திருகோணமலை சம்பூரை இராணுவம் கைப்பற்றியதற்கு இலங்கை அரசு விளக்கம்
![]() |
![]() |
பொருளாதார இலக்குகள் மீதான அச்சுறுத்தலே காரணம் – இலங்கை அரசு |
இராணுவ ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த சம்பூர் பிரதேசத்தை அரச படைகள் விடுதலைப் புலிகளிடம் இருந்து கைப்பற்றியதற்கு அப்பகுதியில் புலிகள் நிலைகொண்டிருப்பதால் திருகோணமலை இயற்கைத் துறைமுகத்திற்கும், அதனை அண்டியுள்ள பிரிமா மா ஆலை, டோக்கியோ சிமெண்ட் மற்றும் இந்திய எண்ணைய்க் குதங்கள் போன்ற வெளிநாட்டு பொருளாதார முதலீட்டுக்கேந்திர மையங்களிற்கும் நிலவி வந்த ஆர்டிலரி தாக்குதல் அச்சுறுத்தலை இல்லாமல் செய்வதே முக்கிய காரணம் என்று இலங்கை அரசு இன்று மீண்டும் தெரிவித்திருக்கிறது.
அத்துடன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ அவர்கள், சமாதான முயற்சிகள் அடுத்தகட்டத்தை நகருவதற்கு முன்பாக சம்பூரைக் கைப்பற்ற வேண்டியதன் தேவை குறித்து இலங்கைக்கு உதவி வழங்கும் நாடுகளின் இணைத்தலைமை நாடுகளிற்கு ஏற்கனவே எடுத்துக்கூறியிருந்தார் என்றும் அரச தரப்பில் இன்று விளக்கம் அளிக்கப்பட்டிருக்கிறது.
தேசிய பாதுகாப்பிற்கான ஊடக மத்திய நிலையத்தில் இன்று பத்திரிகையாளர் மாநாட்டில் உரையாற்றிய திட்ட அமுலாக்கல் அமைச்சரும், பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளருமாகிய கெஹெலிய ரம்புக்வெல்ல இதனை தெரிவித்தார்.