Posted by Snapjudge மேல் ஜனவரி 10, 2007
கவிஞருக்கு வசன “கிரீடம்’!
அஜீத் நடிக்கும் “கிரீடம்’ படத்தின் மூலம் வசனகர்த்தா ஆகியுள்ளார் பாடலாசிரியர் நா.முத்துக்குமார். இயக்குநர் ஆகும் ஆசையில் பாலுமகேந்திராவிடம் நான்கு வருடங்கள் உதவியாளராகப் பணியாற்றியவர். இவருடைய பாடல்களுக்கு சிறப்பான வரவேற்பு கிடைக்கவே பாடலாசிரியராக நிலைத்துவிட்டார். சமீபத்தில் தன்னுடைய ஆராய்ச்சிக் கட்டுரைக்காக முனைவர் பட்டம் பெற்ற முத்துக்குமார், கடந்த வருடம் அதிக பாடல்கள் எழுதிய சினிமா பாடலாசிரியர்கள் வரிசையில் முதலிடத்தில் உள்ளார்.
அவர் பணியாற்றிய 34 படங்களில் 96 பாடல்கள் எழுதியிருக்கிறார். இவற்றில் 14 படங்களில் அனைத்துப் பாடல்களையும் எழுதியிருக்கிறார். தற்போது
- “சிவாஜி’,
- “போக்கிரி’,
- “பீமா’,
- “தீபாவளி’,
- “தமிழ் எம்.ஏ.’ உள்பட நாற்பதுக்கும் மேற்பட்ட படங்களுக்கு பாடல்கள் எழுதி வருகிறார். இவற்றுள் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் அடுத்த வருடம் மூலை முடுக்கெல்லாம் ஒலிக்கப்போகும் ஒரு முக்கியப் பாடலும் அடக்கம். அது “சிவாஜி’ படத்தில் ரஜினிகாந்தின் அறிமுகப் பாடல்!
Posted in Ajeeth, Ajith, Ajith Kumar, AR Rehman, Assistant Director, Author, Balu Mahendira, Balu mahendra, Beema, Doctorate, Na Muthukumar, Naa Muthukumar, Ph.d, Poet, Pokkiri, Rajini, Rajni, Singer, Sivaji, Sivaji the Boss, Song writer, Ultimate Star, Vijay, Writer, YSR, Yuvan, Yuvan Shankar Raja | 2 Comments »
Posted by Snapjudge மேல் நவம்பர் 21, 2006
நா.முத்துகுமாருக்கு முனைவர் பட்டம்
தமிழ்த் திரைப்படப் பாடல்கள் குறித்து ஆய்வு செய்த பாடலாசிரியர் நா.முத்துகுமாருக்கு சென்னை பல்கலைக் கழகம் அண்மையில் முனைவர் பட்டம் வழங்கியது. அதற்கான சான்றிதழை ஆளுநர் சுர்ஜித்சிங் பர்னாலா வழங்குகிறார். உடன் (இடமிருந்து) அமைச்சர் பொன்முடி, மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், பல்கலைக்கழக துணைவேந்தர் ராமச்சந்திரன்.
Posted in Chennai University, Doctor, Madras University, Na Muthukumar, Naa Muthukumar, P Chidambaram, Ponmudi, Ramachandiran, Surjeet Singh barnala, Tamil songs, Vice-chancellor | Leave a Comment »