Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Namitha’ Category

Trisha Fan clubs record 20,000 Members; Namitha – 3,000

Posted by Snapjudge மேல் நவம்பர் 13, 2006

திரிஷா ரசிகர் மன்றத்தில் 20,000 உறுப்பினர்கள்; நமீதா மன்றத்தில் 3000 பேர்

ரஜினி, கமல், விஜய், அஜீத் என முன்னணி நடிகர்களுக்கு ரசிகர் மன்றங்கள் உள்ளன. விஜயகாந்த் தனது ரசிகர் மன்றத்தை அரசியல் இயக்கமாக மாற்றினார்.

நடிகர்களைப் போல் நடிகைகளுக்கும் ரசிகர் மன்றங்கள் முளைத்துள்ளன.

முதல் முறையாக குஷ்பு வுக்கு 1991-ல் திருச்சி ரசிகர் கள் கோவில் கட்டினர். தற்போது திரிஷா, நமீதா ஆகி யோருக்கு ரசிகர் மன்றங்கள் தொடங்கப்பட்டு உள்ளன.

திரிஷா ரசிகர் மன்ற தலைவியாக ஜெஸி பொறுப் பேற்றுள்ளார். இம் மன்றத் துக்கு புதிய உறுப் பினர் சேர்ப்பு பணி முடுக்கி விடப் பட்டுள்ளது. கல்லூரி மாண விகள், குடும்பத் தலை விகள் என 20 ஆயிரம் பேர் உறுப்பினர்களாக சேர்ந் துள்ளனர். ஒரு லட்சம் பேரை உறுப்பினராக்க இலக்கு நிர்ணயித்துள்ளனர.

திரிஷா படங்கள் ரிலீசாகும் போது அவர் ரசிகர்கள் தியேட் டர்களில் கட்அவுட், கொடி தோரணங்கள் அமைத்து அமர்க்களப்படுத்தி வரு கிறார்கள். திரிஷா பிறந்த நாளில் அடையாறு புற்று நோய் ஆஸ்பத்திரியில் குழந்தை களுக்கு உணவு, உடைகள் வழங்குவதையும் வழக்க மாக வைத்துள்ளனர்.

திரிஷா தற்போது தெலுங்கு படங்களில் பிசியாக நடித்து வருகிறார். அவருக்கு ஆந்திர அரசின் நந்தி விருது கிடைத்துள்ளது. தமிழில் சாமி, கில்லி படங்கள் அவரை முன்னணி நடிகையாக்கின. ஜெயம் ரவியுடன நடித்த உனக்கும் எனக்கும் படம் ரிலீசாகி 100 நாட்களை தாண்டி ஓடிக் கொண்டிருக்கிறது.

நமீதா `ஏய்’ `கோவை பிரதர்ஸ்’ `பச்சக்குதிர’ உள் ளிட்ட படங்களில் நடித்துள் ளார். சமூக சேவைகளில ஈடுபாடுள்ள அவர் அவ்வப் போது குடிசைப் பகுதிகளுக்கு சென்று ஏழைகளுக்கு உதவிகள் வழங்கி வருகிறார்.

நமீதாவுக்கு முதன்முதலாக செல்வம் என்பவர் ரசிகர் மன்றத்தை தொடங்கினார். தற்போது இவர் நமீதா ரசிகர் மன்றங்களின் அகில இந்திய தலைவராகி உள்ளார்.

சென்னையில் நமீதாவுக்கு 50 ரசிகர் மன்றங்கள் உள் ளன. இவற்றில் 3000 பேர் உறுப்பினர்களாக சேர்ந் துள் ளனர். இவர்களில் பெரும் பாலானோர் கல்லூரி மாண விகள். நமீதா ரசிகர் மன்றமும் சமூக சேவை பணிகளில் தீவிரமாக களம் இறங்கி உள்ளது.

முதல்கட்டமாக 20 ஆயி ரம் பேரை மன்றத்தில் உறுப் பினராக்க முடிவு செய் துள்ளனர்.

Posted in Fan Clubs, Kushboo, Movies, Namitha, Tamil Cinema, Telugu, Thrisha, Tollywood, Trisha | 3 Comments »

Arasu Pathilgal – Kumudam

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 29, 2006

தி.ராஜு,
திருநெல்வேலி டவுன்.

தமிழ்நாடு இப்போது இந்தியாவிலேயே முதல் மாநிலமாக மாறிக்கொண்டு வருவது போல் தெரிகிறதே?

கரெக்ட். சிக்குன் குனியா பரவுவதில்தானே?

 ஜி.மாரியப்பன்,
சின்னமனூர்.

நமீதா போலீஸ் ஸ்டேஷனுக்கு வரும் காட்சியை டி.வி.யில் பெரும் பரபரப்பு செய்தியாகக் காட்டியது அவசியமா?

நீர் பார்த்தீரா இல்லையா? அதைச் சொல்லும் முதலில்.

 இரா. பார்த்திபன்,
வயலூர்.

சமீபத்தில் படித்த புத்தகம்?

1973ம் வருடம் வெளியிடப்பட்ட, அ.தட்சிணாமூர்த்தி என்கிற தமிழ்ப்பேராசிரியர் எழுதிய ‘தமிழர் நாகரிகமும் பண்பாடும்’ என்கிற அரிய புத்தகம். பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழர் வரலாறும் வாழ்க்கையும் எப்படி சிறப்புற்று இருந்தன என்பதை உணர்ச்சிவசப்படாமல், இலக்கிய, தொல்லியல் ரீதியாக அழகாக விவரிக்கும் புத்தகம்.

 • போர் முறைகளில் தமிழர்கள் கொண்டிருந்த நேர்மை,
 • புதிய கண்டுபிடிப்புகளில் காட்டிய ஆர்வம் (முக்கியமாக உணவு, உடை, வாத்தியங்கள் தயாரிப்பில்),
 • வாணிபத்தில் இருந்த உலகநோக்கு,
 • புலவர்களை மதித்த பணிவு,
 • உழவுக்குத் தலை வணங்கிய மாண்பு,
 • இறந்தவர்களைப் பெருமைப்படுத்தும் நன்றி மறவாமை,
 • வானிலையிலும்,
 • மருத்துவத்திலும்,
 • விருந்தோம்பலிலும்,
 • இலக்கியத்திலும்,
 • ஆன்மிகத்திலும்,
 • ஆடற் பாடல், இசைக் கலையிலும்,
 • தத்துவத்திலும்,
 • கலாசாரத்திலும் வாழையடி வாழையாக தமிழும், தமிழர்களும் செழித்தோங்கி வளர்ந்ததைப் படிக்கப் படிக்க, ஆஹா, எத்தனை சிறப்புமிக்க வரலாற்றில் நாம் பிறந்திருக்கிறோம் என்கிற செருக்கே வந்துவிட்டது. இத்தனை மகத்தான பின்னணியை எப்படி இளம் பிள்ளைகளுக்குப் புரிய வைப்பது என்கிற பிரமிப்பும் வந்தது.

ச.சிவகாமி சுந்தர்,
சென்னை_94.

சென்னையில் பெருகி வரும் டிராஃபிக் ஜாமைச் சமாளிக்க ஒற்றைப் படை எண் வாகனங்களை ஒரு நாளும் இரட்டைப் படை எண்ணுள்ள வாகனங்களை மறுநாளும் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று சட்டம் கொண்டு வரலாமே?

எனக்கு முன் ஜென்மங்களில் நம்பிக்கை இல்லை. உங்கள் கேள்வியைப் படிக்கும்போது தாங்கள் முற்பிறவியில் துக்ளக் மகாராஜாவாகப் பிறந்திருப்பீர்களோ என்று தோன்றுகிறது.

Posted in A Thatchinamoorthy, Arasu, Books, Chikun Kunya, Culture, Kumudham, Namitha, Q&A, Tamil, Thuglaq | Leave a Comment »