Posted by Snapjudge மேல் பிப்ரவரி 26, 2007
கொரியாவிடம் இந்தியா மீண்டும் தோல்வி
சென்னை, பிப். 26: ஒலிம்பிக் போட்டியில் இடம்பெறுவதற்கான தகுதி கால்பந்துப் போட்டியில் இந்திய மகளர் அணியை 3-0 என்ற கோல் கணக்கில் தோற்கடித்தது கொரிய அணி.
சென்னை நேரு ஸ்டேடியத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை இப் போட்டி நடைபெற்றது.
ஆட்டம் தொடங்கியதிலிருந்து இரு அணிகளும் கோல் அடிக்க கடும் போராட்டம் நடத்தின. இந்த போராட்டத்தில் கொரிய மகளிர் முந்தினர். 25-வது நிமிஷத்தில் லீ கீ அபாரமாக கோல் அடித்து கொரியாவை முன்னிலைப்படுத்தினார்.
அதன் பின் இந்திய மகளிர் அணி கோல் அடிக்க கடும் முயற்சி மேற்கொண்டனர், அந்த முயற்சியை கொரிய மகளிர் தகர்த்தெறிந்தனர்.
38-வது நிமிஷத்தில் பார்க் ஹீ யங்கும், 39-வது நிமிஷத்தில் மூன் சுலே ஆகியோரும் அடுத்தடுத்து கோல் அடித்து, கொரியாவை வலுப்படுத்தினர்.
பிற்பாதியில் இந்திய அணியினர் நிறைய தவறுகள் செய்தனர். இதனால் கிடைத்த வாய்ப்புகள் பறிபோயின.
முடிவில் 3-0 என்ற கணக்கில் இந்தியவை வென்றது கொரியா.
தென் கொரியாவின் மாசானில் கடந்த மாதம் 17-ம் தேதி நடந்த போட்டியில் இந்தியாவை 5-0 என கொரியா தோற்கடித்தது குறிப்பிடத்தக்கது.
Posted in 2008, Asia, Beijing, Busan, Chennai, Football, Games, Jawaraharlal Nehru Stadium, League, Madras, Masan, match, Medal, Nehru Stadium, Olympics, Qualification Rounds, qualifiers, Republic of Korea, Soccer, South Korea, Sports, Stadium, teams, Victory, Win, Women | Leave a Comment »
Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 22, 2006
நாளை நடைபெறும் கருணாநிதி பாராட்டு விழாவில் நடிகர் – நடிகைகள்: படப்பிடிப்பு 2 நாள் ரத்து
சென்னை, செப். 22- முதல்-அமைச்சர் கருணாநிதிக்கு திரையுலகம் சார்பில் நாளை பாராட்டு விழா நடக்கிறது. திரைப்படத்துறைக்கு பல்வேறு சலுகைகளை அவர் அறிவித்ததற்காக இந்த விழா நடத்தப்படுகிறது.
நேரு உள் விளையாட்டரங்கில் மாலை 5.30 மணிக்கு விழா தொடங்குகிறது. 2 மணி நேரம் நடிகர்-நடிகைகள் நடன நிகழ்ச்சி நடத்துகின்றனர்.
நடிகைகள்
- திரிஷா,
- நயன் தாரா,
- அசின்,
- சதா,
- ஸ்ரேயா,
- பாவனா,
- சினேகா,
- ரீமாசென்,
- மும்தாஜ்,
- பூஜா,
- அபர்ணா,
- லட்சுமிராய்,
- தியா,
- சிந்துதுலானி,
- ரகசியா,
- தேஜாஸ்ரீ,
- பத்மபிரியா ஆகியோர் மேடையில் நடனம் ஆடுகிறார்கள்.
நடிகர்கள்
- சிம்பு,
- பிரசாந்த்,
- அப்பாஸ்,
- கார்த்திக்,
- ஜெயம்ரவி,
- மாதவன்,
- ஸ்ரீகாந்த்,
- பரத்,
- ஜித்தன் ரமேஷ்,
- சிபிராஜ்,
- பிரசன்னா,
- ஆர்யா
ஆகியோரும் நடனமாடுகிறார்கள்.
- பாக்ய ராஜ்,
- பார்த்திபன்,
- வடிவேலு,
- விவேக்,
- நெப்போலியன்,
- பிரகாஷ்ராஜ்,
- சந்திரசேகர்,
- அலெக்ஸ் ஆகியோரின் நாடக மும் இடம் பெறுகிறது.
விழாவில் நடிகர்கள் ரஜினி காந்த், கமலஹாசன் ஆகியோர் பங்கேற்று கருணாநிதியை வாழ்த்தி பேசுகிறார்கள்.
விழாவையொட்டி அனைத்து சினிமா படப்பிடிப்புகளும் இன்று ரத்து செய்யப்பட்டன. நாளையும் படப் பிடிப்பு நடைபெறாது.
படப்பிடிப்பு ரத்தானதை தொடர்ந்து மும்பை, திருவனந்த புரம், ஐதராபாத்தில் சூட்டிங் கில் இருந்த நடிகர்-நடிகைகள் இன்று சென்னை திரும்பினார்கள். நடன இயக்குனர் சங்கத்தில் அவர்கள் நடன பயிற்சி செய்தனர். முன்னணி நடிகைகள் இன்று மாலை விழா நடைபெறும் மேடையில் நடன பயிற்சியில் ஈடுபடுகிறார்கள்.
நடிகர்கள்
- விஜய்,
- விக்ரம்,
- அர்ஜ×ன்,
- பிரபு,
- சத்யராஜ், உள்ளிட்ட முன்னணி நடிகர்- நடிகைகளும் விழாவில் பங்கேற்கிறார்கள்.
Posted in Actors, Actresses, CM, Karunanidhi, Kollywood, Maalai Malar, Movies, Nehru Stadium, Politics, Tamil, Tamil Cinema | 2 Comments »