மனைவியுடன் சமரச பேச்சுவார்த்தை: நடிகர் பிரசாந்த் பேட்டி
சென்னை, டிச.19-
பிரசாந்த்-கிரகலட்சுமி இடையே சமீபத்தில் திடீரென கருத்து வேறுபாடு ஏற்பட்டது. கிரகலட்சுமி தாய் வீட்டுக்கு சென்று விட்டார். அவரை தன்னுடன் சேர்ந்து வாழ உத்தரவிட வேண்டும் என்று பிரசாந்த் சென்னை குடும்ப நலக் கோர்ட்டில் கடந்த மாதம் மனுத் தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு விசாரணை சமீபத்தில் நடந்தது. அப்போது பிரசாந்த்-கிரகலட்சுமி இருவரும் நேரில் ஆஜ ரானார்கள். அவர்களை நீதிபதி தனி அறையில் சந்தித்து விசாரித்தார்.
அவர்கள் இருவரின் பிரச் சினைகளை கேட்டு அறிந்தார். பிறகு பிரசாந்த்-கிரகலட்சுமி இரு வரையும் தனியாக சந்தித்து பேசுமாறு அறிவுறுத்தினார்.
இதையடுத்து பிரசாந்தும் சிரகலட்சுமியும் சந்தித்துப் பேசினார்கள். பிரசாந்த் மனுவுக்கு பதில் மனு தாக்கல் செய்ய கிரகலட்சுமி தரப்பில் அவகாசம் கேட்கப்பட்டது. ஜனவரி 3ந் தேதி பதில் மனு தாக்கல் செய்யலாம் என்று நீதிபதி உத்தரவிட்டார்.
இந்த நிலையில் பிரசாந்த் இன்று பகல் 12.10மணிக்கு குடும்பநல கோர்ட்டுக்கு வந்தார். அவரிடம் வக்கீல் ஆனந்தனும் வந்தார்.
கோர்ட்டில் உள்ள மனுத்தாக்கல் பிரிவுக்கு சென்று புதிய மனு ஒன்றை தாக்கல் செய்ய தயாரானார். அப்போது செல்போனில் அவருக்கு ஒரு தகவல் வந்தது.
இதையடுத்து மனு தாக்கல் செய்யாமல் பிரசாந்த் வெளியில் வந்தார். அவரை நிருபர்கள் சந்தித்தனர். அப்போது பிரசாந்த் கூறியதாவது:-மனைவியுடன் சேர்ந்து வாழ முயற்சி செய்தேன். அதற்காகத்தான் கோர்ட்டுக்கே வந்தேன்.
எனது குழந்தையை பார்க்க முடியவில்லை. ஒரு தந்தை என்ற முறையில் குழந்தையை பார்க்காமல் இருப்பது மன வருத்தம் அளிக்கிறது. பல தடவை முயன்றேன். ஆனால் அவர்கள் குழந்தையை காட்டவில்லை. எனவே தான் குழந்தையை பார்க்க அனுமதி கேட்டு இன்று மனு தாக்கல் செய்ய வந்தேன்.
திடீரென்று அவர்கள் தரப்பில் பேச்சு வார்த்தை நடத்த தயாராக இருப்பதாக எனக்கு தகவல் வந்தது. நல்ல முடிவு வரட்டும் என்று நான் மனு தாக்கல் செய்யவில்லை. இன்று மாலை நாங்கள் சந்திக்கிறோம். அதன்பிறகு என்ன தகவல் என்பதை தெரிவிக்கிறேன்.
இவ்வாறு நடிகர் பிரசாந்த் கூறினார்.
நடிகர் பிரசாந்த் மனைவி கிரகலட்சுமிக்கு எதிராக தாக்கல் செய்த மனுவில் பல்வேறு குற்றச்சாட்டுகள் கூறி இருந்தார். அதற்கு பதில் அளிக்க கிரகலட்சுமி தரப்பில் அவகாசம் கேட்கப் பட்டது. ஜனவரி 3-ந்தேதி வரை நீதிபதி அவகாசம் அளித்தார். பிரசாந்த் குற்றச் சாட்டுக்கு கிரகலட்சுமி அளிக்கும் பதில் 3-ந்தேதி தெரியும்.
அதற்கு முன்பு பிரசாந்த் வழக்கு பற்றி பத்திரிகைளுக்கு கருத்து சொன்னால் கோர்ட்டு அவமதிப்பாகி விடும் என்று வக்கீல்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. எனவே தான் கிரகலட்சுமி அமைதியாக இருக்கிறார். 3-ந்தேதி தனது தரப்பு விளக் கத்தை கோர்ட்டில் வெளி யிடுகிறார்.
கிரக லெட்சுமியும் வந்தார்: நடிகர் பிரசாந்த் கோர்ட்டில் ஆஜர்
சென்னை, பிப். 12-
நடிகர் பிரசாந்தின் மனைவி கிரகலெட்சுமி பிரச வத்துக்காக பெற்றோர் வீட் டுக்கு சென்றார். குழந்தை பிறந்த பிறகு பிரசாந்த் பார்க்க செல்லவில்லை. கிரகலெட்சுமியும் கணவர் பிரசாந்த் வீட்டுக்கு திரும்பி வரவில்லை. கோர்ட்டு அனு மதியுடன் பிரசாந்த் குழந் தையை பார்த்தார்.
கோர்ட்டில் மனு
அதன் பிறகு சென்னை முதலாவது குடும்ப நல கோர்ட்டில் நடிகர் பிரசாந்த் ஒரு மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் பிரிந்து இருக் கும் தனது மனைவி கிரக லெட்சுமியை தன்னுடன் சேர்த்து வைக்க வேண்டும். தாம்பத்திய உரிமையை மீட்டு தரவேண்டும் என்று கூறி இருந்தார்.
இந்த மனு நீதிபதி தேவதாஸ் முன்னிலையில் விசார ணைக்கு வந்தது. இருவரும் கோர்ட்டில் ஆஜர் ஆனார்கள். இருவரிடமும் நீதிபதி தனித் தனியாக விசாரணை நடத் தினார். அவர்களை சேர்ந்து வாழும்படி அறிவுரை வழங்கி னார். இந்த நிலையில் கடந்த தைப் பொங்கல் தினத்துக்குள் கண வருடன் சேர்ந்து வாழ விரும்புவதாக கிரகலெட்சுமி மனு தாக்கல் செய்து இருந் தார். அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
மீண்டும் அவர் தன்னை கணவருடன் சேர்த்து வைக் கும்படி மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி தேவதாஸ் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந் தது.
ஆஜர்
கிரகலெட்சுமி கோர்ட்டில் ஆஜர் ஆனார். பிரசாந்த் வர வில்லை. அவர் தரப்பில் ஆஜரான வக்கீல் ஆனந்தன், பிரசாந்த் ஷூட்டிங்கில் இருப்பதாகவும், சிறிது நேரம் வழக்கு விசாரணையை தள்ளி வைக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
அதை ஏற்றுக் கொண்ட நீதிபதி தேவதாஸ் வழக்கு விசாரணை ஒரு மணி நேரத்துக்கு தள்ளி வைத் தார்.
நடிகர் பிரசாந்த் படப் பிடிப்பை ரத்து செய்து விட்டு கோர்ட்டுக்கு வந்தார். நீதிபதியின் அறையில் இரு வரும் அமர்ந்து இருந்தனர். அவர்களிடம் நீதிபதி தேவதாஸ் விசாரணை நடத்தினார்.