பல்வேறு குற்ற வழக்கில் 10 மத்திய அமைச்சர்கள், 93 எம்.பி.க்கள்
புதிதில்லி, டிச. 8: பல்வேறு குற்ற வழக்குகளில் 10 மத்திய அமைச்சர்களும், 93 எம்.பி.க்களுக்கும் விசாரணையை சந்தித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
மத்திய அமைச்சராக இருந்த சிபு சோரன் மற்றும் சித்து எம்.பி. ஆகியோருக்கு கொலை வழக்கில் அண்மையில் தண்டனை விதிக்கப்பட்டது.
இந்நிலையில், மன்மோகன் சிங் அமைச்சரவையில் உள்ள மத்திய அமைச்சர்களான
- முகம்மது அலி அஷரப் (கடத்தல்-பணம் பறிப்பு),
- சங்கர் சிங் வகேலா (லஞ்ச வழக்கு),
- லாலு பிரசாத் (ஊழல் வழக்கு),
- ரேணுகா செüத்ரி (அரசு ஊழியரை மீது தாக்குதல்),
- சரத் பவார் (மத ரீதியான வழக்கு) உள்ளிட்ட 10 அமைச்சர்கள் குற்ற வழக்கில் சிக்கி உள்ளனர்.
அதேபோல எம்.பி.க்களில் சாது யாதவ், பப்பு யாதவ் உள்ளிட்ட 93 பேருக்கு எதிராக குற்ற வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.