தமிழ்மொழிக் காவலர் ஓய்வூதியத் திட்டம்: குழு நியமனம்
சென்னை, ஜன. 26: தமிழ் மொழிக் காவலர் ஓய்வூதியத் திட்டத்துக்குத் தகுதியானவர்களைத் தேர்வு செய்வதற்கான குழுவை முதல்வர் கருணாநிதி நியமித்துள்ளார்.
- இக்குழுவின் தலைவராக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இருப்பார்.
- சட்டப்பேரவை உறுப்பினர்கள் வ. முல்லைவேந்தன்,
- வீ. கருப்பசாமி பாண்டியன்,
- இ.எஸ்.எஸ். ராமன் (காங்),
- என். நன்மாறன் (மார்க்சிஸ்ட்),
- தி. வேல்முருகன் (பாமக) ஆகியோரும்
- தமிழ் வளர்ச்சித் துறைச் செயலாளர்,
- தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் ஆகியோர் இக்குழுவின் உறுப்பினர்களாக இருப்பர்.
இக்குழுவினர் தமிழ்மொழிக் காவலர் ஓய்வூதியத் திட்டத்துக்காக பெறப்படும் விண்ணப்பங்களை பரிசீலித்து தேர்வு செய்வர்.