காலமானார் கவிஞர் யுகசிற்பி
நாகப்பட்டினம், நவ. 20: கவிஞர் யுகசிற்பி (சுரேந்திரன்) (53) நாகப்பட்டினத்தில் மாரடைப்பால் சனிக்கிழமை இரவு காலமானார்.
- மின்னல் விதைகள்,
- ரதி சம்ஹாரம்,
- எழுதாச் சிலம்பு,
- காலச்சிறகுகள் ஆகிய கவிதை நூல்களும்
- உயிர்வேலி சிறுகதை நூலும்,
- இனி ஒரு விதி செய்வோம்,
- இந்திய வாழ்க்கையும் ஆன்மிகமும்,
- தியான பூமி ஆகிய கட்டுரை நூல்களும் எழுதியுள்ளார்.
தமிழ், ஆங்கிலம், மலையாளம் ஆகிய மொழிகளில் புலமைமிக்கவர். ஆன்மிகப் பொதுவுடைமை சார்ந்த கருத்தியல் கொண்ட “ஒளி‘ என்னும் இதழை நடத்தி வந்தார்.
இவருக்கு மனைவி, 2 பெண் குழந்தைகள் உள்ளனர். அவரது இறுதிச்சடங்கு நாகையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.