கலை, பண்பாட்டை மக்களிடம் சேர்க்கும் முயற்சியே “சென்னை சங்கமம்’: கனிமொழி
சென்னையில் செவ்வாய்க்கிழமை தொடங்க உள்ள “சென்னை சங்கமம்’ கலை மற்றும் கலாசார நிகழ்ச்சிக்கான “ஆடியோ சிடி’யை, திங்கள்கிழமை வெளியிட்டார் எழுத்தாளர் சுஜாதா. உடன் (இடமிருந்து) சென்னை சங்கமத்தின் ஒருங்கிணைப்பாளர் கவிஞர் கனிமொழி, திரைப்பட இயக்குநர் வசந்த், தமிழ் மையம் அமைப்பின் நிறுவனர் கஸ்பர் ராஜ்.
சென்னை, பிப். 20: தமிழகத்தின் பாரம்பரிய கலை மற்றும் பண்பாட்டை மக்களிடம் சேர்க்கும் முயற்சியாக “சென்னை சங்கமம்’ திருவிழா நடத்தப்படுவதாக நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் கனிமொழி தெரிவித்தார்.
சென்னையில் பிப். 20-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை “சென்னை சங்கமம்’ திருவிழா நடைபெறவுள்ளது. இதன் அங்கமாக “தமிழ்ச் சங்கமம்’ என்ற விழா பிப். 21-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இதுதொடர்பாக திங்கள்கிழமை சென்னையில் நிருபர்களிடம் அவர் கூறியது:
“சென்னை சங்கமம்’ சென்னை நகரத்துக்கான விழா. இதன் மூலம் தமிழ்ப் பாரம்பரிய கிராமிய இசை, நடனக் கலை, நாடகம் ஆகியவை சென்னை நகரின் தெருக்களிலும், திறந்த வெளியிலும் நடத்தப்படவுள்ளன.
இதில் 700 கலைஞர்கள் கலந்துகொண்டு 37 கலை வடிவங்களை சென்னை நகரின் பல பகுதிகளில் நிகழ்த்தவுள்ளனர். இந்த அரிய கலை நிகழ்ச்சிகளை அனைவரும் கண்டுகளிக்க வேண்டும்.
புதன்கிழமை ஒன்றரை மணி நேர பாரம்பரிய இசை மற்றும் நடன நிகழ்ச்சி பிலிம் சேம்பர் திரை அரங்கில் நடைபெறும். இது முதல் ஆண்டு என்பதால் சில தவறுகள் இருக்கலாம். அடுத்த ஆண்டு அவை திருத்தப்பட்டு பொங்கல் விழாவாகக் கொண்டாடப்படும். மேலும் இது விரிவடைந்து தமிழக விழாவாக மாற்றவும் முயற்சி எடுக்கப்படும் என்றார்.
அமைச்சர் தங்கம் தென்னரசு: தமிழ் மையம், பொது நூலகத்துறை, சுற்றுலா மற்றும் பண்பாட்டுத் துறை ஆகியவை இணைந்து இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளன. நாட்டுப்புற இசை, நாட்டியத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் இவ்விழா கொண்டாடப்படுகிறது. நூலகத்துறை குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலே நூலகத்துறை இவ்விழாவை ஏற்பாடு செய்வதில் அங்கமாகத் திகழ்கிறது என்றார்.
அண்ணா நகர், மயிலாப்பூர், ராயபுரம் பூங்காக்களில் தப்பாட்டம்: நையாண்டி மேளம் நிகழ்ச்சிகள் இலவசமாக கண்டு களிக்கலாம்
சென்னை, பிப். 20-
தமிழ்நாட்டின் பாரம்பரிய கலைகளை பிரபலப்படுத்தும் முயற்சியாக “சென்னை சங்கமம்” என்ற கலை விழாவை தமிழ் மையம் என்ற அமைப்பு நடத்துகிறது. கிரா மிய கலைஞர்களுக்கும் மக்க ளுக்கும் இடையே நல்லுறவை ஏற்படுத்தும் இந்த கலாச்சார நிகழ்ச்சிகளில் 1300 பேர் பங் கேற்கிறார்கள்.
மக்கள் அதிகம் கூடும்
- அண்ணா நகர் டவர் பூங்கா,
- மயிலாப்பூர் நாகேசுவரராவ் பூங்கா,
- தி.நகர் நடேசன் பூங்கா,
- கே.கே.நகர் சிவன் பூங்கா,
- ராயபுரம் ராபின்சன் பூங்கா,
- மாட வீதி,
- பிலிம் சேம்பர்,
- பெசன்ட் கடற்கரை,
- கோட்டூர்புரம் பூங்கா,
- நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானம்,
- கலைவாணர் அரங்கம்,
- மிïசிக் அகாடமி,
- ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரி அரங்கம்,
- தியாகராய ஹால்,
- பாரதி இல்லம் உள்பட பல இடங்களில் நிகழ்ச்சி நடக் கிறது.
- கர்நாடக சங்கீதம்,
- மயி லாட்டம்,
- ஒயிலாட்டம்,
- தப்பாட்டம்,
- நையாண்டி மேளம்,
- பாவைக் கூத்து,
- காவடி ஆட்டம் உள்பட பல நிகழ்ச்சிகள் நடக்கும் இந்த பிரமாண்ட கலை-பண்பாடு, இலக்கியத் திருவிழாவை இன்று (செவ்வாய்) மாலை முதல்-அமைச்சர் கருணாநிதி தொடங்கி வைக்கிறார். இந்த கலை விழா நாளை முதல் 25-ந் தேதி வரை 5 நாட்கள் நடைபெறும்.
நாளை (புதன்) நடக்கும் கலை நிகழ்ச்சிகள், இடம் நேரம் விபரம் வருமாறு:-
மிïசிக் அகாடமி-சிம் போனி இசை (மாலை 6.30)
தியாகராய ஹால்-இறை யன் கூத்து, இஸ்லாமிய இசை. மற்றும் நாடகம் (மாலை 6.30)
தி.நகர் நடேசன் பூங்கா: காலை 6 மணி-நாதசுரம், 6.30-கே.காயத்ரி வாய்ப் பாட்டு
மாலை 5.10: கட்டை கால் ஆட்டல்
6.15: சென்னை இளைஞர் குழு இசை
இரவு 7.00: சுதா ரகுநாதன் பாட்டு
புஷ்பவனம் குப்புசாமி
கே.கே.நகர் சிவன் பூங்கா:
காலை 6.00: தேவார திருப் புகழ்
6.30: வாலிவலம் வெங்கட் ராமன் பாட்டு
மாலை 5.00: தப்பாட்டம், காவடி ஆட்டம்
6.30: புஷ்பவனம் குப்புசாமி பாடும் கிராமிய பாடல்கள்
ராயபுரம் ராபின்சன் பூங்கா:- மாலை 5.00: குதிரை ஆட்டம், கானா பாடல்கள்
6.30: கிரேஸ் குழுவின் இசை கச்சேரி
கோட்டூர்புரம் பூங்கா:
மாலை 5.00: காளியாட்டம், மாடட்டம், மயிலாட்டம்
மயிலாப்பூர் நாகேசுவரராவ் பூங்கா:-
காலை 6.00: நாதசுரம்
6.30: அக்கரை சகோதரிகள் வயலின் இசை நிகழ்ச்சி.
நையாண்டி மேளம்
மாலை 5.00:- நையாண்டி மேளம், பாவைக் கூத்து.
6.30: டி.எம்.கிருஷ்ணா வாய்ப்பாட்டு
அண்ணா நகர் டவர் பூங்கா:-
காலை: நாதசுரம்,
6.30: மகதி வாய்ப்பாட்டு
மாலை 5.00: புலியாட்டம் மண்ணின் பாடல்
6.30: சாருமதி ராமச்சந்திரன் சுபஸ்ரீ ராமச்சந்திரன், வாய்ப்பாட்டு
பிலிம் சேம்பர்:-
மாலை 5.00:- பாப்பம்பாடி ஜமா குழுவினரின் பறையாட் டம்
6.00: பட்டிமன்றம், நடுவர்: சாரதா நம்பி ஆரூரான்.