படித்த புத்தகம்
ஜெயா டி.வி.யில் தினமும் காலையில் ஒளிபரப்பாகி வருகிறது “படித்த புத்தகம்’ பற்றிய செய்தியை சொல்லும் நிகழ்ச்சி.
இதில் அ.கு.ஞானசம்பந்தன் கூறும் நூல்கள், நூல் பற்றிய பின்னணி விளக்கங்கள், நூலாசிரியர் குறிப்புகள் எல்லாம் மிக்க உபயோகமாக உள்ளன.
“பார்க்கும் ஆவல்’ அதிகரித்து, “படிக்கும் ஆவல்’ குறைந்து விட்டதை சமன்படுத்த முயலும் தூண்டுகோலாக இந்நிகழ்ச்சி அமைந்துள்ளது.
சென்ற வாரம், த.நா. குமாரசாமி பற்றியும், அவரது சகோதரர் த.நா. சேனாபதி பற்றியும் கூறினார். த.நா. குமாரசாமியின் மொழித்தேடல், வடமொழிப் புலமை பெற்றது, ரவீந்தரநாத் தாகூருடன் பழகியது போன்ற தகவல்கள் மிகவும் சுவாரசியமாக இருந்தது. மொத்தத்தில் தொலைக்காட்சிகளில் வரும் சில உருப்படியான நிகழ்ச்சிகளில் இதுவும் ஒன்று!