Posted by Snapjudge மேல் பிப்ரவரி 27, 2007
லட்சுமிமிட்டலை முந்தினார் மிகப்பெரிய பணக்கார இந்தியர் முகேஷ் அம்பானி
புதுடெல்லி, பிப். 27-
ஒரு லட்சம் கோடிக்கும் அதிகமாக சொத்து சேர்த்து உலகின் மிகப்பெரிய பணக்கார இந்தியர் என்ற அந்தஸ்திலும் உலக அளவில் எடுக்கப்பட்ட பணக்காரர்கள் பட்டியலில் 5-வது இடத்திலும் இருந்தார்இரும்பு எஃகு தொழிலில் உலகின் நம்பர் ஒன் தொழில் அதிபர் லட்சுமி மிட்டல். இங்கிலாந்தில் 600கோடி ரூபாய்க்கு ஒரு ஆடம்பர மாளிகையை வாங் கியது, ரஷ்யாவின் அர் செலர் இரும்பு ஆலையை பல்வேறு சவால்களுக்கு இடையே விலைக்கு வாங்கி யது போன்றவற்றில் உலக பிரபலங்கள் பலரை வியக்க வைத்தார்.
தற்போது இந்த ஜாம்ப வானை சொத்து மதிப்பில் முந்தியுள்ளார் அம்பானி சகோதரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானி.
இந்தியாவின் மிகப்பெரிய தனியார் நிறுவனமாக கரு தப்படும் ரிலையன்ஸ் இந்தியா லிமிடெட்டின் பங்குகளை அதிகஅளவு பெற்றதில் அடிப்படையில் முகேஷ் அம்பானியின் தனிபட்ட சொத்து மதிப்பு 1லட்சத்து 4ஆயிரத்து 40 கோடி ரூபாயாக உள்ளது.
லட்சுமி மிட்டலின் சொத்து மதிப்பு 96ஆயிரத்து 480கோடி ரூபாயாக உள்ளதால் லட்சுமி மிட்டலை முந்தி உலகின் மிகப்பெரிய பணக்கார இந்தியர் என்ற அந்தஸ்தை முகேஷ் அம்பானி அடைந்துள்ளார். முகேஷ் அம்பானி இந்தியா விலேயே தொழில் செய்கிற வர் லட்சுமி மிட்டலின் பெரும்பாலான தொழில்கள் வெளிநாட்டிலேயே நடக்கின் றன. அவர் வெளிநாட்டில் வசிக்கிறார் என்றாலும் அவர் இந்திய பாஸ்போட்டை வைத்திருப்பவர் இந்தியா வில் பிறந்தவர் என்ற அடிப்படை யில் இந்திய தொழில் அதிபராக கருதப்படுகிறார்.
Posted in Ambani, Arcelor, Arcelor Mittal, Bill Gates, Birla, Cash, Equity, Forbes, Fortune, Guru, Lakshmi Mittal, Lakshmi Niwas Mittal, Manirathnam, Maniratnam, Microsoft, Mittal, Money, Mukesh Ambani, Poor, Reliance, Reliance Industries Limited, Rich, RIL, Shares, Steel, Stocks, TATA, Valuation, Vimal | Leave a Comment »
Posted by Snapjudge மேல் நவம்பர் 27, 2006
இந்தியாவில் சில்லறை விற்பனைத் துறையில் அமெரிக்க நிறுவனம்
 |
 |
இந்திய சந்தையில் நுழையும் வால்மார்ட் நிறுவனம் |
பாரதி என்னும் இந்திய வணிக நிறுவனத்துடன் கூட்டு ஒப்பந்தம் ஒன்றைச் செய்துள்ள அமெரிக்காவின் மிகப்பெரிய பல்பொருள் அங்காடி நிறுவனமான வால் மார்ட் நிறுவனம், இந்திய சில்லறை விற்பனைச் சந்தையில் நுழைவதாக அறிவித்துள்ளது.
இந்தியாவெங்கிலும் பல நூற்றுக்கணக்கான கடைகளைத் திறக்கப் போவதாக இந்த இரு நிறுவனங்களும் அறிவித்துள்ளன.
உலகிலேயே மிகவும் வேகமாக வளர்ந்து வரும் சந்தையாக இந்திய சில்லறை விற்பனைத்துறை இருப்பதாகவும், 2015 ஆம் ஆண்டளவில் அது இருமடங்காக வளர்ந்து, 630 பில்லியன் டொலர்களாக வளரும் என்றும், நிபுணர்கள் கூறுகிறார்கள்.
இந்தியாவின் சில்லறை விற்பனை துறையில் பெரும்பகுதி சிறிய மற்றும் குடும்ப வர்த்தகமாக நடத்தப்படும் கடைகளாக திகழ்கின்றன. அத்துடன், இத்தகைய பெரிய நிறுவனங்கள் இந்தத் துறையில் நுழையும் தறுவாயில் இவர்களில் பெரும்பாலானவர்கள் தமது வர்த்தக நிறுவங்களை தொடர்ந்து நடத்த சிரமப்படுவார்கள் என்று செய்தியாளர்கள் கூறுகிறார்கள்.
Posted in Bharti, India, Mukesh Ambani, Reliance, retail market, Sunil Bharti Mittal, TESCO, Walmart | Leave a Comment »
Posted by Snapjudge மேல் நவம்பர் 17, 2006
சிக்கலில் மணிரத்னத்தின் “குரு’
ஐஸ்வர்யா ராய், அபிஷேக் பச்சன் ஆகியோரை வைத்து மணிரத்னம் இயக்கும் “குரு’ படம், மறைந்த தொழிலதிபர் திருபாய் அம்பானியின் கதை என்ற கருத்து பரவியது. இதையடுத்து படத்தை வெளியிடும் முன் தனக்கு திரையிட்டுக் காட்ட வேண்டும் என்று மணிரத்னம் தரப்பிடம் அம்பானியின் மூத்த மகன் முகேஷ் அம்பானி கூறியுள்ளார். அதே சமயம் அம்பானியின் இன்னொரு மகன் அனில் அம்பானி “குரு’ படத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். அவருடைய அட்லாப்ஸ் நிறுவனம்தான் இப்படத்தின் விநியோக உரிமையைப் பெற்றுள்ளது.
“முருகா’ போஸ்டருக்கு தடை
காக்டெய்ல் ட்ரீம் ஃபிலிம்ஸ் பட நிறுவனம் தயாரித்து வரும் புதிய படம் “முருகா’. இதில் அசோக், ஸ்ருதிசர்மா என்ற இரு புதுமுகங்கள் நடித்துள்ளனர். இவர்களுடன் வடிவேலு, சமிக்ஷா, ரியாஸ்கான், மகாதேவன், அசோகன் வின்சென்ட், சுதா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கார்த்திக் ராஜா இசையமைக்கும் இந்தப் படத்தை இயக்குபவர் ஆர்.டி.நேசன். திரைப்படக் கல்லூரி மாணவரான இவருக்கு இது முதல் படம்.
இந்தப் படத்துக்காக சென்னை நகர் முழுவதும் மிக அதிகமான விளம்பர பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. யதார்த்தமாக இருக்க வேண்டும் என்பதற்காக, கதாநாயகனை போலீஸ் அதிகாரி ஒருவர் சேற்றில் வைத்து காலால் அழுத்தும் (படத்தில் வரும்) காட்சியை விளம்பர பேனராக அமைத்து சென்னை அண்ணா சாலையில் வைத்திருந்தனர். இதைப் பார்த்த போலீஸ் கமிஷனர் இது போன்ற பேனர் வைத்தால் மனித உரிமை மீறல் சட்டத்தின் கீழ் பதிவு செய்து வழக்கு தொடரப்படும் என எச்சரித்ததையடுத்து அந்த பேனர் உடனடியாக அகற்றப்பட்டு வேறு பேனர் வைக்கப்பட்டுவிட்டது.
Posted in Adlabs, Anil Ambani, Banner, Bollywood, Guru, Hindi Movie, Human Rights, Kollywood, Mani Ratnam, Movies, Mukesh Ambani, Muruga, Poster, Reliance, Tamil Cinema | 1 Comment »