Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Process’ Category

Dinamalar ‘Andhumani’ Ramesh vs Dinakaran & Sun TV Uma – Saga, Sexual Harassment

Posted by Snapjudge மேல் ஜூலை 18, 2007

தினகரனுக்கு டிமிக்கி கொடுத்த அந்துமணி ரமேஷ்

Full Resignation letter Uma Dinakaran Dinamalar Ramesh andhumani lens mama imbroglio allegationசற்றுமுன்…: தினமலர் நிர்வாகி “அந்துமணி” ரமேஷ் மீது பாலியல் புகார்

சற்றுமுன்…: உமா நடத்தும் பித்தலாட்ட நாடகம் – “தினமலர்” சட்டபூர்வமாக சந்திக்கும்

சற்றுமுன்…: “அந்துமணி” ரமேஷ் பாலியல் புகார் – சன் செய்திகள் வீடியோ

‘Andhumani’ in Abusive SMS Scam « Views and Reviews

Dinamalar strikes back refuting alleged charges as false claims on political moves « Views and Reviews

சும்மா டைம் பாஸ் மச்சி…..: தினமலர் ரமேஷ் சார்!

ஓசை செல்லாவின் செக்ஸ் SMS புகழ் அந்துமணி … பா.கே.ப.ஓ!!

காசிப்ஸ்: தினமலர் – தினகரன் மோதல் பிண்ணனி!

எனக்கு தெரிந்தது…: தினமலர், தினகரன், சன் டிவி நிறுவனஊழியர்களிடம் ஓர் “”மறைமுக” நேர்காணல்…

PRINCENRSAMA: ிழிந்து தொங்கும் ‘அந்துமணி’ முகமூடி!

real_not_ reel: முதலாளிகள் பார்ப்பனர்களாக இருந்தால் அது பார்ப்பன பத்திரிகை என்று முத்திரை குத்துவதா?

சற்றுமுன்…: தினமலர் ரமேஷ் மீது கிரிமினல் வழக்கு பதிவு

——————————————————————————————-

பெண் நிருபருக்கு செக்ஸ் தொல்லை தினமலர் ரமேஷ் மீது நடவடிக்கை

மாதர்சம்மேளனம் இன்று ஆலோசனை

சென்னை, ஜூலை 17: தினமலர் நாளேட்டின் ஆசிரியர் இரா.கிருஷ்ணமூர்த்தியின் மகனும் அலுவலக நிர்வாகியுமான ரமேஷ் மீது கூறப்பட்டுள்ள பாலியல் குற்றச்சாட்டு பற்றி வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மகளிர் அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.
ரமேஷின் தொல்லை தாங்க முடியவில்லை
தினமலர் நாளிதழில் நிருபராக பணியாற்றிய உமா(28), அடையாறு காவல் நிலையத்தில் 13ம் தேதி ஒரு புகார் கொடுத்தார். அதில், ‘தினமலர் நாளிதழில் ஏழு ஆண்டுகளாக நிருபராக பணியாற்றினேன். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக என் செல்போனுக்கு ஆபாச எஸ்.எம்.எஸ். வந்து கொண்டே இருந்தது. தினமலர் நிர்வாகி ரமேஷ்தான் இவ்வாறு செய்துள்ளார். இவர் தினமலர் ஆசிரியர் இரா.கிருஷ்ணமூர்த்தியின் மகன். இவரதுRamesh Dinakaran Dinamalar Ramesh andhumani lens mama imbroglio allegation தொல்லை தாங்காமல்தான் 3 மாதம் முன்பு ராஜினாமா செய்தேன். இப்போது தனியார் மருத்துவமனையில் வேலை செய்கிறேன். இப்போது, Ôஉன்னையும் உன் குடும்பத்தையும் கஞ்சா வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்து விடுவேன். உயிருடன் கொளுத்தி விடுவேன்Õ என்று மிரட்டுகின்றனர். எனக்கு பாதுகாப்பு வேண்டும்’ என்று கூறியுள்ளார்.
பெண் ஊழியரை பத்திரிகை முதலாளியே பாலியல் ரீதியாக துன்புறுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தினமலர் ஆசிரியரின் மகன் ரமேஷ§க்கு மகளிர் அமைப்புகள் பலத்த கண்டனம் தெரிவித்துள்ளன. அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் உ.வாசுகி கூறியதாவது:

7 மணி தாண்டிய பின்
விதிமீறிய போலீஸ்
யாரோ கொடுத்த ஏதோ ஒரு புகார் என்ற பெயரில் உமாவையும், எஸ்.டி.டி. பூத்தில் பணியாற்றும் பெண்ணையும் இரவு நேரத்தில் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றுள்ளனர். இதுவே தவறானது. இரவு 7 மணிக்கு மேல் காவல் நிலையத்துக்கு பெண்களை அழைத்துச் செல்லக் கூடாது என்ற விதியை போலீசார் காற்றில் பறக்க விட்டுள்ளனர்.

பணியிடங்களில் பாலியல் துன்புறுத்தல்களை தடுப்பது தொடர்பாக உச்சநீதிமன்றம் சில வழிகாட்டுதல்களை அளித்துள்ளது. அதன் அடிப்படையில், பல அலுவலகங்களில் பாலியல் புகார் விசாரணைக் குழுக்கள் அமைக் கப்பட்டுள்ளன. சட்டப்படியான இந்த ஏற்பாட்டில் பத்திரிகை அலுவலகங்களுக்கு விதிவிலக்கு கிடையாது.
முதலாளியை யார் மிரட்ட முடியும்?

ஒரு பத்திரிகையின் நிர்வாகிக்கும், அந்த அலுவலகத்தில் பணியாற்றுபவர்களுக்கும் உமா கொலை மிரட்டல் விடுத்தார் என்ற குற்றச்சாட்டு நம்பும்படியாக இல்லை. எந்தவித பண பலமும், செல்வாக்கும் இல்லாத ஒரு பெண்ணால், ஒரு பத்திரிகையின் முதலாளியை எப்படி மிரட்ட முடியும்? உமா மீதான இத்தகைய குற்றச்சாட்டு ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.

7 வருடமாக எப்படி நீடித்தார்?
உமா மனநிலை சரியில்லாதவர் என்று தினமலர் நிர்வாகத்தின் பெயரில் பத்திரிகைகளில் விளம்பரம் பிரசுரிக்கப்பட்டுள்ளது. பாலியல் கொடுமைக்கு ஆளாகும் பெண் அதை வெளியே சொல்லாமல் சகித்துக் கொள்ளும் கோழைத் தனத்தை உதறிவிட்டு, நீதி கேட்டு பகிரங்கமாகப் போராடத் துணிந்தால் அவள் நடத்தை கெட்டவள், மனநிலை சரியில்லாதவள் என்று எளிதில் குற்றம் சுமத்தி விடுவார்கள் என்பதை தொடர்ந்து பல வழக்குகளில் பார்த்திருக்கிறோம். இப்போதும் அதுதான் நடக்கிறது. உமா மனநிலை சரியில்லாதவர் என்றால் தினமலர் நிருபராக 7 ஆண்டுகள் வேலை செய்ய அவரை எப்படி அனுமதித்தனர்? இப்போது பணி புரியும் புதிய இடத்தில் அவர் எப்படி சேர்ந்திருக்க முடியும்? இந்தக் கேள்விகளுக்கு சம்பந்தப்பட்டவர்கள் பதில் சொல்ல முடியுமா?

அதற்கும் இவரே
காரணமாவார்
தினமலர் நிர்வாகம் சொல்வதுபோல ஒரு வேளை உண்மையிலேயே உமாவின் மனநிலை பாதிக்கப்பட்டிருந்தால், அதற்குக் காரணம் சம்பந்தப்பட்டவர்களால் அவருக்கு கொடுக்கப்பட்ட பாலியல் தொல்லைதான் என்று கூறலாம். தொடர்ந்து பாலியல் தொந்தரவுக்கு ஆளாகும் பெண்களுக்கு கடுமையாக மனஉளைச்சல் ஏற்படும் என்பது எதார்த்தமானது. எனவே, உமா கொடுத்த புகார் மீது காவல்துறை தாமதமின்றி விசாரணை நடத்த வேண்டும்.

இவ்வாறு வாசுகி கூறினார்.

இந்திய தேசிய மாதர் சம்மேளனத்தின் மாநிலத் தலைவர் ஆர்.சுசீலா கூறியதாவது:
பணியிடங்களில் பல பெண்கள் பாலியல் தொல்லைகளுக்கு ஆளாகின்றனர். ஆனால், பெரும்பாலான பெண்கள் வெளியில் சொல்வதில்லை. சில பெண்கள் மட்டுமே துணிச்சலுடன் வெளியே சொல்ல முன்வருகின்றனர். தினமலர் நிர்வாகியே தன்னை பாலியல் தொந்தரவு செய்ததாக உமா கூறியுள்ளார். இவ்வளவு தைரியமாக அவர் வெளியே சொல்லி இருக்கிறார் என்றால், அதில் நிச்சயம் உண்மை இருக்கும். இப்புகார் மீது காவல்துறை உரிய விசாரணை நடத்தி, ரமேஷ் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒரு பத்திரிகை முதலாளி மீது குற்றச்சாட்டு கூறியிருக்கும் பெண்ணுக்கு அச்சுறுத்தல் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. எனவே, உமாவுக்கு உரிய போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும்.

இவ்வாறு சுசீலா கூறினார்.

இந்திய கம்யூனிஸ்ட் எம்எல்ஏ பத்மாவதி கூறியதாவது:
பாதுகாப்பு அளிக்க வேண்டும்
பணியிடங்களில் பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாவது பற்றி புகார் கொடுத்தால் காவல் துறையினர் அக்கறை செலுத்துவதில்லை. போராட்டம் நடத்திய பிறகுதான் புகார் மீது நடவடிக்கை எடுப்பது என்பது காவல்துறையின் வாடிக்கையாகிவிட்டது. மாதர் சம்மேளனத்தின் மாநில நிர்வாகக்குழு கூட்டம், 17ம் தேதி சென்னையில் நடக்கிறது. இந்த விஷயத்தில் அடுத்த நடவடிக்கை குறித்து அதில் முடிவு எடுப்போம்.
இவ்வாறு பத்மாவதி கூறினார்.

————————————————————————————————————————-

மற்றவர்கள் மீது அவதூறு பரப்புவதே இவர்களின் தொழில்

வேண்டாதவர்கள் மீது அவது£று பரப்புவது என்பது தினமலர் நிர்வாகத்துக்கு கைவந்த கலை என்பதை தமிழக மக்கள் அனைவரும் நன்றாக அறிவார்கள். பெண் நிருபர் உமா, தமக்கு தினமலர் உரிமையாளர் ஆபாச எஸ்.எம்.எஸ்.களை அனுப்புகிறார் என்று புகார் கூறியதும், அதனை மறுப்பதோடு நிறுத்திக் கொள்ளாமல், புகார் கூறிய உமா மனநிலை சரியில்லாதவர் எUma Dinakaran Dinamalar Ramesh andhumani lens mama imbroglio allegationன்று அவது£றுகளை பரப்புவதே இதற்கு உதாரணம்.

தமிழர் தந்தை என்று அனைவராலும் போற்றப்பட்டவர் தினத்தந்தி நிறுவனர் சி.பா.ஆதித்தனார். தொழில் போட்டியில் வெற்றிபெற முடியாத ஆத்திரத்தில், தினத்தந்தி பத்திரிகையின் நிறுவனர் என்ற ஒரே காரணத்துக்காக ஆதித்தனாரைப் பற்றி அவது£றாக கேலி செய்து செய்தி வெளியிட்டு பின்னர் தினமலர் வாங்கிக் கட்டிக்கொண்டதையும் யாரும் மறந்திருக்க முடியாது.

தினமலருக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்றதற்காக மூன்று முறை தேசிய விருது பெற்ற கவிஞர் வைரமுத்துவை கிண்டலான அடைமொழியோடு தினமலர் பல ஆண்டுகள் கேலி செய்து வந்தது.

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் விளம்பரங்கள் தினமலருக்கு தரப்படவில்லை என்ற ஆத்திரத்தில் பல்கலைக்கழக துணைவேந்தர் பற்றி தவறான செய்திகளை வெளியிட்டு பிளாக்மெயில் செய்ததும், பின்னர் துணைவேந்தரே தினமலரின் உள்நோக்கம் பற்றி பத்திரிகைகளுக்கு பேட்டி கொடுத்ததும் தினமலரின் விஷமத்தனத்தை அம்பலப்படுத்தியதும் தினமலரின் மோசடித்தனத்துக்கு ஒரு உதாரணம்.

கொள்கை ரீதியாக தன்னால் ஏற்றுக்கொள்ள முடியாத அரசியல் கட்சிகளையும் குறிப்பாக தமிழக தலைவர்களையும் தரக்குறைவாக விமர்சிப்பதும், அவர்களின் பெயர்களை சுருக்கி அவர்களை கேலி கிண்டல் செய்வதும் தினமலருக்கு வாடிக்கையான ஒன்று.
திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான கருணாநிதியை பற்றி நீண்ட நெடுங்காலமாக அவது£று செய்திகளை வெளியிட்டு ஆனந்தப்பட்டது தினமலர்.
பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ், விடுதலைச் சிறுத்தைகள் பொதுச்செயலாளர்திருமாவளவன் போன்றவர்களை பற்றியும் அவது£று பரப்ப தவறியதில்லை.

தமிழகம் போற்றும் பேரறிஞர் அண்ணாவை இன்றுவரை ‘அண்ணாதுரை’ என்றே குறிப்பிட்டு எழுதும் தினமலர் நிர்வாகம், பலமுறை கண்டனங்கள் எழுந்தபோதும் தன் போக்கை மாற்றிக்கொள்ளவில்லை.

தமிழக அரசியல் தலைவர்கள் மட்டுமல்லாமல், தமிழ் திரைப்பட கலைஞர்களும் தினமலரில் கேலி, கிண்டல், அவது£றுகளுக்கு தப்பவில்லை.

தொடர்ந்து தமிழ் திரைப்படக் கலைஞர்களை கேலி கிண்டல் செய்து அவர்களின் மனம் புண்படும்படி செய்திகளை வெளியிட்ட பெருமை தினமலருக்கு உண்டு. நடிகர் திலகம் சிவாஜி கணேசன் துவங்கி சிபி வரைக்கும் அத்தனை கலைஞர்களையும் காயப்படுத்தி வருகிறது தினமலர்.

காலங்காலமாக தமிழ் தலைவர்களையும், கலைஞர்களையும், எழுத்தாளர்களையும் அவது£றாக விமர்சித்து எழுதி வந்த தினமலர் தற்போது அந்தரங்க அசிங்கங்களை அம்பலப்படுத்திய உமா மீது அவது£றுகளை அள்ளிவீசுவதொன்றும் ஆச்சரியமில்லை.
பாரம்பரியமிக்க நிறுவனம் என்று தங்களை சொல்லிக்கொண்டு பத்திரிகை பலத்தை தவறாக பயன்படுத்தி வரும் தினமலர் நிர்வாகம் தன் தவறுகளை உணர்ந்து திருந்தி பாவ விமோசனம் தேடாமல் மற்றவர்கள் மீது குற்றம் சுமத்தி விளக்கம் அளிப்பது பிரச்னையை திசை திருப்பி குற்றச்சாட்டில் இருந்து தப்பியோடும் முயற்சியாகும்.

மேலும், தினமலர் உரிமையாளரின் பாலியல் தொல்லைகள் குறித்த புகார்கள் தினகரனில் செய்தி வெளிவந்ததும் அதிர்ச்சியூட்டும் தகவல்கள் பல தினகரன் அலுவலகத்தை தேடிவந்தன.

தினமலர் இதழின் ஞாயிற்றுக்கிழமை இணைப்பான வாரமலரில் அவ்வப்போது ‘தொழில் அதிபருக்கு பெண் கம்பேனியன் தேவை’ என்ற விளம்பரத்தின் மறுபக்க மர்மம் அவற்றில் ஒன்று.

இவ்வாறு வரும் விளம்பரங்களின் பின்னணியில் இருந்தது யார் என்பதும், போலி விளம்பரங்கள் கொடுத்து பல பெண்களை வளைத்த கதைகளும் எங்களின் நேரடி கவனத்திற்கே வந்தது. இவ்வாறு விளம்பரம் கொடுத்த, சென்னை கே.கே.நகரைச் சேர்ந்த பெண் பத்திரிகையாளர் ஒருவரை, அவர் தங்கியிருந்த விடுதிக்கு, நிர்வாகியே நேரில் வந்து பெண் பார்த்த கதையையும் சம்மந்தப்பட்ட பெண்ணே நம்மிடம் நேரடியாக தெரிவித்திருக்கிறார்.

இது பற்றியும் நாம் விரிவாக விசாரித்து வருகிறோம். எனவே தினமலர் நிர்வாகம் இனிமேலாவது மற்றவர்கள் மீது பாய்வதை விட்டுவிட்டு தன் தவறுகளுக்கு பிராயச்சித்தம் தேடிக்கொள்ள வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாகும்.

——————————————————————————————————————

மாதர் சம்மேளனம் ஆதரவு

Abuse Uma Harassment Dinakaran Dinamalar Ramesh andhumani lens mama imbroglio allegation
இந்திய தேசிய மாதர் சம்மேளனத்தின் மாநிலக்குழு கூட்டம், சென்னை தி.நகர் பாலன் இல்லத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாநிலத் தலைவர் ஆர்.சுசீலா தலைமை வகித்தார். மாநிலச் செயலாளர் பத்மாவதி எம்.எல்.ஏ., மற்றும் மாநிலக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தின் முடிவு குறித்து தலைவர் சுசீலா கூறியதாவது:

தினமலர் பத்திரிகை உரிமையாளர் ரமேஷ், தனக்கு பாலியல் ரீதியாக துன்புறுத்தியாக அப்பத்திரிகையில் நிருபராக பணியாற்றிய உமா புகார் கூறியுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக ஏற்கனவே கண்டனம் தெரிவித்துள்ளோம். இந்த விஷயம் குறித்து மாநிலக்குழு கூட்டத்தில் விரிவாக விவாதித்தோம். இப்பிரச்னையில் உமாவுக்கு ஆதரவு கொடுத்து போராடுவோம். இதில், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து சம்மேளனத்தின் மாநில நிர்வாகிகள் கூடி விரைவில் முடிவு செய்வோம்.
இவ்வாறு சுசீலா கூறினார்.

——————————————————————————————————————

பட்டியலிட்டு உமா கண்ணீர் தினமலர் ரமேஷ் செய்த கொடுமைகள்

சென்னை, ஜூலை 18: ஆபாச எஸ்எம்எஸ் அனுப்பி செக்ஸ் தொல்லை கொடுத்தது மட்டுமின்றி கீழ்த்தரமான முறையில் தனக்கு பல கொடுமைகளை தினமலர் நிர்வாகி ரமேஷ் செய்ததாக முன்னாள் பெண் நிருபர் உமா கண்ணீருடன் பட்டியலிட்டுள்ளார். தினமலரில் பணியாற்றிய பலர் கசப்பான அனுபவங்களால்தான் அங்கிருந்து வெளியேறி உள்ளனர். அவர்களிடம் விசாரித்தால் பல உண்மைகள் வெளிவரும் என்றும் அவர் தெரிவித்தார்.

தினமலர் ஆசிரியர் ஆர்.கிருஷ்ணமூர்த்தியின் மூத்த மகனும், அலுவலக நிர்வாகியுமான ரமேஷ் தனக்கு ஆபாச எஸ்எம்எஸ் அனுப்பி செக்ஸ் தொல்லை கொடுத்ததாக பெண் நிருபர் உமா புகார் கொடுத்திருக்கிறார். அவர், நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:
ரமேஷ் பற்றிய உண்மைகளை வெளியில் சொன்னதால் தினமும் என்னைப் பற்றிய அவதூறு தகவல்களை தினமலர் நிர்வாகம் பரப்பி வருகிறது.

தினமலரில் நான் பணியாற்றியபோது பல தவறுகளை செய்ததாகவும், அப்போதெல்லாம் அழுது மன்னிப்பு கேட்டதாகவும் கூறியுள்ளனர். ஆனால், நான் சிறப்பாக பணியாற்றுகிறேன் என்று ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தியே பல நேரங்களில் என்னை பாராட்டியுள்ளார். செய்திப் பிரிவிலும் எனக்கு நல்ல பெயர்தான் இருந்தது.

தினமலரில் நிருபர்களாக இருப்பவர்களுக்கு செய்தி சேகரிக்கும் பணியைவிட நிர்வாகத்தினரின் குடும்ப வேலைகளைத்தான் அதிகம் கொடுத்துள்ளனர். நானும் அப்படித்தான் அவர்களின் குடும்பத்தினர், உறவினர், நண்பர்களுக்கே அதிக நேரம் வேலை செய்தேன். அங்கு முறையான வேலை நேரம் என்பது கிடையாது. ஒவ்வொரு வேலைகளையும் விசுவாசமாகத்தான் செய்து கொடுத்தேன்.

பணியில் தவறு செய்திருந்தால் எனக்கு மெமோ கொடுக்க வேண்டியதுதானே. இதுவரை நான் அங்கு எந்த மெமோவும் வாங்கியதில்லை. மெமோ கொடுக்காமல் எப்படி நான் மன்னிப்பு கேட்டதாக கூற முடியும்?

கடந்த 4 ஆண்டுகளுக்கு முன், ஜெயா டி.வி.க்கு விண்ணப்பித்தேன் என்ற காரணத்துக்காக என்னை வடசென்னைக்கு டிரான்ஸ்பர் செய்தார்கள். 50 ஆண்டு பாரம்பரியம் என்று கூறும் தினமலரில் ஊழியர்கள் அடிமையாக நடத்தப்படுவதுதான் உண்மை.
ஆபாச எஸ்.எம்.எஸ். அனுப்பி தொல்லை கொடுத்ததோடு ரமேஷ் நிற்கவில்லை.

வெளியில் சொல்லவே நா கூசுகின்ற பல கீழ்த்தரமான நடவடிக்கைகளில் இறங்கி என்னை நோகடித்திருக்கிறார். மேலும், என் வண்டியை பஞ்சர் செய்வது, வண்டியின் சீட்டை கிழிப்பது, செருப்பை பையில் போட்டு வண்டியில் மாட்டுவது போன்ற அற்பத்தனமான காரியங்களையும் அரங்கேற்றினார். வீட்டில் நான் என்ன பேசுகிறேன் என்று கண்காணிக்க ஆள் அனுப்புவது, என்னைப் பற்றி ஆபீசில் ஆபாசமாக பேசுவது, வெவ்வேறு எண்களில் இருந்து ஆபாச எஸ்எம்எஸ் அனுப்புவது என்று ரமேஷ் செய்த கொடுமைகள் ஏராளம்.

நான் மிகவும் அவமானப்படுத்தப்பட்டேன். எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டுதான் வேலை செய்தேன். ரமேஷின் தொல்லைகள் பற்றி செய்திப் பிரிவில் உள்ளவர்களிடம் பல முறை சொல்லி அழுதேன். அவர்களும், போராடுங்கள் என்று கூறி என்னை தேற்ற முயற்சி செய்வார்கள்.

தொல்லை எல்லை மீறி போனதால்தான் இனி பொறுத்துக்கொள்ள முடியாது என்று ராஜினாமா செய்தேன். அப்போது Ôதொழில் தகராறு காரணமாகÕ என்று எழுதப்பட்ட 5 ஸ்டாம்ப் பேப்பரில் என்னிடம் மிரட்டி கையெழுத்து வாங்கினர். பிரச்னை ஒழிந்தது என்று வேறு வேலைக்குச் சென்றால் அங்கு வந்தும் தொல்லை கொடுக்கின்றனர்.
செய்தி நிறுவனங்களில் பணி கிடைக்காததால்தான் மக்கள் தொடர்பு அதிகாரி வேலையில் நான் சேர்ந்ததாக கூறியுள்ளனர். இது மக்கள் தொடர்பு அதிகாரி என்ற பதவியை கேவலப்படுத்தும் செயல்.

Ôதினமலர் – உண்மையின் உரை கல்Õ என்று போஸ்டர் வைப்பது கண்துடைப்பு வேலை. அங்கு பணிபுரிபவர்களுக்கும், தினமலர் ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி, அவரது மகன் அந்துமணி ரமேஷ் ஆகியோரின் மனசாட்சிக்கு தெரியும் எது உண்மை என்று.
இவ்வாறு உமா கூறினார்.

——————————————————————————————————————

உண்மையை சொன்னால் மனநிலை பாதித்தவள் என்பதா?

தினமலர் நிர்வாகி மீது அவதூறு வழக்கு

பெண் நிருபர் உமா பேட்டி

சென்னை, ஜூலை 16: ÔÔசெக்ஸ் டார்ச்சர் கொடுத்த உண்மையை சொன்னதால¢ என்னை மனநிலை பாதித்தவர் என்று கூறுகின்றனர். இதனால் தினமலர் நிர்வாகம் மற்றும் அந்துமணி ரமேஷ் மீது அவதூறு வழக்கு தொடருவேன்ÕÕ என்று தினமலரில் பணிபுரிந்த நிருபர் உமா கூறியுள்ளார்.

இதுகுறித்து நிருபர்களிடம் அவர் இன்று கூறியதாவது:

தினமலர் நிர்வாகி அந்துமணி ரமேஷ் தொடர்ந்து எனக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்து வந்ததால்தான் பொறுமை இழந்து புகார் கொடுத்தேன். உண்மையை வெளிப்படுத்தியதால் என்னை மனநிலை பாதிக்கப்பட்டவர் என்று கூறுகிறார்கள். என் எதிர்காலத்தை சீரழிக்க நினைக்கும் அவர்களின் எண்ணத்தை முறியடிப்பேன். என்னை மனநிலை பாதித்தவர் என்று கூறியவர்கள் மீது அவதூறு வழக்கு தொடர்வேன்.

போன் மூலம் மிரட்டல் விடுத்தேன் என்று பொய்ப் புகார் கூறி என்னை விசாரிப்பதற்காக 2 போலீசார் மாலை 7 மணிக்கு என் அலுவலகத்துக்கு வந்தனர். Ôபுகாரை காட்டுங்கள், உங்களுடன் வருகிறேன்Õ என்றேன். அதற்கு அவர்கள் பதில் ஏதும் சொல்லவில்லை.
இரண்டு மணி நேரம் விசாரணை செய்யாமல் போலீஸ் ஸ்டேஷனில் உட்கார வைத்திருந்தனர். காரணத்தைக்கூட சொல்லவில்லை. சட்டப்படி மாலை 6 மணிக்குமேல் பெண்களை காவல் நிலையத்தில் வைத்திருக்கக் கூடாது. போலீசார் அந்த சட்டத்தை பின்பற்றவில்லை. விசாரணைக்கு தயார் என்று எழுதிக் கொடுக்கச் சொன்னார்கள். மீடியா என்ற பலத்தை வைத்துக் கொண்டு காவல்துறையை என் மீது பிரயோகம் செய்கின்றனர். நாட்டின் 4-வது தூண் பத்திரிகை. அதில் வேலை பார்த்ததால் பிரச்னையை எதிர்கொள்ள எனக்கு தைரியம் இருக்கிறது. ஆனால், சராசரி மனிதர்களால் இவர்களின் பழிவாங்கும் போக்கை எப்படி சமாளிக்க முடியும். அவர்களுக்கு எந்த அளவுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தி இருக்கும். தனிப்பட்ட பிரச்னைகளை பத்திரிகைகளில் வெளியிட்டு பழிவாங்கும் எண்ணமுடையவர்தான் அந்துமணி ரமேஷ்.

நிர்வாகம் சார்பில் இன்று தன்னிலை விளக்கத்தை அவர்கள் பத்திரிகையில் வெளியிட்டுள்ளனர். ஸ்ரீபிரியா என்ற பெண்ணுக்கு நான் போன் செய்து மிரட்டினேன் என்று கூறியுள்ளனர். எனக்கு சிரிப்புதான் வருகிறது. அங்கு வேலை பார்ப்பது பாதுகாப்பு இல்லை என்று கருதி நான் வெளியேறினேன். வேலையை விட்டுவந்து 3 மாதங்கள் ஆகிறது. மேலும் ஸ்ரீபிரியாவோடு எனக்கு அவ்வளவு பழக்கமுமில்லை. தினமலரை மிரட்டினேனா அல்லது ஸ்ரீபிரியாவை மிரட்டினேனா என்பதை முதலில் தெளிவுபடுத்தட்டும். ஸ்ரீபிரியாவை மிரட்டினேன் என்றால் அவர்தானே என் மீது புகார் கொடுக்க வேண்டும். அது எப்படி நிர்வாகம் ஆக முடியும்.

நான்தான் போன் செய்து மிரட்டினேன் என்கிறார்கள். எல்லாம் பொய். அங்கிருந்து வெளியேறிய பிறகு நான் எதற்கு அவர்களை மிரட்ட வேண்டும். தற்போது பணியாற்றும் அலுவலகத்தில் இருக்கும் வேலையை பார்க்கவே எனக்கு நேரம் சரியாக இருக்கிறது. அவர்களை மிரட்டுவது என் வேலையல்ல. அவர்களின் தன்னிலை விளக்கம் ஆதாரமில்லாமல் இருக்கிறது.

அங்கு 7 ஆண்டுகள் வேலை பார்த்துள்ளேன். என்னுடைய குரல் அவர்களுக்கு தெரியாதா? எனவே போன் மூலம் நான்தான் மிரட்டினேன் என்பதை ஆதாரத்துடன் நிரூபிக்கட்டும். தொலைபேசி எண், தொடர்பு கொண்ட நாட்கள், நேரம் எல்லாவற்றையும் வெளியிடட்டும். மருத்துவமனையில் உள்ள பூத்தில் போலீசார் வந்து சோதனை செய்தபோது, டயல் செய்த நம்பர்களில் தினமலர் நம்பர் டயல் செய்யப்படவில்லை என்பது அவர்களுக்கே தெரிந்துவிட்டது.

அதனால்தான் விசாரணை செய்யாமல் என்னை வீட்டுக்கு போகச் சொன்னார்கள். அவர்கள் கூறும் குற்றச்சாட்டு ஆதாரமற்றவை. ஜோடிக்கப்பட்டவை. ஆள் வைத்து பேசுவது, மிரட்டுவது இதெல்லாம் அவர்களுக்குத்தான் கைவந்த கலை. எனக்கில்லை. அதற்கு அவசியமும் இல்லை. பத்திரிகை துறையில் இருந்தேன் என்பதற்காக மற்றDinakaran Dinamalar Ramesh andhumani lens mama imbroglio allegation பத்திரிகைகள் எனக்கு ஆதரவு தெரிவிக்கின்றன.

என்னை மனநிலை பாதிக்கப்பட்டவர் என்கிறார்கள். அப்படியானால் ஏன் 7 வருடம் அங்கு வேலைக்கு வைத்து எனக்கு சம்பளம் கொடுக்க வேண்டும்? மனநிலை பாதிக்கப்பட்டவர் என்றால் எனக்கு எப்படி வேறு வேலை கிடைத்திருக்கும். இவர்கள் எதற்கும் துணிந்தவர்கள் என்பது எனக்கு தெரியும். என்னை மனநிலை பாதிக்கப்பட்டவர் என்றதால் தினமலர் நிர்வாகம் மீதும் அந்துமணி ரமேஷ் மீதும் அவதூறு வழக்கு தொடரப் போகிறேன்.

தினமலரில் Ôபிளாக் மெயில் ஜர்னலிசம்Õ பிரசித்தி பெற்றது. அதைத்தான் எப்போதும் செய்கிறார்கள். இது எல்லாருக்கும் தெரிந்த விஷயம். அங்கு வேலை செய்பவர்களை பலவகையிலும் மன உளைச்சலுக்கு ஆளாக்கியிருக்கிறார்கள். நான் பயந்து ஓடவில்லை. பிரச்னைகளை தைரியமாக எதிர்கொள்வேன். இவ்வாறு உமா கூறினார்.

——————————————————————————————————————

தினமலர் நாளிதழை பழிக்க இது தந்திரம் ஆதாரமற்ற புகாரைக் கூறும் உமா யார்?

சென்னை :தினமலர் நாளிதழில் பணியாற்றிய பெண் நிருபர் உமா நேற்று “குறிப்பிட்ட ஊடகத்தின்’ மூலம் அளித்த புகார் பேட்டியை உற்று நோக்கினால், இது உள்நோக்குடன் எழுந்த புகார் என்று புரியும்.

ஐம்பது ஆண்டுகளாகத் தமிழக மக்களின் உணர்வோடு ஒன்றிய நாளிதழின் பங்குதாரரின் மகனைத் தனிப்பட்ட முறையில் விமர்சிப்பது வேடிக்கையானது.

Resignation letter Uma Dinakaran Dinamalar Ramesh andhumani lens mama imbroglio allegationதினமலர் நாளிதழில் தற்போது இவர் பணியாற்றவில்லை. சிறிது காலம் முன்பு மணமுடித்துக் கொண்டார். இவர் போலீசில் ஏற்கனவே அளித்த புகார் மனு, இவருடன் பழகிய அருண் என்பவர் மேற்கு மாம்பலம் போலீசிடம் எழுதிக் கொடுத்த மனு ஆகியவை இவர் எவ்வித மனப்போக்கு கொண்டவர் என்பதைக் காட்டுபவை. ஏ.ஓ.அருண் என்பவர் தன்னிடம் உமா “ரிலாக்ஸ்’ ஆக இருப்பதற்காக பேசுவது உண்டு என்று போலீசாரிடம் மனுக்கொடுத்திருக்கிறார்.

உமாவும் தான் அளித்த புகாரில், “பணியில் மனப்பிரச்னை இருந்தது என்றும் அதனால் டைபாய்டு வந்தது’ என்றும் பதிவு செய்திருக்கிறார். பொதுவாக நிருபர் பணி என்பது மிகவும் சவாலான பணி, அதை இவர் நிறைவேற்றுவதில் அடிக்கடி குறை ஏற்படுவதும், அதனால் மறுநாள் அந்தச் செய்தியின் உண்மையைப் போட வேண்டிய கட்டாயமும் செய்திப் பிரிவிற்கு ஏற்பட்டிருக்கிறது.

அது மட்டும் அல்ல, தற்போது மருத்துவமனை ஒன்றில் பணிபுரியும் உமா, ஏன் தினமலர் பணியை விட்டு விலகிய பின் மூன்று மாதகாலம் காத்திருந்து, அடிப்படை இல்லாத “எஸ்.எம்.எஸ்’ கொண்டு ஆவேசப்படுகிறார் என்பதும் கேள்விக்குறி.கடந்த சில நாட்களுக்கு முன், இவர் தினமலர் அலுவலகத்தில் செய்திப்பிரிவில் பணிபுரியும் பெண் ஒருவருக்கு அடிக்கடி போன் தொடர்பு கொண்டபோது, அதை தினமலர் நிர்வாகம் கண்டுபிடித்து “சைபர் கிரைம்’ போலீசார் விசாரித்த பின்பே இவ்வளவு மலிவாகப் பேசத் தொடங்கியிருக்கிறார் உமா.

Abuse Uma Harassment Dinakaran Dinamalar Ramesh andhumani lens mama imbroglio allegationஅதேசமயம் சைபர் கிரைம் போலீசார் உமாவை வெள்ளிக்கிழமை காவல்நிலையத்திற்கு அழைத்து வந்த பிறகுதான் அவர் தினமலருக்கு எதிராக மனு கொடுத்துள்ளார்.ஆனால், தினமலர் நாளிதழைக் களங்கப்படுத்தும் வகையில், ஒரு தனியார் “டிவி’ மற்றும் அக்குடும்பத்தைச் சேர்ந்த சில நாளிதழ்கள் “மாஜி நிருபர்’ உமா புகாரை ஒளிபரப்பியும், பிரசுரித்தும் வருவது வேதனை தருகின்றன.

சட்டத்தின் நியாயவழிப்படி உமா புகாரை சந்தித்து பொய் என்று நிரூபிக்கவும் தினமலர் தயங்காது. இச் செய்தியை இடை விடாது பரப்பும் ஊடகங்களுக்கும் தினமலர் சார்பில் மறுப்பு அறிக்கை முறைப்படி அனுப்பப்பட்டிருக்கிறது. மறுப்பை அவர்கள் பெற்றுக் கொண்ட பிறகும், அதை ஒளிபரப்பாமல் மீண்டும், மீண்டும் ஒருதரப்புச் செய்தியை ஒளிபரப்பியது அந்த “டிவி’ சானலின் உள்நோக்கத்தைக் காட்டுகிறது.

——————————————————————————————-

பெண் நிருபருக்கு செக்ஸ் தொல்லை

உமா மீதும் வழக்குப்பதிவு தினமலர் ரமேஷ் மீது கிரிமினல் வழக்கு

சென்னை, ஜூலை 19: தினமலர் ஆசிரியர் ஆர்.கிருஷ்ணமூர்த்தியின் மூத்த மகனும், தினமலர் அலுவலக நிர்வாகியுமான ரமேஷ் மீது பெண்கள் மீதான கொடுமை தடுப்பு சட்டம் உட்பட 3 சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
உமா (28) என்பவர் சென்னை தினமலர் அலுவலகத்தில் ஏழாண்டுகள் நிருபராக பணியாற்றி, மார்ச் மாதம் அங்கிருந்து விலகி, தனியார் மருத்துவமனையில் மக்கள் தொடர்பு அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவர், கடந்த 13ம் தேதி அடையாறு மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரில் கூறியிருப்பதாவது:

தினமலரில் பணியாற்றியபோது ஓராண்டு முன் என் செல்போனுக்கு திடீரென்று ஆபாச எஸ்.எம்.எஸ். வந்தது. பின்னர் அது தொடர்கதையானது. இதற்கு தினமலர் நிர்வாகி ரமேஷ்தான் காரணம் என்று தெரிந்தது. சக பத்திரிகையாளர்களிடம் இதை பலமுறை தெரிவித்தேன். அவர்களால் ஆறுதல் மட்டுமே கூற முடிந்தது. குடும்ப சூழல் காரணமாக தொடர்ந்து அங்கேயே பணியாற்றினேன். தொல்லை அதிகரித்ததால், ஒரு கட்டத்தில் ராஜினாமா செய்தேன்.

அதன்பின்னர், என் மீதும் குடும்பத்தினர் மீதும் கஞ்சா வழக்கு போடப்படும், கொலை செய்யப்படுவீர்கள் என்று மிரட்டல்கள் வர ஆரம்பித்தன. நான் மனநிலை சரியில்லாதவள் என்றும் ரமேஷ் தரப்பில் கேலி செய்தனர். இதுபற்றி மாம்பலம் மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தேன். எனக்கு ஏதாவது ஏற்பட்டால் தினமலர்தான் பொறுப்பு என்றும் அதில் கூறியிருந்தேன். ஆனால், போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இப்போது மருத்துவமனையில் பணியாற்றுகிறேன். எனக்கு சைபர் கிரைம் போலீசார் மூலம் தொந்தரவு கொடுக்கின்றனர்.

இவ்வாறு புகாரில் உமா கூறியிருந்தார்.

இந்தப் புகார் மீது நேற்றுவரை வழக்கு பதிவு செய்யப்படாமல் இருந்தது. நேற்று திடீரென்று தினமலர் நிர்வாகி ரமேஷ் மீது தமிழ்நாடு பெண்கள் மீதான கொடுமை தடுப்புச் சட்டத்தின் பிரிவு 4, இந்திய தண்டனைச் சட்ட பிரிவுகள் 507 (மிரட்டுதல்), 509 (ஆபாசமாக பேசுதல்) ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதேபோல், சைபர் கிரைம் போலீசில் தினமலர் நிர்வாகம் கொடுத்த புகாரின் பேரில், உமா மீது இந்திய தண்டனைச் சட்ட பிரிவுகள் 507, 508 ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

3 ஆண்டு சிறை:

தினமலர நிர்வாகி ரமேஷ் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில், பெண்கள் மீதான கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் நிரூபிக்கப்பட்டால், 3 ஆண்டு சிறைத் தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கலாம்.
இ.பி.கோ. 507 என்ற பிரிவில், 3 மாத சிறைத் தண்டனை மற்றும் ஆயிரம் ரூபாய் அபராதமும், 509 என்ற பிரிவில், 100 ரூபாய் அபராதமும் விதிக்கலாம்.

——————————————————————————————-

முன் ஜாமீன் கேட்டு ரமேஷ் மனு

செக்ஸ் தொல்லை கொடுப்பதாக உமா கொடுத்த புகாரை ஏற்று, தினமலர் ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தியின் மகன் ரமேஷ் மீது அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இதையடுத்து, முன் ஜாமீன் கேட்டு உயர் நீதிமன்றத்தில் ரமேஷ் நேற்று மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு நீதிபதி ரகுபதி முன்பு இன்று விசாரணைக்கு வருகிறது.

————————————————————————————————-

ஆபாச எஸ்.எம்.எஸ். கொடுத்து பாலியல் தொல்லை வழக்கு

காவல் நிலையத்தில் தினமலர் ரமேஷ் கையெழுத்திட வேண்டும்

முன்ஜாமீன் வழங்கி உயர் நீதிமன்றம் உத்தரவு இதே நிபந்தனையுடன் உமாவுக்கும் முன்ஜாமீன்

சென்னை, ஜூலை 21: நிருபர் உமாவுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் தினமலர் ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தியின் மகன் ரமேஷ§க்கு உயர் நீதிமன்றம் நிபந்தனை முன்ஜாமீன் வழங்கியுள்ளது. முன்ஜாமீன் பெற்ற பிறகு அவர், தொடர்ந்து 3 நாட்களுக்கு அடையாறு போலீஸ் நிலையத்தில் நேரில் ஆஜராகி கையெழுத்திட உத்தரவிட்டுள்ளது.

தினமலர் நிர்வாகம் கொடுத்த புகாரில் உமாவுக்கும் முன்ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
தினமலர் ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தியின் மகனும் அலுவலக நிர்வாகியுமான ரமேஷ் தனக்கு ஆபாச எஸ்எம்எஸ் அனுப்பி, செக்ஸ் தொல்லை தந்ததாக போலீசில் முன்னாள் பெண் நிருபர் உமா புகார் கொடுத்தார். அதன் பேரில் தினமலர் ரமேஷ் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதே போல், தினமலர் பெண் ஊழியர் ஒருவரை தொலைபேசியில் மிரட்டியதாக உமா மீது தினமலர் தரப்பில் சைபர் கிரைம் போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. அப்புகாரின் அடிப்படையில் உமா மீது சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இப்புகார்கள் தொடர்பாக ரமேஷ், உமா இருவரும் தனித்தனியாக முன்ஜாமீன் கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். ரமேஷ் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு, நீதிபதி ரகுபதி முன்பு நேற்று முன் தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, Ôஉமாவுடன், ரமேஷ் சமரசம் செய்து கொள்ள தயாரா?Õ என்று கேள்வி எழுப்பினர்.

இது தொடர்பாக ரமேஷிடம் ஆலோசித்து பதிலளிப்பதாக அவரது வக்கீல் கோபிநாத் கூறியிருந்தார்.

இதைத் தொடர்ந்து ரமேஷ் தாக்கல் செய்துள்ள முன்ஜாமீன் மனுவும், உமாவின் முன்ஜாமீன் மனுவும் நீதிபதி ரகுபதி முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நடந்த வாதம் வருமாறு:

நீதிபதி: உயர் நீதிமன்றத்தில் உள்ள சமரச மையத்திற்கு சென்று சமரசம் செய்து கொள்ள தயாரா என்று நேற்று கேட்டேன். அதுபற்றி உங்கள் பதில் என்ன?

தினமலர் ரமேஷின் வக்கீல் கோபிநாத்: இத்தகைய வழக்கை சமரச மையத்துக்கு அனுப்பத் தேவையில்லை என்று கருதுகிறோம். சமரசத்துக்கு நாங்கள் தயாராக இல்லை. மனுதாரருக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும்.

நீதிபதி (உமா வக்கீலை பார்த்து): உங்கள் வாதம் என்ன?

உமாவின் வக்கீல் சுதா ராமலிங்கம்: தினமலர் அலுவலகத்தில் நிருபராக 2001ம் ஆண்டு முதல் ஏழாண்டுகள் உமா பணியாற்றி உள்ளார். அப்போது, தினமலர் நிர்வாகி ரமேஷ் அவருக்கு ஆபாச எஸ்எம்எஸ்கள் அனுப்பி தொல்லை கொடுத்துள்ளார். அதனால் உமா வேலையை ராஜினாமா செய்தார். அதன் பிறகும் ரமேஷ் தரப்பிலிருந்து அவருக்கு மிரட்டல்கள் வந்தன.

இப்போது அவர் தனியார் மருத்துவமனையில் மக்கள் தொடர்பு அதிகாரியாக பணியாற்றி வருகிறார். கடந்த 13ம் தேதி, தினமலர் நிர்வாகம் கொடுத்த புகாரின் அடிப்படையில், உமாவை விசாரித்துக் கொண்டு அவர் பணிபுரியும் மருத்துவமனைக்கு அடையாறு போலீசார் வந்துள்ளனர். அவர்கள், மருத்துவமனை நிர்வாகத்திடம் சில தொலைபேசி எண்கள் குறித்து எழுத்துபூர்வமாக தகவல் தருமாறு கேட்டுள்ளனர்.

பின்னர் விசாரணைக்காக அடையாறு போலீஸ் நிலையத்திற்கு வருமாறு உமாவை அழைத்துள்ளனர். பணி முடிந்ததும் இரவு 8 மணிக்கு உமா மற்றும் அவர் பணிபுரியும் மருத்துவமனைக்கு அருகில் உள்ள எஸ்டிடி பூத்தில் பணியாற்றும் மல்லிகா என்ற பெண்ணும், அவரது தாயாரும் அடையாறு போலீஸ் நிலையத்திற்கு சென்றுள்ளனர்.

அங்கு உமாவிடம் போலீசார் எந்த விசாரணையும் செய்யாமல், வேண்டுமென்றே காக்க வைத்திருந்தனர். இரவு 10 மணி அளவில் துணை கமிஷனர் சேஷசாயி வந்த பிறகு தான், உமாவை வீட்டுக்கு செல்லுமாறு அனுப்பியுள்ளார். உமாவை போலீசார் அலைக்கழித்ததற்கு காரணம் தினமலர் நிர்வாகத்தின் தூண்டுதல் தான். அவர்கள் உமா மீது பொய்யான புகார் கொடுத்திருக்கிறார்கள். எனவே உமாவுக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும்.

வக்கீல் கோபிநாத்: அவர்கள் புகாரில் கூறியிருப்பது பொய். அதை ஏற்க கூடாது.
நீதிபதி: இரு தரப்பினரையும் அழைத்து போலீசார் விசாரித்தார்களா?

வக்கீல் சுதா ராமலிங்கம்: எங்களை மட்டும் தான் விசாரணைக்கு அழைத்தனர்.
வக்கீல் கோபிநாத்: நாங்கள் விசாரணைக்கு செல்லவில்லை. புகார் மட்டும் தான் கொடுத்தோம்.

நீதிபதி: நீங்கள் புகார் கொடுத்ததும் போலீசாரை வற்புறுத்தியிருப்பீர்கள். அதனால்தான் போலீசார் அவர்களை மட்டும் அழைத்து விசாரித்துள்ளார்கள். ஒருபத்திரிகை பெண் நிருபரை போலீஸ் நிலையத்திற்கு வரவழைத்து போலீசார் அலைக்கழித்துள்ளனர்.

அரசு வக்கீல் ஹசன் முகமது ஜின்னா (போலீஸ் தரப்பு): புகார் வந்தவுடன் போலீசார் உமாவை விசாரணைக்கு அழைத்துள்ளார்கள். அதைத் தொடர்ந்து இரு தரப்பினர் மீதும் தனித்தனியாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

நீதிபதி: மனுதாரர்கள் இருவருக்கும் நிபந்தனை முன்ஜாமீன் தருகிறேன். ரமேஷ், உமா இருவரும் ரூ.10 ஆயிரத்துக்கான சொந்த ஜாமீனும், இரு தனிநபர் ஜாமீனும் செலுத்தி முன்ஜாமீன் பெற்றுக் கொள்ளலாம். முன்ஜாமீன் உத்தரவு நகல் பெற்ற உடன், ரமேஷ் சைதாப்பேட்டை 9வது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் சரண் அடைந்து முன்ஜாமீன் பெற்றுக் கொள்ளலாம். அதன் பிறகு, அடையாறு மகளிர் காவல் நிலையத்தில் தொடர்ந்து 3 நாட்களுக்கு தினமும் காலை 10.30 மணிக்கு ஆஜராகி கையெழுத்திட்டு விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும். ஜார்ஜ்டவுன் 7வது மாஜிஸ்திரேட் முன்பு சரணடைந்து உமா முன்ஜாமீன் பெற வேண்டும். அடையாறு மகளிர் காவல் நிலையத்தில் மாலை 5.30 மணிக்கு ஆஜராகி தொடர்ந்து 3 நாட்களுக்கு கையெழுத்திட்டு விசாரணைக்கு ஒத்துழைப்பு தர வேண்டும்.

இவ்வாறு தீர்ப்பில் நீதிபதி கூறினார்.
————————————————————————————————-

SMS Cellphones Mobile Abuse Uma Harassment Dinakaran Dinamalar Ramesh andhumani

————————————————————————————————-
பெண் நிருபருக்கு பாலியல் தொல்லை வழக்கு

தினமலர் ரமேசுக்கு முன்ஜாமீன் தரக்கூடாது

அரசு வக்கீல் கடும் எதிர்ப்பு

சென்னை, ஜூலை 20: நிருபர் உமாவுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தினமலர் நிர்வாகி ரமேஷ§க்கு முன் ஜாமீன் வழங்கக்கூடாது என்று அரசுத் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

தினமலர் ஆசிரியர் இரா. கிருஷ்ணமூர்த்தியின் மகனும், அலுவலக நிர்வாகியுமான ரமேஷ் தனக்கு ஆபாச எஸ்எம்எஸ் அனுப்பி செக்ஸ் தொல்லை கொடுத்ததாக நிருபர் உமா புகார் கொடுத்தார். இதன் பேரில் தினமலர் ரமேஷ் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வழக்கில் தன்னை கைது செய்யாமல் இருக்க ரமேஷ் உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி ரகுபதி முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நடந்த வாதம்:

ரமேஷ் தரப்பு மூத்த வக்கீல் கோபிநாத்: சமீபத்தில் தினமலர் அலுவலகத்துக்கு மர்ம தொலைபேசி அழைப்புகள் வந்தன. பேசிய பெண், அங்கு சுருக்கெழுத்தாளராக பணியாற்றும் பெண்ணை மிரட்டியிருக்கிறார். விசாரணையில், அந்தப் பெண் தினமலரில் நிருபராக பணியாற்றி ராஜினாமா செய்த உமா என்பது தெரியவந்தது.
சைபர் கிரைம் போலீசில் புகார் கொடுத்தோம். விசாரணைக்காக உமாவை போலீசார் அழைத்தனர். இதையடுத்து, ரமேஷ் மீது உமா புகார் கொடுத்துள்ளார். அதன் அடிப்படையில் ரமேஷ் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். அதில், இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 507, 509 ஆகியவை ஜாமீனில் விடக் கூடிய குற்றம். பெண்களுக்கு எதிரான கொடுமைகள் தடுப்பு சட்டத்தின் 4 வது பிரிவின் கீழும் ரமேஷ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது ஜாமீனில் வெளிவரமுடியாத சட்டப்பிரிவு. இருந்தாலும், உமா கொடுத்தது பொய் புகார் என்பதால் ரமேஷ§க்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும்.

நீதிபதி: சட்டப் பிரிவு 4க்கு என்ன தண்டனை என்று கூறப்பட்டுள்ளது?
வக்கீல் கோபிநாத்: குற்றம் நிரூபிக்கப்பட்டால், 3 ஆண்டு சிறைத் தண்டனை வழங்கலாம்.
நீதிபதி: பெண் நிருபரை எப்போது மிரட்டியதாக புகார் கூறியுள்ளார்?

வக்கீல் கோபிநாத்: 7 ஆண்டுகள் அவர் பணியில் இருக்கும்போது ஆபாச எஸ்.எம்.எஸ். அனுப்பியதாகவும், ராஜினாமா செய்த பிறகும் மிரட்டல் விடுத்ததாகவும் கூறியிருக்கிறார். அது உண்மை என்றால் முன்பே புகார் கொடுத்திருக்க வேண்டும்.

அவர் மீது தினமலர் புகார் கொடுத்த பிறகுதான், போட்டிக்கு ரமேஷ் மீது புகார் கொடுத்துள்ளார். எனவே, ரமேஷ§க்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும்.

அரசு வக்கீல் ஹசன் முகமது ஜின்னா: தினமலரில் பணியாற்றிய போது, ரமேஷ் 11 செல்போன் நம்பர்களை பயன்படுத்தி தொடர்ந்து ஆபாச எஸ்எம்எஸ் அனுப்பினார்; பணியை விட்டு சென்ற பிறகும் அவரையும் அவர் குடும்பத்தையும் கஞ்சா வழக்கில் கைது செய்து விடுவதாகவும், உயிருடன் கொளுத்தி விடுவதாகவும் மிரட்டினார் என்று உமா கூறியுள்ளார். ரமேஷ் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆரம்பகட்ட விசாரணை நடந்துவருகிறது. எனவே ரமேஷ§க்கு முன்ஜாமீன் வழங்கக் கூடாது.
நீதிபதி: நெருப்பு இல்லாமல் புகையாது. இருவருமே திருமணம் ஆனவர்களா?

அரசு வக்கீல் ஹசன் முகமது ஜின்னா: உமாவுக்கு திருமணமாகி விட்டது.

வக்கீல் கோபிநாத்: ரமேஷ§க்கும் திருமணமாகி விட்டது.

நீதிபதி: இருவருமே திருமணமானவர்கள். போட்டி போட்டு புகார் கொடுத்துள்ளார்கள். அவர்கள் உயர் நீதிமன்றத்தில் உள்ள சமரச மையத்துக்கு சென்று சமரசம் செய்து கொள்ளலாமே? இது பற்றி மனுதாரர் ரமேஷிடம் கருத்து கேட்டு கூறுங்கள். விசாரணையை நாளை தள்ளி வைக்கிறேன்.

இவ்வாறு வாதம் நடந்தது.
————————————————————————————————-

kungumam dinakaran_uma andhumani ramesh dinamalar lawsuit harassment

kungumam dinakaran_uma andhumani ramesh dinamalar lawsuit harassment

kungumam dinakaran_uma andhumani ramesh dinamalar lawsuit harassment

kungumam dinakaran_uma andhumani ramesh dinamalar lawsuit harassment

———————————————————————————————-
தினகரனுக்கு டிமிக்கி கொடுத்த அந்துமணி ரமேஷ்

தினமலர் நிர்வாகிகளில் ஒருவரான அந்துமணி ரமேஷ் மீது, முன்னாள் நிருபர் உமா பாலியல் தொந்தரவு புகார் கொடுத்தார். இதனைத் தொடர்ந்து அவர் சென்னை உயர் நீதி மன்றத்தில் முன் ஜாமீன் பெற்றார். சைதாப்பேட்டை கோர்ட்டில் 2 நபர் ஜாமீன் பெற்று, விசாரணை அதிகாரி முன்பு 3 நாட்கள் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.

இந்த செய்திகளை எல்லாம், பெரிது பெரிதாக வெளியிட்ட தினகரன் நாளிதழ், எப்படியாவது கோர்ட்டில் ஆஜராகும் படத்தை எடுத்து பத்திரிகையில் வெளியிட வேண்டும் என்று தனது நிருபர்கள் நான்கு பேரை நியமித்திருந்தது. அவர்களுடம் சன் டி.வி. படக்குழுவினரும் கோர்ட்டில் கூடியிருந்தனர். வேறு எந்த பத்திரிகை நிருபர்களும் வரவில்லை.

ஆனால் அந்துமணி ரமேஷ் கோர்டுக்கு வரவே இல்லை. தினகரன் நிருபர்களின் கண்ணில் மண்ணை தூவிவிட்டு, விசாரணை அதிகாரியான இன்ஸ்பெக்டர் கீதா முன்பு ஆஜராகி கையெழுத்திட்டு சென்று விட்டார்.

இது எப்படி சாத்தியமானது. உயர் நீதி மன்றம் தீர்ப்பு கூறிய மறுநாளே, நீதிபதியை அனுகி, நீதி மன்றம் செல்லாமல் விசாரணை அதிகாரி முன்பு ஆஜராக அனுமதி கேட்டுள்ளனர். அவரும் ஒப்புக் கொள்ளவே தீர்ப்பு மாற்றி எழுதப்பட்டதாக தெரிகிறது.

இதன் அடிப்படையில் விசாரணை அதிகாரியிடம் நேரடியாக ஆஜராகிவிட்டார், அந்துமணி ரமேஷ். இதுதெரியாத தினகரன், அவருக்காக கோர்ட்டில் காத்திருப்பது வேடிக்கை

————————————————————————————————–

Posted in Agenda, Allegation, Andhumani, Andumani, Anthumani, Bathmavathi, Bathmavathy, Blackmail, Broadcast, CEO, Challenged, channel, Claim, Compensation, Courts, Dailythanthi, Dayanidhi, Dayanidhi maran, Dayanidhy, Dayanithi, Dhinakaran, Dhinamalar, Dhinathanthi, Dinagaran, Dinakaran, Dinamalar, Disabled, DMK, Editor, Email, Ethics, Female, Feminism, Freedom, Harass, Harassment, HR, Images, imbroglio, Jokes, journalism, journalist, Justice, Kalanidhi, Kalanidhy, Kalanithi, Kalanithy, Krishnamurthy, Law, Lawsuit, lens mama, Letter, Liberation, Mag, magazine, Management, Manipulation, Maran, MD, Media, Mental, MLA, Mogul, MSM, network, News, Order, paparazzi, Paprazzi, Pathmavathi, Pathmavathy, pension, Photos, Physical, Pictures, Police, Porn, Press, Process, Ramesh, Reference, Reporter, responsibility, Scam, Schizo, Schizophrenia, schizophrenic, Settlement, Sex, Sexual, SMS, Strategy, Sun, SunTV, tactics, Tamil, Thinagaran, Thinakaran, Thinamalar, Thinathanthi, TN, Torture, TV, Vaaramalar, Varamalar, Varamalara, Women, Work, Workplace | 41 Comments »

State of SAARC – South Asian Association for Regional Cooperation

Posted by Snapjudge மேல் ஜூன் 19, 2007

சார்க்: போகுமிடம் வெகு தூரமுண்டு!

மு. இராமனாதன்


“சார்க்’ (தெற்காசிய பிராந்திய ஒத்துழைப்பு அமைப்பு) வெறும் “பேச்சு மடம்’ என்ற குற்றச்சாட்டு நிலவி வருகிறது.

“சார்க்’ கூட்டமைப்பு 1985 முதல் இயங்கி வருகிறது. இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், பூடான், நேபாளம், மாலத்தீவு, இலங்கை ஆகிய ஏழு நாடுகள் அணி சேர்ந்தன.

“சார்க்’ ஒரு பொருளாதார ஒத்துழைப்பிற்கான கூட்டமைப்பாகத்தான் உருவாக்கப்பட்டது. பரஸ்பர அரசியல் கருத்து வேற்றுமைகள் “சார்க்’ அமைப்பிற்குள் வரலாகாது என்றும் தீர்மானிக்கப்பட்டது.

ஆனால் அமைப்பின் செயல்பாட்டை பரஸ்பர பேதங்கள் பாதிக்கவே செய்தன.

கடந்த ஏப்ரல் மாதம் புதுதில்லியில் நடந்த “சார்க்’ மாநாடு, தெற்காசிய ஒத்துழைப்பிற்கான சில அடித்தளங்களை அமைத்துக் கொடுத்தது. அதேவேளையில் அவை போதுமானதாக இல்லை என்கிற விமர்சனங்களும் வலம் வருகின்றன.

இந்த மாநாடு 22-வது ஆண்டுக் கூட்டமாக இருந்திருக்க வேண்டும். ஆனால் நடந்தது 14-வது கூட்டம்தான். உறுப்பு நாடுகளிடையே, குறிப்பாக இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நிலவும் பகைமை காரணமாக பல ஆண்டுக்கூட்டங்கள் நடைபெறவே இல்லை.

தெற்காசிய நாடுகள், 60 ஆண்டுகளுக்கு முன்வரை காலனி ஆதிக்கத்தில் இருந்தவை. இப்போதும் வறுமையும் கல்லாமையும் உள்நாட்டுப் பிரச்னைகளும் தெற்காசியாவின் மீது சூழ்ந்திருக்கின்றன. உலக மக்கள்தொகையில் நான்கில் ஒரு பகுதியினர் தெற்காசியர்கள்தாம்.

ஆனால் அவர்களில் நான்கில் ஒரு பகுதியினர் வறுமைக் கோட்டிற்குக் கீழ் உழல்கின்றனர். எல்லா “சார்க்’ மாநாடுகளிலும் குடிமக்களுக்குக் கல்வியும் சுகாதாரமும் வேலைவாய்ப்பும் தடையின்றிக் கிடைக்க வேண்டுமெனத் தலைவர்கள் பேசுவதோடு சரி. செயலாக்கம்தான் இன்றுவரை இல்லை.

இம்முறை “சார்க்’ அமைப்பின் எட்டாவது உறுப்பினராக ஆப்கானிஸ்தான் இணைந்தது. ஆப்கானிஸ்தான் அதிபர் ஹமீது கர்ஸôயின் உரையில் உறுதியும் துணிவும் இருந்தது.

தமது நாடு மத்திய ஆசியாவுக்கும் தெற்காசியாவுக்கும் இடையே ஓர் இணைப்பாக விளங்கும் என்றார் அவர்.

மேலும், கிழக்காசியாவின் பிரதான சக்திகளான சீனா, ஜப்பான் மற்றும் தென்கொரியா ஆகிய நாடுகள் முதல்முறையாக “”பார்வையாளர்”களாகப் பங்கேற்றன. சார்க் நாடுகளில் முதலீடு செய்ய சீன நிறுவனங்களை தனது அரசு ஊக்குவிக்கும் என்றார் சீன வெளியுறவு அமைச்சர்.

27 உறுப்பு நாடுகளைக் கொண்ட ஐரோப்பிய ஒன்றியமும் அமெரிக்காவும் அடுத்த ஆண்டு முதல் ஈரானும் “சார்க்’ அமைப்பின் பார்வையாளர்களாகப் பங்கேற்க உள்ளன.

உறுப்பு நாடுகளுக்கிடையில் வணிகத்தை மேம்படுத்துவதிலும் இம்மாநாடு கவனம் செலுத்தியது.

சார்க் பிராந்தியத்திற்குள் இறக்குமதித் தீர்வைகளைக் குறைக்க வேண்டும் என்பதை சார்க் நாடுகள் 1993 ஆம் ஆண்டிலேயே ஒப்புக்கொண்டன.

ஆனால் உள்நாட்டுச் சநதையில் பாதிப்பு ஏற்படுத்தாமல், எந்தெந்தப் பொருள்களுக்கு தீர்வைகளை விலக்கிக் கொள்வது அல்லது படிப்படியாகக் குறைப்பது என்பதில் உறுப்பினர்களுக்கிடையில் இணக்கம் ஏற்படவில்லை.

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையே தடையற்ற வணிகம் சில ஆண்டுகளாகவே அமலில் இருந்து வருகிறது. மற்ற “சார்க்’ நாடுகளுக்கும் தீர்வைகளிலிருந்து விலக்களிக்க இந்தியா தயாராகவே இருந்தது.

ஆனால் மற்ற நாடுகளும், எதிர்வினையாக, தமது பொருள்களுக்குத் தீர்வைகளைக் குறைத்துக் கொள்ள வேண்டுமென்று இந்தியா வலியுறுத்தி வந்தது. இது நிறைவேறவில்லை.

வளர்ச்சி குன்றிய வங்கதேசம், பூடான், நேபாளம், மாலத்தீவு ஆகிய நாடுகளின் இறக்குமதிகளுக்கு இனி இந்தியா தீர்வைகள் விதிக்காது என்று அறிவித்தார் பிரதமர் மன்மோகன் சிங். இது பல சாதகமான விளைவுகளை ஏற்படுத்தக் கூடும். பலன் பெறும் நாடுகள் சலுகையை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளப்போவதாக “சார்க்’ மாநாட்டிலேயே அறிவித்தன.

இதனால் அந்நாடுகளின் இந்திய ஏற்றுமதி அதிகரிக்கும். தவிர, இந்திய இறக்குமதிகளுக்கு அவை தீர்வைகளைப் படிப்படியாகக் குறைக்கும் சாத்தியங்களும் அதிகரிக்கும்.

வணிகம் வளரும்போது சாலைப் போக்குவரத்து, ரயில் போக்குவரத்து, துறைமுக வளர்ச்சி ஆகியவை மேம்படும். மேலும், பொருளாதார வளர்ச்சி கண்டு வரும் இந்தியாவின் இந்த நடவடிக்கை பிராந்தியத்திற்குள் நல்லெண்ணத்தை வளர்க்கவும் உதவும்.

மற்ற உறுப்பு நாடுகளைவிட பலமடங்கு பெரிய நாடான இந்தியா “சார்க்’ அமைப்பிற்குள் “பெரியண்ணனை’ போல் செயல்படுவதாக நிலவி வரும் நீண்டநாள் குற்றச்சாட்டை மட்டுப்படுத்தவும் உதவும்.

காஷ்மீர் பிரச்னைக்குத் தீர்வு காணும் வரை இந்தியாவுடன் வணிகத்தை மேம்படுத்த இயலாது என்று கூறிவருகிறது பாகிஸ்தான்.

அமைதிப் பேச்சு வார்த்தைகளில் முன்னேற்றமும் விவேகமும் தென்படும் இப்போதும்கூட பாகிஸ்தான் தன் பிடிவாதத்திலிருந்து இறங்கி வரவில்லை. காலத்திற்கு ஒவ்வாத இந்த நிலைப்பாடு தேவையா என்பதை பாகிஸ்தான் எண்ணிப்பார்க்க வேண்டும்.

தெற்காசியப் பல்கலைக்கழகம், சார்க் உணவு வங்கி போன்ற திட்டங்களும் “சார்க்’ மாநாட்டின் கூட்டறிக்கையில் இடம்பெற்றன. நீராதாரங்கள் பங்கீடு, மின்சக்தி, உணவு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு போன்றவற்றிலும் கூட்டு முயற்சிகள் வலியுறுத்தப்பட்டன. இவை புதியவை அல்ல. எனினும் முதல் முறையாக இவற்றை நிறைவேற்ற காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.

“சார்க்’ மாநாட்டின் அறிக்கைகளிலும் தீர்மானங்களிலும் உள்ள பல்வேறு அம்சங்களை வெளிக்கொணர்ந்து நடைமுறைப்படுத்த வேண்டும். அப்போதுதான் அண்டை நாடுகளிடையே நட்புறவும் வணிகமும் கல்வியும் வேலைவாய்ப்பும் வளரும். “சார்க்’ அமைப்பு உலக அரங்கில் ஒரு சக்தியாக உருவெடுக்க இயலும்.

(கட்டுரையாளர்: ஹாங்காங்கில் பணியாற்றும் பொறியாளர்)

Posted in Actions, Asean, Asia, Bangaldesh, Bhutan, Burma, Chat, China, Colombo, Cooperation, Economy, Eelam, Eezham, EU, Exim, Exports, External, External Affairs, extradition, FERA, Finance, Foreign, Govt, IMF, Imports, LTTE, Maldives, Myanmar, NATO, Neighbor, Neighbours, Nepal, Op-Ed, Pakistan, Power, Process, Relations, SAARC, Sri lanka, Srilanka, Talks, Tariffs, Tax, Tibet, UN, WB, WTO | Leave a Comment »

Cinema shooting in Trains – Railways updates the Procedure for Movie Locations

Posted by Snapjudge மேல் ஜூன் 10, 2007

ரயில் நிலையங்களில் சினிமா படப்பிடிப்புக்கு தடை

புது தில்லி, ஜூன் 11: இனி ரயிலின் மீது ஏறி, வில்லன்களுடன் பாய்ந்து, பாய்ந்து சண்டை போடுவது, காதலியை சமாதானப்படுத்த ரயில் படிக்கட்டில் தொங்கியபடியே அடுத்த ரயில்நிலையம் வரும் வரை வசனம் பேசுவது, பல வண்ண உடைகளில் ஆர்ப்பாட்டமாக நடனக்குழுவினருடன் டான்ஸ் ஆடுவது போன்ற காட்சிகளை இனி காணமுடியாது.

ரயில்வே துறையினர் வெளியிட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகளை கடைபிடித்தால் மட்டுமே இனி இதுபோன்ற காட்சிகளை படம்பிடிக்க அனுமதி கிடைக்கும்.

பயணிகளுக்கு எவ்வித இடையூறுகளும் இல்லை என உறுதிப்படுத்தவேண்டும், பகல்நேரங்களில் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள ரயில் நிலையங்களில் படப்பிடிப்பு வைக்கக்கூடாது உள்ளிட்ட பல வழிமுறைகளை ரயில்வேதுறை வலியுறுத்தி உள்ளது.

படப்பிடிப்புக்கு நாள் ஒன்றுக்கு ரூ.1 லட்சம், 50 ஆயிரம், 25 ஆயிரம் என மூன்று பிரிவுகளில் வசூலிக்கப்படும். அதேபோல, உரிமக் கட்டணமாக ரூ. 30 ஆயிரமும் வசூலிக்கப்படும். மறுசீரமைக்கப்பட்டுள்ள இந்த உரிமக் கட்டணம் ஜூன் 1 முதல் அமுல்படுத்தப்பட்டுள்ளது எனவும் ரயில்வேத்துறை தெரிவித்துள்ளது.

படப்பிடிப்பின்போது எவ்வித சேதமும் நிகழக்கூடாது. இதற்கு முன்கட்டணமாக உரிமக்கட்டணம் செலுத்தவேண்டும். அதோடு, ரயில்வே நிர்வாகத்துடன் ஓர் உத்தரவாத ஒப்பந்தம் செய்து கொள்ளவேண்டும்.

தூர்தர்ஷன், புனே மற்றும் கோல்கத்தா திரைப்படக் கல்லூரிகள் தவிர அரசு அங்கீகாரம் பெற்ற திரைப்பட பயிற்சி நிறுவனங்களுக்கு உரிமக்கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளன.

இந்த வழிமுறைகள் அனைத்தும் ரயில் உற்பத்தி யூனிட்டுகள் மட்டுமில்லாது அனைத்து பொதுத்துறை நிறுவனங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

திரைப்படத்தின் திரைக்கதையில் ரயில்வே துறையினருக்கு சொந்தமான பொருள்களுக்கு சேதாரம் ஏற்படும்வகையில் அமைக்கப்பட்டுள்ளதா என ஆய்வு செய்யப்படும். அதுமட்டுமில்லாமல், ரயில்வே துறையின் முன் அனுமதி இல்லாமல் ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்களின் பெயர்களை மாற்றுதல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது.

ரயில்வே துறையினரிடம் ஏற்கெனவே தாக்கல் செய்துள்ள திரைக்கதையில் ஏதேனும் மாற்றம் செய்து படம் பிடிக்கப்படுகிறதா என்பதை கண்காணிக்க படப்பிடிப்பு நடக்கும் இடங்களில் சிறப்பு அதிகாரி ஒருவர் நியமிக்கப்படுவார்.

சினிமாக் குழுவினர் தவிர மற்றவர்கள் புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்க அனைத்து ரயில்நிலையங்களில் உள்ள முதன்மை மக்கள் தொடர்பு அதிகாரியிடம் அனுமதி பெற்றுக்கொள்ளலாம்.

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் ரயில்வேத் துறையிடம் இதற்கான அனுமதியைப் பெற்றுக் கொள்ளலாம். வியாபார மற்றும் வணிக ரீதியாக புகைப்படம் எடுத்துக் கொள்ள எவ்வித உரிமக் கட்டணமும் செலுத்தத் தேவையில்லை. இச்சலுகை பத்திரிகைகளுக்கும் பொருந்தும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Posted in Bollywood, Camera, Cinema, Doordarshan, Duets, Fights, Film Institute, Films, Freight, Hindi, Kollywood, License, Locations, Love, Movie, Movies, Permission, Permissions, Picturization, Platform, Procedure, Process, Production, Props, Railways, Rly, Scenes, Screenplay, Sets, Spot, Telugu, Tollywood, Trains, Travel, Traveler | Leave a Comment »

Neeraja Choudhry: Manmohan Singh’s Three Year Anniversary – Achievements

Posted by Snapjudge மேல் மே 21, 2007

மன்மோகன் அரசின் மூன்றாண்டு சாதனைகள்!

நீரஜா சௌத்ரி

மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் மூன்றாண்டு கால ஆட்சிக்கு நல்ல உதாரணமாக, திமுகவைச் சேர்ந்த வி. ராதிகா செல்வி மத்திய இணை அமைச்சராகப் பதவியேற்ற விதம், சூழ்நிலை ஆகியவற்றைக் குறிப்பிடலாம்.

அடுத்தடுத்து கிடைத்த தேர்தல் தோல்விகளால் காங்கிரஸ் கட்சி பலவீனம் அடைந்திருப்பதையும், அதனால் இந்தக் கூட்டணி அரசில் இடம் பெற்றுள்ள தோழமைக் கட்சிகள் நாளுக்குநாள் தங்களுடைய நெருக்குதலை அதிகரித்துக் கொண்டே வருவதையும் சுட்டிக்காட்ட இந்த ஒரு சம்பவமே போதும்.

பிரதமரின் அதிகாரம் குறைந்துகொண்டே வந்து, “”இன்று யார் எப்படி ஆட்டுவித்தாலும் ஆடுகிற நிலைமைக்கு” வந்து விட்டதையும், மூன்று ஆண்டுகளுக்கு முன்பிருந்த நிலைமை மாறி எது நடந்தாலும் “”சகித்துக் கொள்வது” என்கிற பரிபக்குவ நிலையை அவர் எய்திவிட்டதையுமே இது உணர்த்துகிறது.

மத்திய அமைச்சரவையிலிருந்து விலகிய தயாநிதி மாறனுக்குப் பதிலாக, திமுக சார்பில் அமைச்சரவையில் இடம்பெறப் போகிறவர் யார், அவருடைய இலாகா எது, பதவியேற்பு நாள் என்றைக்கு என்பதையெல்லாம் தீர்மானம் செய்யும் அதிகாரம் பிரதமருக்கு இல்லை!

ராதிகா செல்விதான் அடுத்து இணை அமைச்சராகப் பதவி ஏற்பார், உள்துறை அமைச்சகம்தான் அவருக்கு வழங்கப்படும், பதவியேற்பு இந்தத் தேதியில் நடைபெறும் என்பதெல்லாம் முதலில் சென்னையில்தான் அறிவிக்கப்படுகிறது, தில்லியில் அல்ல!

மத்திய அரசில் தங்கள் கட்சி சார்பில் இடம்பெறப் போவது யார் என்று பிராந்தியக் கட்சிகளின் தலைவர்கள் தீர்மானிப்பது இது முதல்முறையல்ல. 1996-ல் எச்.டி. தேவ கெüடா பிரதமரானதிலிருந்தே இதுதான் நடைமுறையாக இருக்கிறது. அவரது அரசையே, “”முதலமைச்சர்களின் அரசு” என்று கேலியாகக் குறிப்பிடுவார்கள்.

கூட்டணி அரசில் தோழமைக் கட்சிகள் முக்கியமான இலாகாக்களைக் கேட்டு வாங்குவதும் இது முதல்முறையல்ல. ஆதரிக்கும் கட்சியின் வலுவுக்கு ஏற்ப இதில் “”தீவிரமான பேரமே” நடைபெறுவது வழக்கம்.

இவை எல்லாவற்றையும்விட முக்கியம் என்னவென்றால், மத்திய திட்டக்குழு கூட்டத்துக்குத் தலைமை தாங்கிக் கொண்டிருந்த பிரதமர், தமிழக முதலமைச்சரிடமிருந்து இரண்டு கடிதங்களைக் கொண்டுவந்த தூதரை (மின்துறை அமைச்சர் ஆர்க்காடு வீராசாமி) வரவேற்க கூட்டத்தின் பாதியிலேயே எழுந்து வெளியே வருகிறார்.

குடியரசுத் தலைவரோ, சோனியா காந்தியோ பிரதமருடன் பேச விரும்பினால்கூட, அது முன்கூட்டியே அவருக்குத் தெரிவிக்கப்பட்டு நேரம் ஒதுக்கப்படுகிறது. பிரதமர் அப்படி நேரம் ஒதுக்கிச் சந்திக்கும்வரை காத்திருக்க முடியாத அந்தத் தூதர் உடனே சந்திக்க வேண்டும் என்று ஆலாய்ப் பறக்கிறார்; சிறிது நேரம் கழித்து சந்திக்கிறேனே என்று பிரதமரால் அவரிடம் சொல்ல முடியவில்லை!

மே 22-ம் தேதியுடன் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு ஆட்சிக்கு வந்து மூன்று ஆண்டுகள் நிறைவடைகின்றன. இதைக் கொண்டாட பெரிய விழா எடுப்பதற்கான அறிகுறி ஏதும் தெரியவில்லை; கடந்த ஆண்டைப் போல ஆட்சியின் சாதனைகளைப் பட்டியலிடும் அறிக்கையையும் காணவில்லை.

சாதகமான அம்சம் எதுவென்றால், கடந்த மூன்று ஆண்டுகளாகவே நாட்டின் பொருளாதார வளர்ச்சி வீதம் அதிகரித்துக் கொண்டே வந்து இப்போது 9% ஆகியிருக்கிறது. அன்னியச் செலாவணி கையிருப்பு மிக அதிகமாக இருக்கிறது. ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் தர யாரும் தீவிரமாக முயற்சிக்காவிட்டாலும், முக்கியமான விஷயங்களில் முடிவு எடுப்பதற்கு முன்பு இந்தியாவிடமும் ஆலோசனை கலக்கின்றனர்.

நாட்டில் கடந்த மூன்று ஆண்டுகளாகவே அங்கும் இங்கும் வன்செயல்கள் நிகழ்கின்றன. ஹைதராபாத் நகரின் மெக்கா மசூதியில் குண்டு வெடிப்பு நிகழ்ந்திருப்பது சமீபத்திய நிகழ்வாகும். பஞ்சாப், ஹரியாணா உள்ளிட்ட மாநிலங்களில் சீக்கியர்களுக்கும் தேரா பாபா ஆதரவாளர்களுக்கும் இடையில் மோதல்கள் நடப்பது கவலைதரும் அம்சமாகும். காலிஸ்தான் கிளர்ச்சி கால வன்முறைச் சம்பவங்கள் நினைவைவிட்டு நீங்காததால், இந்த மோதல் எங்கே பெரிதாகிவிடுமோ என்று நடுநிலையாளர்கள் அஞ்சுகின்றனர். ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு மட்டுமே வழக்கமாக இருந்த பயங்கரவாதிகளின் தாக்குதல் இப்போது பரவலாக எல்லா மாநிலங்களிலும் தலைகாட்ட ஆரம்பித்துள்ளது.

காங்கிரஸ் கட்சியின் தலைமையில் மத்தியில் கூட்டணி அரசு ஆட்சி செய்வது இதுவே முதல் முறை. 2004-ல் தொடங்கப்பட்ட இந்த கூட்டணி அரசு ஏற்பாட்டில், அரசியல் அதிகாரம் தனியாகவும் (சோனியா), ஆட்சி நிர்வாகம் (மன்மோகன்) தனியாகவும் பிரிக்கப்பட்டது. தெலங்கானா ராஷ்டிர சமிதி, சமாஜவாதி கட்சி ஆகியவை அரசை ஆதரிப்பதில்லை என்று முடிவு செய்து விலகிய போதிலும் கவிழாத அளவுக்கு “”நிலையான அரசாக” ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு இருக்கிறது.

இந்த ஆட்சியில் பாதகமான அம்சங்களும் இருக்கின்றன; ஆளும் கூட்டணியில் உள்ளவர்களுக்கு இது கலக்கத்தையே அளித்துவருகிறது. விலைவாசி உயர்ந்துகொண்டே இருக்கிறது; கடன் சுமையால் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதும் தொடர்கிறது. பணக்காரர்களைப் பாதுகாக்கத்தான் காங்கிரஸ் கட்சி என்ற எண்ணம் மக்களிடையே ஆழமாக வேரூன்றி வருகிறது.

பொதுத் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி தொடர்ந்து தோற்றுக்கொண்டே வருகிறது; சமீபத்திய தோல்வி உத்தரப்பிரதேசத்தில். பஞ்சாப், உத்தரகண்ட், மும்பை-தில்லி மாநகரமன்றத் தேர்தல்கள் இதற்கு முந்தையவை. இதே ரீதியில் போய்க்கொண்டிருந்தால் 2009 மக்களவை பொதுத் தேர்தலில் அது இரட்டை இலக்கத்தில்தான் எம்.பி.க்களைப் பெற முடியும்.

பொருளாதாரம் வளர்ந்திருக்கிறது ஆனால் அது மக்களுக்குப் பயன்படவில்லை என்று காங்கிரஸ்காரர்களே இப்போது ஒப்புக்கொள்கிறார்கள். 60% மக்களுக்கு வாழ்வாதாரமாக விளங்கும் வேளாண்மைத்துறை 2% வளர்ச்சியைத்தான் பெற்றுள்ளது. தகவல் தொழில்நுட்பத் துறையோ (ஐ.டி.) குதிரைப் பாய்ச்சலில் ஓடிக்கொண்டிருக்கிறது. அடித்தளக் கட்டமைப்புகள் மிக மோசமாக இருக்கும் பின்தங்கிய பகுதிகளும், உள்நாட்டுப் பகுதிகளும் தொடர்ந்து வறுமையில் ஆழ்ந்துகிடக்கின்றன.

சீனா, ஜப்பானைவிட அதிக அளவில் புதுக் கோடீஸ்வரர்கள் உருவாகும் நாடாக இந்தியா மாறி வருகிறது; அதே வேளையில் மக்கள் தொகையில் மிகப் பெரும்பான்மையினர் பரம ஏழைகளாக வறுமையில் வாடுகின்றனர்.

பணக்காரர்களுக்கு சாதகமான கட்சி என்ற தோற்றத்தை விலக்க, அனைவருக்கும் கல்வி திட்டம், தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம், தேசிய ஊரக சுகாதார திட்டம், நகர்ப்புற மீட்சித்திட்டம் போன்றவற்றை அமல்செய்ய ஆரம்பித்தும் எதிர்பார்த்த “”அரசியல் விளைவை” அந்தத் திட்டங்களால் ஏற்படுத்த முடியவில்லை.

முஸ்லிம்களின் ஆதரவைத் திரும்பப்பெற, சச்சார் கமிட்டியின் பரிந்துரைகளைப் பெற்று அதை பகிரங்கப்படுத்துவது, ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம். போன்ற உயர் கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இடங்களை ஒதுக்குவது போன்ற அதன் “”அரசியல் முடிவுகளும்” எதிர்பார்த்த பலன்களைத் தரவில்லை. இட ஒதுக்கீட்டு முடிவால் அதற்குக் கிடைத்த பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் வாக்குகளைவிட, காங்கிரஸ் கட்சி இழந்த முற்பட்ட வகுப்பினரின் வாக்குகள்தான் அதிகம் என்பதையே உத்தரப்பிரதேச தேர்தல் முடிவுகள் தெரிவிக்கின்றன.

முஸ்லிம்களும் காங்கிரஸ் கட்சியின் முடிவுகளால் மகிழ்ச்சி அடைந்தாற்போலத் தெரியவில்லை. ஈரான் விவகாரத்திலும், சதாம் ஹுசைனை இராக்கில் தூக்கில் போட்ட விவகாரத்திலும் காங்கிரஸ் கட்சி நடந்துகொண்ட விதம் அவர்களை நோகவைத்தது. சமத்துவம், சம நீதி என்பவை கட்சிக்கும் அரசுக்கும் இப்போது பெரிய சவாலாகத் திகழ்கின்றன. கூட்டணியிலேயே பெரியது காங்கிரஸ் கட்சிதான் என்பதால், எந்தத் தோல்விக்கும் அதன் தலையில் பழியைப் போடுவது தோழமைக் கட்சிகளுக்கு மிக எளிதாக இருக்கிறது. எல்லாம் விபரீதமாகிவருகிறது என்று காங்கிரஸýக்குத் தெரிகிறது, ஆனால் அதை எப்படி தடுத்து நிறுத்துவது என்றுதான் தெரியவில்லை.

===================================================

மன்மோகன் அரசின் சாதனைகள்-2

நீரஜா சௌத்ரி

உயர்ந்துவரும் விலைவாசியைக் கட்டுப்படுத்துங்கள், சிறப்புப் பொருளாதார மண்டலங்களை அமைப்பதில் வேகம் வேண்டாம், அரசுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்க வேண்டாம் என்றெல்லாம் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கடிதம் எழுதினார்.

திறமைசாலிகளான மத்திய அமைச்சர்கள் “”அரசியல்” விளைவுகளைக் கருதி நடவடிக்கைகளை எடுக்கத் தயங்குவதால் நிலைமை மோசமாக இருக்கிறது. நிதி அமைச்சகத்தை நிர்வகிப்பதில் திறமைசாலியான ப. சிதம்பரம் விலைவாசி உயர்வுக்காகக் கண்டிக்கப்படுகிறார். தேர்தலில் காங்கிரஸ் தோற்பதற்கு விலைவாசி உயர்வும் ஒரு காரணமாக இருக்கிறது.

பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வர ஆரம்பித்த உடனேயே கட்சித்தலைவர்கள், “”தோல்விக்குக் காரணம் விலைவாசி உயர்வுதான்” என்று பேச ஆரம்பித்துவிட்டார்கள். சோனியா காந்தியின் ஒப்புதல் இல்லாமல் அம்பிகா சோனியும் ஜெயந்தி நடராஜனும் இப்படிப் பேசியிருக்க வழியில்லை.

“”விலை ஏன் உயருகிறது என்று இனிமேல் விளக்கம் அளித்துக்கொண்டிருக்க முடியாது, நீங்கள் வேண்டுமானால் அந்த வேலையைச் செய்யுங்கள்” என்று விவசாய அமைச்சர் சரத் பவாரிடம், நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறினாராம். வேளாண் விளைபொருள்களுக்கான கொள்முதல் விலையை உயர்த்தி அறிவிக்க வேண்டும் என்ற பேச்சு வந்தபோது, அவர் இப்படிக் கூறினாராம்.

திறமையான நிர்வாகி என்றாலும், கோதுமை இறக்குமதி குறித்து உரிய நேரத்தில் முடிவெடுக்காமல், சந்தையில் விலை அதிகரித்த பிறகு எடுத்ததற்காக பவாரையும் கட்சியினர் கண்டித்தனர். வெற்றிகரமான வர்த்தக அமைச்சராகக் கருதப்பட்ட கமல்நாத், சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கு நந்திகிராமம் போன்ற ஊர்களில் கிடைத்த “”வரவேற்பினால்” சிக்கலில் ஆழ்ந்திருக்கிறார்.

வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணப் முகர்ஜி எந்த நாட்டையும் சாராமல் நடுநிலைமையைக் கடைப்பிடிக்க முற்பட்டுள்ளார். அமெரிக்காவுடனான ஆக்கச் செயலுக்கான அணு உடன்பாட்டை அரசு நியாயப்படுத்திவரும் அதே வேளையில் ஈரானுடனான உறவை வலுப்படுத்த அந்த நாட்டுக்குச் சென்றுவந்தார். பிரணப் முகர்ஜி குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டால், மத்திய அரசே கவிழ்ந்துவிடும் என்ற அளவுக்கு அவருடைய ஆதரவாளர்கள் அவருடைய முக்கியத்துவம் குறித்துப் பேசுகின்றனர்.

ரயில்வே துறையில் நிதிநிலைமையை மேம்படுத்திய லாலு பிரசாதின் வெற்றியின் ரகசியம் என்ன என்று அறிய ஹார்வர்டின் மேலாண்மையியல் மாணவர்கள் தில்லிக்கு வருகின்றனர். திறமையான அதிகாரிகளை ஊக்குவித்து, அவர்களைச் சுதந்திரமாகச் செயல்பட அனுமதித்ததே லாலுவின் வெற்றி ரகசியமாகும். சுற்றுலா, கலாசாரத்துறை அமைச்சர் அம்பிகா சோனி, விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் பிரஃபுல் படேல், அறிவியல், தொழில்நுட்பத்துறை அமைச்சர் கபில் சிபல், (பெட்ரோலியத்துறை அமைச்சராக இருந்தபோது) மணி சங்கர ஐயர் ஆகியோர் கடந்த ஆண்டு சிறப்பாகச் செயல்பட்ட அமைச்சர்களாகப் பாராட்டப்படுகின்றனர்.

உத்தரப் பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி அமைப்பு ரீதியாக வலுவாக இல்லாததே, பேரவைத் தேர்தலில் தோல்விக்குக் காரணம் என்று சோனியா காந்தி பகிரங்கமாக ஒப்புக்கொண்டிருக்கிறார். 2004-05-ல் மேல் சாதியினரும் முஸ்லிம்களும் ஆதரித்த நிலையிலும்கூட கட்சியை வலுப்படுத்துவதற்கான சந்தர்ப்பத்தை காங்கிரஸ் கோட்டைவிட்டது. அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி (ஏ.ஐ.சி.சி.) திருத்தியமைக்கப்படவில்லை. கட்சியின் பொதுச் செயலாளர்களாக இருந்த 3 பேர் அமைச்சர்களானதால் காலியான அந்தப்பதவிகள் இன்றுவரை நிரப்பப்படவில்லை. பல மாநிலங்களில் பிரதேச காங்கிரஸ் கமிட்டிகள் திருத்தியமைக்கப்படவில்லை.

வேட்பாளர்களை மாயாவதி, தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்னதாகவே முடிவு செய்கிறார். தில்லி மாநகராட்சி தேர்தலில் வேட்பு மனு தாக்கல் செய்யவே இன்னமும் இரண்டே நாள்கள்தான் இருக்கின்றன என்ற நிலையில்தான் வேட்பாளர்களையே காங்கிரஸ் கட்சி தேர்வு செய்தது.

சோனியா காந்திக்கு மக்களுடனான தொடர்பு குறைந்துகொண்டே வருகிறது. ஒரு பிரச்னை குறித்தோ, தீர்மானம் குறித்தோ தீவிரமாக விவாதித்து முடிவெடுக்கும் போக்கு கட்சியில் குறைந்து வருகிறது.

இரு கூட்டணிகளை மையமாகக் கொண்டுதான் தேசிய அரசியல் என்ற நிலைமை ஏற்பட்டிருந்தாலும் தேசியக் கட்சிகளுக்குத் தேவையே இல்லை என்கிற நிலைமை குறித்து காங்கிரஸ், பாஜக இரண்டும் கவலைப்பட்டாக வேண்டும். இதனால்தான் இருகட்சி ஆட்சி முறை வேண்டும் என்றார் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம். அடுத்த குடியரசுத் தலைவர் யார் என்பதைத் தீர்மானிப்பதற்கான முன்முயற்சி, உத்தரப்பிரதேச வெற்றிக்குப் பிறகு மாயாவதியின் கைக்குப் போய்விட்டது.

ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் முதல் இரண்டு ஆண்டு காலத்தில் பிரதமர் மன்மோகன் சிங் குறித்து எதிர்க்கட்சியினரும் மக்களும் ஒருவித பரிதாபத்துடன் பேசினர். இப்போது அவரை, “”மகாகனம் பொருந்திய அமைச்சரவைச் செயலர்” என்று ஏளனமாகக் கூறுகின்றனர்.

அரசிடமிருந்து எல்லாவிதமான சலுகைகளையும் எதிர்பார்க்கும் “”கையேந்தி முதலாளித்துவம்” கூடாது என்று ஒரு கட்டத்தில் பொறுமை இழந்து பிரதமர் மன்மோகன் சாடியிருக்கிறார். ஆட்சி அதிகாரம் தோழமைக் கட்சிகளிடமும் சோனியா காந்தியிடமும்தான் இருக்கிறது என்ற விரக்தியால் வந்த விமர்சனம் அது.

உத்தரப் பிரதேசத்தில் காங்கிரஸ் தோற்றதால் மன்மோகன் சிங்குக்கு மறைமுகமாக ஒரு நன்மை ஏற்பட்டிருக்கிறது. இல்லாவிட்டால் ராகுல் காந்தியைப் பிரதமராக்கு, அல்லது அமைச்சராக்கு என்ற கோஷம் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை எதிரொலித்திருக்கும். சோனியாவும் மன்மோகனும் உத்தரப் பிரதேசத் தேர்தலை முன் நின்று தலைமை வகித்திருந்தால் வெற்றி கிட்டியிருக்கும். என்ன நடக்கிறதோ அதற்கேற்ப செயல்படலாம் என்ற நினைப்பே தோல்விக்குக் காரணம்.

கட்சியின் முன்னாலும் ஆட்சியின் முன்னாலும் உள்ள பிரச்னைகளை தொலைபேசி மூலம் தனித்துப் பேசி விவாதிக்கும் நிலையில் இருவருமே இல்லை.

2004-ல் பிராந்திய கட்சிகளை ஒன்று சேர்த்துக் கூட்டணி அமைத்து, முன்னிலையில் இருந்து பிரசாரம் செய்து வெற்றியை ஈட்டினார் சோனியா. ஆட்சிக்கு வந்த பிறகு பின்னணியில் இருந்து ஆட்சியை வழிநடத்த முற்பட்டார். ஆனால் அதில் முனைப்பும், தீவிர முயற்சியும் இல்லாததால் தொய்வு ஏற்பட்டுவிட்டது. தொடர்ந்து ஆட்சியில் நீடிக்க விரும்பினால் காங்கிரஸ் கட்சி தனது தவறுகளை இப்போதாவது திருத்திக் கொள்ள வேண்டும். இல்லையென்றால், 2009 இவர்கள் எதிர்பார்ப்பதுபோல அமையாது.

தமிழில்: சாரி
———————————————————————————————–

எல்லா துறையிலும் காங். கூட்டணி அரசுக்கு தோல்வி: பாஜக 66 பக்க கண்டன அறிக்கை

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் 3 ஆண்டுக்கால பதவி நிறைவையொட்டி, பாரதீய ஜனதா தயாரித்த 66 பக்க அறிக்கை தில்லியில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது. கட்சித் தலைவர் ராஜ்நாத் சிங் (இடமிருந்து 3-வது) இதை வெளியிட்டார். ஐ.மு.கூ. ஆட்சியில் சாமான்ய மனிதனுக்கு ஏற்பட்ட துயரங்களைப் பட்டியலிடுகிறது அறிக்கை.

புது தில்லி, மே 23: “”பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு தனது 3 ஆண்டுக்கால ஆட்சியில் எல்லா துறைகளிலும் தோற்றுவிட்டது” என்று பாரதீய ஜனதா குற்றம் சாட்டியிருக்கிறது. இது தொடர்பாக 66 பக்க அறிக்கையை கட்சியின் தலைவர் ராஜ்நாத் சிங் தில்லியில் செவ்வாய்க்கிழமை வெளியிட்டார்.

“நல்ல பொருளாதார நிர்வாகத்துக்கு அடையாளமே விலைவாசியை கட்டுக்குள் வைத்திருப்பதுதான். அத்தியாவசியப் பண்டங்களின் விலை ஏழைகளும், நடுத்தர மக்களும் நலமாக வாழ முடியாத அளவுக்கு உயர்ந்து கொண்டே வருகிறது. இதை கட்டுப்படுத்த அரசு எந்தவித நடவடிக்கைகளையும் எடுக்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது.

உள்நாட்டு பாதுகாப்பிலும் கோட்டைவிட்டுவிட்டது அரசு. பயங்கரவாதிகளையும் அவர்களுக்குத் துணை போகிறவர்களையும் கட்டுக்குள் வைக்கத்தான் “”பொடா” சட்டம் கொண்டுவரப்பட்டது. காங்கிரஸ் தலைமையிலான இந்த அரசு ஆட்சிக்கு வந்த பிறகு அயோத்தி, பெங்களூர், காசி, தில்லி, மும்பை, மாலேகாம், ஹரியாணாவில் சம்ஜெüதா எக்ஸ்பிரஸ் ரயில், ஜம்மு மற்றும் இப்போது ஹைதராபாத் ஆகிய இடங்களில் பயங்கரவாதிகள் குண்டுவெடிப்புகள் நடத்தியுள்ளனர். இவற்றைத் தடுக்கத்தான் முடியவில்லை என்றாலும், சம்பந்தப்பட்டவர்களை அதன் பிறகு பிடிப்பதிலும் இந்த அரசு கோட்டைவிட்டுவிட்டது.

கோயம்புத்தூர் சிறையில் இருக்கும் அப்துல் நாசர் மதானிக்குச் சலுகை காட்ட வேண்டும் என்று கேரள சட்டப் பேரவையில் “”ஒருமனதாக” தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது; தில்லியில் நாடாளுமன்றத்தின்மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் முக்கியப் பங்கு வகித்தவர் என்று தீர்ப்பு கூறப்பட்ட அப்சல் குருவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை நிறைவேற்றப்படாமல் அப்படியே கிடப்பில் போடப்பட்டுவிட்டது. சிறுபான்மை மக்களை வாக்கு வங்கியாகக் கருதியே எல்லா முடிவுகளும் எடுக்கப்படுகின்றன.

ஆந்திரம், ஒரிசா, சத்தீஸ்கர், ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் நக்சல்களை ஒடுக்க முடியவில்லை.

அரிசி, கோதுமை, பருப்புவகைகள், சமையல் எண்ணெய், காய்கறிகள், பெட்ரோல், டீசல், சிமெண்ட், இரும்பு ஆகிய எல்லாவற்றின் விலையும் கடந்த 3 ஆண்டுகளாக விஷம் போல ஏறி வருகின்றன.

நாட்டின் நிதி நிலைமை உபரி என்ற நிலையிலிருந்து பற்றாக்குறை என்ற அளவுக்கு இப்போது சரிந்துவிட்டது.

பாஜக கூட்டணி அரசு ஆட்சியில் இருந்தபோது வீடுகட்ட 6% வட்டியில் கடன் தரப்பட்டது. இப்போது அந்த கடனுக்கான வட்டி வீதம் 12% என்று இருமடங்காக உயர்ந்துவிட்டது. இதனால் நடுத்தர மக்கள் வேதனையில் ஆழ்ந்துள்ளனர்.

பாதுகாப்புப் படையினர் மனித உரிமைகளை மீறினால் இந்த அரசால் சகித்துக் கொள்ள முடியாது என்று முழங்கினார் பிரதமர் மன்மோகன் சிங்; பயங்கரவாதிகள் மக்களைத் தாக்கினால் சகித்துக் கொள்வது என்று தீர்மானித்துவிட்டார்களா என்று கேட்க விரும்புகிறோம். பாகிஸ்தானில் இன்னமும் 59 பயங்கரவாதப் பயிற்சி முகாம்கள் செயல்பட்டுக்கொண்டிருக்கின்றன என்று வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜியே கூறியிருக்கிறார். அந்த முகாம்கள் தொடர்பாக பாகிஸ்தானிடம் என்ன பேசினார்கள் என்று தெரிய வேண்டும்.

காஷ்மீரில் சமீபத்தில் நடந்த ஒரு பொது நிகழ்ச்சியில் பாகிஸ்தான் ஆதரவு இயக்கமான லஷ்கர்-இ-தொய்பாவின் ஆதரவாளர்கள், பாகிஸ்தான் கொடிகளுடன் இந்திய எதிர்ப்பு கோஷங்களை எழுப்பிக்கொண்டு சென்றனர். அவர்கள் மீது மத்திய அரசு இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதே இந்த கூட்டணியின் 3 ஆண்டு ஆட்சிக்கு உரைகல்லாகத் திகழ்கிறது’ என்று ராஜ்நாத் சிங் வெளியிட்ட குற்றச்சாட்டு தெரிவிக்கிறது.

“பிரதமர் பதவியே வேண்டாம் என்று தியாகி போல நடித்த சோனியா காந்திதான் இந்நாட்டின் உண்மையான அதிகாரம் உள்ள பிரதமர் என்பது நாடறிந்த ரகசியம். அப்படிக் கூறியவர் தேசிய ஆலோசனைக் கவுன்சில் தலைவர் என்ற பதவியை காபினெட் அமைச்சர் அந்தஸ்தில் அவசர அவசரமாக ஏற்றார். அதை பிரதமரின் அலுவலகத்துக்கு இணையாக உருவாக்கினார்கள். ஜெயா பச்சனை அரசியல் ரீதியாகப் பழிவாங்க, ஒருவருக்கு இரு பதவியா என்று தேர்தல் கமிஷனிடம் புகார் செய்ய வைத்து, பிறகு அதே அஸ்திரம் தன் மீதும் பாய வருகிறது என்று தெரிந்ததும் முதலில் மக்களவை உறுப்பினர் பதவியையும் பிறகு தேசிய ஆலோசனைக் கவுன்சில் தலைவர் பதவியையும் ராஜிநாமா செய்து தியாக நாடகத்தை முடித்தார்’ என்றும் அந்த அறிக்கை கடுமையாகச் சாடுகிறது.
———————————————————————————————–

07.06.07
குமுதம் ரிப்போர்ட்டர்

சோலை – காங்கிரஸ் ஆட்சி: அலசல்

சென்ற ஆண்டுத் தொடக்கத்தில் மன்மோகன் சிங் அரசு பற்றி ஒரு கருத்துக் கணிப்பு வெளியானது. நாடாளுமன்றத்திற்கு மீண்டும் தேர்தலென்றால், ஐக்கிய முன்னணி 400 இடங்களுக்கு மேல் பெறும். காங்கிரஸ் கட்சி தனித்துப் போட்டியிட்டாலும் 300 இடங்களில் வெற்றி பெறும் என்று அந்தக் கணிப்பு தெரிவித்தது.

அதன் பின்னர் நடந்த சட்டமன்றத் தேர்தல்களில் _ காங்கிரஸ் கட்சி தனித்துப் போட்டியிட்டால் முகவரியே காணாமல் போகும் என்பதற்கு உத்தரப்பிரதேச சட்டமன்றத் தேர்தல் சாட்சியாக அமைந்துவிட்டது.

மன்மோகன் சிங் அரசு மூன்றாண்டுகளை முடித்துவிட்ட நிலையில், பிரபல தொலைக்காட்சி நிறுவனம் இப்போது கருத்துக் கணிப்பு நடத்தியது. மன்மோகன் சிங் அரசு மோசம் என்று 47 சதவிகிதம் பேர் தீர்ப்பளித்திருக்கின்றனர். ஏதோ பரவாயில்லை என்று 7 சதவிகிதம் பேர் சொல்லியிருக்கிறார்கள். நல்ல ஆட்சி என்று இரண்டு சதவிகிதம் பேர்தான் தீர்ப்பளித்திருக்கிறார்கள். அவர்கள் தொழில் சாம்ராஜ்ய அதிபதிகளாக இருக்கலாம்.

என்ன காரணம்? இந்த அரசின் சாதனைகள், சாதாரண மக்களை எட்டவில்லை என்று மத்திய அமைச்சர் மணிசங்கர அய்யரே சொல்லிவிட்டார்.

ஐயோ! விலைவாசி உயர்கிறது என்று மூன்று ஆண்டுகளாக இடதுசாரிக் கட்சிகள் குரல் கொடுத்துப் பார்த்தன. தொண்டை வறண்டு புண்ணாகிப் போனதுதான் கை கண்ட பலன். ஆமாம். பணவீக்கம் _ விலைவாசி உயர்வுதான் அரசு மீது மக்களுக்கு அதிருப்தி ஏற்படக் காரணம் என்று மன்மோகன் சிங் இப்போது கூறுகிறார்.

விலைவாசியை உயர்த்துவதில்தான் தொழில் அதிபர்கள் போட்டி போடுகிறார்கள் என்று அவர் வேதனை தெரிவித்திருக்கிறார். காலம் கடந்து ஞானம் பிறந்திருக்கிறது.

உணவு தானியங்களைத் தனியார் கொள்முதல் செய்ய அனுமதித்தது _ ஆன்_லைன் யூக பேர வணிகத்தை வளர்த்தது ஆகிய பல காரணங்கள்தான் விலைவாசி உயர்விற்குக் காரணம் என்பது பாமர மக்களுக்கும் புரியும். அவற்றை, திரும்பப் பெறவேண்டும் என்று இந்தியாவே குரல் எழுப்பிவிட்டது. ஆனால், தொழிலதிபர்கள், பெரிய வணிகர்கள், பதுக்கல்காரர்கள், கொள்ளை லாபக்காரர்களுக்கு ஆதரவான இந்த நடைமுறைகளைக் கைவிட இன்றுவரை மன்மோகன் சிங் அரசு மறுக்கிறது.

செயற்கையாக உணவுத் தட்டுப்பாடு உருவாக்கப்படுகிறது. இதனைக் காரணம் காட்டி, வெளிநாடுகளிலிருந்து உணவுப் பொருள்களை இறக்குமதி செய்கிறார்கள். அவற்றின் இறக்குமதி வரிகளைக் குறைக்கிறார்கள். விளைவு என்ன? இந்தியாவில் உற்பத்தியாகும் அதே பொருள்களின் விலை வீழும்; உற்பத்தி பாதிக்கும்.

வளர்ந்து வரும் மேலை நாடுகள் எப்படிச் சாதாரண மக்கள் மீது வரிகளைப் போடுகின்றன என்று தெரிந்து கொள்கிறார்கள். அந்த வரிகள்தான் இங்கு நம்மீது விதிக்கப்படுகின்றன. தொழிலதிபர்கள், பொருளாதார மண்டலவாதிகள், பன்னாட்டு நிதிநிறுவனங்கள், அன்னிய முதலீடுகள் ஆகிய அனைத்திற்கும் வரிச் சலுகைதான்.

ஏழை எளிய மக்கள், நடுத்தர மக்கள், சாமானிய மக்கள் ஆகியோர் சேவை வரியால் கடுமையாகச் சுரண்டப்படுகிறார்கள். அநேகமாக அவர்கள் பயன்படுத்தும் அனைத்துப் பொருள்களுக்கும், சிதம்பரம் அந்த வரியைத் திணித்து விட்டார். அந்த வரி ஆண்டுதோறும் உயர்வதோடு, புதிய துறைகளுக்கும் விரிவுபடுத்தப்படுகின்றது.

மன்மோகன் சிங் பிரதமராகப் பொறுப்பேற்றபோது, ஒரு மூட்டை சிமெண்ட் விலை 140 ரூபாய். இரண்டு மாதங்களுக்கு முன்னர், நிதி அமைச்சர் சிதம்பரம் பட்ஜெட் சமர்ப்பித்தபோது 180 ரூபாய். ‘இதோ… சிமெண்ட் விலை குறையப்போகிறது’ என்றார்கள். இன்றைய சிமெண்ட் விலை மூட்டை 230 ரூபாய். குதியாட்டம் போட்டு உயருகிறது.

குறிப்பிட்ட சில சிமெண்ட் கம்பெனிகளின் பகாசுரக் கோடீசுவரர்கள்தான் சிமெண்ட் விலையை நிர்ணயிக்கிறார்கள். ‘மயிலே மயிலே இறகுபோடு’ என்று அவர்களிடம் மன்மோகன் சிங் கெஞ்சுகிறார் _ சிதம்பரம் கொஞ்சுகிறார். ‘இன்னும் விலையை உயர்த்துவோம். என்ன செய்வீர்கள்?’ என்று அவர்கள் சவால் விடுகிறார்கள். லாபத்தைக் குறைக்க மாட்டோம் என்கிறார்கள்.

சீனாவும் பாகிஸ்தானும் மூட்டை 130 ரூபாய் என்று நமக்கு சிமெண்ட் இறக்குமதி செய்யத் தயாராக இருக்கின்றன. இறக்குமதி செய்வோம் என்றனர். ஆனால், அறிவிப்பு, செயல் வடிவம் பெறவில்லை. இன்னொரு பக்கம் நமது சிமெண்ட் துறை கோடீசுவரர்கள் அதற்கு முட்டுக்கட்டை போட்டுவிட்டார்கள்.

சிதம்பரம் பட்ஜெட் சமர்ப்பித்தபோது, ஒரு டன் இரும்புக் கம்பி விலை 26,000 ரூபாய். விலைவாசி தொப்பென்று விழப் போகிறது என்றார்கள். ஆனால், இன்றைக்கு இரண்டே மாதங்களில் 31 ஆயிரத்து 500 ரூபாயாக உயர்ந்திருக்கிறது.

நாடு தழுவிய அளவில் வலிமையான எதிர்க்கட்சி இல்லாததால், மன்மோகன் சிங் அரசு நகர்ந்து கொண்டிருக்கிறது. ஆனால், மக்கள் மவுனப் புரட்சிக்குத் தயாராகிவிட்டார்கள் என்பதனைத்தான் கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. என்ன காரணம்?

கடந்த மே தினத்தன்று வெனிசுலா நாட்டின் தலைநகர் காரகாசில் கடல் போல் மக்கள் கூட்டம். அந்த நாட்டின் அதிபர் ஹீகோ சாவோஸ் அற்புதமான சில பிரகடனங்களை வெளியிட்டார்.

அமெரிக்காவின் ஆளுகையில் உள்ள உலக வங்கி, சர்வதேச நிதி நிறுவனம் (ஐ.எம்.எஃப்) ஆகிய அமைப்புகளுக்கு இன்று முதல் விடை தருகிறோம் என்றார். இந்த நிதி நிறுவனங்கள் _ ஏழை நாடுகள், வளர்ந்து வரும் நாடுகள் மீது அமெரிக்காவின் வல்லாதிக்கத்தை நிலை நிறுத்துகிற நங்கூரங்கள் என்றார்.

இதேபோல், கடந்த மே தினத்தன்று இன்னொரு தென் அமெரிக்க நாடான பொலிவியாவும் உலக வங்கிக்கு விடை கொடுத்தது.

உலக வங்கிக்கு விடை கொடுக்கும் இன்னொரு நாடு நிகாரகுவா. வளரும் நாடுகளின் வாழ்வைச் சூறையாட அன்னிய முதலீடுகளைத் திணிக்கும் புரோக்கர்தான் உலக வங்கி என்று அந்த நாடு அறிவித்திருக்கிறது.

உலக வங்கியின் வழிகாட்டுதலும் ஆலோசனைகளும்தான் தங்கள் நாடுகள் சீரழிந்ததற்குக் காரணம் என்பதனை இப்போது சின்னஞ்சிறிய நாடுகள்கூட உணர்ந்து வருகின்றன. அவற்றின் விடுதலைக் குரலைக் கேட்கிறோம். ஆனால், இங்கே உலக வங்கிக்கு உடுக்கை அடிக்கும் பூசாரிகளைப் பார்க்கிறோம்.

பன்னாட்டு நிதி நிறுவனங்கள் அனைத்தையும் வெனிசுலா, பொலிவியா, நிகாரகுவா, சிலி ஆகிய நாடுகள் நாட்டுடைமையாக்கிவிட்டன. அந்தப் பன்னாட்டு நிதி நிறுவனங்கள் தங்களுக்கு முடிசூட்ட வரவில்லை; முள்கிரீடம் சூட்ட வந்தவை என்று பொலிவியா அதிபர் மோல்ஸ் அறிவித்திருக்கிறார்.

ஆனால், அன்னிய நிறுவனங்களின் வருகையும் அவற்றின் பல்லாயிரம் கோடி ரூபாய் முதலீடும்தான் நாட்டின் வளர்ச்சி என்று இங்கே பட்டியல் போடுகிறார்கள்.

அமெரிக்க ஆதிக்கத்திலிருந்த எண்ணெய், எரிவாயு வயல்களை, சென்ற ஆண்டு பொலிவியா தேசிய மயமாக்கியது. இந்த ஆண்டு வெனிசுலா தேசிய மயமாக்கியது. எண்ணெய் விலை வீழ்கிறது.

தங்கள் நாட்டுத் தண்ணீரையே எடுத்து தங்களுக்கு விற்பனை செய்த இத்தாலிய எடிசன் கம்பெனியை பொலிவியா வழி அனுப்பி வைத்துவிட்டது.

பொலிவியாவின் டெலிபோன் துறை முழுக்க முழுக்க இத்தாலிய நிறுவனத்தின் ஆதிக்கத்தில் இருந்தது. அதில் 50 சதவிகிதப் பங்குகளை அரசு எடுத்துக் கொண்டது. அடுத்து தேசியமயமாக்குகிறது.

ஆமாம். அங்கே சரித்திரச் சக்கரம் முன்னோக்கிச் சுழல்கிறது. இங்கே அந்தச் சக்கரத்தை மன்மோகன் சிங் அரசு பின்னோக்கிச் சுழற்றுகிறது. அதுதான் உலக வங்கி சொல்லிக் கொடுத்த பாடம்.

எண்ணெய் வளத்துறை இங்கே தேச உடைமையாகத்தான் இருந்தது. விரட்டப்பட்ட அன்னியக் கம்பெனிகளும், உள்நாட்டுத் தனியார் நிறுவனங்களும் அந்தத் துறையை இப்போது கபளீகரம் செய்கின்றன.

தொலைத்தொடர்புத் துறையில் 74 சதவிகித அன்னிய முதலீடுகளை அனுமதிக்க நிதியமைச்சர் சிதம்பரம் தயாராகிவிட்டார்.

அநேகமாக இன்னும் இரண்டே ஆண்டுகளில் இந்தியா முழுமையாக விற்பனை செய்யப்பட்டு விடும்.

விழித்துக் கொண்ட தென் அமெரிக்க நாடுகள் துரத்துகின்ற எல்லா அன்னிய நிறுவனங்களுக்கும் இங்கே பட்டுக் கம்பள வரவேற்பு அளிக்கப்படும். இன்னொரு பக்கம், கடந்த மூன்று ஆண்டுகளில் எத்தனை கோடீசுவரர்கள் உருவாகியிருக்கிறார்கள்? என்று ஏடுகள் கணக்கெடுத்து வெளியிடுகின்றன. லட்சாதிபதிகள், கோடீசுவரர்களாகிறார்கள். கோடீசுவரர்கள், மகா கோடீசுவரர்களாகிறார்கள். 34 கோடீசுவரர்கள், மகா கோடீசுவரர்களாகி இருக்கிறார்கள். அவர்களில் பலர் பங்குச் சந்தைச் சூதாட்டங்களில் வளர்ந்து வருபவர்கள்.

பொருளாதாரம், நிர்வாகம், முதலீடுகள் தொடர்பாக உலக வங்கி தரும் யோசனைகள்தான் செயல்படுத்தப் படுகின்றன. அதனால் விலைவாசி உயரும். வேலையில்லாத் திண்டாட்டம் வளரும். சமூக முரண்பாடுகள் விரிவடையும்.

அந்த உலக வங்கிச் சுனாமி சுழன்றடித்து வெளியேறிய நாடுகளுக்கு விடிவு காலம் பிறந்திருக்கிறது. உலக வங்கி, அன்னிய முதலீடுகள் அனைத்தும் ஓடுகின்றன. வெளிச்சம் தெரிகிறது. நெருப்புப் பறவைகள் சிறகடிக்கின்றன. விலைவாசி வீழ்கிறது.

இங்கே அதே அன்னிய முதலீடுகளும் உலக வங்கியும் நமது மயில்களின் கால்களை ஒடித்து சூப்பு வைத்துக் குடிக்கின்றன. விலைவாசி உயருகிறது. வேதனை பெருகுகிறது. நாடு நன்றாகவே இருளில் நடைபோடுகிறது.

—————————————————————————-

துக்ளக் 6.6.2007 இதழில் சோவின் தலையங்கம்

வியந்து பாராட்டுகிறோம்! இது ஒரு சாதனைதான்; மன்மோகன் சிங்கின் அரசு மூன்று ஆண்டுகளைக் கழித்து விட்டது. ‘ மற்ற சாதனைகள் என்ன?’ என்று கேட்டால், அது கொடூரமான கேள்வியாக இருக்கும். யாரைப் பார்த்து என்ன கேள்வி கேட்பது என்று வரைமுறை இருக்க வேண்டாமா? பதினோரு கட்சிகளை வைத்துக் கொண்டு அரசை நடத்தியாக வேண்டும். அதுவும் எப்பேர்ப்பட்ட கட்சிகள்? தி.மு.க. ஒரு உதாரணம் போதுமே?

‘வேண்டிய இலாகாக்கள் கிடைக்கா விட்டால், எதுவுமே வேண்டாம் போ’ என்று அடம் பிடித்து, வேண்டிய இலாகாக்களைப் பெற்றதிலிருந்து, இன்று வரை அவர்கள் மன்மோகன் சிங்கை பிரதமராகவா மதித்திருக்கிறார்கள்? ‘சோனியா காந்தி இருக்க பிரதமர் என்ன பொருட்டு?’ என்ற கழக அணுகுமுறையை, காங்கிரஸ்காரர்களும் கடைபிடித்து வருகிறார்களே! அர்ஜுன்சிங்கைப் பொறுத்த வரையில், பிரதமர் ஒரு தொந்தரவு; அவ்வளவுதான். சில சமயங்களில், அவரிடம் பேச வேண்டியிருக்கும், என்பதைத் தவிர வேறு பிரச்சனை இல்லை.

மற்ற காங்கிரஸ் அமைச்சர்கள், பிரதமரை பார்த்து பரிதாபப்படுகிறார்கள். லாலு பிரஸாத் யாதவ், ‘நானும் ஒரு நாள் பிரதமர் ஆகப்போகிறவன்தானே!’ என்று கூறி, இன்றைய பிரதமரை அவ்வப்போது மட்டம் தட்டுகிறார். இப்படி பார்த்துக்கொண்டே போனால், பிரதமரை பிரதமராக மதிக்கிற அமைச்சர் யாராவது ஓரிருவர் இருக்கிறார்களா என்ற சந்தேகமே வந்துவிடுகிறது. சோனியா காந்தியின் தயவில் பணிபுரிகிறவர், என்கிற முத்திரை பலமாக விழுந்திருக்கிறது. இதெல்லாம் போதாதென்று, இடது சாரிகள் வேறு அவ்வப்போது மிரட்டிக்கொண்டே இருக்கிறார்கள்.

சிதம்பரம், அலுவாலியா (திட்டக் கமிஷன்) போன்ற பொருளாதாரம் அறிந்தவர்களை உடன் வைத்துக்கொண்டும் கூட, மன்மோகன் சிங்கினால், முழுமையான பொருளாதார மாற்றங்களைக் கொண்டு வர முடியவில்லை. எதைச் செய்தாலும், இடது சாரிகள் முரண்டு பிடிக்கிறார்கள்; ‘அமெரிக்காவின் அடிமையாகி விடாதே’ என்று பயமுறுத்திக்கொண்டே இருக்கிறார்கள். இதெல்லாம் இவ்விதமாக இருக்க, தீவிரவாதிகள் விஷயத்தில் தாராள மனப்பான்மையைக் காட்ட வேண்டியிருக்கிறது.

அதுதான் உண்மையான மதச்சார்பின்மை என்று இடதுசாரிகளும், சோனியா காந்தியும் கூறுகிறபோது, பாவம் பிரதமர் என்ன செய்வார்? ஊழல் விஷயத்திலோ, கேட்கவே வேண்டாம். அந்தந்தத் துறை, அந்தந்த அமைச்சரின் சாம்ராஜ்யம். ஏற்கனவே கிரிமினல் குற்றச்சாட்டு உடையவர்கள்  லாலு பிரஸாத் யாதவ் உட்பட  அமைச்சரவையில் இடம் பெற்றிருக்கிறார்கள். ஒரு மந்திரி, கொலைக்குற்றத்திற்காக இப்போது நீதிமன்றத்தினால் தண்டிக்கப்பட்டு, சிறையில் இருக்கிறார். அதற்கு முன்னால் அவர் தலைமறைவாக கொஞ்ச நாட்கள் இருந்தார். அப்போதும் மந்திரிதான்.

தலைமறைவு மந்திரியைக் கொண்ட முதல் மத்திய அரசு  என்ற ‘புகழை’ மன்மோகன் சிங் அரசு பெற்று மகிழ்ந்தது. பிரதமர் நினைத்து, ஒரு மந்திரியை நீக்கவோ, வைக்கவோ, இலாகாவை மாற்றவோ முடியாது; அது அந்தந்தக் கூட்டணிக் கட்சியின் இஷ்டம்; சம்பந்தப்பட்டவர் காங்கிரஸ்காரரானால், சோனியாவின் இஷ்டம். ஒரு பொருளாதார சீர்திருத்தத்தை, பொருளாதார நிபுணரான பிரதமரால் செய்துவிட முடியாது; அதற்கு இடதுசாரிகளின் அனுமதி தேவை.

தீவிரவாதிகளை ஒடுக்க கடுமையான நடவடிக்கைகளை எடுக்க முடியாது; அதற்கு சோனியாவின் ஒப்புதல் அவசியம். கிரிமினல் பேர்வழிகளை கிட்டே சேர்ப்பதில்லை என்ற முடிவைக்கூட, பிரதமரால் எடுக்க முடியாது; அது கூட்டணி தர்மத்திற்கு விரோதம். இந்த நிலையில், ‘மூன்று வருட சாதனை என்ன? என்ற பிரதமரைக் கேட்பது, இதமில்லாதவர்கள் செய்யக் கூடிய வேலை. நாம் அப்படிக் கேட்கவில்லை. மூன்று வருடம் எப்படித்தான் சமாளித்தாரோ  என்று நாம் வியப்படைகிறோம். வியந்து, பாராட்டுகிறோம்!.

நன்றி : துக்ளக்
—————————————————————————-

Posted in Achievements, Agriculture, Analysis, Anniversary, Baba, Backgrounder, Banks, BJP, Coalition, Communism, Communist, Communist parties, Communist Party of India, Communists, Cong (I), Cong(I), Congress, Congress (I), Congress Party, Congress(I), Dayanidhi, Dayanidhi maran, Dayanidhy, Dayanithi, Deflation, dera, Deve Gowda, DMK, Economy, Education, Elections, Evaluation, Execution, Finance, Goals, Govt, IMF, Inflation, Islam, IT, Madani, Madhani, Manmohan, Manmohan Singh, Maran, Millionaire, Muslim, Naxal, NDA, Neeraja Choudhri, Neeraja Choudhry, Neeraja Chowdhri, Neeraja Chowdhry, Neeraja Chowdhury, Neeraja Chowdry, Opposition, Party, Planning, Politics, Polls, POTA, Principles, Process, Radhika Selvi, RadhikaSelvi, Recession, Report, Rich, Sachar, Sonia, TADA, Terrorism, UDA, WB | 1 Comment »

Right to Information modalities – State Information Commissioner

Posted by Snapjudge மேல் ஜனவரி 29, 2007

தகவல் அறியும் சட்டத்தின் கீழ் சரியான விளக்கம் அளிக்காத 200 அரசு அதிகாரிகளுக்கு நோட்டீஸ்: மாநில தகவல் ஆணையர் பேட்டி

வேலூர், ஜன.28-

தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊரியர் சங்கத்தின் சார்பில் வேலூர் ஆபீசர் லைனில் உள்ள பெல்லியப்பா கட்டிடத்தில் தகவல் அறியும் உரிமை சட்டம் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த பிரச்சார இயக்க கூட்டம் நடந்தது. பிரச்சாரத்திற்கு மாவட்ட தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் முனிசாமி வரவேற்று பேசினார். மாநில தகவல் ஆணையர் ரத்தினசாமி பிரச்சாரத்தை தொடங்கி வைத்து பேசினார்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தகவல் அறியும் உரிமை சட்டம் பற்றி பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் கூட்டம் நடத்தி வருகிறோம். தமிழ்நாட்டில் தகவல் அறிவதற்காக பொதுமக்களிடம் இருந்து கடந்த ஆண்டில் மட்டும் 8550 மனுக்களும், இந்த ஆண்டு ஜனவரி 24-ந் தேதி வரை ஆயிரத்து 179 மனுக்களும் வந்துள்ளது. இதில் 664 மனுக்கள் மட்டும் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. மீதியுள்ள மனுக்கள் அனைத்தும் மாவட்டம் வாரியாக சம்பந்தப்பட்ட துறையினருக்கு அனுப்பியுள்ளோம்.

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் ஒருவர் தகவல் பெற வேண்டுமானால் 10 ரூபாய்க்கு டி.டி. எடுத்து சம்பந்தப்பட்ட துறை அலுவலரிடம் தகவல் கேட்க வேண்டும். 30 நாட்களுக்குள் தகவல் கிடைக்க வில்லையென்றால், மேல் அதிகாரியிடம் முறையீடு செய்ய வேண்டும். அப்படியும் 30 நாட்களுக்குள் சரியான தகவல் தராவிட்டால் எங்களிடம் புகார் செய்யலாம்.

நாங்கள் மனுதாரரையும், சம்பந்தப்பட்ட அரசு அதிகாரியையும் அழைத்து நேரிடையாக விசாரணை நடத்துவோம். விசாரணையில் அரசு அதிகாரிகள் மீது தவறு கண்டுபிடிக்கப்பட்டால் 1 நாளுக்கு ரூ.250 வீதம் 25 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும்.

இதுவரை சரியான தகவல் அளிக்காத 4 அரசு அதிகாரிகளுக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அவர்களில் ஒருவர் சென்னை பல்கலைக்கழக பதிவாளர் ஆவார். சென்னை பல்கலைக்கழகத்தில் உள்ள தொழில்நுட்ப துறைக்கு நேர்முகத்தேர்வு நடந்தது. இதில் ஒரு பெண் கலந்து கொண்டார். சரியான தகுதிகள் இருந்தும் அவர் தேர்ந்தெடுக்கப்படவில்லை. இதற்காக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் அவர் விளக்கம் கேட்டார். இதற்கு சென்னை பல்கலைக்கழக பதிவாளர் சரியான தகவல் அளிக்கவில்லை. நாங்கள் நடத்திய விசாரணையில் பதிவாளர் மீது தவறு கண்டுபிடிக்கப்பட்டது. எனவே அவருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்துள்ளோம்.

மனுதாரர் ஒருவருக்கு சரியான தகவல் அளிக்காததால் அவினாசி தாசில்தாருக்கு ரூ.2500 அபராதம் விதித்துள்ளோம். மேலும் சரியான தகவல் அளிக்காத 200 அரசு அதிகாரிகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீசு அனுப்பியுள்ளோம். இந்த சட்டம் பற்றி பொதுமக்களுக்கு தெரியும் அளவில் கூட அரசு அதிகாரிகளுக்கு தெரியவில்லை. பிப்ரவரி மாதம் 2-ந் தேதி வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்தில் மனுக்கள் மீது விசாரணை நடத்துகிறோம். அப்போது 10 மனுதாரர்கள் மீது விசாரணை நடத்தப்படும். ஒவ்வொரு மாவட்டத்திலும் நாங்கள் விசாரணைக்கு வரும் போது பொதுமக்கள் எங்களிடம் நேரிடையாக மனு வழங்கலாம். சென்னை புரசைவாக்கத்தில் உள்ள மாநில தகவல் ஆணைய தலைமை அலுவலகம் விரைவில் தேனாம்பேட்டையில் அறிவாலயம் அருகே உள்ள கூட்டுறவு சங்க கட்டிட வளாகத்திற்கு மாற்றப்படுகிறது.

இவ்வாறு மாநில தகவல் ஆணையர் ரத்தினசாமி கூறினார்.

பேட்டியின் போது தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்க தலைவர் கங்காதரன் உடனிருந்தார்.

===========================================
தகவலைக் கேட்டுப் பெறுவது அடிப்படை உரிமை

அரவிந்த் கேஜ்ரிவால் – தமிழில்: பாகி.

நமது மத்திய, மாநில அரசுகள் அனைத்தும் மக்கள் வரிப் பணத்தில்தான் இயங்கி வருகின்றன.

நாம் அனைவருமே அரசுக்கு வரி செலுத்துகிறோம். பிச்சைக்காரர் கூட ஒரு தீப்பெட்டியை காசு கொடுத்து வாங்கும்போது, அதில் ஒரு பகுதி அரசுக்கு வரியாக மறைமுகமாகச் செல்கிறது. அரசு என்பது மக்களுக்குச் சேவை செய்வதற்காகவே இயங்குகிறது.

மக்களின் வரிப்பணம்தான் அரசின் பணம். ஆனால், இந்த வரிப்பணம் முறையாகச் செலவிடப்படுகிறதா என்று மக்கள் கண்காணிக்கிறார்களா? அரசுக்குப் பணம் கொடுப்பதால் மக்கள்தான் எஜமானர்கள். எனவே, ஒவ்வொரு மனிதருக்கும் தான் கொடுக்கும் பணம் முறையாகப் பயன்படுத்தப்படுகிறதா என்று கேட்க முழு உரிமை உண்டு. ஆனால், செய்கிறோமா? இல்லை. அந்த உரிமையைப் பயன்படுத்தக் கூடாது என்பதல்ல காரணம். மாறாக, அந்த உரிமையைப் பயன்படுத்துவதற்கான சட்டபூர்வமான, நிர்வாக ரீதியான வழி எதுவும் இல்லை என்பதே காரணமாகும்.

தகவல் அறியும் உரிமை குறித்து 1976-ம் ஆண்டிலேயே உச்ச நீதிமன்றத் தீர்ப்பு தெளிவாகக் கூறிவிட்டது. ராஜ்நாராயண் என்பவர் உத்தரப் பிரதேச அரசுக்கு எதிராகத் தொடுத்த ஒரு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் தகவல் அறியும் உரிமையை வலியுறுத்தியுள்ளது.

அத்தீர்ப்பின் சாராம்சம்:

“”அரசியல் சாசனத்தின் 19 (1)-வது பிரிவின்படி குடிமக்கள் ஒவ்வொருவருக்கும் முழுமையான பேச்சுரிமை, எழுத்துரிமை உண்டு; மேலும் அதற்குரிய தகவல்களைப் பெறவும் முழு உரிமை உண்டு. காரணம், நமது நாடு ஜனநாயக நடைமுறையில் இயங்கும் அமைப்பாகும்.

ஜனநாயகத்தில் மக்கள்தான் எஜமானர்கள். தங்கள் மீது எத்தகைய நிர்வாகம் நடத்தப்படுகிறது என்பதை அறியவும் தாங்கள் செலுத்திய வரிப் பணம் எந்த வகையில் பயன்படுத்தப்படுகிறது என்பதைத் தெரிந்து கொள்ளவும் முழு உரிமை உள்ளது. இதைத்தான் அரசியல் சாசனம் வலியுறுத்துகிறது”.

இத்தனை இருந்தாலும் தகவல் அறியும் உரிமைக்காக ஒரு புதிய சட்டம் தேவையா? ஆம், தேவைதான். காரணம், தற்போதைய நடைமுறைப்படி ஓர் அலுவலகத்துக்குச் சென்று, விவரம் அறிந்துகொள்வதற்காக உரிய ஆவணத்தைக் கேட்டால், எந்த அதிகாரியும் தர மாட்டார்.

ஆனால், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் குறிப்பிட்ட தகவலை எங்கே, யாரிடம் பெற விண்ணப்பிக்கலாம்? அந்த உரிமையைப் பெறக் கட்டணம் எவ்வளவு? எத்தனை நாளுக்குள் அத்தகவல் வந்து சேரவேண்டும்? குறிப்பிட்ட தகவலைத் தர அதிகாரி மறுத்துவிட்டால், அவருக்கு என்ன தண்டனை தரலாம்? என்ற விவரங்களை அறியலாம்.

இச்சட்டத்தை அரசு கொண்டு வருவதற்கு மக்கள் இயக்கம்தான் காரணம். ராஜஸ்தானில் 1990-ம் ஆண்டு ஓர் அரசுத் திட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளிகளுக்கு தினக் கூலி ரூ.22 என நிர்ணயிக்கப்பட்டது. குறிப்பிட்ட ஒரு தொழிலில் அவர்களுக்குத் தினமும் ரூ.11 மட்டுமே தரப்பட்டது. ஆனால், உண்மையில் சம்பளப் பதிவேட்டில் ரூ.22 தினக் கூலி எனப் பதிவு செய்யப்பட்டு வந்தது.

தங்களுக்கு ஊதியம் குறைவாகத் தரப்பட்டது குறித்து தொழிலாளிகள் நிர்வாகத்திடம் கேட்டதற்கு, அத்தொழிலாளர்கள் சரியாக வேலை செய்யவில்லை என்றும் அதனால்தான் ஊதியம் குறைத்துத் தரப்பட்டது என்றும் விளக்கம் அளிக்கப்பட்டது.

அதில் திருப்தி அடையாத தொழிலாளர்கள் வெகுண்டெழுந்து ஊதியங்களைப் பதிவு செய்யும் பதிவேட்டைக் கேட்டனர். அதை மறுத்த நிர்வாகம் அத்தகைய ஆவணங்கள் அரசு ரகசியம் என்று கூறினர்.

அங்கேதான் தொழிலாளர்களுக்குக் கை கொடுக்க வந்தார் அருணா ராய். ஐ.ஏ.எஸ். அதிகாரியாக இருந்து மக்கள் சேவைக்காக பதவியைத் துறந்து “விவசாய தொழிலாளர்கள் சங்கம்’ என்ற அமைப்பை நிறுவினார். அவரது அமைப்புடன் மக்கள் இணைந்து தொடர்ந்து போராடியதை அடுத்து, 2005 ஆம் ஆண்டு அக்டோபரில் தகவல் அறியும் உரிமை சட்டம் கொண்டு வரப்பட்டது.

தகவல் அறியும் உரிமை சட்டம் 68 நாடுகளில் நடைமுறையில் உள்ளது. எனினும், இந்திய சட்டத்தில் உள்ள பிரிவுகள் மிகச் சிறந்தவை. அதன்படி, யார் வேண்டுமானாலும் அரசிடம் எந்தத் தகவலையும் கேட்டுப் பெறலாம். எந்த ஆவணத்தையும் ஆய்வு செய்யலாம். அதன் நகலைப் பெற்றுக் கொள்ளலாம். எந்தப் பணியையும் நேரடியாகப் பார்வையிடலாம். எந்தப் பணி நடைபெற்றாலும், அதில் பயன்படுத்தப்படும் பொருளின் தரம், விலை ஆகியவை குறித்த விவரங்களைக் கேட்டுப் பெறலாம்.

மக்களுக்கு இந்தத் தகவலை, சம்பந்தப்பட்ட அதிகாரி 30 நாளில் அளிக்கவேண்டும். தவறினால், கெடு தேதியைக் கடந்த ஒவ்வொரு நாளுக்கும் ரூ.250 என அபராதம் செலுத்த வேண்டும். அது மட்டுமல்ல. பெற்ற தகவலில் திருப்தி இல்லை என்றால், மேல் முறையீடு செய்யலாம். இதற்காகத் தகவல் உரிமை ஆணையம் ஒவ்வொரு மாநிலத்திலும் அமைக்கப்பட வேண்டும்.

தகவல் அறியும் உரிமைச் சட்டம் நடைமுறைக்கு வந்த பின் சில பணிகள் சரியாக இயங்கியதற்கு இரு சம்பவங்களை உதாரணமாகச் சொல்லலாம்.

தில்லியில் வசிக்கும் குடிசைவாசிப் பெண் திரிவேணி. அவரது குடும்ப மாத ஊதியம் ரூ.500 தான். அவரது குடும்பத்தில் நான்கு பேர் உள்ளனர். ஏழைமக்களுக்கான ரேஷன் அட்டை திரிவேணிக்கு வழங்கப்பட்டது. அதன் மூலம் கோதுமை கிலோ ரூ.2, அரிசி கிலோ ரூ.3 என்ற சலுகை விலையில் கடைகளில் வாங்கிக் கொள்ள வழிவகை செய்யப்பட்டது. ஆனால், ஓராண்டாக அவர் கடையில் வாங்கச் சென்றால், சரக்கு இல்லை என்றே பதில் வந்தது.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் அவர் வழக்குத் தொடர்ந்தார். ஆவணங்களைக் கேட்டார். தன் பெயரில் உணவு விநியோகிக்கப்பட்டதா என்று கேட்டார்.

ஆவணங்களில் அவர் பெயரில் மாதந்தோறும் அரிசியும், கோதுமையும் விநியோகிக்கப்பட்டதாகப் பதிவு செய்யப்பட்டிருந்தது. அவர் கையெழுத்திட வேண்டிய இடத்தில் கைநாட்டு வைக்கப்பட்டிருந்தது. இத்தனைக்கும் திரிவேணிக்கு எழுதவும் படிக்கவும் தெரியும்.

இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடும் கடைக்காரரின் உரிமம் பொதுவாக ரத்து செய்யப்படும். இதை அறிந்த கடைக்காரர் அஞ்சினார். திரிவேணியைத் தேடிச் சென்று, தான் செய்த தவறை மறந்து மன்னிக்குமாறு கெஞ்சினார்.

இவ்வாறு போராடி வென்ற திரிவேணிக்கு அரிசியும் கோதுமையும் தற்போது தொடர்ந்து கிடைத்து வருகின்றன. இதைப் போன்றே உதய் என்பவரும் ஜெயித்துக் காட்டியுள்ளார்.

தில்லியில் வசந்த் கஞ்ச் என்ற இடத்தில் வசிக்கும் அவர் ஐ.ஐ.டி. எதிரில் உள்ள ஒரு சாலை பத்தே நாளில் அவசரகோலத்தில் போடப்பட்டதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். அவ்வாறு குறுகிய காலத்தில் போடப்படும் சாலை எந்த தரத்தில் இருக்கும் என்று அவர் சந்தேகப்பட்டார். தகவல் அறியும் உரிமை ஆணையத்தின் உதவியை நாடினார்.

அது தொடர்பான ஆவணங்களைப் பார்வையிடக் கோரினார். அங்கு பயன்படுத்தப்பட்ட தார், மணல், கற்களின் தரத்தைப் பரிசோதிக்க வேண்டும் என்றும் தனது மனுவில் குறிப்பிட்டார்.

இதற்கிடையில், அந்த சாலையை அமைத்த செயல் பொறியாளர் அவரிடம் வந்து, சாலை முழு அளவில் பழுதுபார்க்கப்படும் என்று உறுதியளித்தார். அதன் பின் உதய் அந்த சாலையைப் பார்வையிட்டார். அவர் சுட்டிக் காட்டிய குறைபாடுகள் அனைத்தும் களையப்பட்டன.

ஊழல், முறைகேடு இல்லாத உலகம் இருக்கும் என்று யாரும் கனவு காண இயலாதுதான். ஆனால், ஒவ்வொரு தனி நபரும் அநீதியை எதிர்த்துப் போராடும் ஆற்றலைப் பெற முடியும். அதைத் தகவல் அறியும் உரிமை சட்டம் நிரூபித்துள்ளது.

(கட்டுரையாளர்: மகசேசே விருது பெற்றவர். தில்லியில் “சாஃப்மா’ பத்திரிகையாளர் மாநாட்டில் படித்த கட்டுரையின் சாராம்சம்.)

Posted in How, Krishnamoorthi, Krishnamoorthy, Krishnamurthi, Krishnamurthy, Magasasay, Municipal department, Process, Rathnasami, Rathnasamy, Right To Information, RTI, Steps | Leave a Comment »