பள்ளிதேர்வு, உலககோப்பை கிரிக்கெட் போட்டி எதிரொலி: 19 புதிய படங்கள் இந்த மாதம் ரிலீஸ்
சென்னை, பிப். 2-
பள்ளி இறுதி தேர்வுகள் மார்ச் 1-ந்தேதி தொடங்குகின்றன. அடுத்த மாதம் இறுதியில் உலககோப்பை கிரிக்கெட் போட்டி ஆரம்ப மாகிறது. ஏப்ரல் 28-ல் உலக கோப்பை இறுதி போட்டி நடக்கிறது. எனவே 19 புதிய படங்கள் இம்மாதம் ரிலீஸ் ஆகின்றன. `டப்பிங்’, `எடிட்டிங்’ வேலைகள் விறுவிறுப்பாக நடக்கிறது.
இம்மாதம் வெளியாகும் படங்களின் பட்டியலில்
- சபரி,
- தீபாவளி,
- திருமகன்,
- பருத்திவீரன்,
- மொழி,
- உன்னாலே உன்னாலே,
- கூடல் நகர்,
- அடாவடி,
- ஓரம்போ,
- லீ,
- முனி,
- சொல்லி அடிப்பேன்,
- பெரியார்,
- கண்ணும் கண்ணும்,
- தூவானம்,
- காசு இருக்கணும்,
- பச்சைக்கிளி முத்துச்சரம் ஆகியவை உள்ளன.
- `வீராசாமி’ படம் நேற்று (1-ந்தேதி) ரிலீசானது.
- `பொறி’ இன்று வெளியானது. ஒரே மாதத்தில் இவ்வளவு படங்கள் வெளியாவது இம்முறைதான் என்பது குறிப்பிடத்தக்கது.
`சபரி’யில் விஜயகாந்த் டாக்டர் வேடத்தில் நடிக்கிறார்.
`பருத்திவீரன்’ சூர்யா தம்பி கார்த்தி கதாநாயகனாக அறிமுகமாகும் படம். பொங்கலுக்கே இப்படம் எதிர்பார்க்கப்பட்டு தள்ளிப்போனது.
`திருமகன்’ படத்தில் எஸ்.ஜே.சூர்யா நடித்துள்ளார்.
`மொழி’யில் ஜோதிகா வாய்பேசதெரியாதவராக நடித்துள்ளார்.
`கூடல் நகரில்’ பரத், சந்தியா ஜோடியாக நடித்துள்ளனர்.
`அடாவடி’, `பெரியார்’ படங்களில் சத்யராஜ் நடித்துள்ளார். `பெரியார்’ பலத்த எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள படம். இதில் மணியம்மை பாத்திரத்தில் குஷ்பு நடித்துள்ளார்.
`ஓரம்போ’வில் ஆர்யாவும், `லீ’யில் சிபியும் நடித்துள்ளனர்.
`சொல்லி அடிப்பேன்’ விவேக் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ள படம். முனியில் ராஜ்கிரணும், ராகவா லாரன்சும் நடித்திருக்கிறார்கள்.
ரஜினின் `சிவாஜி’ படம் உலககோப்பை கிரிக்கெட் போட்டி முடிந்தபின் ரிலீசாகும் என்று தெரிகிறது. `தனுசின் பரட்டை என்கிற அழகு சுந்தரம்’ படமும் சிவாஜியோடு ரிலீசாகிறது. கமலஹாசனின் `தசாவதாரம்’ ஜுலை மாதத்துக்கு தள்ளி போகிறது.