ஆபாசபாடலுக்கு தடை; `ஆவணித்திங்கள்’ படத்துக்கு தணிக்கை குழு எதிர்ப்பு
புதுமுக நடிகர் ஸ்ரீகுமார் கதாநாயகனாக நடித்துள்ள படம் ஆவணித் திங்கள். இதில் தேஜினி, மதுஷா என இரு கதா நாயகிகள். ஹரிகிருஷ்ணா கதை, திரைக்கதை, வசனம் எழுதி இப் படத்தை இயக்கி யுள்ளார்.
இந்த படத்துக்கான படப் பிடிப்பு முடிந்துள்ளது. படத்தை வருகிற 17-ந்தேதி ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர் ராஜாராம்ரெட்டி முடிவு செய்தார். இதையடுத்து ஆவ ணித்திங்கள் படம் தணிக்கை குழுவுக்கு அனுப்பப்பட்டது.
படத்தை பார்த்த தணிக்கை குழு உறுப்பினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அதில் ஒரு பாடல் காட்சி மிகவும் ஆபாசமாக இடம் பெற்று இருந்தது.
திண்டுக்கல்லு பூட்டு திருப்பி போட்டு மாட்டு என்ற அந்த பாடலுக்கு லக்ஷா கவர்ச்சியாக நடனம் ஆட இருந்தார். பாடல் வரிகளும் நடனமும் ஆபாசமாக இருப்பதாக தணிக்கை குழுவினர் எதிர்த்தனர். பாடல் காட்சியை நீக்கும்படி வற்புறுத்தினர். அதற்கு டைரக்டரும்,தயாரிப்பாள ரும் சம்மதிக்கவில்லை. இதை யடுத்து வாக்குவாதம் ஏற்பட் டது. இறுதியாக பாடல்காட்சி முழுவதுமாக படத்தில் இருந்து நீக்கப்பட்டது.
அதன்பிறகு படத்துக்கு `யு’ சான்றிதழ் கொடுத்து வெளி யிட அனுமதித்தனர்.