தமிழ்நாடு முழுவதும் எம்.ஜி.ஆர்-சிவாஜி படங்கள் மீண்டும் `ரிலீஸ்’: தயாரிப்பாளர் சங்க தலைவர் ராம.நாராயணன் தகவல்
தமிழ் திரையுலகம் வளர்ச்சி நோக்கி செல்கிறது. வரிச்சலுகைகளால் புதுப்படங்கள் நிறைய தயாராகின்றன.
தமிழில் பெயர் சூட்டப் பட்டுள்ள பழைய படங்களுக்கும் அரசு வரி விலக்கு அளித்திருப்பதால் இனிமேல் பழைய படங்களை வைத்தி ருப்பவர்களும் பயன் பெறு வார்கள்.
பராசக்தி, பாசமலர், பாவ மன்னிப்பு என்பன போன்ற பல படங்கள் வரி விலக்கு பெறும். 3 ஆயிரம் படங்களுக்கு மேல் இந்த பயன் கிடைக்கும். இதன் மூலம் எம்.ஜி.ஆர்., சிவாஜி படங்கள் மீண்டும் ரிலீசாகும். ஏற்கனவே இப்படங்களுக்கு 15 சதவீதம் கேளிக்கை வரி செலுத்த வேண்டி இருந்ததால் முடங்கிக் கிடந்தன. இனிமேல் அவை வெளியிடப்படும். பழைய டூரிங் தியேட்டர்கள் பல மூடப்பட்டுள்ளன. இனி மேல் அவை திறக்கப்படும் என்று நம்புகிறோம்.
தமிழ்நாடு முழுவதும் இன்னும் 3 மாதத்தில் 100 புதிய தியேட்டர்கள் திறக்கப்பட உள்ளன. சென்னையில் மட்டும் 30 தியேட்டர்கள் திறக் கப்படுகிறது. டாக்டர் ராதா கிருஷ்ணன் சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை உள்ளிட்ட பல இடங்களில் புதிய தியேட்டர்கள் கட்டப்பட்டு வருகின்றன.இவ்வாறு அவர் கூறினார்.
சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்ட திரைப் பட விநியோகஸ்தர் சங்க தலைவர் அருள்பதி, செயலாளர் கலைப்புலி ஜி.சேகரன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக் கை யில், “பழைய படங்களுக்கு கேளிக்கை வரி ரத்து செய்ததன் மூலம் சிறிய முதலீட்டாளர்கள், தயாரிப்பாளர்கள், தியேட்டர் அதிபர்களின் வளமான வாழ் வுக்கு முதல்-அமைச்சர் அடித் தளமிட்டுள்ளார்” என்று குறிப் பிட்டுள்ளனர்.