கேரளாவில் பரபரப்பு: புத்தரைப் போன்ற ஏசு கிறிஸ்து சிலை
கொல்லம், ஜன.26-
கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் பரிமனம் கிரா மத்தில் கத்தோலிக்க கிறிஸ் தவர்களின் தேவாலயம் ஒன்று உள்ளது. இங்குள்ள ஜெபக்கூடத்தில் போதி மரத்தடியில் புத்தர் தியானம் செய்வது போல ஏசு கிறிஸ் துவின் சிலை வைக்கப்பட்டுள்ளது.
மேலும் வலது கையால் யோகா முத்திரையைக் காட்டுவது போலவும், இடது கையை தொடையில் வைத்த படியும் சிலை வடிவமைக் கப்பட்டுள்ளது.
அந்த ஜெபக்கூடத்தில் ஏசு தனது 12 சீடர்களுக்கு அளிக்கும் கடைசி விருந்தானது நமது இந்திய கலாசராப்படி நடப்பது போல ஓவியம் வரையப்பட்டுள்ளது. அதில் 12 சீடர்களும் ஏசுவின் முன்பு தரையில் அமர்ந்து வாழை இலையில் சாப்பிடுவது போல வரைந்துள்ளனர்.
“ஜெகத் ஜோதி மந்திர்” என்று பெயரிடப்பட்டுள்ள அந்த ஜெபக்கூட்டத்தில் “ஆம் ஏசு கிறிஸ்துவே நமஹா” என்று கொட்டை எழுத்துக்களில் எழுதப்பட்டுள்ளது. ஏசு சிலை முன்பு 2 பெரிய குத்து விளக்கு வைக்கப்பட்டுள்ளது. முழுக்க இந்திய கலாசாரப்படி இந்த ஜெபக்கூடம் அமைக் கப்பட்டுள்ளதாக கொல் லத்தை சேர்ந்த பாதிரியார் ரோமன்ஸ் ஆன்டனி தெரி வித்தார்.
புத்தர் போல ஏசு சிலை வடிவமைக்கப்பட்டிருப்பதற்கு கேரளாவில் உள்ள சில கிறிஸ்துவ அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்தநிலையில் அந்த ஜெபக்கூட்டத்தை இன்று பிஷப் ஸ்டான்லி ரோமன் திறந்து வைத்தார்.