![]() |
![]() |
லண்டனில் தக்ஷின் |
லண்டனில் தக்ஷின் சின்வத்ரா
தாய்லாந்தில் கடந்து செவ்வாய்க்கிழமையன்று நடைபெற்ற இராணுவப் புரட்சியால் பதவியிறக்கம் செய்யப்பட்ட, தாய்லாந்து நாட்டின் பிரதமர் தக்ஷின் சின்வத்ரா அவர்கள் தனக்கு உடனடியாக தாய்லாந்துக்கு செல்லும் திட்டம் எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.
தற்போது லண்டனில் இருக்கும் அவர், தான் தனக்கு மிகவும் தேவையான ஓய்வை எடுத்துக் கொள்ளப்போவதாக ஒரு அறிக்கையில் கூறியுள்ளார்.
தாய்லாந்தில் உள்ள அனைத்துக் கட்சிகளும், நாடு மற்றும் மன்னரின் பொருட்டு ஒரு இணக்கப்பாடு எட்ட முயல வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
தாய்லாந்து தலைநகர் பாங்காக்கை ஆளும் இராணுவக் கவுன்சில், கூட்டங்களுக்கும், அரசியல் கட்சிகளின் பிற செயல்பாடுகளுக்கும் தடை விதித்துள்ளது.
ஊடகங்களின் செயல்பாடுகளுக்கும் கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்த இராணுவப் புரட்சியை முன் நின்று நடத்திய ஜெனரல் சொனாதி புண்யாரட்லிங், சில வாரங்களில் இராணுவம் அதிகாரத்தை திரும்ப அளிக்கும் என்றும், ஒரு ஆண்டில் தேர்தல் நடத்தப்படும் என்றும் அறிவித்துள்ளார்.