார்களா என்றால் இல்லை என்பதுதான் பெரும்பாலானோரின் பதிலாக இருக்கும். பின்னர் எப்படி இளைஞர்கள் இத் துறையை தேர்ந்தெடுக்க முடியும்?

முறையாகத் தொடங்கப்படும் திட்டங்கள், இடையில் தேக்கத்தை எட்டினால் அதைக் களைவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமே தவிர, திட்டத்தையே கைவிடுவது எவ்விதத்திலும் நல்லதல்ல. அம் மாதிரி கருதப்படும் திட்டங்களில் ஒன்றுதான் “கேட்ச் தெம் யங்’. அது செயல்பாட்டில் இல்லாததால்தான் கலைக் கல்லூரிகள், போதுமான வீரர், வீராங்கனைகள் இல்லாமல் இன்று விளையாட்டுக் கலையுணர்வு இழந்து போயுள்ளன.

வீரர், வீராங்கனைகளுக்கு மட்டுமின்றி அவர்களைத் தயார்படுத்தும் உடற்கல்வி இயக்குநர், உடற்கல்வி ஆசிரியர் ஆகியோருக்கும் விருதுகள் வழங்கி ஊக்குவிக்க 2003-04-ம் ஆண்டில் அப்போதைய அதிமுக அரசு முடிவு செய்து, அதற்கு “முதலமைச்சர் விருது’ எனப் பெயரிட்டது. ரூ. 1 லட்சம் ரொக்கம் மற்றும் பாராட்டுப் பத்திரம் அடங்கியது அந்த விருது.

அத் திட்டத்துக்கு உயிரூட்டும்விதமாக தற்போதைய அரசும் தகுதியானவர்களிடமிருந்து ஆண்டுதோறும் தனது இணையதளம் மூலம் விண்ணப்பிக்கக் கோரி வருகிறது. ஆனால் திட்டம் தொடங்கப்பட்டது முதல் இதுவரை யாருக்கும் அவ்விருது வழங்கப்படவில்லை. முதலாம் ஆண்டு விருதுக்குரியவர்கள் யார் என்பதுகூட முடிவாகி, ஆணையும் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. அதற்கடுத்த ஆண்டுக்கும் உரியவர்களை அதற்கென அமைக்கப்பட்டுள்ள குழு இனம்கண்டுள்ளது. ஆனால் என்ன காரணத்துக்காகவோ இதுவரை விருதுகள் வழங்கப்படவில்லை.

வியர்வை சிந்தி உழைக்கும் தொழிலாளிக்கு அந்த வியர்வை காயும் முன்பு கூலியைக் கொடுக்க வேண்டும். இல்லையேல், அது விழலுக்கு இரைத்த நீராகத்தான் இருக்கும் என்பதை அதிகாரிகள் உணர வேண்டும்.

அதேபோல, பயிற்சியாளருக்கான என்.ஐ.எஸ். (நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஸ்போர்ட்ஸ்) பயிற்சி பெற்றவர்களுக்கும் வாய்ப்பு வழங்க வேண்டும். என்.ஐ.எஸ். பயிற்சி முடித்தவர்கள் சுமார் 200-க்கும் மேற்பட்டோர் தொழில்நுட்ப வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து வேலைக்காக தவம் கிடக்கின்றனர். தமிழகம் முழுவதும் விளையாட்டு மன்றங்களில் போதுமான பயிற்சியாளர்கள் இல்லாத குறையைப் போக்க அவர்களை ஏன் பயன்படுத்தக் கூடாது?

மொத்தத்தில் இது போன்ற பின்னடைவுகளால் பாதிக்கப்படுவது – எல்லோராலும் ரசிக்கப்படும் விளையாட்டுத் துறைதான். தேவை – எஸ்டிஏடி கவனம்.

Posted in 600028, Allocation, Asiad, Asset, athlete, athletics, Badminton, Basketball, Budget, Capital, Cars, Chennai, Chepauk, Chess, City, Clubs, CM, Corp, Corpn, Corporation, Cricket, Development, Districts, DMK, Economy, Football, Free, Funds, Game, Govt, Hockey, Jaya, Jayalalitha, Jayalalithaa, Jeya, Jeyalalitha, Kaniakumari, Kanniakumari, Kanniyakumari, Kanyakumari, Karunanidhi, Karunanidhy, Karunanidi, Karunanithi, Kovai, Land, League, MAC, Madras, Madurai, match, Matches, MCC, Metro, Needy, Nellai, Olympics, Op-Ed, Play, Players, Poor, Property, Rich, Salem, seat, Seating, Soccer, Sports, Stadium, Suburban, Tamil Nadu, TamilNadu, Tennis, Thiruchirapalli, Thiruchirappalli, Thirunelveli, TN, TNCC, Tour, Tourist, Track, Travel, Traveler, Trichy, Villages, Visit, Visitor, Voleyball, Watch, Wealthy | 1 Comment »

Thirumavalavan – Dalits entry into Salem Kanthampatty Temple

Posted by Snapjudge மேல் ஜூலை 18, 2007

சேலம் கந்தம்பட்டி திரவுபதி அம்மன் கோவிலில்
ஆகஸ்டு 6-ந் தேதி ஆலயப் பிரவேச போராட்டம்
திருமாவளவன் அறிவிப்பு

சென்னை, ஜுலை.18-

சேலம் கந்தம்பட்டி திரவுபதி அம்மன் கோவிலில் ஆகஸ்டு மாதம் 6-ந் தேதி தடைகளை தாண்டி உள்ளே நுழையும் ஆலயப் பிரவேச போராட்டம் செய்ய போவதாக திருமாவளவன் கூறினார்.

ஆர்ப்பாட்டம்

தமிழகம் முழுவதும் கிராமப்புற கோவில்கள் உள்பட அனைத்து கோவில்களிலும் தாழ்த்தப்பட்டோர் நுழைவதற்கும், வழிபாடு செய்வதற்கும் உரிமை வழங்கி தனி சட்டம் இயற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டம் செய்தனர். சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுசெயலாளர் தொல்.திருமாவளவன் தலைமை தாங்கி பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

தமிழ்நாட்டில் இருக்கும் பல ஆயிரக்கணக்கான கோவில்கள் இந்து அற நிலையத்துறைக்கு சொந்தமானவை. ஆனால் அந்த கோவில்களில் கூட தாழ்த்தப்பட்ட மக்கள் நுழைய முடியாத நிலை உள்ளது.

சாமிக்கும் ஜாதி

காந்தியடிகள் காலத்தில் அனைத்து சாதியினரும் கோவிலில் நுழைந்து வழிபடுவதற்கு கோவில்களை திறந்து விட சொன்னது வரலாறு. அப்போது, தமிழகத்தில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் எ.எஸ்.வைத்தியநாத அய்யர் தலைமையில் தாழ்த்தப்பட்ட மக்கள் ஆலயப்பிரவேசம் செய்தனர்.

ஆனால் 60, 70 ஆண்டுகளுக்கு பிறகு இன்றும் கூட, கிராமப்புறங்களில் உள்ள அம்மன், சிவன், அய்யனார், முருகன் கோவில்களில் தாழ்த்தப்பட்ட மக்கள் உள்ளே நுழைய முடியவில்லை. சாதீய வன்கொடுமை இன்னும் தலைவிரித்தாடுகிறது.

சேலம் மாநகரத்தில், கந்தம்பட்டியில் உள்ள திரவுபதி அம்மன் கோவிலை 40 ஆண்டுகளுக்கு முன்பு இந்து அறநிலையத்துறை தன் வசம் எடுத்துக் கொண்டது. ஆனால் அந்த கோவிலில் தாழ்த்தப்பட்ட மக்கள் உள்ளே நுழைந்து வழிபாடு செய்ய அனுமதி இல்லை. இந்து மதத்தில் மட்டும்தான் சாமிக்கும் ஜாதி சாயம் பூசுகின்ற கொடுமை நடக்கிறது.

புதிய சட்டம்

சேலம் கந்தம்பட்டி திரவுபதி அம்மன் கோவிலில் ஆகஸ்டு மாதம் 6-ந் தேதி என்னுடைய தலைமையில் தடைகளை தாண்டி கோவிலுக்குள் நுழைய இருக்கிறோம். ஆயிரக்கணக்கான விடுதலை சிறுத்தைகள் தொண்டர்கள் இந்த ஆலய பிரவேச போராட்டத்தில் கலந்து கொள்கிறார்கள். ஆனால் அந்த நிலைமை ஏற்படாதவாறு அதற்கு முன்னதாக, அனைத்து சாதியினரும் அனைத்து கோவில்களிலும் நுழைந்து வழிபடுவதற்காக புதிய சட்டத்தை தமிழக அரசு கொண்டு வரவேண்டும்.

சிதம்பரம் கோவில்

கோவில்களுக்கு சொந்தமான 12 லட்சம் ஏக்கர் நிலத்தை அரசு கையகப்படுத்தி, நிலமற்ற விவசாயிக்கு 2 ஏக்கர் வழங்கும் திட்டத்தின் கீழ் ஏழை மக்களுக்கு வழங்கவேண்டும்.

சிதம்பரம் நடராஜர் கோவில் உள்பட பல்வேறு கோவில்களில் தமிழில் வழிபாடு செய்ய முடிவதில்லை. தேவாரம் போன்ற திருமறைகள் பாடுவது தடுக்கப்படுகிறது. அனைத்து கோவில்களிலும் தமிழில் வழிபடும் கட்டாயத்தை தமிழக அரசு ஏற்படுத்த வேண்டும்.

இவ்வாறு தொல்.திருமாவளவன் கூறினார்.

கு.செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ., கட்சி நிர்வாகிகள், பெண்கள் உள்பட 150-க்கும் மேற்பட்டவர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

Posted in Caste, CE, Chidamabram, Chidambaram, Chidhambaram, Community, Dalit, Dalits, Dhroupathy, Drowpathy, FC, Fight, God, Hindu, Hinduism, Kandhambatty, Kandhampatty, Kanthambatty, Kanthampatty, Liberation, Metro, Oppression, Panchaali, Panjali, Poor, Ravikkumar, Ravikumar, Religion, Rural, Salem, SC, Sidhambaram, ST, Temple, Thiruma, Thirumavalavan, Thol, Throupathy, Viduthalai, Viduthalai Chiruthaigal, Viduthalai Chiruthaikal, Viduthalai Siruthaigal, Viduthalai Siruthaikal, Village, Vituthalai Chiruthaigal, Vituthalai Chiruthaikal, Vituthalai Siruthaigal, Vituthalai Siruthaikal | Leave a Comment »

Exposing the double standards of Kerala Govt – Inaction, Hypocrisy, Bureaucracy

Posted by Snapjudge மேல் ஜூன் 12, 2007

கடிதங்கள் | காலச்சுவடு

கே. கணேசன்
கோயம்புத்தூர் – 27

சக்கரியாவின் ‘மாயாவித் திருடர்கள்’ என்னும் கட்டுரை குறித்து:

கேரளாவில் மார்க்சிஸ்டுகள் அம்மாநில மக்களை மூளைச்சலவை செய்துவைத்திருக்கிறார்கள். பிளாச்சி மடையிலுள்ள கொக்கோகோலோ மட்டுமல்ல, இன்னும் எத்தனையோ தொழில் நிறுவனங்கள் மார்க்சிஸ்டுகளால் கேரளத்தை விட்டு ஓடிவிட்டன.

  • கெல்ட்ரான்,
  • ரேயன்ஸ் மில்,
  • புனலூர் காகித ஆலை,
  • அலகப்பபுரம் டெக்ஸ்டைல்ஸ்,
  • அப்போலோ டயர் தொழிற்சாலை

ஆகிய அனைத்தும் மூடப்படுவதற்குக் காரணமாயிருந்தவர்கள், தம்மை முற்போக்காளர்கள் என்று கூறிக்கொள்ளும் மார்க்சிஸ்டுகளே. கேரளாவைச் சேர்ந்தவர்கள் மூளை உழைப்பாளிகளாகவும் உடல் உழைப்பாளிகளாகவும் மற்ற மாநிலங்களுக்கும் அரபு நாடுகள் போன்ற வெளிநாடுகளுக்கும் செல்லக் காரணகர்த்தாக்கள் மார்க்சிஸ்டுகளே.கேரளாவில் மலப்புரம் மாவட்டம் பொன்னானி என்னும் ஊரின் அருகேயுள்ள சம்றவட்டம் என்ற இடத்தில் பாரத புழா அரபிக்கடலில் கலக்கும் இடத்தில் தண்ணீரைத் தேக்கிவைக்கத் தடுப்பணையும் அதன்மேல் வாகனங்கள் செல்ல ஒரு பாலமும் கட்டத் திட்டமிட்டுக் கேரளாவில் மூன்று முதல்வர்கள் கடந்த 18 ஆண்டுகளில் மூன்று முறை கால்கோள் விழா நடத்தினார்கள். அத்திட்டத்தை என்ன காரணத்தினாலோ கைவிட்டார்கள்.

அந்தப் பாலம் அங்குக் கட்டப்பட்டால் மலப்புரம், பாலக்காடு, கோழிக்கோடு ஆகிய மூன்று மாவட்டங்களில் குடிநீர் தேவையும் நிறைவேறும் விவசாயம் செழிக்கும் வெயில் காலங்களில் நிலத்தடி நீரும் குறையாது. இது அப்பகுதி மக்களின் நீண்டகாலக் கோரிக்கை. இந்தத் திட்டத்தை நிறைவேற்றாமல் மார்க்சிஸ்டுகள் ஏமாற்றுகிறார்கள்.

முல்லைப் பெரியாறு அணையின் நீர்தேக்கும் அளவை உயர்த்தினால் அணை உடைந்து ஐந்து மாவட்டங்கள் நீரில் மூழ்கிவிடும் என்று வெற்றுக் கூச்சல் போடுகிறார்கள். 4 டி.எம்.சி. தண்ணீரால் 5 மாவட்டங்கள் எப்படித் தண்ணீரில் மூழ்கும்?

ஒரு வேளை மார்க்சிஸ்டுகள் கூறியபடியே நடந்தாலும், அந்த நீர் 70 டி.எம்.சி. கொள்ளளவு கொண்ட இடுக்கி அணைக்கு அல்லவா சென்றுவிடும்? கேரள மாவட்டங்கள் என்ன பூந்தொட்டிகளா, நீரில் மூழ்க? அப்படியிருக்கக் காவிரி நதிநீர்த் தீர்ப்பாயம் கேரளாவிற்கு 30 டி.எம்.சி. வழங்கத் தீர்ப்பு கூறியுள்ளது.

எந்த ஆயக்கட்டு வசதியும் இல்லாமல் 30 டி.எம்.சி.யை எங்குத் தேக்குவார்கள்? அதுவுமில்லாமல் 30 டி.எம்.சி. நீர் தங்களது மாநிலத்திற்குப் போதாது என்றும் மேலும் தண்ணீர் விட வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தை அணுகியிருக்கிறார்கள். இந்த 30 டி.எம்.சி. நீரால் கேரளா மூழ்காதா? மார்க்சிஸ்டுகள் முன்னுக்குப் பின் முரணான அணுகுமுறையைப் பின்பற்றுகிறார்கள்.

மதுரை ரயில்வே கோட்டத்தில் இருந்த திருவனந்தபுரத்தைத் தனிக் கோட்டமாக்கியபோது தமிழ்நாட்டில் எந்தப் போராட்டமும் நடைபெறவில்லை. ஆனால், சேலம் கோட்டம் உருவாக்கப்பட்டபோது மார்க்சிஸ்டு தொழிற்சங்கத்தினர் அம்மாநில மக்களைத் தேவையில்லாமல் தூண்டிவிட்டார்கள்.

கேரளாவில் உள்ள குருவாயூரிலிருந்து தானூர் என்னும் இடத்திற்குப் புதிய ரயில் பாதை அமைக்கக் கடந்த ரயில்வே பட்ஜெட்டில் 2 கோடி நிதி ஒதுக்கீடு செய்து நிலத்தைக் கையகப்படுத்தாமல், அத்திட்டத்திற்கு முட்டுக்கட்டை போட்டுவருகிறார்கள் மார்க்சிஸ்டுகள்.

திருவனந்தபுரம் அருகே விழிஞம் என்னும் இடத்தில் அதிநவீனத் துறை முகம் அமைக்கப் பல வெளிநாட்டுக் கம்பெனிகள் முயன்றன. ஆனால், மார்க்சிஸ்டு அரசு அதற்கு ஒத்துழைக்கவில்லை. எர்ணாகுளத்தை ஸ்மார்ட் சிட்டி ஆக்க மத்திய அரசு திட்டமிட்டது. அதற்கும் மார்க்சிஸ்டுகள் எதிர்ப்பு தெரிவித்துத் திட்டத்தைக் கிடப்பில் போட்டிருக்கிறார்கள்.

கேரளா பொருளாதார வளர்ச்சி பெற்றுச் சிறந்த மாநிலமாக உருவெடுத்தால், மார்க்சிஸ்டுகள் அம்மாநில மக்களை ஏமாற்ற முடியாது என்ற ஒரு காரணம்தான். இந்த ஆண்டு மார்ச் 14 அன்று மேற்கு வங்கம் நந்தி கிராமத்தில் துப்பாக்கிச் சூடு நடந்து 14 பேர் சுட்டுத் தள்ளப்பட்டார்கள். மார்ச் 14 நினைவுகூரத்தக்க தினம்தான்.

பொதுவுடமைச் சிந்தனையாளர் கார்ல் மார்க்ஸ் நினைவு தினம் மார்ச் 14. மார்க்சிஸ்டுகளின் அந்நிய நாட்டு அடி வருடித்தனத்தையும் சந்தர்ப்பவாதத்தையும் வரலாறும் மன்னிக்காது என்பது திண்ணம்.

கே. கணேசன்
கோயம்புத்தூர் – 27

—————————————————————————

தமிழகத்தின் உரிமைப் பிரச்னைகள்

பா. ஜெகதீசன்

தமிழகமும், கேரளமும் கடந்த பல தலைமுறைகளாகவே அண்ணன் – தம்பியைப் போன்ற உறவுடன் பாசத்துடன் பழகி வந்தன. ஆனால், முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்துவது தொடர்பாக இரு மாநிலங்களுக்கு இடையே சமீபகாலத்தில் எழுந்த பிரச்னை விசுவரூபம் எடுத்து, இரு தரப்பினரையும் பகையாளிகளைப் போல பேச வைத்து விட்டது.

முல்லைப் பெரியாறு அணைப் பிரச்னையைப் போல, மேலும் பல பிரச்னைகளில் இரு மாநிலங்களுக்கு இடையே “இழுபறி’யான ரீதியில் தொடர்ந்து பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.

உதாரணமாக, பரம்பிக்குளம் -ஆழியாறு ஒப்பந்தம் தொடர்பான பிரச்னை 1988-லிருந்து நீடித்து வருகிறது. 6.11.2004-ல் சென்னை தலைமைச் செயலகத்தில் அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதாவும், கேரள முதல்வர் உம்மன் சாண்டியும் ஆலோசனை நடத்தினர். அதன் பின்னர் இரு மாநிலங்களும் பேச்சு வார்த்தையை தொடருகின்றன.

கஜினி முகமது தொடர்ந்து படை எடுத்து வந்த வரலாற்றை முறியடிக்கும் வகையில், இப்பிரச்னைக்குத் தீர்வு காண இதுவரை சுமார் 20 முறைக்கும் மேல் தொடர்ந்து பேச்சுவார்த்தைகள் நடந்துள்ளன.

ஆனைமலையாறு, நீராறு, சோலையாறு, பரம்பிக்குளம், பாலாறு, ஆழியாறு ஆகியவற்றிலும், இவற்றில் இணையும் ஆறுகளிலும் உள்ள நீரை மின்சாரம் தயாரிக்கவும், பாசனம் மற்றும் குடிநீருக்குப் பயன்படுத்தவும் 9.11.1958 முதல் செயல்படக் கூடிய ஒப்பந்தம் இரு மாநிலங்களுக்கும் இடையே கையெழுத்தானது.

9.11.1988-ல் இந்த ஒப்பந்தம் மறு ஆய்வு செய்யப்பட்டு, புதுப்பிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அப்படிச் செய்யப்படவில்லை.

அதேபோல, பாண்டியாறு -புன்னம்புழா நதிகள் தமிழகத்தில் நீலகிரி மலையின் உயர்ந்த சிகரங்களில் தோன்றி, கூடலூருக்கு 5 கி.மீ. மேற்கே இணைகின்றன. இந்த இணைப்புக்குக் கீழே இந்த நதி புன்னம்புழா என்றே அழைக்கப்படுகிறது. கேரளத்தில் நீலாம்பூர் அருகே சாளியாற்றில் கலந்து, பேபூர் என்கிற இடத்தில் அரபுக் கடலில் இந்த நதி சங்கமம் ஆகிறது.

இந்தக் குறிப்பிட்ட திட்டத்தின் கீழ் கிடைக்கும் 14டி.எம்.சி. நீரில் குறைந்தபட்சம் 7 டி.எம்.சி.யையாவது தன் பக்கம் திருப்பி விட வேண்டும் என்று தமிழகம் விரும்புகிறது. மேற்கு நோக்கிப் பாயும் இந்த ஆற்றிலிருந்து கிழக்கு நோக்கி தண்ணீரைத் திருப்ப கேரளத்தின் ஒப்புதலைப் பெறும் முயற்சியைத் தமிழகம் மேற்கொண்டுள்ளது.

புன்னம்புழா திட்டத்தில் கிடைக்கும் தண்ணீரை பவானி ஆற்றின் கிளை ஆறான மோயாற்றில் இணைத்து, கோவை மாவட்ட விவசாயிகளுக்கு உதவ தமிழக அரசு திட்டமிட்டு உள்ளது. ஆனால், இந்தக் கனவு எப்போது நனவாகும் என்று தெரியவில்லை.

தீபகற்ப நதிகள் இணைப்புத் திட்டத்தின் கீழ் மகாநதி – கோதாவரி – கிருஷ்ணா – பெண்ணாறு – காவிரி – வைப்பாறு நதிகளை இணைப்பதற்கான திட்டத்தை மத்திய அரசு தயாரித்து, அதுதொடர்பான ஆய்வுகளை நடத்தி வருகிறது. கேரளத்தில் மேற்கு நோக்கிப் பாயும் நதிகளின் நீரைத் தமிழகத்துக்குத் திருப்புவது என்பது அந்தத் திட்டத்தின் ஒரு பகுதி.

பம்பா -அச்சன்கோயில் -வைப்பாறு இணைப்புத் திட்டம் என்பது கேரளத்தில் உள்ள பம்பா -அச்சன்கோயில் ஆறுகளின் உபரி நீரைத் தமிழகத்துக்குத் திருப்புவது ஆகும். இந்தத் திட்டத்தினால் சங்கரன்கோவில், கோவில்பட்டி, சிவகிரி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், சாத்தூர், தென்காசி வட்டங்களில் உள்ள 91,400 ஹெக்டேர் (ஒரு ஹெக்டேர் என்பது சுமார் 2.5 ஏக்கர்) நிலங்கள் பாசன வசதி பெறும்.

இந்தத் திட்டத்தின் மூலம் தமிழகத்துக்கு 22 டி.எம்.சி. நீர் கிடைக்கும். பம்பா – அச்சன்கோயில் ஆறுகளில் கிடைக்கும் உபரி நீரில் இது 20 சதவீதம் மட்டுமே.

மேலும் இந்தக் குறிப்பிட்ட திட்டத்தின் மூலம் 500 மெகாவாட் மின்சாரத்தையும் எளிதாக உற்பத்தி செய்ய இயலும்.

ஆனால், இதர திட்டங்களைப் போலவே, இந்தத் திட்டத்தையும் கேரள அரசு ஏற்கவில்லை. தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

எல்லாவற்றுக்கும் முத்தாய்ப்பு வைக்கும் வகையில், கண்ணகி கோயில் பிரச்னை அமைந்துள்ளது.

உத்தமபாளையம் வட்டத்தில் உள்ள வண்ணாத்திப்பாறைக் காடு தமிழகத்தைச் சேர்ந்தது. அந்தப் பகுதியில்தான் கண்ணகி கோயில் உள்ளது.

ஆனால், கண்ணகி கோயில் தனது எல்லைக்குள் உள்ளதாக கேரள அரசு கூறி வருகிறது. அத்துடன், அங்கு வழிபாடு நடத்தச் செல்லும் தமிழக மக்களை கேரள அரசு தடுத்து, பிரச்னைகளை ஏற்படுத்தி வருகிறது.

தமிழகத்துக்கும், கேரளத்துக்கும் இடையே உள்ள எல்லையின் நீளம் சுமார் 830 கி.மீ. இதில் சுமார் 250 கி.மீ. தூரத்துக்குத்தான் இரு மாநிலங்களின் அதிகாரிகளும் ஆய்வு செய்து, எல்லைகளை நிர்ணயித்துள்ளனர்.

கேரள அதிகாரிகள் சரியாக ஒத்துழைக்காததால், எஞ்சிய தூரத்துக்கு எல்லையை வரையறுக்க முடியாத நிலை உள்ளது. அதைப் பயன்படுத்தி ஆங்காங்கே தமிழகத்தின் பகுதிகளைத் தனது பகுதிகள் என்று கேரளம் கூறி போலியாக உரிமை கொண்டாடி வருகிறது.

கேரளத்துடன் நல்லுறவை வளர்க்கவே எப்போதும் தமிழகம் விரும்புகிறது. ஆனால், அந்த விருப்பம் ஈடேறத் தடைகற்களாக இத்தனை பிரச்னைகள் அமைந்துள்ளன. இந்தத் தடைகள் தகர்க்கப்பட்டு, நல்லுறவு மேம்பட கேரளத்தின் பெருந்தன்மையான ஒத்துழைப்பு அவசியம்.

———————————————————————————————————————————

முல்லைப் பெரியாறும்-கேரளமும்!

என். சுரேஷ்குமார்

திருநெல்வேலி மாவட்டம், சுந்தரமலையில் உள்ள சிவகிரி சிகரத்தில் தோன்றும் பெரியாறு, பெருந்துறையாறு, சின்ன ஆறு, சிறு ஆறு, சிறுதோனி ஆறு, இடமலையாறு, முல்லையாறு ஆகியவற்றை சேர்த்துக் கொண்டு சுமார் 300 கி.மீ. தூரம் வடமேற்குத் திசையில் பாய்ந்து இறுதியில் கேரள மாநிலம், எர்ணாகுளம் அருகே கடலில் கலக்கிறது.

பெரியாறு தமிழக எல்லைக்குள் 56 கி.மீ. தூரமும் கேரள எல்லைக்குள் 244 கி.மீ. தூரமும் பாய்கிறது.

மக்களின் குடிநீர் தேவைக்கும் பாசனத்திற்காகவும் பெரியாறு திட்டத்திற்கு முதன்முதலில் செயல்வடிவம் கொடுத்தது ஆங்கிலேயர்கள்.

அதன்படி, 1808-ம் ஆண்டு ஜேம்ஸ் கால்டுவெல் என்பவர் அணைகட்டும் திட்டத்தை ஆய்வு செய்து 1862-ல் 162 அடி உயர அணை கட்டும் திட்டம் மேஜர் ரைவீஸ் மற்றும் மேஜர் பேயின் ஆகியோரால் உருவாக்கப்பட்டது.

பின்னர் 1882-ம் ஆண்டு 175 அடி உயரத்தில் அணை கட்ட பென்னி குயிக் நியமிக்கப்பட்டார். அதற்கு திட்ட மதிப்பீடு ரூ.65 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டு நிதி ஒதுக்கப்பட்டது.

அதன்படி முல்லை ஆறும், பெரியாறும் இணையும் இடத்திற்கு அருகே அணை கட்ட முடிவெடுக்கப்பட்டது. அணை கட்டப்படவிருந்த பகுதியான தேவிகுளம், பீர்மேடு போன்ற பகுதிகள் தமிழர் வாழும் பகுதிகளாகும். தற்போதும் அப்பகுதியில் வசிப்போர் பெரும்பாலும் தமிழர்களே.

இருப்பினும் அணை கட்டப்படவுள்ள பகுதி தமிழ்நாட்டு பகுதியா, திருவிதாங்கூர் சமஸ்தான பகுதியா என்பதில் தெளிவில்லாத ஆங்கிலேய அரசு, அணை கட்டப்பட உள்ள பகுதி திருவிதாங்கூர் சமஸ்தானப் பகுதி எனக் கொண்டு, 1886-ம் ஆண்டு திருவிதாங்கூர் சமஸ்தானத்துடன் 999 ஆண்டுக்கான ஒப்பந்தத்தை செய்தது.

மேலும், இந்த அணை நீரானது தமிழகத்திற்கு காலகாலத்திற்கும் கிடைக்க வேண்டும் என்பதற்காக ஆங்கிலேய அரசு 999 ஆண்டு ஒப்பந்தத்தை திருவிதாங்கூர் சமஸ்தானத்துடன் செய்து கொண்டது.

அதன்படி 1241 அடி நீளத்தில் மிகப்பெரிய அளவில் கட்டப்பட்ட முல்லைப் பெரியாறு அணையின் மொத்த உயரம் அடித்தளத்திலிருந்து 172 அடி.

இதில் நீரைத் தேக்கும் உயரம் 155 அடி. ஆனால், திடீரென வரும் வெள்ளத்தை சமாளிக்கும் வகையில் 152 அடி வரை மட்டுமே நீர் தேக்கப்பட்டது.

இந்த அணையில் தேங்கும் நீரை, கிழக்குத் திசையில் 5765 அடி நீளமும், 60 அடி ஆழமும், 80 அடி அகலமும் கொண்ட பெரிய கால்வாய் மூலம் கொண்டுவந்து பின்பு அந்த நீரை மலையைக் குடைந்து உருவாக்கப்பட்ட 5345 அடி நீளமும் 15 அடி அகலமும் கொண்ட சுரங்கத்தின் மூலம் தமிழகத்திற்கு கொண்டு வரப்படுகிறது.

அதற்குப் பிறகு 78 கி.மீ. நீளமுள்ள பெரியாறு கால்வாய் மூலம் வைகை ஆற்றுடன் இணைக்கப்படுகிறது. அணையிலிருந்து மேற்குறிப்பிட்ட சுரங்கத்தின் வழியாக வினாடிக்கு 2000 கன அடி அளவு தண்ணீரை மட்டுமே வெளியே எடுக்க முடியும்.

மேலும், 152 அடி உயரமுள்ள அணையில் 104 அடிவரை தேங்கும் நீரைத்தான் எடுக்க முடியும்.

பின்னர் முல்லைப் பெரியாறு அணை கட்டப்பட்டு அந்த அணையின் நீர் தமிழகத்திற்கு கொண்டு வரப்பட்டது.

இதன்பின்னர்தான் கேரள அரசு முல்லைப்பெரியாறு அணையை முழுவதும் கேரள அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயற்சி மேற்கொண்டது.

அதன்படி, 1956-ம் ஆண்டு மொழிவழி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது தமிழர்கள் வாழ்ந்து வந்த தேவிகுளம், பீர்மேடு போன்ற பகுதிகள் அப்பகுதி மக்களின் விருப்பத்திற்கு மாறாக கேரளத்தோடு இணைக்கப்பட்டன.

1978-ம் ஆண்டு அணை பலவீனமாகிவிட்டது என்று கேரள அரசு பொய் செய்தியைப் பரப்ப ஆரம்பித்தது. அதன்மூலம் அணையின் நீர்மட்டம் 145 அடியாக குறைக்கப்பட்டது.

பின்னர் அணை பலப்படுத்துவது தொடர்பாக கேரள- தமிழக அரசுகளுக்கிடையே ஒப்பந்தம் செய்யப்பட்டது. அதன்படி, அணை பலப்படுத்தப்படும்வரை அணையின் நீர்மட்டம் 136 அடியாக குறைக்கப்பட்டது.

இதற்கிடையே பெரியாறு நீர்பிடிப்புப் பகுதிகளில் கெவி அணை, ஆணைத்தோடு அணை, கட்கி அணை, பம்பா அணை போன்ற அணைகளை கட்டியெழுப்பி முல்லைப் பெரியாறு அணைக்கு வரும் நீர்வரத்தை கேரளம் குறைத்தது.

இதனால் ஒரு போகம் சாகுபடி செய்த சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டப் பகுதிகளில் சுமார் 40,000 ஏக்கர் நிலங்கள் தரிசாக மாறின.

1979 ஆம் ஆண்டு மத்திய நீர்வள ஆணையத்தின் முன்னிலையில் இரு மாநில அரசுகளும் செய்துகொண்ட ஒப்பந்தப்படி, முல்லைப் பெரியாறு அணையை பலப்படுத்தும் பணிகளை 1985-ம் ஆண்டே முடித்த பின்பும் அணையின் நீர்மட்டத்தை உயர்த்த கேரள அரசு மறுத்தது.

இதனால் இப்பிரச்னையை தமிழக விவசாயிகள் உச்ச நீதிமன்றத்திற்கு எடுத்துச் சென்றனர்.

மத்திய நீர்வள ஆணையம், மத்திய மண் விசையியல் ஆராய்ச்சி நிலையம் ஆகியவற்றை சார்ந்த நிபுணர்கள் அணையைப் பார்வையிட்ட பிறகு, அணையை பலப்படுத்தும் பணிகள் முடிந்துள்ளன என்று சான்று வழங்கியது. மேலும், அணையின் நீர்மட்டத்தை உயர்த்தக் கூடாது என கேரள அரசு சொன்ன காரணங்கள் பொய்யானவை என்று ஆணையம் தெளிவாகக் கூறியது.

அதன் அடிப்படையில் 2006-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முல்லைப் பெரியாறு அணையில் 142 அடிவரை நீரை தேக்கலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. ஆனாலும், கேரள அரசு 1979-ம் ஆண்டு தமிழகத்தோடு செய்த ஒப்பந்தத்தை மீறியதோடு, நிபுணர் குழு அறிக்கையையும், உச்சநீதிமன்ற தீர்ப்பையும் உதாசீனப்படுத்தியது.

தீர்ப்புக்கு கட்டுப்பட மறுத்து அதே ஆண்டு மார்ச் மாதத்தில் கேரள அரசு நீர்ப்பாசனம், நீர்வளம் பாதுகாப்பு சட்டத்தை திருத்தி பெரியாறு அணையையும் அதன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தது.

இதன்மூலம் கேரள அரசு மேற்கொள்ளும் ஒரு தலைப்பட்சமான முடிவு நாட்டின் ஒற்றுமைக்கும் ஒருமைப்பாட்டிற்கும் எதிராக விடப்பட்டிருக்கும் அறைகூவல்.

மேலும், தற்போது பழைய அணைக்கு மாற்றாக புதிய அணையை கட்டப்போவதாக கேரள அரசு அறிவித்துள்ளது. அவ்வாறு கேரள அரசு கட்டினால் தமிழகத்தின் உரிமை முழுமையாகப் பறிபோகும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

Posted in Agriculture, Apollo, Bureaucracy, Cauvery, Coke, cola, Communism, Communist, Communist parties, Communist Party of India, Congress, CPI, CPI (M), CPI(M), CPI(ML), CPI-ML, Dam, Disaster, Drinking, Economy, Employment, Exports, Finance, Flood, GDP, Govt, Growth, Guruvaioor, Guruvaiyoor, Guruvaiyur, Guruvayoor, Guruvayur, Harbor, Harbour, Headquarters, Hype, Hypocrisy, Imports, Incentives, Industry, infrastructure, Integration, Irony, Irrigation, Jobs, Kaviri, Keltron, Kerala, Kozhikode, Labour, Literacy, Madurai, Malaappura, Malappura, Malappuza, Malappuzha, Malayalam, Manufacturing, Marx, Marxism, Marxist, Marxist Communist, Marxist Leninist, Marxists, Mills, Mullai, Mullai Periyar, MullaiPeriyar, National, Palacaud, Palacaut, Palacode, Palaghat, Palagode, Palakode, Periyaar, Periyaaru, Periyar, Periyaru, Politics, Port, Prevention, Producation, promises, Railways, River, Salem, SEZ, Shipping, State, Tax, Textiles, THIRUVANANTHAPURAM, TMC, TN, Trains, Trivandrum | Leave a Comment »

Tamil Nadu to set up electronics export center, TIDEL-III Park

Posted by Snapjudge மேல் மே 9, 2007

மேலும் 3 ஐ.டி. பூங்காக்கள்: முதல்வர் அறிவிப்பு

சென்னை, மே 9: தகவல் தொழில்நுட்பத் தொழில் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு ரூ. 1,400 கோடியில் தமிழகத்தில்

  • சென்னை தரமணி,
  • ஸ்ரீபெரும்புதூர்,
  • அம்பத்தூரில் தகவல் தொழில்நுட்ப பூங்காங்கள் அமைக்கப்படுகின்றன.

இதுபற்றிய தகவல்களைப் பேரவையில் செவ்வாய்க்கிழமை தொழில் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்குப் பதில் அளித்தபோது முதல்வர் கருணாநிதி அறிவித்தார். விவரம்:

மூன்றாவது டைடல் பூங்கா: தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்காகச் சென்னை தரமணியில் மூன்றாவது டைடல் பூங்கா ரூ. 800 கோடியில் அமைக்கப்படும்.

ஏற்கெனவே அறிவித்தபடி, தரமணியில் 2-வது டைடல் பூங்கா அமைக்கும் பணி நடந்துவருகிறது. தற்போது சர்வதேச கருத்தரங்கு மையம், தங்கும் அறைகள் உள்ளிட்ட வசதிகளுடன் கூடிய தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பம்சார் சேவைகளுக்கான 3-வது டைடல் பூங்கா அமைக்க அரசு முடிவு செய்துள்ளது.

தரமணியில் 25 ஏக்கரில் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவைகளுக்கான ஏற்றுமதி மையமாக இது செயல்படும். 21 லட்சம் சதுர அடி பரப்பில், தனியாருடன் கூட்டு முயற்சியாக இத்திட்டம் செயல்படுத்தப்படும். இதனால் 12 ஆயிரம் மென்பொருள் வல்லுநர்களுக்கு வேலை கிடைக்கும்.

சென்னை கோட்டூரில் தமிழ் இணைய பல்கலைக்கழகத்துக்கு 2 ஏக்கரில் சொந்தக் கட்டடம் கட்டப்படும்.

தரமணி டைசல் உயிரியல் பூங்கா, ரூ. 250 கோடியில் விரிவுபடுத்தப்படும். இதனால் கூடுதலாக 2 ஆயிரம் உயிரியல் தொழில்நுட்ப -மருந்துத் துறை விஞ்ஞானிகளுக்கு வேலை கிடைக்கும்.

  • காஞ்சிபுரம் மாவட்டம் சோழிங்கநல்லூர்,
  • பெரும்பாக்கத்தில் 213 ஏக்கரில் ஒருங்கிணைந்த தகவல் தொழில்நுட்பவியல் நகர் அமையும்.
  • கோவை மருத்துவக் கல்லூரி வளாகத்தில் 33 ஏக்கரிலும்
  • சேலம் மாவட்டம் ஜாகிர் அம்மாபாளையத்தில் 100 ஏக்கரிலும்
  • திருச்சி மாவட்டம், நவல்பட்டு கிராமத்தில் 50 ஏக்கரிலும்
  • மதுரையில் வடபழஞ்சி, கிண்ணிமங்கலத்தில் 50 ஏக்கரிலும் ஒருங்கிணைந்த தகவல் தொழில்நுட்ப வளாகங்கள் அமையும்.
  • நெல்லை மாவட்டம் கங்கைகொண்டானில் 100 ஏக்கரில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு இடங்கள் ஒதுக்கப்படும். மேலும் 400 ஏக்கரில் ஒருங்கிணைந்த தகவல் தொழில்நுட்ப வளாகம் நிறுவப்படும்.

தகவல் தொழில்நுட்பவியல் கல்விக்கழகம்: தகவல் தொழில்நுட்பம் தொடர்பான பாடத்திட்ட மேம்பாடு, பயிற்றுநர் உருவாக்கம், கல்விசார் சாதனங்கள் ஏற்படுத்துதல் ஆகியவற்றுக்காக மாணவர் பொதுத் திறன் பயிற்சியளிக்கும் பொருட்டும் தகவல் தொழில்நுட்பவியல் கல்விக்கழகம் நிறுவப்படும்.

ஸ்ரீபெரும்புதூரில் ரூ. 500 கோடி பூங்கா: சென்னை அருகே ஸ்ரீ பெரும்புதூரில் ரூ. 500 கோடியில் உயிரியல் தகவல் தொழில்நுட்பப் பூங்கா (பயோ ஐ.டி. பார்க்) அமைக்கப்படும்.

இந்திய மென்பொருள் தொழில் பூங்கா, சிங்கப்பூரில் உள்ள அசெண்டாஸ் நிறுவனம் ஆகியவற்றுடன் இணைந்து தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் இந்தப் பூங்காவை 100 ஏக்கரில் அமைக்கும்.

இத்திட்டத்துக்கான முதலீட்டில் 11 சதவீதம் பங்கேற்க தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகத்துக்குத் தமிழ்நாடு அரசு கொள்கை அளவில் ஒப்புதல் அளித்துள்ளது.

இந்தியாவிலேயே முதன்முதலாக அமைகிறது என்ற சிறப்பை இந்த உயிரியல் தகவல் தொழில்நுட்பப் பூங்கா பெறும். இதனால் 8000 பேருக்கு வேலை கிடைக்கும்.

ரூ. 80 கோடியில் அம்பத்தூர் பூங்கா: சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டையிலுள்ள தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனத்துக்குச் சொந்தமான காலியிடத்தில் 4 லட்சம் சதுர அடி பரப்பில் ரூ. 80 கோடியில் தகவல் தொழில்நுட்பப் பூங்கா அமைக்கப்படும்.

காகித நிறுவனத்தால் அமைக்கப்படும் இந்த பூங்காவின் மூலம் 4 ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்கும்” என்றார் கருணாநிதி.

———————————————————————————–

புதிய ஜமீன்தார்கள்!

கல்கி – Kalki 10.06.2007 (தலையங்கம்)

நந்தி கிராமில் டாடா நிறுவனத்துக்கு விவசாய நிலங்களை ஒதுக்கித் தந்து, பலத்த எதிர்ப்புக்கு உள்ளாயிற்று மேற்கு வங்க அரசு. கலவரம், உயிர்ச் சேதம் என்று பிரச்னை வளர்ந்து, கடைசியில் திட்டம் ரத்தாயிற்று.

உ.பி.யில் அதே விதமான நில ஒதுக்கீட்டை ரிலையன்ஸ் நிறுவனத்துக்காக முலாயம்சிங் அரசு செய்திருந்தது. மாயாவதி ஆட்சிக்கு வந்ததும் அதை ரத்து செய்துவிட்டு, “தொழிலதிபர்கள் வேண்டுமானால் சந்தை விலைக்கு நிலத்தைப் பணம் கொடுத்து வாங்கிக்கொள்ளட்டும்; அரசு கையகப்படுத்தி சலுகை விலையில் அவர்களிடம் விற்காது” என்று திட்டவட்டமாகச் சொல்லிவிட்டார்.

ஆனால், தமிழ்நாட்டில் விஷயம் நேர்மாறாக இருக்கிறது.

இராணிப்பேட்டையில் இரண்டு கொரிய நிறுவனங்களுக்கு ஆற்காடு வீராசாமி நூறு ஏக்கர் நிலம் ஒதுக்குவதாக வாக்களித்திருக்கிறார். இதற்காக அரசு மக்களிடமிருந்து நிலத்தைக் கையகப்படுத்தும்! காஞ்சிபுரம் அருகே ஒரு சிறப்புப் பொருளாதார மண்டலம் நிறுவ, ஒரு துபாய் நிறுவனம் ஒன்று, 350 ஏக்கர் நிலம் வாங்க தமிழக அரசு அனுமதித்துள்ளது!

ஐம்பதாயிரம் பேருக்கு இந்த மண்டலத்தில் புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்கிறார்கள். ஆனால், அதற்கு 350 ஏக்கர் நிலம் என்பது மிக மிக அதிகம். ஐ.டி. சார்ந்த தொழிலகங்கள் ஐம்பது ஏக்கர் நிலத்தில் மட்டுமே அமைக்கப்படும் என்றும் மீதி நிலம் வாழிடம், பள்ளி, ஷாப்பிங் மால் போன்றவற்றுக்கு என்றும் விவாரிக்கிறார்கள்!

பெரிய தொழிலதிபர்கள் சலுகை விலையில் அரசிடமிருந்து நிலம் பெறும் ஏற்பாட்டை இரு தரப்பினரும் துஷ்பிரயோகம் செய்வது வழக்கமாகிவிட்டது. அதிகார வர்க்கம் இலஞ்ச – ஊழலில் ஈடுபடுகிறது. தொழிலதிபர்களோ, தேவைக்கதிகமான நிலத்தை வாங்கிக்கொண்டு, பிற்காலத்தில் அதன் விலை உயரும்போது, லாபம் சம்பாதிக்கிறார்கள். நிலத்தின் விலை கட்டுக்கடங்காமல் உயரவும் இவர்கள் காரணமாகிறார்கள். இது ஏழைகளையும் சராசாரி மக்களையும்தான் வதைக்கிறது.

‘உணவு உற்பத்தி, விவசாயப் பெருக்கம் நோக்கி அரசின் திட்டப் பணிகள் திசை திரும்ப வேண்டும்’ என்று தேசிய வளர்ச்சிக் குழுக் கூட்டத்தில் பேசிய தமிழக முதல்வர், தமிழகத்தில் என்ன செய்கிறார்…? விவசாயம் சார்ந்த பகுதியில், அதற்குச் சம்பந்தமே இல்லாத ஒரு தொழில்நுட்ப நிறுவனம் கிளை பரப்ப வழி செய்து, பொருளாதார ஏற்றத்தாழ்வுக்குப் பலமான அஸ்திவாரம் அமைக்கிறார்.

ஒரு குடிசை அமைத்துக்கொள்ளக்கூட நிலமின்றி அவதிப்படும் இலட்சக்கணக்கானோர் வாழும் நாடு இது. இங்கு அரசின் கட்டுப்பாட்டில் உள்ள புறம்போக்கு நிலம் பொதுமக்களின் சொத்து. அதைக் கண்ணை மூடிக்கொண்டு உள்நாட்டு, வெளிநாட்டுத் தொழிலதிபர்களுக்கு வாரி வழங்குவது மக்களுக்குச் செய்யும் துரோகம்! தனியார் நிலமாயினும் பெரிய தொழிலதிபர்கள் 300 ஏக்கர் 500 ஏக்கர் என்று தேவைக்கு அதிகமாக வாங்கி, வளைத்துப் போட அனுமதிப்பது பெரும் அநீதி!

பெரிய தொழிலதிபர்கள், சிறப்புப் பொருளாதார மண்டலங்களில் ஏராளமான வேறு பல சலுகைகளையும் பெறுகிறார்கள். மொத்தத்தில், விவசாய ஜமீன்தாரி முறையையும் பெரிய மிராசுதாரர்களையும் ஒழிக்கப் போராடி சட்டமும் இயற்றிய நமது ஆட்சியாளர்கள், இன்றைக்குப் புதிய சலுகைகள் மூலம் நவீன ஜமீன்தாரி தொழிலதிபர்களைத்தான் உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள்!

Posted in 3, Ambathur, Ambattoor, Ambattur, Biotech, Chennai, Coimbatore, College, computers, Development, Education, Electronics, Employment, Export, Factory, Industry, InfoTech, IT, ITES, Jobs, KANCHEEPURAM, Kanchi, Kanchipuram, Kanjipuram, Karunanidhi, Kottoor, Kottur, Kovai, Madras, Madurai, Mayavathi, Mayavathy, Mayawathi, Mayawathy, MNC, multinational, Nellai, Orgadam, Paper, Perumpakkam, Research, Salem, Science, scientist, SEZ, SIPCOT, Software, Special, Sriperumputhoor, Sriperumputhur, Students, Tamil Nadu, TamilVU, Tax, Tech, Technology, Tharamani, Thiruchi, Thiruchy, Thirunelveli, Three, Thruchirappalli, TIDEL, TIDEL-III, TN, Trichirappalli, Trichy, University, Virtual, Virtual University, VU | Leave a Comment »

Rs 11000 cr outlay for rural roads under Bharat Nirman scheme

Posted by Snapjudge மேல் மார்ச் 28, 2007

புதிய ஊரக சாலைகள் அமைக்க ரூ.11,000 கோடி நிதி ஒதுக்கீடு

புது தில்லி, மார்ச் 28: நடப்பு நிதியாண்டில், நாட்டில் புதிய ஊரக சாலைகள் அமைக்க ரூ.11,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. பாரத பிரதமரின் கிராம முன்னேற்ற திட்டத்தின் கீழ், மத்திய ஊரக மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தின் மூலம் இந்தப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இத்திட்டத்தின் கீழ், ஆயிரம் மக்கள் வசிக்கும் அனைத்து கிராமங்களிலும் அனைத்துப் பருவநிலைகளிலும் பயன்படுத்தக்கூடிய தரமான புதிய சாலைகள் அமைக்கப்படும்.

மலைக் கிராமங்களில் 500-க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கும் இடங்களில் புதிய சாலைகள் அமைக்கப்படும்.

இத்திட்டத்தின் கீழ் நாட்டில் 66,802 கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டு 1.46 லட்சம் கி.மீ. புதிய சாலைகள் அமைக்கப்படும். மேலும், 1.94 லட்சம் கி.மீ. பழைய சாலைகளும் புதுப்பிக்கப்படும்.

இத்திட்டம் 2005-06-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. திட்டம் தொடங்கப்பட்ட இரு ஆண்டுகளில் 10,303 கிராமங்களுக்கு புதிய சாலைகள் அமைக்கப்பட்டன. 36,341 பழைய சாலைகள் மேம்படுத்தப்பட்டன. 2005-06 ஆம் நிதியாண்டில் இத்திட்டத்துக்கு ரூ.4,219.98 கோடியும், 2006-07-ம் நிதியாண்டில் ரூ.5,376.28 கோடியும் செலவழிக்கப்பட்டதாக ஊரக மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரகுவம்ச பிரசாத் சிங் தெரிவித்தார். சாலை அமைப்புப் பணிகளில் தரத்தைப் பாதுகாக்க, மூன்றடுக்கு தரக் கட்டுப்பாட்டு முறை அமல்படுத்தப்படுவதாக அமைச்சர் கூறினார்.

இப்பணிகளில் மக்களின் பங்களிப்பை உறுதிசெய்ய பணி நடைபெறும் இடங்களில் தகவல் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. மேலும், இப்பணிகளின் நிதி நிர்வாகங்கள், தொழில்நுட்ப ஆய்வு ஆகியவை ஆன்லைன் மூலமாக கண்காணிக்கப்படுகிறது என அமைச்சர் ரகுவம்ச பிரசாத் சிங் தெரிவித்தார்.

========================================================
தமிழகத்தில் சாலை மேம்பாட்டுக்கு ரூ.77 கோடி: டி.ஆர். பாலு அனுமதி

புதுதில்லி, மார்ச் 29: மறுசீரமைக்கப்பட்ட மத்திய சாலை நிதித் திட்டத்தின்கீழ், தமிழ்நாட்டில் சாலை ரூ.77.70 கோடி செலவில் சாலை சீரமைப்புப் பணிகளை மேற்கொள்வதற்கு மத்திய கப்பல், சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் டி.ஆர். பாலு அனுமதியளித்துள்ளார்.

தமிழகத்தில், மாநில நெடுஞ்சாலைகள், முக்கிய மாவட்ட சாலைகள் மற்றும் இதர மாவட்டச் சாலைகளில் 26 சாலைகளில் விரிவாக்கப் பணிகளும் வலுப்படுத்தும் பணிகளும் நடைபெறும்.

முக்கியத் திட்டங்கள் விவரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் தாம்பரம் -சோமங்கலம் சாலை மேம்பாட்டுக்கு ரூ.9 கோடி.

தஞ்சாவூர் மாவட்டத்தில் திருக்காட்டுப்பள்ளி -பட்டுக்கோட்டை -செங்கப்பட்டி சாலை ரூ.4.56 கோடியில் விரிவுபடுத்தப்பட்டு, மேம்படுத்தப்படும்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் செய்யார்-வந்தவாசி-போளூர் சாலை சதார்ரங்கல் சாலையுடன் இணைக்க ரூ.3.84 கோடி செலவிடப்படும்.

ஆற்காடு -விழுப்புரம் சாலைக்கு ரூ. 4.19 கோடி செலவிடப்படும்.

செய்யூர் -வந்தவாசி -போளூர் சாலையை மேம்படுத்தி, விரிவுபடுத்த ரூ.3.71 கோடி.

வேலூர் மாவட்டத்தில் திருவாளம் -காட்பாடி -வேங்கடகிரி கோட்டா சாலையில் பழுதுநீக்கும் பணிகளை மேற்கொள்ள ரூ.4.10 கோடி செலவிடப்படும்.

சித்தூர் -திருத்தணி சாலையை மேம்படுத்த ரூ.4 கோடி செலவிடப்படும்.

தருமபுரி மாவட்டத்தில் பெண்ணாகரம் -நாதன்முறை சாலை மேம்பாட்டுக்கு ரூ.3.50 கோடி.

சேலம் மாவட்டத்தில் பொன்னம்மாபேட்டை முதல் வலசையூர் வீராணம் சாலை வழியாக சாலை மேம்பாட்டுப் பணிகளுக்கு ரூ.3.50 கோடி செலவிடப்படும்.

சென்னையில் ரூ.3 கோடி செலவில் தேசிய நெடுஞ்சாலை புதுப்பிக்கப்படும்.

திருவாரூர் மாவட்டத்தில் உளிக்கோட்டி -தளிக்கோட்டை-வடசேரி சாலை மேம்பாட்டுப் பணிகளுக்கு ரூ.5 கோடி செலவிடப்படும்.

திருவள்ளூர் மாவட்டத்தில் சென்னை -திருத்தணி -ரேணிகுண்டா சாலை மற்றும் இச் சாலையில் இடம் பெற்றுள்ள மேம்பாலத்தைப் புதுப்பிக்க ரூ.2.50 கோடி.

கரூர் மாவட்டத்தில் தோகமலைப்பட்டி சாலையில் பாலம் அமைக்க ரூ.1 கோடி செலவிடப்படும்.

திருவண்ணாமலை, வேலூர், தருமபுரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர், சேலம், சிவகங்கை, கோவை, நாகப்பட்டினம், காஞ்சிபுரம், திண்டுக்கல், சென்னை, தஞ்சாவூர், நாமக்கல், மதுரை, திருவள்ளூர், கரூர், ராமநாதபுரம், திருவாரூர் ஆகிய மாவட்டங்களிலும் மற்றும் சிதம்பரத்திலும் சாலை மேம்பாட்டுப் பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று டி.ஆர். பாலு தெரிவித்துள்ளார்.

Posted in Arcot, Artery, Auto, Balu, Bharat Nirman, Budget, Bus, car, Chengalpattu, Commerce, Development, Dharmapuri, DMK, Finance, infrastructure, Kanchipuram, Kanjeepuram, Karur, Pattukottai, Plan, PMGSY, Pradhan Mantri Gram Sadak Yojana, Raghuvansh Prasad Singh, Roads, Rural, Rural Development, Salem, Scheme, Suburban, Tambaram, Thiruvannamalai, Thiruvaroor, TR Balu, Transport, Transportation, Vandhavasi, Vellore, Village, Vizhuppuram | Leave a Comment »

Lake Irrigation – Agriculture water sources: Backgrounder, Analysis & History

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 23, 2007

ஏரிகள் காப்போம்

திண்டிவனம் பஸ் நிலையத்தை ஏரியில் அமைப்பது தொடர்பாக ஆளும் கட்சிக்கும் எதிர்க்கட்சியான அதிமுகவுக்கும் காரசாரமான அறிக்கைப் போர் நடந்து கொண்டிருக்கிறது.

இந்த விஷயத்தில் அரசியலை ஒதுக்கிவிட்டு தமிழக ஏரிகளின் இன்றைய நிலைமை, அதன் முந்தைய பயன், ஏரிகளை அரசும் மக்களும் புறக்கணித்ததால் ஏற்பட்டு வரும் இழப்புகள் ஆகியவற்றை ஒருமுறை மறுஆய்வுக்கு உட்படுத்த வேண்டியுள்ளது.

தமிழகத்தில் 10 ஆயிரத்துக்கும் அதிகமான ஏரிகள் உள்ளன. ஒவ்வொரு ஏரியும் நிரம்பியவுடன் மதகுகள் திறக்கப்பட்டு அடுத்த ஏரிக்குத் தண்ணீர் செல்லும்படியான அமைப்புகள் கொண்டவை. இந்தத் தொடர்ச்சி குறைந்தபட்சம் 15 ஏரிகள் வரையிலும்கூட இருக்கும்.

ஒவ்வொரு ஏரியும் நூற்றுக்கும் மேற்பட்ட ஹெக்டேர் விவசாய நிலத்துக்குத் தண்ணீர் தரவல்லவை. இவற்றைப் பராமரிக்கும் பணி பயனாளிகளான மக்களிடம் அல்லது பஞ்சாயத்தின் கட்டுப்பாட்டில் இருந்தது. இந்த ஏரிகள் ஆண்டுதோறும் நிரம்புபவை அல்ல. 5 ஆண்டுகளில் சராசரியாக 3 முறை மட்டுமே நிரம்பின. இதையெல்லாம் மனத்தில் வைத்து, அந்த ஏரிக்குரிய விவசாயிகள் பயிர்களை வகைப்படுத்திக் கொண்டார்கள். நீரைப் பகிர்ந்து கொண்டார்கள்.

தமிழகத்தில் 1960-ம் ஆண்டில்

  • ஆறு, வாய்க்கால் பாசனத்தின் மூலம் 881 ஆயிரம் ஹெக்டேர் (36 சதவீதம்)
  • ஏரிப் பாசனத்தில் 936 ஆயிரம் ஹெக்டேர் (38 சதவீதம்)
  • கிணற்றுப் பாசனத்தில் 597 ஆயிரம் ஹெக்டேர் (24 சதவீதம்)
  • மற்ற பாசனங்களில் 46 ஆயிரம் ஹெக்டேர் (2 சதவீதம்) என
  • மொத்தம் 2462 ஆயிரம் ஹெக்டேரில் விவசாயம் நடைபெற்றது.

புள்ளியியல்துறை தகவலின்படி ஏறக்குறைய அதே பரப்பளவில்தான் 2003-ம் ஆண்டிலும் விவசாயம் நடைபெற்றுள்ளது. ஆனால்,

  • 38 சதவீதமாக இருந்த ஏரிப் பாசனம் 18 சதவீதமாகவும்
  • ஆறு, வாய்க்கால் பாசனம் 26 சதவீதமாகவும் குறைந்துவிட்டது.
  • 24 சதவீதமாக இருந்த கிணற்றுப் பாசனம் 54 சதவீதமாக உயர்ந்துவிட்டது.

அதாவது ஆறு, வாய்க்கால் பாசனத்தில் குறைந்த 10 சதவீதமும் ஏரிப் பாசனத்தில் குறைந்த 20 சதவீதமும் சேர்ந்து 30 சதவீதம் விளைநிலங்கள் கிணற்றுப் பாசனத்துக்கு மாறியுள்ளன.

தமிழக விவசாயத்தில் 30 சதவீதம் கிணற்றுப் பாசனத்துக்கு மாறியுள்ளதால், பம்புசெட் மூலம் நீர் இறைக்கும் இலவச மின்சாரத்தின் அளவு உயர்ந்து மானியத்தின் அளவும் ரூ.3 ஆயிரம் கோடிக்கும் அதிகமாக உள்ளது.

தமிழக அரசு- இதில் கட்சிப் பாகுபாடே வேண்டாம்- ஏரிகளைப் பாதுகாத்திருந்தால் 20 சதவீதம் விளைநிலங்களைக் கிணற்றுப் பாசனத்துக்கு மாறாமல் தடுத்திருக்க முடியும்.

1980 முதல் 2005 வரை பல்வேறு அமைப்புகள் மூலம் தமிழகத்தில் 2136 ஏரிகள் ரூ.473 கோடியில் புனரமைக்கப்பட்டுள்ளன. இதில் உலக வங்கியும் நபார்டும் மட்டுமே ரூ. 150 கோடி வரை செலவிட்டுள்ளன. மாநில அரசு 290 ஏரிகளுக்காக ரூ.62 கோடி செலவிட்டுள்ளது. இந்தப் புள்ளிவிவரமே, அரசு ஏரிகளைக் காப்பதில் எந்த அளவுக்கு அக்கறை காட்டுகிறது என்பதற்கு ஒரு சான்று.

ஏரிகள் என்பவை பாசன நீருக்காக மட்டுமல்ல. மண் இழப்பைத் தடுத்தல், வெள்ளத்தைக் கட்டுப்படுத்தல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகிய பயன்பாடுகளும் ஏரிகளால் உள்ளன.

இன்று சேலத்தில் புதிய பஸ்நிலையம் அமைந்துள்ள இடம் ஒரு ஏரிதான். அதன் பெயரே- பஞ்சம்தாங்கி ஏரி. எத்தகைய கடுமையான பஞ்சம் வந்தபோதும் வற்றாத ஏரி என்ற பொருளில் அவ்வாறு அழைத்து வந்தனர். ஆனால் அதற்கான நீர்வரத்துப் பாதைகளை அடைத்துவிட்டு, பல காலமாக நிரம்பாமல் வீணாகக் கிடக்கிறது என்று பொதுப்பணித்துறையின் சான்று பெற்று, பஸ் நிலையமாக மாறிவிட்டது.

இப்படியாகத்தான் எல்லா ஏரிகளையும் இழந்தோம், இழந்து வருகிறோம். இன்றைய தேவை “ஏரி காக்கும் அரசு’

மழைக் காலத்தில் சென்னை நகர் மிதந்ததைக் கண்ட பின்னும் ஏரிகள் மீது அக்கறை செலுத்தாமல் இருக்கலாமா?

====================================================

நன்னீர் பற்றாக்குறையால் திணறும் ஆசியா

கே.என். ராமசந்திரன்

திபெத் பீடபூமியில் ஏராளமான பனி குவிந்து கிடக்கிறது. அது உருகிப் பத்து பெரிய ஜீவநதிகளாகப் பாய்கிறது. திபெத்தின் சராசரி வெப்பநிலை அதிகரித்துக் கொண்டே வருகிறது.

அதன் காரணமாக அதிக அளவில் பனி உருகி அந்த ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்படலாம். கொஞ்ச காலத்துக்குப் பிறகு எல்லாப் பனியும் உருகித் தீர்ந்து அந்த ஜீவநதிகள் மழைக்காலங்களில் மட்டுமே நீர் ஓடும் நதிகளாகிவிடக் கூடும். அதன்பின் மழை பொய்த்தால் வறட்சிதான்.

காடு அழிப்பு, கால்நடைகள் அளவுக்கு மீறி மேய்தல், தவறான நதிநீர் மேலாண்மை, தவறான நீர்ப்பாசன உத்திகள், நீர் மாசு போன்ற காரணங்களால் ஆசியாக் கண்டம் நன்னீர்ப் பற்றாக்குறையால் திணறுகிறது. அளவுக்கு மீறி நிலத்தடி நீர் பயன்படுத்தப்பட்டுச் சுற்றுச்சூழல் சிதைக்கப்பட்டு வருகிறது.

இந்தியாவும் சீனாவும் இமயமலையில் உற்பத்தியாகும் நதிகளைப் பெருமளவில் சார்ந்திருக்கின்றன. அவற்றில் நீர் வரத்து குறைந்தால் இரு நாடுகளுக்குமிடையில் தண்ணீர்ப் பிரச்சினைகள் ஏற்படக்கூடும். அவை நதிகளின் போக்கை மாற்றியமைக்க முனைந்தால் பாகிஸ்தான், வங்கதேசம், மியான்மர், தாய்லாந்து ஆகிய நாடுகள் சண்டைக்கு வரும்.

இப்போதே சீனா சட்லஜ் நதி உற்பத்தியாகும் இடத்துக்கருகில் ஓர் அணையைக் கட்டியிருக்கிறது. அத்துடன் பிரம்மபுத்ரா நதியிலிருந்து வடக்கேயுள்ள மஞ்சள் நதிக்கு நீரை எடுத்துச் செல்லவும் திட்டமிடுகிறது. சீனாவின் நீர்த்தேவை முழுவதையும் திபெத்திலிருந்து நிறைவு செய்து கொள்ள அது முனையும்போது, இந்தியாவுடன் மோதல் ஏற்படுவது உறுதி.

ஆசிய நாடுகள் எல்லாவற்றிலுமே இதேபோன்ற எல்லைப் பிரச்சினைகளும் நதிநீர்ப் பங்கீட்டுப் பிரச்சினைகளும் எழும். நாடுகளுக்கிடையில் போர்கள் கூட மூளலாம்.

திபெத்தில் சீனா ஏராளமான கனிமச் சுரங்கங்களைத் தோண்டி வருகிறது. அத்துடன் அங்குள்ள பனிமலைகள் மறைந்து தண்ணீர்ப் பஞ்சமும் ஏற்பட்டால் திபெத்தின் சுற்றுச்சூழலே முற்றிலுமாக வீணாகிப் போகும்.

இந்தியாவின் கங்கை – காவிரி இணைப்புக் கனவும் ஈடேறாது. உலகளாவிய வெப்பநிலை உயர்வின் காரணமாக இந்தியத் துணைக் கண்டத்தில் சராசரி மழையளவு பன்மடங்கு அதிகமாகும் என்று சொல்லப்படுவது ஓர் ஆறுதலான செய்தி. அதை வீணாகாமல் சேகரித்து வைக்க பெரிய ஏரிகளையும் அணைகளையும் உடனடியாக உருவாக்கியாக வேண்டிய கட்டாயம் மத்திய, மாநில அரசுகளுக்கு உள்ளது.

உலகளாவிய வெப்பநிலை உயர்வின் காரணமாகக் கடல் நீர் மட்டம் உயர்ந்து உள்நாட்டுக்குள் பரவுவது, பெருமழையால் ஏற்படும் வெள்ளங்கள், கோடைகளில் கடும் வறட்சி போன்ற பேரிடர்கள் ஏற்படும் என்று சொல்கிறார்கள். அதன் காரணமாக மக்கள், குறிப்பாக ஏழை எளிய மக்கள் உள்நாட்டில் பத்திரமான இடங்களுக்குக் குடிபெயர்வார்கள். அது பல சமூக மற்றும் பொருளாதாரப் பிரச்சினைகளைத் தோற்றுவிக்கும். இப்போதே வங்கதேசத்திலிருந்து சட்டவிரோதமாகச் சுமார் இரண்டு கோடி மக்கள் இந்தியாவில் குடியேறியிருக்கிறார்கள். கடல் மட்டம் உயர்ந்தால் வங்கதேசம் முழுவதுமே மூழ்கிப் போகலாம். அதேபோல மாலத்தீவுகளும் மூழ்கி விடும்.

நெய்தல் நிலப்பகுதி வேலைவாய்ப்புகளும், உற்பத்திகளும் கடுமையாகப் பாதிக்கப்படும். டெல்டா பகுதிகளிலும், தாழ்வான நிலப்பகுதிகளிலும் நடைபெற்று வந்த விவசாயம் அழியும் ஆபத்தும் உண்டு. அதன் காரணமாக வேலையிழக்கும் பல்லாயிரம் தொழிலாளர்கள் நகரங்களை நோக்கிப் படையெடுப்பார்கள். அவர்கள் வழக்கம்போல ஏரிகளையும் குளங்களையும் ஆக்கிரமித்துக் குடியேறுவார்கள். குளிர்காலங்களில் குளிர் குறைவாவது நோய்க்கிருமிகளைப் பரப்பும். கொசு போன்ற பூச்சிகளின் இனப்பெருக்கத்துக்கும் உதவும். மேலும் கதகதப்பான வானிலையை உண்டாக்கும். நோய்கள் பெருகி அரசின் சுகாதாரப் பராமரிப்புச் சுமையை அதிகமாக்கும். தொழிலாளர்களும் பணியாளர்களும் நோய்வாய்ப்பட்டு சேவைத் துறைகளும் உற்பத்தித் துறைகளும் முடங்கும்.

உலகளாவிய வெப்பநிலை 6 செல்சியல் டிகிரி வரை உயர முடியும் எனப் பயமுறுத்துகிறார்கள். பசுங்குடில் வாயுக்கள் எனப்படும் கரியமில வாயு, மீத்தேன் போன்றவைதான் உலகளாவிய வெப்பநிலை உயர்வுக்குக் காரணம். அந்த வாயுக்களை வளிமண்டலத்தில் பரப்புவதை நிறுத்திவிட்டால் கூட, இன்று வரை வளிமண்டலத்தில் கலக்கப்பட்டிருக்கிற கரிம வாயுக்கள் இன்னும் பல நூறு ஆண்டுகளுக்கு வளிமண்டல வெப்பநிலையைத் தொடர்ந்து உயர வைத்துக் கொண்டேயிருக்கும்.

2099-ம் ஆண்டுக்குள் உலகளாவிய வெப்பநிலையில் 1.1 செல்சியஸ் டிகிரி வரை உயர்வு ஏற்படுவதைத் தடுக்கவே முடியாது.

Posted in ADMK, Agriculture, AIADMK, Analysis, Backgrounder, Bus Stand, China, Dhindivanam, Dindivanam, Dinduvanam, DMK, Drought, Environment, Farming, Global Warming, Himalayas, History, Ice, Irrigation, Lake, Lakes, Land, Pollution, Pumpset, River, Salem, Scarciity, SEZ, Snow, Statistics, Sutlej, Thindivanam, Tibet, Water, WB, Well water, world bank | Leave a Comment »

Ve Ganesan – Banking impact to Economy, Finance and Commerce

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 16, 2007

“வங்கிப் பழக்கம் வைரச் சுரங்கம்’

வெ. கணேசன்

வங்கிப் பழக்கம் இந்நாளில் அவசியத் தேவையாகியுள்ளது.

நாள் ஒன்றுக்கு சராசரியாக ரூ.48 ஆயிரம் கோடி மதிப்புள்ள 40 லட்சம் வங்கிக் காசோலைகள் மீதான பணப் பரிவர்த்தனை, நாட்டின் பல்வேறு நகரங்களிலும் அமைக்கப்பட்டுள்ள 1100 மையங்களில் கையாளப்பட்டு வருகின்றன.

தொடர்ந்தாற்போல் இரண்டு அல்லது மூன்று நாள்கள் வங்கி விடுமுறை நாள்களாக அறிவிக்கப்பட்டால், தொழில் முனைவோரும், வர்த்தகப் பிரிவினரும், வாடிக்கையாளர்களும், மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி விடுகின்றனர்.

இருந்தாலும் மொத்த மக்கள்தொகையில் 34 சதவீத மக்களிடையே மட்டும்தான், வங்கிப் பழக்கம் நடைமுறையில் இருந்து வருகிறது.

அதனால்தான் குறைந்தபட்ச இருப்புத்தொகை என எதுவும் இல்லாமலேயே, வெறும் பத்து ரூபாயைக்கூட செலுத்தி, வங்கியில் சேமிப்புக் கணக்கைத் தொடங்கிக் கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது.

இதன்படி, கேரளத்தில் உள்ள பாலக்காடு மாவட்டம்தான், நாட்டிலேயே வீடு தவறாது வங்கிக் கணக்கு வைத்திருக்கும் முதல் மாவட்டமாக மாறியுள்ளது.

உலகிலேயே அதிக கோடீஸ்வரர்கள் வசிக்கும் நாடுகளில், இந்தியாவும் இடம் பெற்றுள்ளது. அதேசமயம் வறுமைக் கோட்டுக்குக் கீழே, இரண்டு வேளை உணவுகூடக் கிடைக்காமல் பசியால் பரிதவிப்பவர்களும், இங்கே முப்பது கோடி பேருக்கும் மேலே உள்ளனர்.

2006-ம் ஆண்டின், உலக சமாதானத்துக்கான நோபல் பரிசு, வங்க தேச அறிஞரும், குறுங்கடன் வழங்கும் கிராம வங்கி நிறுவனருமான முகம்மது யூனுசுக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழும் அடித்தட்டு மக்களுக்காக, குறிப்பாக பெண்கள் முன்னேற்றத்துக்காக, கிராம வங்கியை உருவாக்கி, அதை வெற்றிகரமாய் செயல்படுத்திக் காட்டி, சாதனை படைத்த காரணத்திற்காகத்தான், இந்த உலகளாவிய விருது, அந்த மனிதரைத் தேடிச் சென்று அளிக்கப்பட்டுள்ளது.

நமது நாட்டு மக்களில், மூன்றில் ஒரு பங்கினர் மட்டுமே வங்கிகள் அளிக்கும் கடன் வசதியை அனுபவிக்கின்றனர். ஏனைய மக்களோ, கடன் பெறத் தகுதியற்றவர்கள் என ஒதுங்கி இருக்கின்றனர்.

கடன் வசதி என்பது வறுமையை அகற்றுவதற்கான ஒரு முக்கிய சாதனம். எனவேதான் கிராமப் பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கத்தில் 1975-ம் ஆண்டு அக்டோபர் 2-ம் நாள் நமது நாடு முழுவதும் கிராம வங்கிகள் தொடங்கப்பட்டன.

அதன்படி நமது நாட்டின் மொத்தமுள்ள 605 மாவட்டங்களில் 525 மாவட்டங்களில் இன்று கிராம வங்கிகள் செயல்படுகின்றன. உதாரணத்துக்கு தமிழகத்தில் செயல்படும் வங்கிகள் இரண்டு. அதில் ஒன்று, சேலத்தை தலைமையிடமாகக் கொண்டு, வடமாவட்டங்களில் செயல்பட்டு வரும் பல்லவன் கிராம வங்கி. மற்றொன்று விருதுநகரைத் தலைமையிடமாகக் கொண்டு தென் மாவட்டங்களில் செயல்பட்டு வரும் பாண்டியன் கிராம வங்கி.

நமது நாட்டிலுள்ள கிராம வங்கிகளின் எண்ணிக்கை 102 ஆகும். இவற்றின் மொத்தக் கிளைகள் 14,495. இதில் 86,687 ஊழியர்கள் பணிபுரிகின்றனர். கடந்த மார்ச் மாத முடிவில், 72,510 கோடி ரூபாயை டெபாசிட்டாகத் திரட்டியுள்ளனர். 40 ஆயிரம் கோடி ரூபாயைக் கடனுதவியாக அளித்துள்ளனர்.

அளிக்கப்பட்ட கடன் தொகையில், 79 சதவீதம் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் திரும்பச் செலுத்தப்பட்டுள்ளது. கடந்த 2003-ம் ஆண்டிலிருந்து தொடர்ந்து அகில இந்திய அளவில், நாட்டின் முதன்மை கிராம வங்கியென, “பாண்டியன் கிராம வங்கி’ தேர்ந்தெடுக்கப்பட்டு சிறப்பாகச் சேவை புரிந்து வருகிறது.

நமது நாட்டில் இன்னமும் கிராம வங்கிகள் தொடங்கப்படாத மாநிலங்கள் இரண்டு இருக்கின்றன. அவை கோவா மற்றும் சிக்கிம் ஆகியன.

நடப்பு நிதியாண்டில் நாடு முழுவதும், வேளாண் துறைக்கு ரூ.1,75,000 கோடி கடனுதவி அளிக்கப்பட்டுள்ளது. உயர் தொழில்நுட்பக் கல்வி கற்க ஏதுவாக, 12,106 கோடி ரூபாய் கல்விக் கடனாக வழங்கப்பட்டுள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளில் நாடு முழுவதும் 8,01,000 சுய உதவிக் குழுக்களுக்கு ரூ. 4,863 கோடி கடனுதவியை வழங்கி அடித்தட்டு மக்களின் வாழ்க்கை மேம்பாட்டுக்கான அடித்தளம் அமைக்கப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டில் மேலும் 3,85,000 சுய உதவிக் குழுக்களுக்கு நிதி உதவி அளிக்கவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

விவசாயிகளின் கடன் சுமையை எளிதாக்கி நிம்மதிப் பெருமூச்சு விடும் வகையில் கடந்த நிதியாண்டில் மட்டும் 1,700 கோடி ரூபாய் வட்டியைத் தள்ளுபடி செய்து சாதனை படைத்தன அரசுத் துறை வங்கிகள்.

ஆக நாட்டில் உணவு உற்பத்தி பெருகவும், கல்வியாளர்களை உருவாக்கவும் வங்கிப் பழக்கம் ஆதரவுக் கரம் நீட்டி, உறுதுணையாய் நிற்கிறது.

ஆங்கிலேயர்கள் ஆட்சியில் ஏழை, எளிய மக்களுக்கு வங்கிச் சேவை என்பது எட்டாக்கனியாகவே இருந்தது. இவற்றை ஒழுங்குபடுத்தும் விதத்தில்தான், நாட்டில் முதன்முதலாக 1949ம் ஆண்டு, வங்கியியல் கம்பெனிகள் சட்டம் உருவாக்கப்பட்டது.

1809ல் பாங்க் ஆப் பெங்கால் வங்கியும், 1840ல் பாங்க் ஆப் பாம்பேயும், 1843ல் பாங்க் ஆப் மெட்ராஸýம் தொடங்கப்பட்டன. ஆங்கிலேயர் ஆட்சியில், இம் மூன்று வங்கிகளும் “பிரசிடென்சி வங்கிகள்’ என்று அழைக்கப்பட்டன.

1862ல் தான் அரசாங்கம் முதன்முதலாக காகிதப் பணத்தை அச்சிட ஆரம்பித்தது. 1905ல் சுதேசி இயக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, ஆங்காங்கே புதிது, புதிதாய் வங்கி அமைப்புகள் முளைத்து எழுந்தன. இவற்றையெல்லாம் கட்டுப்படுத்தி, நெறிமுறைப்படுத்த, 1913-ல் இந்திய கம்பெனிகள் சட்டத்தில் வங்கிகளுக்கு தனிப்பிரிவு ஏற்படுத்தப்பட்டது.

27.01.1921-ல், பாங்க் ஆப் பெங்கால், பாங்க் ஆப் பாம்பே, பாங்க் ஆப் மெட்ராஸ் ஆகிய மூன்று வங்கிகளும் ஒருங்கிணைக்கப்பட்டு, “இம்பீரியல் பாங்க் ஆப் இந்தியா’ என அழைக்கப்படலாயிற்று. பின்னர் சுதந்திர இந்தியாவில் 1955-ம் ஆண்டு இம்பீரியல் பாங்க் என்பது “ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா’வாக மாறியது. உலக அளவிலான வங்கிகளில், நமது “ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா’ இன்று 82 வது இடத்தில் இருக்கிறது.

1969ம் ஆண்டு ஜூலை 19ம் நாள் நாட்டின் மிகப்பெரிய 14 வங்கிகள் நாட்டுடைமையாக்கப்பட்டு, பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வழி அமைத்துத் தரப்பட்டது. அப்போது நாட்டிலிருந்த வங்கிக் கிளைகள் 8260 மட்டுமே. இவற்றிலும், கிராமப் பகுதிகளில் செயல்பட்டுக் கொண்டிருந்தவையோ வெறும் 1860 கிளைகள்தான். இதன் தொடர்ச்சியாக 1980ம் ஆண்டு ஏப்ரல் 15-ம் நாள் மேலும் 6 பெரிய தனியார் வங்கிகள் அரசுடைமையாக்கப்பட்டன.

ஆனால்… இன்றோ, வங்கி எண்ணிக்கையின் வளர்ச்சி நம்ப முடியாத அளவுக்கு உயர்ந்துள்ளது. ஆம். 2006 அக்டோபர் மாத நிலவரப்படி, நமது நாட்டின் அட்டவணை வர்த்தக வங்கிகளின் எண்ணிக்கை எழுபதாயிரத்தை எட்டியுள்ளது.

இவ்வங்கிகள், பொதுமக்களிடம் இருந்து திரட்டி வைத்துள்ள வைப்புத் தொகை 22,92,525 கோடி ரூபாய். மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள பல்வேறு விதமான நலத் திட்ட கடன் தொகை அளவோ, 16,55,567 கோடி ரூபாய். இவற்றில் பணிபுரியும் ஊழியர் எண்ணிக்கை மட்டும் ஏழரை லட்சம்.

உள்னாட்டு வங்கிப்பணியின் சேவை அயல்நாடுகளிலும் விரிந்துள்ளன இன்று. அயல் மண்ணில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் வங்கிக் கிளைகள் 123.

இவற்றிற்கிடையே, வங்கிக் கணக்குகளை ஆங்காங்கே தொடங்கி, கோரிக்கை அற்றுக் கிடக்கும் வாடிக்கையாளர் பணம் மட்டும் ரூ.881 கோடி.

வீட்டுக்கொரு மரம் வளர்த்து சுற்றுச்சூழல் வளம் பெருக்குவோம் என்கிற தாரக மந்திரம்போல், வீட்டுக்கொரு வங்கிக் கணக்கைத் தொடங்கினால், நாடும், மக்களும் நலம் பெறுவர் என்பது திண்ணம்.

(கட்டுரையாளர்: பாண்டியன் கிராம வங்கி தொழிலாளர் சங்க

இணைப் பொதுச் செயலர்).

Posted in Analysis, Backgrounder, Banking, Banks, Checking, Checks, Cheques, Commerce, Deposits, Economy, Finance, History, Imperial Bank of India, Kerala, Loans, Microfinancing, Mohammed Yunus, NGO, Op-Ed, Palacaut, Palacode, Palagode, Presidency banks, Rural, Salem, Savings, SBI, Self-help, Village, Virudunagar, Viruthunagar | 1 Comment »

Dharmapuri Bus burning: Death for 3 AIADMK men

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 16, 2007

கோவை வேளாண் பல்கலை. மாணவிகள் எரிப்பு: நடந்தது என்ன?

சேலம், பிப். 16: தருமபுரி அருகே கோவை வேளாண் பல்கலைக் கழக மாணவியர் மூன்று பேர் பஸ்ஸில் உயிரோடு எரிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இச்சம்பவம் தொடர்பாக அதிமுக-வினர் மீது வழக்குத் தொடரப்பட்டது. இச்சம்பவம் குறித்த விவரம் வருமாறு:

2000-ம் ஆண்டு கோவை வேளாண் பல்கலைக்கழக மாணவர்கள் 54 பேர், மாணவிகள், பேராசிரியைகள் உள்பட 50 பேர் தனித்தனி பஸ்களில் 12 நாள்கள் கல்விச்சுற்றுலா சென்றனர்.

பல ஊர்களுக்குச் சென்ற அவர்கள், தருமபுரி மாவட்டம் பையூரில் உள்ள வேளாண் ஆராய்ச்சி மையத்துக்கு பிப்.2-ம் தேதி வந்தனர். அன்றோடு சுற்றுலா முடிந்ததால், ஏற்காடு செல்லத் திட்டமிட்டிருந்தனர்.

மாணவிகள் வந்திருந்த பஸ், ஏற்காடு மலைப்பாதையில் செல்ல இயலாது என்பதால், ஒகேனக்கல் செல்வதென்று முடிவு செய்யப்பட்டது.

பிப்.2-ம் தேதி காலை பல்கலைக்கழக பஸ்ஸில் மாணவிகள் மட்டும் ஒகேனக்கல் சென்று கொண்டிருந்தனர்.

வழியில் தருமபுரியை அடுத்த இலங்கியம்பட்டியில் வேளாண் பல்கலைக்கழக மாணவிகள் வந்த பஸ், அதிமுகவினரால் மறிக்கப்பட்டது.

கொடைக்கானல் ஓட்டல் வழக்கில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து, ஆங்காங்கு போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினர் இந்த பஸ்ûஸ வழி மறித்தனர்.

அதிலிருந்த மாணவிகள் அனைவரும் இறங்குவதற்குள், பெட்ரோல் ஊற்றி பஸ்ஸþக்குத் தீயிடப்பட்டது. மளமளவென்று பற்றி எரிந்த பஸ்ஸில் சிக்கிக் கொண்ட மாணவிகள் கோகிலவாணி (19), ஹேமலதா (19), காயத்ரி (19) ஆகியோர் உடல் கருகி பலியானார்கள்.

இச்சம்பவத்தில் 18 மாணவிகள் தீக்காயங்களுடன் தப்பினர்.

தமிழகத்தையே உலுக்கிய இச்சம்பவம் குறித்து சிபிசிஐடி போலீஸ் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.

இதுகுறித்து நடந்த விசாரணையில், சம்பவத்தன்று மோட்டார் சைக்கிளில் வந்த மூவர் பஸ்ஸþக்குத் தீயிட்டனர். அவர்களை நேரடியாகப் பார்த்தால் அடையாளம் காட்ட முடியும் என்று மாணவிகள் தெரிவித்தனர்.

அவர்கள் கூறிய தகவல்கள் அடிப்படையில், தீவிர விசாரணை மேற்கொண்ட போலீஸôர், மோட்டார் சைக்கிளில் வந்தது அதிமுகவைச் சேர்ந்த புளியம்பட்டி பஞ்சாயத்துத் தலைவர் முனியப்பன் எனக் கண்டறிந்தனர். இதையொட்டி சேலத்தில் அவரை போலீஸôர் கைது செய்தனர்.

மோட்டார் சைக்கிளில் தருமபுரி நகர் அதிமுக கிளைச் செயலாளர் நெடு என்ற நெடுஞ்செழியன், எம்ஜிஆர் இளைஞர் அணி நகரத் துணைத்தலைவர் மாது என்ற ரவீந்திரன் ஆகியோர் பிளாஸ்டிக் கேனில் பெட்ரோல் வாங்கிக் கொண்டு, இலங்கியம்பட்டி நோக்கிச் சென்றனர்.

அப்போது வழியில் பாரதிபுரம் என்ற இடத்தில் நின்று கொண்டிருந்த கல்லூரி பஸ்ஸþக்கு முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு, பஸ்ஸþக்குள் பெட்ரோலை ஊற்றி தீயிட்டதாகவும் விசாரணையில் முனியப்பன் தெரிவித்தார்.

இதையொட்டி 2000-ம் ஆண்டு பிப்ரவரி 11-ம் தேதி நெடு என்ற நெடுஞ்செழியன், மாது என்ற ரவீந்திரன் ஆகியோரை சிபிசிஐடி போலீஸôர் கைது செய்தனர்.

இலக்கியம்பட்டியில் மறியலில் ஈடுபட்ட தருமபுரி ஒன்றிய அதிமுக செயலாளர் டி.கே.ராஜேந்திரன் உள்பட 28 பேர் இவ்வழக்கில் கைது செய்யப்பட்டனர்.

தருமபுரி மாஜில்திரேட் நீதிமன்றத்தில் 2000-ம் ஆண்டு ஏப்ரல் 28-ம் தேதி சிபிசிஐடி போலீஸôர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். இதில் 386 பேர் சாட்சிகளாகச் சேர்க்கப்பட்டிருந்தனர்.

தருமபுரி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மே 2-ம் தேதி இவ்வழக்கு விசாரணை நடைபெற்றது. அங்கிருந்து ஜூலை 24-ம் தேதி கிருஷ்ணகிரி செசன்சு நீதிமன்றத்துக்கு இவ்வழக்கு மாற்றப்பட்டது.

அங்கு 2001-ம் ஆண்டு நவம்பர் மாதம் 5-ம் தேதி இவ்வழக்கு விசாரணை தொடங்கியது.

அப்போது அதிமுக ஆட்சி நடைபெற்றது. பஸ் எரிப்பு குறித்து புகார் செய்த கிராம நிர்வாக அதிகாரி உள்பட 20 பேர் பிறழ் சாட்சிகளாக மாறினர்.

பஸ் எரிப்பில் பலியான கோகிலவாணியின் தந்தை வீராசாமி இந்த வழக்கை கோவை நீதிமன்றத்துக்கு மாற்றக்கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இதை விசாரித்த நீதிபதி கனகராஜ், இவ்வழக்கை சேலம் முதலாவது கூடுதல் செசன்சு நீதிமன்றத்துக்கு மாற்ற உத்தரவிட்டார்.

அரசு வழக்கறிஞராக சீனிவாசனை நியமித்து, 2003-ம் ஆண்டு ஆகஸ்ட் 22-ல் உயர்நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.

பஸ்ஸில் 3 மாணவிகள் உயிரோடு எரிப்பு: மேலும் 25 அதிமுகவினர் மீதான குற்றச்சாட்டும் நிரூபணம் – சேலம் நீதிமன்றம் தீர்ப்பு இன்று தண்டனை அறிவிப்பு

பஸ்ஸில் 3 மாணவிகள் உயிரோடு எரிப்பு: மேலும் 25 அதிமுகவினர் மீதான குற்றச்சாட்டும் நிரூபணம் – சேலம் நீதிமன்றம் தீர்ப்பு இன்று தண்டனை அறிவிப்பு

சேலம், பிப். 16: தருமபுரி அருகே கோவை வேளாண் பல்கலைக்கழக மாணவிகள் 3 பேர் உயிரோடு எரிக்கப்பட்ட சம்பவம் குறித்து சேலம் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை தீர்ப்பளிக்கப்பட்டது.

இச்சம்பவம் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டோரில், அதிமுக நிர்வாகிகள் நெடு என்ற நெடுஞ்செழியன், மாது, முனியப்பன் ஆகிய மூவர் கொலைக் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர்.

மேலும் 25 அதிமுகவினர் மீதான குற்றச்சாட்டு நிரூபணமானது என்று நீதிபதி கிருஷ்ணராஜா தமது தீர்ப்பில் குறிப்பிட்டார்.

இந்த வழக்கில், குற்றவாளிகள் யார் யாரென்று தமது தீர்ப்பில் குறிப்பிட்டார் நீதிபதி.

அவர்களுக்கு என்னென்ன தண்டனை என்பது குறித்து வெள்ளிக்கிழமை அறிவிக்கப்படும் எனவும் நீதிபதி தெரிவித்தார்.

இதில் குற்றம் சாட்டப்பட்டிருந்த பழனிசாமி, மாதேஷ் ஆகியோர் விடுதலை செய்யப்பட்டனர்.

சேலம் நீதிமன்றத்தில் கடும் போலீஸ் பாதுகாப்புக்கிடையே இவ்வழக்கில் தீர்ப்பு அளிக்கப்பட்டது.

நீதிமன்றத்துக்கு வியாழக்கிழமை காலை 10.30 மணிக்கு வந்த நீதிபதி கிருஷ்ணராஜா, முதலில் வேறு வழக்குகள் குறித்து விசாரித்தார்.

இதையடுத்து பகல் 10.53 மணிக்கு தருமபுரி பஸ் எரிப்பு வழக்கு குறித்து தீர்ப்பளித்தார்.

இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 31 பேரில், செல்லக்குட்டி என்பவர் ஏற்கெனவே இறந்து விட்டார். நீதிமன்றத்தில் மற்ற 30 பேரும் ஆஜராகியிருந்தனர்.

அவர்களில் எஸ்.பழனிசாமி, மாதேஷ் ஆகியோர் வழக்கிலிருந்து விடுவிக்கப்படுவதாக நீதிபதி அறிவித்தார்.

இவ்வழக்கில் மற்றவர்கள் மீதான குற்றச்சாட்டு நீருபிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார் நீதிபதி.

அரசுத் தரப்பில் 22 குற்றச்சாட்டுகள் கூறப்பட்டிருந்தன. இதில் 4 குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை. மற்ற குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டன.

குற்றம் சாட்டப்பட்ட ஒவ்வொருவரின் பெயரைக் குறிப்பிட்டு, அவர்கள் மீதான குற்ற விவரத்தைப் படித்த நீதிபதி கிருஷ்ணராஜா, அது நிரூபிக்கப்பட்டுள்ளது என்றார்.

ஒவ்வொருவர் மீதும் வெவ்வேறு பிரிவுகள் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் தண்டனை விதிப்பதாகவும், தங்கள் கருத்தைக் கூறும்படியும் ஒவ்வொருவரிடமும் கேட்டார் நீதிபதி. அதற்கு குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் தங்களுக்குக் குறைந்தபட்ச தண்டனை வழங்கும்படி கேட்டுக் கொண்டனர்.

கொலைக் குற்றம் சாட்டப்பட்ட மாது, முனியப்பன் ஆகியோர், தாங்கள் எந்தத் தவறும் செய்யவில்லை என்றனர்.

அப்போது குறுக்கிட்டு பேசிய அரசு வழக்கறிஞர் சீனிவாசன், குற்றம் சாட்டப்பட்ட அனைவருக்கும் அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என கூறினார்.

அதிமுக நிர்வாகிகள் நெடு என்ற நெடுஞ்செழியன், மாது, முனியப்பன் ஆகியோரை கொலைக் குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்தார் நீதிபதி.

இதையொட்டி அவர்களுக்கு அளிக்கப்பட்டிருந்த ஜாமீன் ரத்து செய்யப்பட்டது. மற்றவர்கள் நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டார் நீதிபதி.

தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கு: 3 பேருக்கு தூக்கு தண்டனை; 25 பேருக்கு தலா 7 ஆண்டு ஜெயில்

சேலம், பிப். 16-

கொடைக்கானல் ஓட்டல் வழக்கில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு தண்டனை விதிக்கப் பட்டதை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் அ.தி.மு.க.வினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது தர்மபுரி இலக்கி யம்பட்டியில் கோவை வேளாண் கல்லூரி மாணவி கள் வந்த பஸ் எரிக்கப்பட்டது. இதில் மாணவிகள் கோகில வாணி, ஹேமலதா, காயத்ரி ஆகியோர் உயிரோடு எரிந்து பலியானார்கள்.

இது தொடர்பாக அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் 31 பேர் கைது செய்யப்பட்டு வழக்கு தொடரப்பட்டது. வழக்கு விசாரணை சேலம் செசன்சு கோர்ட்டில் நடந்தது.

நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது நிர்வாகிகள் நெடுஞ்செழியன், மாது, முனியப்பன் ஆகிய 3 பேர் கொலை குற்ற வாளிகள் என்று நீதிபதி கிருஷ்ணராஜா தீர்ப்பு கூறினார்.

மாதேஷ், பழனிச்சாமி விடுதலை செய்யப்பட்டனர். மற்ற 25 பேர் மீது சட்ட விரோதமாக கூடுதல், பொது சொத்தை சேதப்படுத்துதல் ஆகிய பிரிவுகளில் குற்றங்கள் நிரூபணமானதாக நீதிபதி கூறினார்.

தண்டனை விவரம் இன்று அறிவிப்பதாக நீதிபதி கூறினார்.

தண்டனை விவரத்தை நீதிபதி கிருஷ்ணராஜா இன்று பகல் 10.45 மணிக்கு அறிவித்தார்.

கொலை குற்றம் நிரூபிக் கப்பட்ட நெடுஞ்செழியன், மாது, முனியப்பன் ஆகிய 3 பேருக்கும் தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார். மற்ற 25 பேருக்கும் தலா 7 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது.

25 பேர் பெயர் விவரம் வருமாறு:-

  1. முருகேசன்,
  2. தவுலத் பாஷா,
  3. வேலாயுதம்,
  4. முத்து என்கிற அறிவழகன்,
  5. ரவி,
  6. வி.முருகன்,
  7. வி.பி.முருகன்,
  8. வடிவேல்,
  9. சம்பத் மற்றும்
  10. நஞ்சன் என்கிற நஞ்சப்பன்,
  11. ராஜ×,
  12. மணி என்கிற கூடலர் மணி,
  13. மாது,
  14. ராமன் (அரசு போக்குவரத்து கழக கண்டக்டர்),
  15. சண்முகம்,
  16. சந்திரன்,
  17. செல்லகுட்டி,
  18. காவேரி,
  19. மணி,
  20. மாதையன்,
  21. செல்வம்,
  22. செல்வராஜ்,
  23. மாணிக் கம்,
  24. வீரமணி,
  25. உதயகுமார்.

நீதிபதி கிருஷ்ணராஜா வழங்கிய தண்டனை விவரம் வருமாறு:-

கொலை குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட நெடு என்ற நெடுஞ்செழியன், மாது என்ற ரவீந்திரன், முனியப்பன் ஆகிய 3 பேருக்கும் அதிகபட்சமாக தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.

மேலும் 46 பேரை கொல்ல முயன்றதாக 307-வது பிரி வின்கீழ் 7 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ. 46 ஆயிரம் அபராதம் விதிக்கப் படுகிறது.

இது தவிர சொத்து சேதப் படுத்துதல் உள்ளிட்ட 7 பிரிவுகளில் குற்றம் நிரூபிக்கப் பட்டுள்ளதால் 7 ஆண்டு 3 மாதம் ஜெயில் தண்டனையும், ரூ. 13 ஆயிரம் அபராதமும் இவர்களுக்கு பொருந்தும்.

டி.கே.ராஜேந்திரன் உள்பட மற்ற 25 பேருக்கும் பொது சொத்துக்கு சேதம் விளை வித்தல், சாலை மறியல், பஸ் கண்ணாடிகளை உடைத்து எறிதல், வாகனங்களையும், மனித நடமாட்டத்தையும் தடுத்தல், சட்ட விரோதமாக கும்பலாக கூடுதல், உயிர் சேதம் விளைவிக்கும் எண்ணத் துடன் சட்டவிரோத கும்பலு டன் கூடி கலகம் விளை வித்தல், தமிழ்நாடு சொத்து பாதுகாப்பு சட்டம் உள்ளிட்ட 7 பிரிவுகளில் குற்றம் நிரூபிக் கப்பட்டுள்ளதால் 25 பேருக்கும் தலா 7 ஆண்டு 3 மாதம் ஜெயில் தண்டனையும், தலா ரூ. 13 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.

இதில் மணி என்ற மெம்பர் மணி என்பவர் பயங்கர ஆயுதங்களால் பஸ்சை உடைத்ததாக அவருக்கு கூடுதல் 6 மாதம் (அதாவது 7 ஆண்டு 9 மாதம்) ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது.

“கெஞ்சிய மாணவிகளை கொளுத்தியது அரிதிலும் அரிய குற்றம்’

சேலம், பிப். 17: “உயிர் தப்பிக்க கையெடுத்துக் கும்பிட்டுக் கெஞ்சிய மாணவிகளை பஸ்ஸிலிருந்து இறங்கவிடாமல் தீயிட்டுக் கொளுத்திய கொடுஞ்செயல் அரிதிலும் அரிதான சம்பவமாகும்’ என்று சேலம் மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வு நீதிபதி கிருஷ்ணராஜா தமது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.

“குற்றம் நிரூபணமானோருக்கு ஆயுள் தண்டனை விதிப்பது சட்டரீதியான நடவடிக்கையாகும்; அதேசமயத்தில் தூக்குத் தண்டனை விதிப்பது விதிவிலக்காகும்’ என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தருமபுரியில் வேளாண் பல்கலைக்கழக மாணவியர் எரிப்பு தொடர்பான வழக்கில் 3 பேருக்கு தூக்குத் தண்டனை விதித்து அவர் வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தார். 180 பக்கங்கள் கொண்ட அவரது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ள முக்கிய விவரங்கள் வருமாறு:

தருமபுரி அருகேயுள்ள இலக்கியம்பட்டியில் நடந்த பஸ் எரிப்புச் சம்பவத்தில் 3 மாணவிகள் உயிரோடு கொளுத்தப்பட்டுள்ளனர்.

இச்சம்பவத்தை அரிதிலும் அரிதான குற்றச் செயலாகக் கருத வேண்டியுள்ளது. இத்தகைய குற்றங்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் ஏற்கெனவே பல வழக்குகளில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் அண்மையில் ஓரிரு வழக்குகளில் தீர்ப்பும் வழங்கப்பட்டுள்ளது.

அன்று நடந்த சம்பவம் சமுதாயத்தை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. இத்தகைய செயலில் ஈடுபட்டோர் “திருத்த முடியாத குற்றவாளிகள்’ எனக் கருதும் நிலையை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவத்தன்று பஸ் மீது பெட்ரோல் ஊற்றி, தீ வைக்க முயன்றபோது “நாங்கள் இறங்கி விடுகிறோம், அதன்பிறகு என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள்’ என்று பஸ்ஸýக்குள் இருந்தவர்கள் கையெடுத்துக் கும்பிட்டு, கெஞ்சியுள்ளனர்.

ஆனால் சிறிதும் கருணை காட்டாமல் பஸ்ஸின் முன்கதவை மூடி, தீயிட்டு மாணவிகளைக் கொளுத்தியுள்ளனர்.

அவர்களது நோக்கம் பஸ்ûஸ மட்டும் கொளுத்துவதாக இல்லை. பஸ்ஸில் இருந்த அனைவரையும் கொல்ல வேண்டும் என்ற எண்ணத்தோடு குற்றம் சாட்டப்பட்டோர் செயல்பட்டதாகத் தெரிகிறது.

“பஸ் கதவை மூடுங்கடா; அனைவரையும் கொளுத்துங்கடா’ என சம்பவ இடத்தில் சப்தமிட்டதும் அவர்களது நோக்கத்தை வெளிப்படுத்தியுள்ளது.

இத்தகைய செயல் ஏற்க முடியாதது. ஏனென்றால் அங்கு நடந்த சம்பவத்தைப் பொதுமக்களே நேரில் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

எந்த விதத்திலும் தங்களுக்குச் சம்பந்தமில்லாத அப்பாவி மாணவிகள் மீது இரக்கம் காட்டாமல், அவர்களை உயிரோடு கொளுத்துவது என்பது கோரமான செயலாகும். இக்கொடூரச் செயல் சமூகத்தில் ஏற்றுக் கொள்ள முடியாததாக உள்ளது. இதன் அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்ட எதிரிகளுக்கு இரக்கம் காட்டக் கூடாது. சட்டத்தில் குறிப்பிட்ட அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்ற அடிப்படையில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

தங்கள் கட்சித் தலைமையோ, பிற நிர்வாகிகளோ தூண்டாத நிலையில், இத்தகைய செயலில் ஈடுபட்டோர் தாங்களே சுயமாக இவ்வாறு செய்துள்ளனர் எனக் கருத வேண்டியுள்ளது.

“இப்படிச் செய்தால் அரசியலில் தங்களை முன்னிலைப்படுத்திக் கொள்ளலாம், செல்வாக்கு பெறலாம் என்ற அணுகுமுறையே இதற்குப் பின்னணியாக இருக்கக் கூடும்’ என்று வாதிட்டதை முக்கியமாகக் கருத வேண்டியுள்ளது.

இத்தகைய குற்றங்கள் செய்வோரை திருத்தவே முடியாது என்று நீதிமன்றத்தில் வாதிட்டதின் அடிப்படையில், மூன்று மாணவிகளைக் கொளுத்திய செயலை அரிதிலும் அரிதான குற்றம் என ஏற்க வேண்டியுள்ளது.

இந்த கொடுஞ்செயலில் தங்கள் பிள்ளைகளைப் பறிகொடுத்த பெற்றோரது மனநிலை, தீயில் காயமடைந்த மாணவிகளின் நிலையைக் கருதி, நடந்த சம்பவத்தை கடும் குற்றச் செயலாகக் கருதி தீர்ப்பளிக்க வேண்டியுள்ளது.

தருமபுரியில் அன்று நடந்த சம்பவம் சமுதாயத்தில் யாராலும் ஏற்க முடியாதது; மனிதாபிமானமற்ற முறையில் அப்பாவி மாணவிகள் மூவரைக் கொடூரமான முறையில் கொலை செய்தது அதிகபட்ச தண்டனை விதிக்க வேண்டிய குற்றமாகும் என்று நீதிபதி கிருஷ்ணராஜா தமது தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.

3 மாணவிகள் எரிப்பு வழக்கு: அடையாளம் காண உதவிய கேசட்டுகள்

சேலம், பிப். 17: தருமபுரி அருகே பஸ்ஸில் மாணவிகள் உயிரோடு எரிக்கப்பட்ட வழக்கில் குற்றவாளிகளை அடையாளம் காண வழிவகுத்தவை தெளிவான- வலுவான விசாரணை, சாட்சியங்கள், ஆதாரமாய் அமைந்த தொலைக்காட்சி நிறுவன விடியோ கேசட்டுகள், புகைப்படங்கள்தான் என்று இவ்வழக்கில் ஆஜரான அரசு வழக்கறிஞர் சீனிவாசன் கூறினார்.

சேலம் நீதிமன்றத்தில் கொலைக் குற்றவாளிகளுக்கு தூக்குத் தண்டனை, மற்றவர்களுக்கு தண்டனை அறிவிக்கப்பட்ட பின் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:

மாணவிகள் எரிப்பு சம்பவம் தொடர்பான குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை விதிக்க வேண்டும் என நீதிமன்றத்தில் வலியுறுத்தினேன். அதற்கேற்ப இத்தீர்ப்பு அமைந்துள்ளது.

பாதிக்கப்பட்டோர் சார்பில் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது. குறிப்பாக, பலியான கோகிலவாணியின் தந்தை வீராசாமி, இவ்வழக்கு விசாரணையை வேறு நீதிமன்றத்துக்கு மாற்றக்கோரி உயர் நீதிமன்றத்தில் மனுச் செய்ததே, இவ்வழக்கின் திருப்புமுனையாகும்.

இச்சம்பவம் குறித்து வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டவுடன், நடத்தப்பட்டுள்ள விசாரணை, சேகரிக்கப்பட்ட சான்றுகள் குறிப்பிடத்தக்கவை.

அதிலும் குறிப்பாக அன்று நடந்த சம்பவங்கள் அனைத்தையும் ஒரு தொலைக்காட்சி நிறுவனத்தின் பிரதிநிதிகள் முழுமையாகப் பதிவு செய்திருந்தனர்.

ஆனால் பஸ் எரிப்பு சம்பவத்தை மட்டும், வேறொரு நிறுவனத்தினர் விடியோவில் முழுமையாகப் பதிவு செய்திருந்தனர்.

பஸ்ûஸ மறித்து தீயிட்டு எரிக்க முயற்சித்தவர்களையும் அடையாளம் கண்டறிய உதவியது அக் கேசட்டே.

அதோடு பத்திரிகைகளில் அன்று வெளியாகியிருந்த புகைப்படங்களும், கலவரத்தில் ஈடுபட்டோரை அடையாளம் காண உதவின.

இவ்வழக்கு விசாரணையை சேலம் முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்துக்கு மாற்றி உத்தரவிட்டவர் உயர் நீதிமன்ற நீதிபதி வி.கனகராஜ்.

இவ்வாறு இந்த வழக்கை வேறு மாவட்டத்துக்கு மாற்றியதே, இதன் விசாரணையை சரியான முறையில் தொடர வழிவகுத்தது.

இவ்வழக்கில் சாட்சியமளித்தோர் பங்கு குறிப்பிடத்தக்கது. அதுவும் குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்க ஆதாரமாய் அமைந்துள்ளது என்றார் சீனிவாசன்.

அச்சுறுத்தல்: இவ்வழக்கில் ஆஜரானவுடன் எனக்கும் அச்சுறுத்தல்கள் வந்தன. என் வீட்டு மாடியில் துப்பாக்கியால் சுடப்பட்டது. அப்போது அதை நான் வெளியில் சொல்லவில்லை. வழக்கு விசாரணை பாதிப்பின்றி நடைபெற வேண்டும் என அமைதியாக இருந்துவிட்டேன் என்றும் சீனிவாசன் குறிப்பிட்டார்.

Posted in 147 (unlawful assembly with deadly weapons), 341 (wrongful restraint), ADMK, Agriculture University, AIADMK, All India Anna Dravida Munnetra Kazhagam, Capital punishment, Cassettes, CBCID, Coimbatore, Courts, D. Krishna Raja, Death Sentence, Dharmapuri, Dr J Jeyalalitha, Dr. J Jayalalitha, IPC 302 (murder), IPC 307 (attempt to murder), J Jayalalitha, JJ, Judge, Justice, Kodaikanal Pleasant Stay Hotel, Kokilavani, Kovai, Law, Madhu, Mob, Muniappan, Nedunchezhian, News Broadcast, Order, Police, Politics, Prevention of Destruction, Proof, Public Property, Ravindran, Salem, Sections 188 (disobedience to the order duly promulgate, Sun TV, T. K. Rajendran, Tamil Nadu, Tamil Nadu Agricultural University, trial, TV, union secretary, video, Violence, Women | Leave a Comment »

Kasthuriraja’s ‘Ithu Kaathal Varum Paruvam’ should be banned from public screening due to Sexy Scenes

Posted by Snapjudge மேல் திசெம்பர் 9, 2006

“இது காதல் வரும் பருவம்’ படத்துக்கு தடை விதிக்கக்கோரி ஆர்ப்பாட்டம்

சேலம், டிச. 10: “இது காதல் வரும் பருவம்’ என்ற திரைப்படத்தைத் தடை செய்ய வேண்டும் என வலியுறுத்தி சேலத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர். படத்தின் சுவரொட்டிகள் எரிக்கப்பட்டன.

கஸ்தூரிராஜா இயக்கத்தில் உருவான “இது காதல் வரும் பருவம்’ படத்தில் நடிகை கிரண் மற்றும் புதுமுக நடிகர், நடிகையர் நடித்துள்ளனர். இப் படத்தில் வரும் காட்சிகள் ஆபாசமாக இருப்பதாகவும், மாணவ, மாணவியரிடையே தவறான போக்கை உருவாக்கும் எனக்கூறியும் படத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

இந் நிலையில், அப் படத்துக்கு தடை விதிக்கக்கோரி சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் இந்தய ஜனநாயக இளைஞர் சங்கத்தினர் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

சங்க மாநகரத் தலைவர் பிரவீன்குமார் தலைமை வகித்தார். ஜனநாயக மாதர் சங்கச் செயலர் ஞானசெüந்தரி, சிஐடியூ மாவட்ட துணைச் செயலர் ராஜ், முற்போக்கு எழுத்தாளர் சங்க மாவட்டச் செயலர் அசோகன், இளைஞர் சங்க மாவட்டக்குழு உறுப்பினர் பாரதிகண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Posted in Ban, Extramarital, Flesh, Glamor, Intercourse, Ithu Kathal varum Paruvam, Kasthoori raja, Kasthuri Raja, Pictures, Relationships, Salem, Sex, Tamil Cinema, Tamil Movie, Young, Youth | Leave a Comment »

Mayors announced by M Karunanidhi

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 25, 2006

சென்னை மேயர் மா.சுப்பிரமணியம்: கருணாநிதி அறிவிப்பு 

சென்னை, மதுரை, நெல்லை, சேலம் ஆகிய நான்கு மாநகராட்சி மேயர், துணை மேயர் பெயர் விவரங்களை முதல்-அமைச்சர் கருணாநிதி இன்று மதியம் அறிவித்தார்.

அதன் விவரம் வருமாறு:-

சென்னை

மேயர்-மா.சுப்பிரமணியம்
துணை மேயர்-ஆர்.சத்தியபாமா

மதுரை
மேயர்-தேன்மொழி கோபிநாதன்
துணை மேயர் – பி.எம்.மன்னன்

நெல்லை
மேயர்-ஏ.எல். சுப்பிரமணியம்
துணை மேயர்-கா.முத்துராமலிங்கம்

சேலம்
மேயர்-ரேகா பிரியதர்ஷினி
துணை மேயர்-பி.பன்னீர் செல்வம்

கோவை
துணை மேயர்-ந.கார்த்திக்

திருச்சி
துணை மேயர்-மு.அன்பழகன்

Posted in candidates, Chennai, civic elections, Coimbatore, Deputy Mayors, DMK, Kovai, Local Body Polls, M Karunanidhi, Madras, Madurai, Mayors, Nellai, Salem, Tamil Nadu, Thiruchirappalli, Thirunelveli, Trichy | 1 Comment »

DMK & Congress(I) negotiations continue for Mayor candidate Election

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 23, 2006

மாநகராட்சி மேயர் பதவி: திமுக – காங். போட்டி

சென்னை, அக். 23: தமிழகத்தில் உள்ள 6 மாநகராட்சிகளில் மேயர் பதவிகளை ஒதுக்குவது தொடர்பாக திமுக – காங்கிரஸ் இடையே பலத்த போட்டி நிலவுகிறது.

சென்னை, மதுரை, கோவை, திருச்சி, திருநெல்வேலி, சேலம் ஆகிய 6 மாநகராட்சிகளிலும் திமுக கூட்டணியே வெற்றி பெற்றுள்ளது.

இதில் 4 மேயர் பதவிகள் திமுகவுக்கும் 2 மேயர் பதவிகள் காங்கிரஸýக்கும் என தேர்தலுக்கு முன் நடந்த பேச்சுவார்த்தையில் முடிவானது. இருப்பினும் எந்த மாநகராட்சி யாருக்கு என்பதை தேர்தலுக்குப் பிறகு தீர்மானிக்கலாம் என்று இரு கட்சிகளும் ஒப்புக்கொண்டன.

ஆனால் தற்போது எந்த இரு இடங்களை காங்கிரஸýக்கு ஒதுக்குவது என்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

நகராட்சி, பேரூராட்சி, மாவட்ட ஊராட்சி, ஊராட்சி ஒன்றியங்கள் ஆகியவற்றின் தலைவர் பதவிகளிலும் யாருக்கு எந்த ஊர் என்பது தேர்தலுக்குப் பின்னர்தான் முடிவு செய்யப்பட்டது. ஆனால் மேயர் பதவியில் மட்டும் யாருக்கு எந்த இடம் என்பதை முடிவு செய்வதில் இழுபறி நீடிக்கிறது.

சென்னையில் திமுக 90 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. எனவே, சென்னையில் திமுகவைச் சேர்ந்தவரே மேயராகத் தேர்ந்தெடுக்கப்படுவது உறுதியாகிவிட்டது.

இதுபோல் மதுரை மாநகராட்சியிலும் திமுவைச் சேர்ந்தவரே மேயராகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார். எஞ்சியுள்ள 4 இடங்களில் 2 காங்கிரஸýக்கு ஒதுக்கவேண்டும். திருச்சி, கோவை மேயர் பதவிகள் காங்கிரஸýக்கு ஒதுக்கப்படும் என்று கூறப்பட்டது. ஆனால் இந்த இரு இடங்களையும் உள்ளூர் திமுகவினர் கோரி வருகின்றனர்.

இது தொடர்பாக 4 நாள்களாக பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது.

கோவையில் திமுக தனிப் பெரும்பான்மை: எல்லா மாநகராட்சிகளிலும் திமுக வலுவான வெற்றி பெற்றுள்ளது. குறிப்பாக திருச்சி, கோவை மாநகராட்சிகளிலும் திமுக கவுன்சிலர்கள் அதிக அளவில் வெற்றி பெற்றுள்ளதால் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இன்னும் சொல்லப்போனால் கோவையில் திமுக தனிப் பெரும்பான்மை பெற்றுள்ளது. எனவே உள்ளூர் திமுகவினர் கோவை மேயர் பதவி வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளனர்.

சேலம், திருநெல்வேலியை காங்கிரஸýக்கு ஒதுக்கலாம் என்றும் திமுகவினர் யோசனை தெரிவிக்கின்றனர். ஆனால் அதை காங்கிரஸ் ஏற்க மறுக்கிறது.

இந்நிலையில் இறுதி முடிவு எடுக்கும் பொறுப்பு கூட்டணித் தலைவர் கருணாநிதியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கூட்டணி வட்டாரங்கள் தெரிவித்தன.

இதற்கிடையே மேயர், நகராட்சித் தலைவர் தேர்தலில் ஒற்றுமையுடன் செயல்படவேண்டும். தனிப்பட்ட முறையில் எத்தனை இடங்கள் கிடைத்துள்ளன என்பதை கணக்கில் கொள்ளாமல் கூட்டணிக் கட்சிகளின் சார்பில் நிறுத்தப்பட்டுள்ள அனைத்து வேட்பாளர்களின் வெற்றிக்கும் அனைவரும் பாடுபடவேண்டும் என்று திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள தலைவர்கள் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

Posted in Alliance, candidate, Chennai, Civic, Coimbatore, Congress(I), DMK, Elections, Local Body, Madurai, Mayor, negotiations, Polls, Salem, Thirunelveli, Trichy | Leave a Comment »