2007-ஆம் ஆண்டின் முக்கிய நிகழ்வுகள்
தமிழகம்
ஜன.16: தமிழகப் பள்ளிகளில் மாணவர்களை பிரம்பால் அடிக்கும் சட்டம் நீக்கம்.
பிப்.4: காவிரி நடுவர் மன்றம் இறுதித் தீர்ப்பு வெளியீடு. இதன்படி ஆண்டுதோறும் 419 டிஎம்சி தண்ணீரை தமிழகத்துக்கு திறந்துவிட வேண்டும். கர்நாடகத்துக்கு 270 டிஎம்சி ஒதுக்கீடு. கேரளத்துக்கு 30 டிஎம்சி தண்ணீர், புதுச்சேரிக்கு 7 டிஎம்சி தண்ணீர் ஒதுக்கப்பட்டது. எஞ்சியுள்ள தண்ணீர் சுற்றுச் சூழல் பாதுகாப்புக்கு பயன்படுத்த உத்தரவு.
பிப்.16: சென்னை மாநகராட்சி தேர்தலில் திமுக கூட்டணியின் அனைத்து உறுப்பினர்களும் வெற்றி. மொத்தமுள்ள 154 வார்டுகளுக்கான தேர்தலில் திமுகவின் கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ் (37) பா.ம.க (17),, இந்தியக் கம்யூ னிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலா 2 இடங்களைப் பிடித்தன.
மார்ச்.5: தமிழகத்தில் பொறியியல், மருத்துவக் கல்லூரிகளுக்கான நுழைவுத் தேர்வுகளை ரத்து செய்யும் மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்.
மார்ச்.31: பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு உச்சநீதிமன்றம் விதித்த தடையாணைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டம்.
மே 11: தமிழக முதல்வர் கலைஞர் சட்டப் பேரவையில் 50 ஆண்டுகள் பணியாற்றியதற்குப் பாராட்டு.
மே 13: மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் தயாநிதி மாறன் ராஜிநாமா.
மே 18: திருச்செந்தூர் மக்களவை உறுப்பினர் ராதிகா செல்வி, மத்திய உள்துறை இணையமைச்சராக பதவி ஏற்பு.
ஜூன் 3: சென்னையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் விதிகளை மீறி கட்டப்பட்ட பகுதிகளை இடிப்பது குறித்து சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் நோட்டீஸ்.
ஜூன்.8: முதல்வர் கலைஞரின் மகள் கனிமொழி, மாநிலங்களவை உறுப்பினராக போட்டி யின்றி தேர்வு.
ஜூன்.29: மதுரை மேற்கு தொகுதிக்கு நடைபெற்ற இடைத் தேர்தலில் திமுக கூட்டணிக் கட்சி வேட்பாளர் கேஎஸ்கே ராஜேந்திரன் வெற்றி.
ஜூலை.2: பலத்த எதிர்ப்புகளுக்கிடையே அமெரிக்க அணுசக்தி போர்க்கப்பல் “நிமிட்ஸ்’, சென்னைத் துறைமுகம் வருகை.
ஜூலை 5: தமிழகத் தில் 6 மாநகராட்சி களில் 11 மாலை நேர நீதிமன்றங் கள் தொடக் கம்.
ஜூலை 15: கல்விக் கண் திறந்த காம ராஜரின் 105வது பிறந்த நாளைக் கொண்டாடும் வகையில் தமிழ கத்தில் உள்ள அனைத்து பள்ளி களும் ஞாயிற்றுக்கிழமை செயல்பட்டன.
ஜூலை 30: பல்வேறு தரப்பிலிருந்து ஏற்பட்ட எதிர்ப்புகளால் திருநெல்வேலி மாவட்டம் சாத்தான்குளத்தில் டாடா குழுமத்தின் டைட்டானியம் டை ஆக்ஸைடு ஆலை தொடங்கும் பணிகளை நிறுத்திவைப்பதாக முதல்வர் அறிவிப்பு.
ஆக. 13: சென்னை சேப்பாக்கம் சட்டப் பேரவைத் தொகுதியின் பெயர் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டப்பேரவைத் தொகுதி எனப் பெயர் மாற்றம்.
ஆக.18: சென்னையில் மத்திய செம்மொழி மையத்தை மத்திய மனிதவளத்துறை அமைச்சர் அர்ஜுன்சிங் தொடங்கிவைப்பு.
அக்.1: வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்ததால், திமுக மற்றும் அதன் தோழமைக் கட்சியினர் தமிழகம் முழுவதும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர்.
அக்.14: கல்லிடைக்குறிச்சி அருகே பொட்டல் கிராமத்தில் கோவில் கோபுரம் சரிந்து விழுந்ததில் 14 பேர் உயிரிழந்தனர்.
நவ.1: புதிதாக தொடங்கப்பட்ட சேலம் ரயில்வே கோட்டத்தை மத்திய ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் தொடங்கி வைத்தார்.
நவ.19: திருவான்மியூர் வேளச்சேரி இடையிலான பறக்கும் ரயில் சேவை தொடங்கி வைப்பு.
டிச.6: தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் 3 அஇஅதிமுகவினருக்கு வழங்கப்பட்ட மரண தண்டனையை சென்னை உயர்நீதி மன்றம் உறுதி செய்தது.
இந்தியா
ஜன.4: வரும் கல்வியாண்டிலிருந்து பிற்படுத்தப்பட்ட வகுப்பி னருக்கு (ஒபிசி) அய்அய்டி மற்றும் அய்அய் எம் உள்ளிட்ட உயர் கல்வி நிறுவனங்களில் 27 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கும் மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் ஒப்புதல்.
ஜன.10: 2005ம் ஆண்டு கேள்வி கேட்க லஞ்சம் பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களை பதவி நீக்கம் செய்யும் அதிகாரம் நாடாளுமன்றத்துக்கு உண்டு என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு.
ஜன.11: அரசமைப்புச் சட்டத்தில் 9வது அட்டவணையில் குறிப்பிட்ட பிரிவினரைச் சேர்ப்பதை சட்ட விதிகளின்கீழ் விசாரிக்கலாம் என உச்ச நீதிமன்றம் அறிவிப்பு.
பிப்.5: பெப்சிகோ நிறுவனத் தலைமை நிர்வாக அதிகாரியாக அமெரிக்க வாழ் இந்தியப் பெண் இந்திரா நூயி தேர்வு.
மார்ச்.16: சொத்துக் குவிப்பு வழக்கில் உத்தரப்பிரதேச முன் னாள் முதல்வர் முலாயம் சிங் யாதவின் மகனும் நாடாளுமன்ற உறுப்பினருமான அகிலேஷ் யாதவ் எழுதிய கடிதம் காரணமாக அந்த வழக்கை விசாரிக்க நீதிபதி ஏ.ஆர். லட்சுமணன் மறுப்பு.
மார்ச்.29: உயர் கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்ட வகுப் பினருக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கும் அரசின் முடிவுக்கு உச்ச நீதிமன்றம் தடை.
ஏப்.23: பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு உயர் கல்வி நிறுவனங்களில் 27 சத ஒதுக்கீடு அளிக்கும் அரசின் முடிவுக்கு அளிக்கப்பட்ட தடையை நீக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு.
மே.11: அய்தராபாதில் உள்ள மெக்கா மசூதியில் பிரார்த்தனை நடந்தபோது ஏற்பட்ட குண்டு வெடிப்பில் 13 பேர் பலி.
ஜூன்.6: எதிர்க்கட்சித் தலைவர்கள் முலாயம் சிங் தலைமையில் ஜெயலலிதா உள்ளிட்ட தலைவர்கள் ஹைதராபாதில் மூன்றாவது அணி அமைப்பது குறித்து பேச்சு.
ஜூலை.8: போர்ச்சுகல்லைச் சேர்ந்த தன்னார்வ நிறுவனம் நடத்திய கருத்துக் கணிப்பில் இந்தியாவின் தாஜ்மகால் உலக அதிசயங்களில் இடம்பெற்றது.
ஜூலை.21: இந்தியாவின் முதலாவது பெண் குடியரசுத் தலைவராக பிரதீபா பாட்டில் தேர்வு.
ஆக.10: இந்தியாவின் 13-ஆவது குடியரசு துணைத் தலைவராக முகம்மது ஹமீத் அன்சாரி தேர்வு.
ஆக.13: பாகிஸ்தான் சிறையிலிருந்த 140 இந்தியர்களை சுதந்திர தினத்தை முன்னிட்டு பாகிஸ்தான் அரசு விடுவித்தது.
ஆக.22: 13 ஆண்டுகளுக்கு முன் தனது உதவியாளரைக் கொன்ற வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற முன்னாள் மத்திய அமைச்சர் சிபு சோரன் விடுவிப்பு.
செப்.2: டிடிஎச் சேவைக்கு உதவும் இன்சாட்4சிஆர் செயற்கைக் கோள் சிறீஹரிகோட்டாவிலிருந்து வெற்றிகரமாக ஏவப்பட்டது.
அக்.14: குஜராத்தில் உள்ள மகாகாளி ஆலயத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 11 பக்தர்கள் சாவு.
அக்.29: “தலையில்லாக் கோழிகள்’ என விமர்சித்ததற்காக இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் ரோனன் சென், மக்களவை உரிமைக்குழு முன் ஆஜராகி நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்பு.
நவ.7: பெங்களூர் மருத்துவர்கள் கூடுதல் கால், கைகளுடன் பிறந்த குழந்தை லட்சுமிக்கு 27 மணி நேரம் அறுவை சிகிச்சை செய்து அவற்றை வெற்றிகரமாக வெட்டியெடுத்தனர்.
நவ.25: மலேசியாவில் வாழும் இந்திய மரபுவழியினர் தாங்கள் புறக்கணிக்கப்படுவதைக் கண்டித்து நடத்திய பேரணியில் 20 ஆயிரம்பேர் பங்கேற்பு.
நவ.26: கர்நாடகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒப்புதல்.
நவ.29: மகாராஷ்டிர அரசு புதிய நகர்ப்புற நில உச்சவரம்பு சட்டத்தைக் கொண்டு வந்தது.
இதன்படி தனிநபர் 500 சதுர மீட் டருக்கு மேல் நிலம் வைத்திருக்கக் கூடாது.
டிச.11: அமெரிக்கப் பாணியில் தில்லியை அடுத்த குர்காவ்னில் 14 வயது பள்ளி மாணவர்கள் இருவர் சக மாணவரை சுட்டுக் கொன்றனர்.
டிச.16: சத்தீஸ்கர் மாநிலம் தன்டேஸ்வரா பகுதியில் உள்ள சிறையில் தாக்குதல் நடத்தி தங்களது சகாக்கள் 377 பேரை நக்சலைட்டுகள் மீட்பு.
டிச.25: குஜராத் முதல்வராக நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பதவியேற்பு.
உலகம்
ஜன.1: அய்ரோப்பிய யூனியனில் பல்கேரியா, ருமேனியா சேர்ந்தது.
அய்க்கிய நாடுகளின் பொதுச் செயலராக தென் கொரியாவின் பான் கி மூன் தேர்வு.
ஜன.11: வங்கதேசத்தில் நெருக்கடி நிலை பிரகடனம். இரவு நேர ஊரடங்கு அமல்.
விண்வெளியில் சுற்றிவரும் செயற்கைக் கோள்களை அழிக்கவல்ல ஏவுகணை சோதனையில் சீனா வெற்றி.
மார்ச் 26: தமிழீழ விடுதலைப் புலிகளின் தற்கொலைப் பிரிவு ராணுவ முகாம் மீது நடத்திய தாக்குதலில் 4 இலங்கை வீரர்கள் பலி.
மார்ச்.31: புவி வெப்பமடைவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த சிட்னி, ஆஸ்திரேலியாவில் இரவு 7.30 மணி முதல் 8.30 மணி வரை மின்சாரத்தை அணைத்தனர்.
ஏப்.2: சாலமன் தீவுகளில் 8 புள்ளி ரிக்டர் அளவுக்கு கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதையடுத்து சுனாமி ஏற்பட்டு அரு கிலுள்ள தீவுகளைத் தாக்கியது.
ஏப்.3: தெற்காசிய நாடுகள் கூட்டமைப்பின் மாநாடு புது தில்லியில் தொடங்கியது. இக்கூட்டமைப்பில் 8வது உறுப்பு நாடாக ஆப்கனிஸ்தான் இணைக்கப்பட்டது.
ஏப்.24: யாழ்ப்பாணத்தில் உள்ள விமான தளம் மீது விடுத லைப்புலிகள் விமானம் மூலம் தாக்குதல் நடத்தியதில் 6 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.
ஏப்.29: இலங்கையின் எண்ணெய் சேமிப்பு கிடங்கில் புலிகள் விமானம் மூலம் தாக்குதல் நடத்தினர்.
மே 5: கென்ய பயணிகள் விமானம் கேமரூன் அருகே அடர்ந்த காட்டில் விழுந்து நொறுங்கியதில் 15 இந்தியர்கள் உள்பட 114 பேர் பலி.
மே 6: பிரான்ஸ் அதிபர் தேர்தலில் நிகோலஸ் சகோஸி வெற்றி.
மே 24: இலங்கையில் விடுதலைப் புலிகள் மேற்கொண்ட கடற்படைத் தாக்குதலில் 35 வீரர்கள் கொல்லப்பட்டனர்.
ஜூன் 8: கொழும்பு நகரிலிருந்து தமிழர்கள் கட்டாயமாக வெளியேற்றப்படுவதற்கு இலங்கை உச்ச நீதிமன்றம் தடை விதித்தது.
ஜூன் 22: 195 நாள் விண்வெளி பயணத்துக்குப்பிறகு அமெரிக்க வாழ் இந்திய வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்ட விண்வெளி வீரர்களுடன் அட்லாண்டிஸ் விண்கலம் கென்னடி விமான தளத்தில் பத்திரமாக தரையிறங்கியது.
ஜூன் 24: 1980ம் ஆண்டு லட்சத்து 80 ஆயிரம் குர்து இன மக்கள் படுகொலைக்குக் காரணமானவர் எனக்கூறி சதாம் ஹுசை னின் உறவினர் கெமிக்கல் அலி மற்றும் 2 பேருக்கு இராக் நீதி மன்றம் மரண தண்டனை விதித்தது.
ஜூன் 27: இங்கிலாந்து பிரதமர் பதவியிலிருந்து டோனி பிளேர் ராஜிநாமா. தொழிலாளர் கட்சியின் தலைவர் கார்டன் பிரவுனை பிரதமராக்க பிரிட்டிஷ் மகாராணி எலிசபெத் ஒப்பு தல்.
ஜூலை 10: பாகிஸ்தானில் உள்ள லால் மஸ்ஜித்தினுள் நுழைந்த பயங்கரவாதிகளுடன் 14 மணி நேரம் போராடி ராணுவம் மீட்டது. இதில் 8 கமாண்டோக்கள் உள்பட 60 பேர் கொல்லப்பட்டனர்.
ஜூலை 21: சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை மிகவும் பரபரப்பாக பேசப்படும் ஹாரிபாட்டர் நாவலின் 7வது தொகுதி உலகெங்கும் வெளியானது.
வழக்கமான மருத்துவ சிகிச்சைக்கு அதிபர் புஷ் சென்ற போது இரண்டரை மணி நேரத்துக்கு அதிபர் பதவியை துணை அதிபர் டிக் செனி வகித்தார்.
ஆக.16: பெருவில் ஏற்பட்ட கடுமையான நில நடுக்கம் காரணமாக 337 பேர் உயிரிழந்தனர்.
செப்.10: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் 7 ஆண்டுகள் வெளிநாடுகளில் தங்கியிருந்துவிட்டு நாடு திரும்பினார். ஆனால் விமான நிலையத்திலேயே அவர் கைது செய்யப்பட்டு சவூதி அரேபியாவுக்கு அனுப்பப்பட்டார்.
செப்.24: கடந்த 20 ஆண்டுகளாக மியான்மரில் நடைபெற் றுவரும் ராணுவ ஆட்சியைக் கண்டித்து புத்த பிக்குகள் உள்றபட லட்சக்கணக்கானோர் பிரம்மாண்ட ஆர்ப்பாட்டம் நடத்தி னர்.
அக்.10: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பேநசீர் புட்டோ, நாடு திரும்பியபோது தற்கொலைப்படையினர் நிகழ்த்திய தாக்குதலில் 139 பேர் கொல்லப்பட்டனர்.
அக்.22: முதல் முறையாக தமிழீழ விடுதலைப் புலிகள் தரை வழி மற்றும் வான்வழி தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் 10 பேர் உயிரிழந்தனர். இலங்கை ராணுவம் பெருமளவு ஆயுதங்களை விட்டு தப்பி ஓட் டம்.
அக்.23: அமெரிக்காவின் லூஸியானா மாகாண கவர்னராக அமெரிக்க வாழ் இந்தியர் பாபி ஜிண்டால் தேர்வு செய் யப்பட்டார்.
நவ.2: இலங்கை ராணுவம் நடத்திய விமானப்படைத் தாக் குதலில் விடுதலைப்புலிகள் அரசியல் பிரிவு ஆலோசகர் சுப.
தமிழ்ச்செல்வன் சாவு.
நவ.3: பாகிஸ்தானில் நெருக்கடி நிலையை அதிபர் முஷாரப் கொண்டு வந்ததோடு, உச்சநீதிமன்ற நீதிபதியையும் பதவி நீக்கம் செய்தார்.
நவ.15: வங்கதேசத்தில் சிடார் சூறாவளி தாக்கியதில் 3,300 பேர் பலி.
நவ.24: ஆஸ்திரேலிய பிரதமராக கெவின் ருட் வெற்றி.
நவ.28: தற்கொலைப்படைத் தாக்குதலில் இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உயிர் தப்பினார்.
டிச.3: ரஷிய நாடாளுமன்றத் தேர்தலில் அதிபர் புதினின் கட்சி அபார வெற்றி.
பாகிஸ்தானில் ஜன.8ம் தேதி நடைபெற உள்ள பொதுத் தேர்தலில் போட்டியிட முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீபுக்கு தேர்தல் ஆணையம் தடை.
டிச.10: அமெரிக்கத் துணை அதிபர் அல்கோர் மற்றும் இந்திய விஞ்ஞானி ராஜேந்திர பச்சோரி ஆகியோருக்கு அமை திக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.
டிச.27: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பேநசீர் புட்டோ, தீவிரவாதி களால் சுட்டுக் கொலை.