மும்பை குண்டு வெடிப்பை செயல்படுத்த பாகிஸ்தான் உளவு அமைப்பு ரூ.20 லட்சம் நிதி உதவி: ஹவாலா மூலம் பணபரிமாற்றம்
மும்பை, அக். 3-
மும்பையில் கடந்த ஜுலை மாதம் 11-ந் தேதி மின்சார ரெயில்களில் குண்டு வெடித்தது. இந்த குண்டு வெடிப்பில் 200-க் கும் மேற்பட்ட அப்பாவி பொதுமக்கள் பலியானார்கள்.
இந்தியாவையே அதிர்ச் சிக்குள்ளாக்கிய இந்த குண்டு வெடிப்புக்கு லஷ்கர்- இ-தொய்பா தீவிரவாத அமைப்பு தான் காரணம் என்று கூறப்படுகிறது. மும்பை குண்டு வெடிப்பு குறித்து மத்திய அரசின் தீவிரவாத எதிர்ப்புப் புலனாய்வு படை விசாரித்து வருகிறது.
இந்த நிலையில் குண்டு வெடிப்பு சதி நிகழ்த்து வதற்காக பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. ரூ.20 லட்சம் நிதி உதவி அளித் ததாகவும் அதை பாகிஸ்தானில் உள்ள லக்ஷர்-இ-தொய்பா அமைப்பின் கமாண்டர் ஒரு வரிடம் கொடுத்தனுப்பிய தாகவும் விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து ஏ.டி.எஸ்.தலைமை அதிகாரி கே.பி.ரகு வன்சி கூறியதாவது:-
“ஐ.எஸ்.ஐ. அமைப்பு குண்டு வெடிப்பு சதிகாரர்களுக்கு நிதி உதவி அளித்ததற்கான ஆதாரங்கள் சிக்கி உள்ளன. 20 லட்சம் என்பது சிறிய தொகையாகத் தோன்றினாலும் மொத்தம் செலவிழிக்கப்பட்ட தொகையில் இது 10 சதவீதம் மட்டுமே குண்டு வெடிப்பை நிகழ்த்தும் சம்பவத்திற்கு மட்டுமே இந்தத் தொகை மற்றபடி அதற்கான திட்டமிடுதல் தகவல் தொடர்பு போன்றவற்றிற்குதான். மீத முள்ள 90 சதவீத பணத்தை செலவழித்துள்ளனர் என்றார்.
20 லட்சத்தை ஹவாலா ஏஜெண்டுகள் மூலம் சவுதி அரேபியன் ரியல் ஸாக தீவிரவாதிகளின் கைகளுக்கு ஐ.எஸ்.ஐ. கொண்டு சென்றதாகவும், குண்டு வெடிப்பு சதிகாரர் களுக்கு ஐ.எஸ்.ஐ. பயிற்சி அளித்ததாகவும் விசாரணை யில் போலீஸ் கமிஷனர் ஏ.என்.ராய் தெரிவித்தார்.
குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள பைசல் சேக்கிடம் நடத்தப்பட்ட விசாரணையில் மேற்கண்ட தகவல் வெளியாகி உள்ளன.