நெதர்லாந்தில் இந்திய அரசாங்க மற்றும் நாகா பிரிவினைவாதத் தலைவர்கள் பேச்சு
![]() |
![]() |
அமைதி கோரும் நாகலாந்து மக்கள் |
நெதர்லாந்து நாட்டின் தலைநகர் ஆம்ஸ்டர்டாம் நகரில் நடக்கும் பேச்சுவார்த்தைகளுக்காக, இந்தியாவின் வடகிழக்கில் செயல்பட்டுவரும் நாகா பிரிவினைவாதக் குழுக்களின் தலைவர்களும், இந்திய அரசின் பிரதிநிதிகளும் கூடியுள்ளனர்.
இந்தியாவின் தொழிலாளர் நல அமைச்சர் ஆஸ்கர் பெர்னாண்டஸ் தலைமையிலான இந்திய அரசின் குழுவினரும், நாகாலாந்து பிரிவினைவாத இயக்கத்தின் பிரதிநிதிகளும் இந்தப் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ள இருக்கின்றனர்.
நாகா பிரச்சனைக்கு பேச்சுவார்த்தை மூலமான தீர்வினை இந்திய அரசு தாமதப்படுத்துவதாக கிளர்ச்சிக்காரர்கள், இந்திய அரசின் மீது பழி சுமத்தியதையடுத்து, இந்திய அரசிற்கும், நாகாலாந்து சோஷலிசக் கவுன்சிலுக்கும் இடையேயான பேச்சுவார்த்தைகள் அண்மைய மாதங்களில் பிரச்சனைக்குள்ளாகின.
இந்தியாவின், மிக நீண்ட காலமாக நடந்து வரும் நாகா கிளர்ச்சியை முடிவுக்கு கொண்டுவர கடந்த ஒன்பது ஆண்டுகளாக நடைபெற்று வரும் பேச்சுவார்த்தையில், இந்திய அரசுக் குழுவினரும், நாகா பிரதிநிதிகளும் ஐம்பது முறைக்கும் மேலாக சந்தித்து பேசியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.