Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Personal’ Category

Cheating the state – Income Tax, Black Money, Business folks

Posted by Snapjudge மேல் ஜூலை 26, 2007

வாட்டுது வருமான வரி!

“”வருமானமே போதவில்லை, அதற்கு வரி வேறா?” என்ற அங்கலாய்ப்பு மத்தியதர வர்க்கத்திடமிருந்து ஒவ்வொரு ஆண்டும் கேட்டவண்ணம் இருக்கிறது. ஆனால் ஆட்சியாளர்களோ இதையெல்லாம் காதில் வாங்காமல் கருமமே கண்ணாக இருந்து வரி வசூலிப்பைத் தீவிரப்படுத்துகின்றனர்.

மாதச் சம்பளக்காரர்கள், அரசு ஊழியர்களானாலும் தனியார் நிறுவன ஊழியர்களானாலும் அவர்களுடைய அலுவலகத்தாராலேயே பிடிக்கப்பட்டு வரி செலுத்தப்பட்டுவிடுகிறது. அதன் பிறகு அதில் சலுகைக்குரிய இனம் ஏதும் இருந்தால் அதை வருமான வரி செலுத்தியவரே கணக்கு கொடுத்து திரும்பப்பெற வேண்டும். இந்த வருமான வரி விலக்கு வரம்பை உயர்த்துவார்கள் என்று ஆண்டுதோறும் நிதியமைச்சரின் பட்ஜெட்டை ஆவலோடு எதிர்பார்த்து, கடைசியில் இலவுகாத்த கிளியாக ஏமாந்து வேறு போவார்கள் மாதச் சம்பளக்காரர்கள். இவர்கள் மீது நிதியமைச்சருக்குக் கரிசனம் வேண்டும்.

தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் வருமான வரி வசூல் அதிகமாகிக் கொண்டே வருகிறது, கிட்டத்தட்ட 3 மடங்காகிவிட்டது என்று தலைமை வருமானவரி ஆணையர் மகிழ்ச்சி பொங்கத் தெரிவித்துள்ளார்.

அதாவது ஐந்தாண்டுகளுக்கு முன்னால் ரூ.5,336 கோடியாக இருந்த வருமான வரி வசூல் கடந்த ஆண்டு ரூ.17,400 கோடியாக உயர்ந்துவிட்டது. தமிழ் நாட்டில் மட்டும் கடந்த ஆண்டு 3.13 லட்சம் மாதச் சம்பளதாரர்கள் வருமான வரி செலுத்துகிறவர்களாக இருந்து “ரிடர்ன்’ எனப்படும் வருமான வரி தாக்கல் செய்திருக்கிறார்கள்.

உள்நாட்டிலேயே

  • வியாபாரிகள்,
  • தரகர்கள்,
  • சொந்தமாகத் தொழில் செய்யும் டாக்டர்கள்,
  • என்ஜினீயர்கள்,
  • வக்கீல்கள்,
  • ஆடிட்டர்கள்,
  • விமானம், கப்பல் ஆகியவற்றுக்கான டிராவல் ஏஜெண்டுகள்,
  • லாரி உரிமையாளர்கள்,
  • சொந்தத் தொழில் செய்பவர்கள்,
  • வியாபாரிகள்,
  • சேவைத்துறையில் இருப்பவர்கள்

என்று பலதரப்பட்டவர்களும் வரி செலுத்துகின்றனர். ஆனால் அவர்களுடைய வருவாய்க்கும், செலுத்தும் வரிக்கும் பெரும் இடைவெளி இருப்பது நமக்கே தெரிகிறது, ஆனால் என்ன காரணத்தாலோ அரசும் அதிகாரிகளும் அவர்களையெல்லாம் விட்டுவிடுகிறார்கள்.
இந் நிலையில் சமீபத்தில் கூடிய வருமானவரித்துறை தலைமை ஆணையர்களின் மாநாட்டில் வரி ஏய்ப்பைக் கண்டுபிடிக்கவும், வரி ஏய்ப்பாளர்களை அடையாளம் காணவும் புதிய உத்திகளை வகுத்திருப்பதாகத் தெரிகிறது. இவை மனப்பூர்வமாக அமல்படுத்தப்பட்டால் வரி வருவாய் பலமடங்கு பெருகும், அரசின் செலவுகளுக்கு அதிக நிதியும் கிடைக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.

“”ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள வீடு அல்லது அடுக்குமனை வாங்குகிறவர்களின் ஆண்டு வருமானம் ரூ.20 லட்சத்துக்கு மேல் இருந்தால், அவர்களுடைய வருமான வரி கணக்கைத் தீவிரமாக ஆராய வேண்டும், வீட்டை ரூ.30 லட்சத்துக்கு மேல் விற்பவர்கள் கணக்கில் காட்டும் மூலதன ஆதாயத் தொகையைச் சரிபார்க்க வேண்டும், சொத்துகளை விற்ற வகையில் ரூ.2.5 லட்சத்துக்கு மேல் நஷ்டம் என்று கணக்கு காட்டினாலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்” என்று ஆணையர்கள் மாநாட்டில் முடிவு செய்யப்பட்டிருக்கிறது.

பங்குச்சந்தைத் தரகர்கள், பலசரக்குத் தரகர்கள் ஆகியோரையும் கண்காணிக்கத் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. பங்குச் சந்தையில் 12 மாதங்களுக்குள் மூலதன ஆதாயம் ரூ.25 லட்சம் பெற்றதாக கணக்கு காட்டுகிறவர்களின் வருமான வரி “ரிடர்ன்கள்’ இனி தீவிரமாக ஆராயப்படும்.

விவசாய வருமானத்துக்கு வரி போடுவதில்லை என்ற முடிவை அரசு எடுத்திருந்தாலும், சிலருடைய விவசாயக் கழனிகளிலும், தோட்டங்களிலும் மட்டும் -மழை பெய்தாலும் பெய்யாவிட்டாலும் -“”அமோக மகசூல்” ஆகி, அற்புதமாகப் பணம் கொழிக்கும் “”அபூர்வ பசுமைப் புரட்சி” எப்படி சாத்தியம் என்றும் ஆராய முடிவு செய்திருக்கிறார்கள்.

வருமானத்தைக் கணக்கிடுவது மட்டும் அல்ல, அது முறையாக ஈட்டப்படுகிறதா என்பதையும் வருமானவரித்துறை அறிய வேண்டும். இல்லையென்றால் உரிய துறைகளுக்குத் தெரிவித்து தடுக்க வேண்டும். அப்போதுதான் அதன் கடமை முழுமை பெறும்.

———————————————————————————————————

தமிழகத்தில் வருமான வரி மூலம் வருமானம் அதிகரிப்பு: மாநிலப் பொருளாதார முன்னேற்றத்திற்கு ஓர் அடையாளம்

சென்னை, ஜூலை 27- கடந்த ஏழு ஆண்டுகளாகப் படிப்-படியாக, வருமான வரி மூலம் மத்திய அரசு பெறும் வருவாய் அதிகரிக்கிறது என்றும், இது தமிழ் நாட்டின் ஒட்டு மொத்-தப் பொருளாதார முன்-னேற்றத்தைக் குறிக்கிறது என்றும், சென்னை வருமான வரித் தலைமை ஆணையர் சி.ஆர். ரவிச்சந்திரன் ஜுன் 25+இல் கூறினார்.

2000+2001+இல் இருந்து அதிகரித்து வரும் வரிமான வரி வசூல், கடந்த ஆண்டு மட்டும் 37 விழுக்காடு அதிகரித்-திருக்கிறது.

தமிழ்நாட்டில்

  • 2000+2001+இல் வசூலிக்கப்-பட்ட வருமான வரி ரூ.4,519 கோடி,
  • 2004+05+இல் ரூ.8,344 கோடி,
  • 2005+06+இல் ரூ.10,861 கோடி,
  • 2006+07+இல் ரூ.14,891 கோடி.

இந்த நிதியாண்டான 2007+08+இல் ரூ.17,402 கோடி வசூல் ஆகும் என மதிப்பிடப்-பட்டிருக்கிறது.

செய்தித் தொழில் நுட்பம், மற்றும் பிற தொழில் துறை-களில் முன்னேற்றமும், வரி வசூல் முறைச் சீர்படுத்தமும் வரி வசூல் அதிகரிப்பிற்குக் காரணங்கள் ஆகும்.

———————————————————————————————————

 

Posted in Biz, Bonds, Bribery, Bribes, Budget, Bureaucracy, Business, Cheats, Chidamabram, Chidambaram, Chidhambaram, Commerce, Compensation, Corruption, Economy, Employment, Finance, Govt, Homes, Houses, Incentives, Income, Income Tax, Industry, IT, Jobs, Money, NCC, NSS, PC, Personal, Private, Rajini, Rajni, Sankar, Savings, Shankar, Shivaji, Sivaji, Small scale, SSI, Tariffs, Tax, Work, Worker | Leave a Comment »

Vat Q&A – Dinamani Solutions on Sales Tax Questions

Posted by Snapjudge மேல் ஜனவரி 24, 2007

“வாட்’ வரி: “இன்புட், அவுட்புட் டாக்ஸ்’ கணக்கிடுவது எப்படி?
டி. அய்யாபிள்ளை, நாகர்கோவில்.

நான் சிமெண்ட் கடையில் கணக்கராக வேலை பார்க்கிறேன். வாட் முறையில் “இன்புட் டாக்ஸ்’, “அவுட்புட் டாக்ஸ்’ பற்றி விளக்கவும்.

சிமெண்டை நம் மாநிலத்தில் ஆலைகளிலிருந்து நீங்கள் வாங்கும்போது 12.5 சதவீதம் வரி செலுத்தி வாங்கியிருப்பீர்கள். உதாரணமாக சிமெண்ட் மூட்டையின் விலை ரூ.200 எனில் அதற்கு 12.5 சதவீதம் ரூ.25 வாட் வரியாகச் செலுத்தியிருப்பீர்கள். அவ்வாறு செலுத்திய வரிதான் “இன்புட் டாக்ஸ்’ என்பது. இந்த இன்புட் டாக்ûஸ நீங்கள் கணக்கில் வரவு வைத்துக் கொள்ளலாம்.

நீங்கள் அந்த சிமெண்ட் மூட்டைக்கு ரூ.20 லாபம் வைத்து விற்க வேண்டும் என கருதுவீர்களேயானால் வாங்கிய விலை வரி உள்பட ரூ.225 லாபம் ரூ.20 ஆக மொத்தம் ரூ.245 என்று நிர்ணயம் செய்து அதற்கும் 12.5 சதவீதம் வரி வசூல் செய்ய வேண்டுமே என்ற கருத்தில் கேள்வியைக் கேட்டுள்ளீர்கள். இது தவறு.

உங்களுக்கு ரூ.20 லாபம் வேண்டும் என்றால் நீங்கள் ரூ.200 வாங்கிய விலை லாபம் ரூ.20 சேர்த்து ரூ.220 பிளஸ் 12.5 சதவீதம் வாட் வரி என்றுதான் விற்க வேண்டும்.

நீங்கள் கொள்முதல் செய்தபோது செலுத்திய “வாட்’ வரியை அடக்க விலையில் சேர்க்கக் கூடாது. ஏனென்றால் நீங்கள் பொருளை விற்கும்பொழுது வசூலிக்கும் வரியில் (அவுட்புட் டாக்ஸ்) தாங்கள் ஏற்கெனவே கொள்முதல் செய்யும்போது செலுத்திய வரியை வைத்துக் கொண்டு மீதியைத்தான் அரசுக்குச் செலுத்துவீர்கள். மேலே சொன்ன உதாரணத்தில் நீங்கள் சிமெண்ட் மூட்டை ரூ.220 பிளஸ் “வாட்’ என விற்கிறபோது நீங்கள் ரூ.27.50 வரியாக வசூல் செய்வீர்கள். இதுதான் “அவுட்புட் டாக்ஸ்’ என்பது.

இந்த வரித் தொகையில் தாங்கள் கொள்முதல் செய்யும்போது செலுத்திய வரியான ரூ.25-ஐ வைத்துக் கொண்டு மீதி ரூ.2.50-ஐ மட்டும்தான் அரசுக்குச் செலுத்துவீர்கள். இதுதான் “செட்ஆஃப்’ என்று சொல்வது.

நுகர்வோருக்கு மொத்த விலை வரி உள்பட ரூ.227.50 மட்டுமே. “வாட்’ வரியில் வரி மீது வரி கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

“வாட்’ வரி விதிப்பில் விவசாயத் துறை சார்ந்துள்ள இடுபொருள் வர்த்தகர்களுக்கு எத்தகைய பலன் கிடைக்கும்?

பாண்டியன் உர டிப்போ, திண்டிவனம்.

“வாட்’ வரி முறையில் விவசாய இடுபொருள்களான உரம் மற்றும் பூச்சி மருந்துகளுக்கு 4 சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு வரிப் பளு இருக்கக் கூடாது என்ற அடிப்படையில் “வாட்’ வரி அமலாக்கக் கண்காணிப்புக் குழுவின் பரிந்துரையை ஏற்று உரம் மற்றும் பூச்சி மருந்துக்கு நம் மாநிலத்தில் முதல் கட்ட விற்பனையில் மட்டும் வரி விதிக்கப்படும் என்றும் அதற்குப் பிறகு நடைபெறும் விற்பனைகளுக்கு வரி விலக்கு அளித்து அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

“வாட்’ வரி குறித்த விவரங்களை இணையதளத்திலும் தெரிந்து கொள்ளலாம். இணையதள முகவரி: http://www.tnvat.gov.in

இந்தப் பகுதியில் இடம்பெறும் கேள்வி-பதில்களை http://www.dinamani.com/vat/index.asp  என்ற இணையதள முகவரியிலும் காணலாம்.

Posted in Accountancy, Accountant, Answers, Biz, Business, Cement, Economy, Farmer, Farming, Finance, Government, India, Input Tax, Output Tax, Personal, professional, Q&A, Questions, Sales Tax, Small Business, State, Tamil Nadu, Tax, TNGST, VAT | 5 Comments »

Actor Pandu’s Embarassment

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 29, 2006

பாண்டு
ஓவியக் கல்லூரியில் நான் படித்துக் கொண்டிருந்தபோது நண்பன் ஒருவன் என் ரூமிற்கு அடிக்கடி வருவான். அறுவைனா அப்படியரு அறுவை. ஒரு நாள் அவன் வருவதை பார்த்துவிட்டு எப்படியாவது இவனிடமிருந்து தப்பிக்க வேண்டும் என்று எதுவும் புரியாமல், அங்குமிங்கும் ஓடி கடைசியில் பாத்ரூமில் உள்ள ஒரு பரன்மீது ஏறி உள்ளே போய் கால்களை குத்தவைச்சு உட்கார்ந்து கொண்டேன். ரூமில் ஒரு கால் மணி நேரமாக என்னை அங்கும் இங்கும் தேடினானே தவிர, சரி காணவில்லை கிளம்புவோம் என்று அவன் போகவில்லை. எனக்கோ அது சின்ன இடமென்பதால் மூட்டுக் கால் வலித்தது. திடீரென்று பாத்ரூம் பக்கம் வந்தவன் பரணில் இருந்த எண்ணை பார்த்துவிட்டு ‘டேய் பாண்டு இங்கியாடா உட்கார்ந்திருக்க’’ அவன் கேட்க பதிலுக்கு

‘‘டேய் நீ பெரிய கெட்டிக்காரண்டா நீ கண்டுபிடிச்சுடுவன்னு தெரியும்டா’’ என்று நான் சமாளித்த சமாளிப்பு எனக்குத்தான் தெரியும்.

பாண்டு

Posted in Actor, Comedy, Fun, Incident, Joke, Kumudam, Life, Pandu, Personal, Story, Tamil | Leave a Comment »