Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Public Exam’ Category

Tamil Exam papers – Sample III

Posted by Snapjudge மேல் ஜனவரி 25, 2007

மாதிரி வினாத் தாள் மேல்நிலை இரண்டாம் ஆண்டு – பொதுத் தமிழ்: தமிழ் இரண்டாம் தாள்

(உரைநடை, துணைப் பாடம், செய்யுள் நயம் பாராட்டல், தமிழாக்கம், படைப்பாற்றல், மொழித்திறன்) (தொடர்ச்சி)

ஐய. பின்வரும் வினாக்களுள் ஒவ்வொன்றிற்கும் இரண்டு பக்கங்களுக்கு மிகாமல் விடை எழுதுக.

2*10 = 20

13. “பால்வண்ணம் பிள்ளை (அல்லது) “சட்டை’ கதையைக் கருப்பொருளும், சுவையும் குன்றாமல் சுருக்கி வரைக.

(அல்லது)

“ஓர் உல்லாசப் பயணம்’ (அல்லது) “பழிக்குப் பழி’ கதையில் வரும் ஏதேனும் ஒரு நிகழ்ச்சியை நாடகமாக வரைக.

14. “ஒவ்வொரு கல்லாய்’ (அல்லது) “மண்’ சிறுகதையில் நும் மனம் கவர்ந்த கதை மாந்தர் குறித்துத் திறனாய்வு செய்க.

(அல்லது)

ஒரு குடும்பத்தில் பொறுப்பான தந்தை, அன்பான தாய், நல்ல குழந்தைகள் அமைந்துள்ள சூழலைக் கருவாய் அமைத்து ஒரு கதை எழுதுக.

(அல்லது)

சுனாமியில் சிக்கி வழி தவறி வந்த குழந்தையை எடுத்து வளர்த்து ஆளாக்குவது போல் ஒரு கதை எழுதுக.

ய. 15. பின்வரும் செய்யுளைப் படித்துணர்ந்து அதில் அமைந்துள்ள மையக் கருத்தை நயத்துடன் எடுத்துரைத்து அதில் அமைந்துள்ள எதுகை, மோனை, இயைபு, முரண், அணி, சந்தச்சுவை, உவமை, உருவகம், கற்பனை ஆகியவற்றுள் ஏற்புடையவற்றைச் சுட்டி எழுதுக.

1*10 = 10

நீலவான் ஆடைக்குள் உடல்ம றைத்தே

நிலாவென்று காட்டுகின்றாய் ஒளிமு கத்தை!

கோலம்முழு தும்காட்டி விட்டால் காதற்

கொள்கையிலே இவ்வுலகம் சாமோ? வானச்

சோலையிலே பூத்தனிப் பூவோ நீதான்?

சொக்க வெள்ளிப் பாற்குடமோ? அதிக ஊற்றோ?

காலை வந்த இளம்பரிதி கடலில் மூழ்கிக்

கனல்மாறிக் குளிரடைந்த ஒளிப்பிழம்போ?

– கவிஞர் பாரதிதாசன்

யஐ. பின்வருவனவற்றுள் எவையேனும் மூன்றனுக்கு மட்டும் தமிழாக்கம் தருக:

3*2 = 6

16. ஆஹழ்ந்ண்ய்ஞ் க்ர்ஞ்ள் ள்ங்ப்க்ர்ம் க்ஷண்ற்ங்.

17. உம்ல்ற்ஹ் ஸ்ங்ள்ள்ங்ப்ள்ம்ஹந்ங்ற்ட்ங்ம்ர்ள்ற்ய்ர்ண்ள்ங்.

18. ஏஹள்ற்ங் ம்ஹந்ங் ஜ்ஹள்ற்ங்.

19. ரட்ங்ழ்ங் ற்ட்ங்ழ்ங் ண்ள் ஜ்ண்ப்ப், ற்ட்ங்ழ்ங்ண்ள்ஹஜ்ஹஹ்.

20. அப்ப் ஸ்ரீர்ஸ்ங்ற், ஹப்ப் ப்ர்ள்ள்.

21. ஓண்ய்க்ய்ங்ள்ள் ஸ்ரீஹய்ய்ர்ற் க்ஷங்க்ஷர்ன்ஞ்ட்ற்.

யஐஐ. 22. பின்வரும் பழமொழிகளுள் ஒன்றினை விளக்கும் வகையில் வாழ்க்கை நிகழ்வில் அமைத்து (பத்து வரிகளில்) எழுதுக.

1*4 = 4

அ) உரிய காலத்தில் உதவும் நண்பனே உண்மையான நண்பன்

ஆ) சிறுதுளி பெருவெள்ளம்

இ) வருமுன் காத்தலே சிறந்தது

(அல்லது)

“எரிபொருள் சிக்கனம் தேவை’ (அல்லது) நல்ல நண்பன்’ என்ற தலைப்பில் சிந்தித்து உமது சொந்தப் படைப்பாகக் கவிதை ஒன்றை (எட்டு அடிகளுக்குக் குறையாது பத்து அடிகளுக்கு மிகாது) எழுதுக.

யஐஐஐ. பின்வரும் வினாக்களுக்கு அடைப்புக் குறிகளுக்குள் குறிப்பிடப்பட்டுள்ளவாறு விடை எழுதுக.

10*1 = 10

23. புலி வந்தன; எருதுகள் ஓடியது.

(வாக்கியப் பிழையைத் திருத்துக)

24. நெல்லிகாய், தான்றிகாய், கடுகாய் ஆகிய மூன்று சரக்குகளை கொண்டது திரிபலை எனப்படும்.

(தேவையான இடங்களில் வல்லின மெய்களை இட்டு எழுதுக).

25. அலை, அழை (அல்லது) ஆணி, ஆனி (பொருள் வேறுபாட்டை உணர்த்தும் வகையில் தனித்தனி வாக்கியங்களில் அமைத்து எழுதுக?)

26. டி.வி.யில் சீரியல் பார்க்காவிட்டால் லைஃபே போர் அடித்து விடும்’ என்கிறாள் பாட்டி.

(பிறமொழிச் சொற்களை நீக்கி இனிய தமிழில் எழுதுக)

27. சுபதினத்தில் கிருகப் பிரவேசம் முடித்த தம்பதிகள் அனைவரையும் உபசரித்தார்கள்.

(பிறமொழிச் சொற்கலப்பை நீக்கி நல்ல தமிழில் எழுதுக)

28. கோளிமுட்டை தாவாரத்தில் உருண்டது.

(கொச்சையான வழுஉச் சொற்களைத் திருத்தி எழுதுக)

29. நீரோச் சோறோ எதுக் கிடைத்தாலும் உண்டுச் செல்வேன்.

(தேவையற்ற இடங்களில் அமைந்த வல்லின மெய்களை நீக்கி எழுதுக.)

30. தோட்டத்தில் உள்ள வாழைச் செடி பார்க்க அழகாக உள்ளது.

(மரபு வழுவை நீக்கி எழுதுக)

31. பரவை இறையாகப் பயரு வகைகளைத் திண்ணும்.

(எழுத்துப் பிழைகளைத் திருத்தி எழுதுக)

32. ஊருக்குப் போய்ச் சேர்ந்ததும் கடிதம் எழுது என்று என் தந்தை சொன்னார்.

(பொருத்தமான நிறுத்தற்குறிகளை இட்டெழுதுக)

விடைகள் -கேள்வி எண் 16-21; 23-32

16. குரைக்கின்ற நாய் கடிக்காது

17. குறைகுடம் தளும்பும்

18. பதறிய செயல் சிதறும்

19. மனம் இருந்தால், மார்க்கமுண்டு

20. பேராசை பேரிழப்பு

21. அருளை வாங்க முடியாது

23. புலி வந்தது; எருதுகள் ஓடின.

24. நெல்லிக்காய், தான்றிக்காய், கடுக்காய் ஆகிய மூன்று சரக்குகளைக் கொண்டது திருபலை எனப்படும்.

25. அலை -கடல் அலை, அலைந்து திரிதல்

அழை -கூப்பிடு

ஆணி -கூரிய இரும்புத்துண்டு

ஆனி -ஒரு மாதம்

26. “தொலைக்காட்சியில் தொடர்களைப் பார்க்காவிட்டால் வாழ்க்கையே வெறுத்துவிடும்’ என்கிறாள் பாட்டி.

27. நன்னாளில் புதுமனை புகுவிழாவை முடித்த கணவன் மனைவியர் அனைவரையும் ஒப்பினார்கள்.

28. கோழி முட்டை தாழ்வாரத்தில் உருண்டது.

29. நீரோ சோறோ எது கிடைத்தாலும் உண்டு செல்வேன்.

30. தோட்டத்தில் உள்ள வாழைக்கன்று பார்க்க அழகாக உள்ளது.

31. பறவை இரையாகப் பயறு வகைகளைத் தின்னும்.

32. “”ஊருக்குப் போய்ச் சேர்ந்ததும் கடிதம் எழுது”, என்று என் தந்தை சொன்னார்.

Posted in Exam, Examinations, Genral Tamil, papers, Public Exam, Q&A, Questions | 22 Comments »